யோனாவின் விளக்கம்
இயேசு கிறிஸ்து திரியேக தேவனாக, அதாவது பிதா, வார்த்தை, பரிசுத்த ஆவியானவரின் தற்சுரூபமாய் இருக்கிறார்
இயேசு கிறிஸ்து திரியேக தேவனாக, அதாவது பிதா, வார்த்தை, பரிசுத்த ஆவியானவரின் தற்சுரூபமாய் இருக்கிறார்
முந்தைய பாகம்: மோசேயின் விளக்கம்
ஒருமுறை இயேசு கிறிஸ்துவிடம், பிசாசு பிடித்த குருடும் ஊமையுமான ஒருவன் கொண்டுவரப்பட்டான், குருடும் ஊமையுமானவன் என்றால் அவன் காது கேட்காதவனாகவும் தான் இருந்திருக்க வேண்டும், இப்படி குருடும் ஊமையும் செவிடனுமாக இருக்கும் ஒருவனை யாரால்தான் குணமாக்க முடியும், ஆனால் இயேசு கிறிஸ்து அவனை சொஸ்தமாக்கின பொழுது, அங்கிருந்த வேதபாரகரும் பரிசேயரும் இயேசு கிறிஸ்து தேவனுடைய குமாரனாக தான் இருக்க வேண்டும் என்று சொல்லி அவரை மகிமை படுத்துவதற்கு பதிலாக, அவர் பிசாசுகளின் தலைவனாகிய பெயெல்செபூலினாலே பிசாசுகளைத் துரத்துகிறார் என்று குறை சொன்னது மாத்திரம் இல்லாமல், உம்மால் ஒரு அடையாளத்தைக் காண விரும்புகிறோம் என்றும் கேட்டார்கள், இது மோசேயிடம் பார்வோன் தனக்கு ஒரே ஒரு அடையாளத்தை காட்ட வேண்டும் என்று கேட்டதற்க்கு ஒப்பாகவே இருந்தது - 22.அப்பொழுது, பிசாசு பிடித்த குருடும் ஊமையுமான ஒருவன் அவரிடத்தில் கொண்டுவரப்பட்டான்; குருடும் ஊமையுமானவன் பேசவுங் காணவுந்தக்கதாக அவனைச் சொஸ்தமாக்கினார். 23.ஜனங்களெல்லாரும் ஆச்சரியப்பட்டு: தாவீதின் குமாரன் இவர்தானோ? என்றார்கள். 24.பரிசேயர் அதைக்கேட்டு: இவன் பிசாசுகளின் தலைவனாகிய பெயெல்செபூலினாலே பிசாசுகளைத் துரத்துகிறானேயல்லாமல் மற்றப்படியல்ல என்றார்கள். 25.இயேசு அவர்கள் சிந்தனைகளை அறிந்து, அவர்களை நோக்கி: தனக்குத் தானே விரோதமாய்ப் பிரிந்திருக்கிற எந்த ராஜ்யமும் பாழாய்ப்போம்; தனக்குத் தானே விரோதமாய் பிரிந்திருக்கிற எந்த பட்டணமும் எந்த வீடும் நிலைநிற்கமாட்டாது. 26.சாத்தானைச் சாத்தான் துரத்தினால் தனக்கு விரோதமாகத் தானே பிரிவினை செய்கிறதாயிருக்குமே; அப்படிச் செய்தால் அவன் ராஜ்யம் எப்படி நிலைநிற்கும்? 27.நான் பெயெல்செபூலினாலே பிசாசுகளைத் துரத்தினால், உங்கள் பிள்ளைகள் அவைகளை யாராலே துரத்துகிறார்கள்? ஆகையால், அவர்களே உங்களை நியாயந்தீர்க்கிறவர்களாயிருப்பார்கள். 28.நான் தேவனுடைய ஆவியினாலே பிசாசுகளைத் துரத்துகிறபடியால், தேவனுடைய ராஜ்யம் உங்களிடத்தில் வந்திருக்கிறதே. 29.அன்றியும், பலவானை முந்திக் கட்டினாலொழியப் பலவானுடைய வீட்டுக்குள் ஒருவன் புகுந்து, அவன் உடைமைகளை எப்படிக் கொள்ளையிடக்கூடும்? கட்டினானேயாகில், அவன் வீட்டைக் கொள்ளையிடலாம். 30.என்னோடே இராதவன் எனக்கு விரோதியாயிருக்கிறான்; என்னோடே சேர்க்காதவன் சிதறடிக்கிறான். 31.ஆதலால், நான் உங்களுக்குச் சொல்லுகிறேன்: எந்தப் பாவமும் எந்தத் தூஷணமும் மனுஷருக்கு மன்னிக்கப்படும்; ஆவியானவருக்கு விரோதமான தூஷணமோ மனுஷருக்கு மன்னிக்கப்படுவதில்லை. 32.எவனாகிலும் மனுஷகுமாரனுக்கு விரோதமான வார்த்தை சொன்னால் அது அவனுக்கு மன்னிக்கப்படும்; எவனாகிலும் பரிசுத்த ஆவிக்கு விரோதமாகப் பேசினால் அது இம்மையிலும் மறுமையிலும் அவனுக்கு மன்னிக்கப்படுவதில்லை. 33.மரம் நல்லதென்றால், அதின் கனியும் நல்லதென்று சொல்லுங்கள்; மரம் கெட்டதென்றால், அதின் கனியும் கெட்டதென்று சொல்லுங்கள்; மரமானது அதின் கனியினால் அறியப்படும். 34.விரியன் பாம்புக் குட்டிகளே, நீங்கள் பொல்லாதவர்களாயிருக்க, நலமானவைகளை எப்படிப் பேசுவீர்கள்? இருதயத்தின் நிறைவினால் வாய் பேசும். 35.நல்ல மனுஷன் இருதயமாகிய நல்ல பொக்கிஷத்திலிருந்து நல்லவைகளை எடுத்துக்காட்டுகிறான், பொல்லாத மனுஷன் பொல்லாத பொக்கிஷத்திலிருந்து பொல்லாதவைகளை எடுத்துக்காட்டுகிறான். 36.மனுஷர் பேசும் வீணான வார்த்தைகள் யாவையும் குறித்து நியாயத்தீர்ப்புநாளிலே கணக்கொப்புவிக்கவேண்டும் என்று உங்களுக்குச் சொல்லுகிறேன். 37.ஏனெனில், உன் வார்த்தைகளினாலே நீதிமான் என்று தீர்க்கப்படுவாய்; அல்லது உன் வார்த்தைகளினாலே குற்றவாளி என்று தீர்க்கப்படுவாய் என்றார். 38.அப்பொழுது, வேதபாரகரிலும் பரிசேயரிலும் சிலர் அவரை நோக்கி: போதகரே, உம்மால் ஒரு அடையாளத்தைக் காண விரும்புகிறோம் என்றார்கள் - மத்தேயு 12:22-38
அப்பொழுது கர்த்தர் அவர்களுக்கு யோனா இரவும் பகலும் மூன்றுநாள் ஒரு பெரிய மீனின் வயிற்றில் இருந்ததுபோல ஒரு அடையாளத்தை தருவேன் என்று சொன்னார், இது மோசே தன்னிடம் மூன்று அடையாளங்கள் இருந்தும், தன் கோலை தரையிலே போட்டு, அது சர்ப்பமாக மாறி, மறுபடியும் அதை கையினால் எடுத்து ஒரு கோலாக மாற்றிய அடையாளமே, அது தான் நம் இரட்சகராகிய இயேசு கிறிஸ்து உன்னதத்திலிருந்து பூமிக்கு வந்து மரணத்தை ருசித்து மறுபடியுமாக உயிர்த்தெந்த அடையாளம் - 39.அவர்களுக்கு அவர் பிரதியுத்தரமாக: இந்தப் பொல்லாத விபசாரச் சந்ததியார் அடையாளத்தைத் தேடுகிறார்கள்; ஆனாலும் யோனா தீர்க்கத்தரிசியின் அடையாளமேயன்றி வேறே அடையாளம் இவர்களுக்குக் கொடுக்கப்படுவதில்லை. 40.யோனா இரவும் பகலும் மூன்றுநாள் ஒரு பெரிய மீனின் வயிற்றில் இருந்ததுபோல, மனுஷகுமாரனும் இரவும் பகலும் மூன்றுநாள் பூமியின் இருதயத்தில் இருப்பார் - மத்தேயு 12:39-40
ஒரு அடையாளத்தை மாத்திரம் தருவேன் என்றால் அங்கு வேறு சில அடையாளங்களும் இருக்கிறது என்பது தானே அர்த்தம், அது வார்த்தையானவருக்குள் இருந்த பிதாவின் ஆவியானவர் அடைந்த பாடுகளினால் உண்டாகும் கிருபையின் அடையாளத்தையும், வார்த்தையானவருக்குள் இருந்த பரிசுத்த ஆவியானவர் அடைந்த பாடுகளினால் நமக்கு கிடைக்கும் அபிஷேகம் என்கிற அடையாளத்தையும் குறிக்கிறது, இப்படி தனக்குள் வாசம் செய்யும் பிதாவின் ஆவியானவரை யோனாவிலும் பெரியவர் என்றும், தனக்குள் வாசம் செய்யும் பரிசுத்த ஆவியானவரை சாலொமோனிலும் பெரியவர் என்றும் கர்த்தர் சொன்னதை தான் இந்த வசனத்தில் பார்க்கிறோம் - 41.யோனாவின் பிரசங்கத்தைக் கேட்டு நினிவே பட்டணத்தார் மனந்திரும்பினார்கள். இதோ, யோனாவிலும் பெரியவர் இங்கே இருக்கிறார். ஆதலால் நியாயத்தீர்ப்புநாளிலே நினிவே பட்டணத்தார் இந்தச் சந்ததியாரோடெழுந்து நின்று இவர்கள்மேல் குற்றஞ்சுமத்துவார்கள். 42.தென்தேசத்து ராஜஸ்திரீ பூமியின் எல்லைகளிலிருந்து சாலொமோனுடைய ஞானத்தைக் கேட்க வந்தாள். இதோ, சாலொமோனிலும் பெரியவர் இங்கே இருக்கிறார். ஆதலால் நியாயத்தீர்ப்புநாளிலே அந்த ராஜஸ்திரீ இந்தச் சந்ததியாரோடெழுந்து நின்று இவர்கள்மேல் குற்றஞ்சுமத்துவாள் - மத்தேயு 12:41-42
சிலுவையின் இரட்சிப்பின் அடையாளத்தோடு, பிதாவின் கிருபையின் அடையாளத்தையும், பரிசுத்த ஆவியின் அடையாளத்தையும் பெற்றதினால் தான், நாம் பரலோகத்தின் தேவனை பிதா என்று அழைக்கும் புத்திரசுவீகாரம் பெற்றவர்களாகவும், பரிசுத்த ஆவியானவரின் அபிஷேகத்தை பெற்றவர்களாகவும் இருக்கிறோம், இது தேவனுடைய கிருபையே அன்றி வேறொன்றும் இல்லை
ஒருவேளை இயேசு கிறிஸ்துவின் சிலுவை பாடுகளை அறிந்தவர்களாய் இருந்தும், பிதாவின் கிருபையின் அடையாளத்தையும் பரிசுத்த ஆவியின் அபிஷேகம் என்கிற அடையாளத்தையும் பெறாமல் இருந்தால் அதன் முடிவு எப்படியிருக்கும் என்றும் கர்த்தர் சொல்லியுள்ளார், அது ஒரு பரிதாபமான முடிவே - 43.அசுத்த ஆவி ஒரு மனுஷனை விட்டுப் புறப்படும்போது, வறண்ட இடங்களில் அலைந்து, இளைப்பாறுதல் தேடியும் கண்டடையாமல்: 44.நான் விட்டு வந்த என் வீட்டுக்குத் திரும்பிப்போவேன் என்று சொல்லி; அங்கே வந்து, அந்த வீடு வெறுமையாகவும், பெருக்கி, ஜோடிக்கப்பட்டதாகவும் இருக்கக்கண்டு, 45.திரும்பிப்போய், தன்னிலும் பொல்லாத வேறு ஏழு ஆவிகளைத் தன்னோடே கூட்டிக்கொண்டுவந்து, உட்புகுந்து, அங்கே குடியிருக்கும்; அப்பொழுது, அந்த மனுஷனுடைய முன்னிலைமையிலும் அவன் பின்னிலைமை அதிக கேடுள்ளதாயிருக்கும்; அப்படியே இந்தப் பொல்லாத சந்ததியாருக்கும் சம்பவிக்கும் என்றார் - மத்தேயு 12:43-45
இவ்வுலகில் பலர் இயேசு கிறிஸ்துவை பற்றி கேள்விப்பட்டவர்களாகவும், கர்த்தரின் சிலுவை மரணத்தையும் உயிர்த்தெழுதலையும் அறிந்தவர்களாகவும் இருக்கிறார்கள், அது கர்த்தர் அனுமதித்ததினால் இந்த ஒரு அடையாளம் கொடுக்கப்பட்டது, ஆனால் அவர்கள் இயேசு கிறிஸ்துவே தேவன் என்பதை ஏற்றுக் கொள்ள மாட்டார்கள், பரிசுத்த ஆவியானவரும் அங்கே இருக்க மாட்டார், அதனால் தான் இந்த மார்மன் மதமும், யெகோவாவின் சாட்சியும் ஆபத்தானதாய் இருக்கிறது, அவர்கள் சிலுவையின் அடையாளத்தை அறிந்தவர்கள் தான், அது மோசேயிடம் ஒரு அடையாளத்தை மாத்திரம் பெற்றுக்கொண்ட பார்வோனுக்கு ஒப்பானதாகவே இருக்கிறது, முடிவு செங்கடலில் மாண்டு போவதே, கிறிஸ்தவ மதத்தை அளிக்க துடிக்கும் மதங்களும் இதில் அடங்கும்.
ஒரு அடையாளத்தை மாத்திரம் பெற்ற ரோமன் கத்தோலிக்க மதத்தார்
இப்படி இயேசு கிறிஸ்துவின் சிலுவை அடையாளத்தை மாத்திரம் பெற்று, பிதாவின் கிருபை அடையாளத்தையும், பரிசுத்த ஆவியின் அபிஷேக அடையாளத்தையும் பெறாதவர்களை, பார்வோன் என்று பழைய ஏற்பாடு சொல்கிறது, விரியன் பாம்புக் குட்டிகள், பொல்லாதவர்கள், வேதபாரகர், பரிசேயர் என்று புதிய ஏற்பாடு அழைக்கிறது, அந்த கூட்டத்தில் மரியாளை மகிமை படுத்துகிறவர்களும் இணைந்துக் கொள்கிறார்கள் என்று லூக்காவின் புஸ்தகத்தில் எழுதப்பட்டுள்ளது, அதனால் தான் மரியாளை தெய்வமாய் வாங்குகிறவர்கள், தேவகிருபையை பெற்றுக் கொள்வதும் கிடையாது, பரிசுத்த ஆவியின் அபிஷேகத்தை பெற்றுக் கொள்வதும் கிடையாது - 14.பின்பு அவர் ஊமையாயிருந்த ஒரு பிசாசைத் துரத்தினார். பிசாசு புறப்பட்டுப்போனபின்பு ஊமையன் பேசினான்; ஜனங்கள் ஆச்சரியப்பட்டார்கள். 15.அவர்களில் சிலர்: இவன் பிசாசுகளின் தலைவனாகிய பெயெல்செபூலைக்கொண்டு பிசாசுகளைத் துரத்துகிறான் என்றார்கள். 16.வேறு சிலர் அவரைச் சோதிக்கும்படி வானத்திலிருந்து ஒரு அடையாளத்தைக் காட்டவேண்டுமென்று அவரிடத்தில் கேட்டார்கள். 17.அவர்களுடைய சிந்தனைகளை அவர் அறிந்து, அவர்களை நோக்கி: தனக்குத்தானே விரோதமாய்ப் பிரிந்திருக்கிற எந்த ராஜ்யமும் பாழாய்ப்போம்; தனக்குத்தானே விரோதமாய்ப் பிரிந்திருக்கிற எந்த வீடும் விழுந்துபோம். 18.சாத்தானும் தனக்குத்தானே விரோதமாய்ப் பிரிந்திருந்தால் அவன் ராஜ்யம் எப்படி நிலைநிற்கும்? இப்படியிருக்க, பெயெல்செபூலைக்கொண்டு நான் பிசாசுகளைத் துரத்துகிறேன் என்கிறீர்களே. 19.நான் பெயெல்செபூலினாலே பிசாசுகளைத் துரத்தினால், உங்கள் பிள்ளைகள் அவைகளை யாராலே துரத்துகிறார்கள்? ஆகையால், அவர்களே உங்களை நியாயந்தீர்க்கிறவர்களாயிருப்பார்கள். 20.நான் தேவனுடைய விரலினாலே பிசாசுகளைத் துரத்துகிறபடியால், தேவனுடைய ராஜ்யம் உங்களிடத்தில் வந்திருக்கிறதே. 21.ஆயுதந்தரித்த பலவான் தன் அரமனையைக் காக்கிறபோது, அவனுடையபொருள் பத்திரப்பட்டிருக்கும். 22.அவனிலும் அதிக பலவான் வந்து, அவனை மேற்கொள்வானேயாகில், அவன் நம்பியிருந்த சகல ஆயுதவர்க்கத்தையும் பறித்துக்கொண்டு, அவனுடைய கொள்ளைப்பொருளைப் பங்கிடுவான். 23.என்னோடே இராதவன் எனக்கு விரோதியாயிருக்கிறான், என்னோடே சேர்க்காதவன் சிதறடிக்கிறான். 24.அசுத்த ஆவி ஒரு மனுஷனை விட்டுப்புறப்படும்போது, வறண்ட இடங்களில் அலைந்து, இளைப்பாறுதல் தேடியும் கண்டடையாமல்: நான் விட்டுவந்த என் வீட்டுக்குத் திரும்பிப்போவேன் என்று சொல்லி, 25.அதில் வரும்போது, அது பெருக்கி ஜோடிக்கப்பட்டிருக்கக் கண்டு, 26.திரும்பிப்போய், தன்னிலும் பொல்லாத வேறு ஏழு ஆவிகளைக் கூட்டிக்கொண்டுவந்து, உட்புகுந்து, அங்கே குடியிருக்கும்; அப்பொழுது அந்த மனுஷனுடைய முன்னிலைமையிலும் அவன் பின்னிலைமை அதிக கேடுள்ளதாயிருக்கும் என்றார். 27.அவர் இவைகளைச் சொல்லுகையில், ஜனக்கூட்டத்திலிருந்த ஒரு ஸ்திரீ அவரை நோக்கி: உம்மைச் சுமந்த கர்ப்பமும் நீர் பாலுண்ட முலைகளும் பாக்கியமுள்ளவைகளென்று சத்தமிட்டுச் சொன்னாள். 28.அதற்கு அவர்: அப்படியானாலும், தேவனுடைய வார்த்தையைக் கேட்டு, அதைக் காத்துக்கொள்ளுகிறவர்களே அதிக பாக்கியவான்கள் என்றார். 29.ஜனங்கள் திரளாய்க் கூடிவந்திருக்கிறபொழுது அவர்: இந்தச் சந்ததியார் பொல்லாதவர்களாயிருக்கிறார்கள், அடையாளத்தைத் தேடுகிறார்கள்; ஆனாலும் யோனா தீர்க்கதரிசியின் அடையாளமேயன்றி வேறே அடையாளம் இவர்களுக்குக் கொடுக்கப்படுவதில்லை. 30.யோனா நினிவே பட்டணத்தாருக்கு அடையாளமாயிருந்ததுபோல, மனுஷகுமாரனும் இந்தச் சந்ததிக்கு அடையாளமாயிருப்பார். 31.தென்தேசத்து ராஜஸ்திரீ சாலொமோனுடைய ஞானத்தைக் கேட்க பூமியின் எல்லைகளிலிருந்து வந்தாள்; இதோ, சாலொமோனிலும் பெரியவர் இங்கே இருக்கிறார்; ஆதலால் நியாயத்தீர்ப்புநாளிலே அந்த ராஜஸ்திரீ இந்தச் சந்ததியாரோடெழுந்து நின்று, இவர்கள்மேல் குற்றஞ்சுமத்துவாள். 32.யோனாவின் பிரசங்கத்தைக் கேட்டு நினிவே பட்டணத்தார் மனந்திரும்பினார்கள்; இதோ, யோனாவிலும் பெரியவர் இங்கே இருக்கிறார்; ஆதலால் நியாயத்தீர்ப்புநாளிலே நினிவே பட்டணத்தார் இந்தச் சந்ததியாரோடெழுந்து நின்று, இவர்கள்மேல் குற்றஞ்சுமத்துவார்கள் - லூக்கா 11:14-32
ஒரு அடையாளமும் கொடுக்கப்படாத இஸ்லாம் மதத்தார்
இப்படி கர்த்தரின் சிலுவை மரணம் என்கிற ஒரு அடையாளத்தை மாத்திரம் பெற்றவர்களின் பரிதாபமான முடிவை பார்த்தோம், ஆனால் ஒரு கூட்டத்தாருக்கு கர்த்தர் ஒரு அடையாளத்தையும் தரமுடியாது என்று மறுத்து விட்டார், அதாவது சிலுவையின் அடையாளத்தையும் தரமுடியாது என்று மறுத்து விட்டார், அவர்களின் முடிவு மிகப்பரிதாபமே, அவர்கள் யார் என்றால் கர்த்தரோடு தர்க்கம் செய்தவர்கள், இன்றைக்கும் அப்படிபட்டவர்கள் இருக்கிறார்கள், அவர்கள் இயேசுவை அறிந்தவர்கள், சிலுவையை குறித்துக் கேள்விப்பட்டவர்கள், ஆனால் அவர் அதில் மரிக்கவில்லை என்பார்கள், அவர்களுக்கு சிலுவை என்பது ஒரு பொய்யான கதை, அந்த மிகப்பரிதாபமான கூட்டத்தார் தான் இஸ்லாம் மதத்தார், இயேசு கிறிஸ்து சிலுவையில் மரிக்கவில்லை என்பவர்கள் - 10.உடனே அவர் தம்முடைய சீஷரோடேகூடப் படவில் ஏறி, தல்மனூத்தாவின் எல்லைகளில் வந்தார். 11.அப்பொழுது பரிசேயர் வந்து அவரோடே தர்க்கிக்கத்தொடங்கி, அவரைச் சோதிக்கும்படி, வானத்திலிருந்து ஒரு அடையாளத்தைக் காண்பிக்கவேண்டும் என்று கேட்டார்கள். 12.அவர் தம்முடைய ஆவியில் பெருமூச்சுவிட்டு: இந்தச் சந்ததியார் அடையாளம் தேடுகிறதென்ன? இந்தச் சந்ததியாருக்கு ஒரு அடையாளமும் கொடுக்கப்படுவதில்லையென்று மெய்யாகவே உங்களுக்குச் சொல்லுகிறேன் என்று சொல்லி, 13.அவர்களை விட்டு மறுபடியும் படவில் ஏறி, அக்கரைக்குப் போனார் - மாற்கு 8:10-13
அடுத்த பாகம்: வாசல், ஆடுகளின் மேய்ப்பர், மற்றும் வாசலைக் காக்கிறவர்