முந்தைய பாகம்: சகரியாவின் விளக்கம்
ஓசியாவின் விளக்கம் (தானியம், திராட்சைரசம், எண்ணெய்)
பரிசுத்த வேதாகமத்தில் குமாரனை குறித்தும் அவரின் திருத்துவதை குறித்தும் பல தீர்க்கதரிசிகள் விளக்கம் கொடுத்து இருக்கிறார்கள், தீர்க்கதரிசியாகிய ஓசியா கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவை குறித்து சொல்லும் பொழுது தானியம், திராட்சைரசம், எண்ணெய் என்று குறிப்பிட்டு இயேசு கிறிஸ்துவின் திரித்துவத்தை விளக்கியுள்ளார் - அவள், நான் ஒருவர்தான் அவளுக்குத் தானியம், திராட்சைரசம், எண்ணெய் ஆகியவற்றைக் கொடுத்தேன் என்பதை அறியவில்லை. நான் அவளுக்கு மேலும் மேலும் வெள்ளியும் பொன்னும் கொடுத்துவந்தேன். ஆனால் இஸ்ரவேலர்கள் அந்த வெள்ளியையும் பொன்னையும் பயன்படுத்தி பாகாலுக்கான உருவச் சிலைகளைச் செய்தனர் - ஓசியா 2:8 (ERV Version)
மேலும் ஓசியா தீர்க்கதரிசி, இயேசு கிறிஸ்துவின் மூலமாக நாம் பெறப்போகும் இரட்சிப்பை குறித்து எழுதும் பொழுது பரலோகப்பிதாவின் திரித்துவத்தையும் குறிப்பிட்டுள்ளார் - 21.அக்காலத்தில் நான் மறுமொழி கொடுப்பேன் என்று கர்த்தர் சொல்லுகிறார்; நான் வானங்களுக்கு மறுமொழி கொடுப்பேன், அவைகள் பூமிக்கு மறுமொழி கொடுக்கும். 22.பூமி தானியத்துக்கும் திராட்சரசத்துக்கும் எண்ணெய்க்கும் மறுமொழி கொடுக்கும், இவைகள் யெஸ்ரயேலுக்கும் மறுமொழி கொடுக்கும். 23.நான் அவளை எனக்கென்று பூமியிலே விதைத்து, இரக்கம் பெறாதிருந்தவளுக்கு இரங்குவேன்; என் ஜனமல்லாதிருந்தவர்களை நோக்கி நீ என் ஜனமென்று சொல்லுவேன்; அவர்கள் என் தேவனே என்பார்கள் என்றார் - ஓசியா 2:21-23
இதே காரியத்தை தான் கர்த்தர் மோசேயின் மூலமாகவும் சொல்லியிருந்தார் - 13.நீங்கள் உங்கள் தேவனாகிய கர்த்தரிடத்தில் உங்கள் முழு இருதயத்தோடும் உங்கள் முழு ஆத்துமாவோடும் அன்புகூர்ந்து, அவரைச் சேவிக்கும்படி, நான் இன்று உங்களுக்குக் கற்பிக்கிற என் கற்பனைகளுக்குக் கீழ்ப்படிந்தால், 14.நீ உன் தானியத்தையும் உன் திராட்சரசத்தையும் உன் எண்ணெயையும் சேர்க்கும்படிக்கு, நான் ஏற்றகாலத்தில் உங்கள் தேசத்தில் முன்மாரியையும் பின்மாரியையும் பெய்யப்பண்ணி, 15.மிருகஜீவன்களுக்காக உன் வெளிகளிலே புல் முளைக்கும்படி செய்வேன், நீ சாப்பிட்டுத் திருப்தியடைவாய் என்கிறார் - உபாகமம் 11:13-15
அடுத்த பாகம்: மல்கியாவின் விளக்கம்