முந்தைய பாகம்: மத்தியில் இயேசுவுக்கு முன்பாக
பரிசுத்த வேதாகமத்தில் குமாரனை குறித்தும் அவரின் திருத்துவதை குறித்தும் பல தீர்க்கதரிசிகள் விளக்கம் கொடுத்து இருக்கிறார்கள், இந்த பக்கத்தில் மார்த்தாள் மற்றும் மரியாளின் அனுபவத்திலிருந்து கிடைத்த விளக்கத்தை பார்ப்போம், கர்த்தராகிய இயேசு கிறிஸ்து மார்த்தாளிடம் தேவையானது ஒன்றே என்று சொல்லுவதில் சில ரகசியங்கள் அடங்கியுள்ளது, ஒருவேளை இயேசு கிறிஸ்து திருத்துவதில் இரண்டாவது நபராக மாத்திரம் இருந்திருந்தால், இயேசு கிறிஸ்து மார்த்தாளிடம் இப்பொழுது என்னையும் நான் மரித்து உயிர்த்தெழுந்த பிறகு பரிசுத்த ஆவியானவரையும் தேட வேண்டும் என்று தானே சொல்லிருப்பார், ஆனால் தேவையானது ஒன்றே என்று சொல்லி தான் பிதா, வார்த்தை, மற்றும் பரிசுத்த ஆவி என்ற திரியேக தேவனுடைய தற்சுரூபமாக இருப்பதை நமக்கு வெளிப்படுத்தினார் - 38.பின்பு, அவர்கள் பிரயாணமாய்ப் போகையில், அவர் ஒரு கிராமத்தில் பிரவேசித்தார். அங்கே மார்த்தாள் என்னும் பேர்கொண்ட ஒரு ஸ்திரீ அவரைத் தன் வீட்டிலே ஏற்றுக்கொண்டாள். 39.அவளுக்கு மரியாள் என்னப்பட்ட ஒரு சகோதரி இருந்தாள்; அவள் இயேசுவின் பாதத்தருகே உட்கார்ந்து, அவருடைய வசனத்தைக் கேட்டுக்கொண்டிருந்தாள். 40.மார்த்தாளோ பற்பல வேலைகளைச் செய்வதில் மிகவும் வருத்தமடைந்து, அவரிடத்தில் வந்து: ஆண்டவரே, நான் தனியே வேலைசெய்யும்படி என் சகோதரி என்னை விட்டு வந்திருக்கிறதைக் குறித்து உமக்குக் கவையில்லையா (அக்கறையில்லையா)? எனக்கு உதவிசெய்யும்படி அவளுக்குச் சொல்லும் என்றாள். 41.இயேசு அவளுக்குப் பிரதியுத்தரமாக: மார்த்தாளே, மார்த்தாளே, நீ அநேக காரியங்களைக் குறித்துக் கவலைப்பட்டுக் கலங்குகிறாய். 42.தேவையானது ஒன்றே, மரியாள் தன்னை விட்டெடுபடாத நல்ல பங்கைத் தெரிந்துகொண்டாள் என்றார் - லூக்கா 10:38-42
அடுத்த பாகம்: பலிபீடம், தேவாலயம், சிங்காசனம்