கர்த்தரை காட்டிக் கொடுத்த பன்னிருவரில் ஒருவனாகிய யூதாஸ்காரியோத்தின் முடிவையும், அவனை குறித்த தீர்க்கதரிசனத்தையும் அப்போஸ்தலனாகிய பேதுரு இப்படியாக சொல்லியிருக்கிறார் - 16.சகோதரரே, இயேசுவைப் பிடித்தவர்களுக்கு வழிகாட்டின யூதாசைக்குறித்துப் பரிசுத்தஆவி தாவீதின் வாக்கினால் முன் சொன்ன வேதவாக்கியம் நிறைவேறவேண்டியதாயிருந்தது. 17.அவன் எங்களில் ஒருவனாக எண்ணப்பட்டு, இந்த ஊழியத்திலே பங்குபெற்றவனாயிருந்தான். 18.அநீதத்தின் கூலியினால் அவன் ஒரு நிலத்தைச் சம்பாதித்து, தலைகீழாக விழுந்தான்; அவன் வயிறு வெடித்து, குடல்களெல்லாம் சரிந்துபோயிற்று. 19.இது எருசலேமிலுள்ள குடிகள் யாவருக்கும் தெரிந்திருக்கிறது; அதினாலே அந்த நிலம் அவர்களுடைய பாஷையிலே இரத்தநிலம் என்று அர்த்தங்கொள்ளும் அக்கெல்தமா என்னப்பட்டிருக்கிறது. 20.சங்கீத புஸ்தகத்திலே: அவனுடைய வாசஸ்தலம் பாழாகக்கடவது, ஒருவனும் அதில் வாசம்பண்ணாதிருப்பானாக என்றும்; அவனுடைய கண்காணிப்பை வேறொருவன் பெறக்கடவன் என்றும் எழுதியிருக்கிறது - அப்போஸ்தலர் 1:16-20
அது மாத்திரம் இல்லாமல், பன்னிருவரில் ஒருவனாகிய யூதாஸ்காரியோத்துக்கு பதிலாக ஒருவரை நியமிக்கும் பொழுது, அவர்கள் யோசேப்பு மற்றும் மத்தியா என்கிற இரண்டு பேரை பிரித்து, அதில் மத்தியாவை சீட்டு போட்டு தேர்ந்தெடுத்தை பார்க்கிறோம் - 21.ஆதலால், யோவான் ஞானஸ்நானங்கொடுத்த நாள்முதற்கொண்டு, கர்த்தராகிய இயேசுவானவர் நம்மிடத்திலிருந்து உயர எடுத்துக்கொள்ளப்பட்ட நாள்வரைக்கும், 22.அவர் நம்மிடத்தில் சஞ்சரித்திருந்த காலங்களிலெல்லாம் எங்களுடனேகூட இருந்த மனுஷர்களில் ஒருவன் அவர் உயிரோடெழுந்ததைக்குறித்து, எங்களுடனேகூடச் சாட்சியாக ஏற்படுத்தப்படவேண்டும் என்றான். 23.அப்பொழுது அவர்கள் யுஸ்து என்னும் மறுநாமமுள்ள பர்சபா என்னப்பட்ட யோசேப்பும் மத்தியாவும் ஆகிய இவ்விரண்டுபேரையும் நிறுத்தி: 24.எல்லாருடைய இருதயங்களையும் அறிந்திருக்கிற கர்த்தாவே, யூதாஸ் என்பவன் தனக்குரிய இடத்துக்குப் போகும்படி இழந்துபோன இந்த ஊழியத்திலும் இந்த அப்போஸ்தலப்பட்டத்திலும் பங்குபெறுவதற்காக, 25.இவ்விரண்டு பேரில் தேவரீர் தெரிந்துகொண்டவனை எங்களுக்குக் காண்பித்தருளும் என்று ஜெபம்பண்ணி; 26.பின்பு, அவர்களைக்குறித்துச் சீட்டுப்போட்டார்கள்; சீட்டு மத்தியாவின் பேருக்கு விழுந்தது; அப்பொழுது அவன் பதினொரு அப்போஸ்தலருடனே சேர்த்துக்கொள்ளப்பட்டான் - அப்போஸ்தலர் 1:21-26
இப்படியாக இயேசுவோடு இருந்தவர்கள் என்று சொல்லி இரண்டு பேரை பிரித்ததெடுத்த பொழுது, யுஸ்து மற்றும் பர்சபா மற்றும் யோசேப்பு என்கிற மூன்று நாமங்களுடையவராய், இயேசுவோடு இருந்தவர் யார்? அதுவும் அவர் கர்த்தர் ஞானஸ்நானம் எடுத்த நாள் முதல் கர்த்தர் எடுத்துக்கொள்ளப்பட்ட நாள்வரைக்கும் கர்த்தரோடு இருந்தாராமே? இந்த காரியங்கள் எல்லாம் எழுதப்பட்டதற்க்கு காரணமே, அவரை குறித்து நாம் அறிந்துக் கொள்ள வேண்டும் என்பதற்காக தானே?
இயேசு கிறிஸ்து சொன்ன காரியங்களில் முக்கியமான ஓன்று, பிதாவாகிய தேவன் எப்பொழுதும் கர்த்தரோடு இருக்கிறார் என்பதாகும் - என்னை அனுப்பினவர் என்னுடனேகூட இருக்கிறார், பிதாவுக்குப் பிரியமானவைகளை நான் எப்பொழுதும் செய்கிறபடியால் அவர் என்னைத் தனியே இருக்கவிடவில்லை என்றார் - யோவான் 8:29
இயேசு கிறிஸ்துவின் ஊழிய நாட்களில் மாத்திரம் அல்ல, கர்த்தர் நமக்காக சிலுவையில் பாடுபட்ட சமயத்திலும் பிதாவாகிய தேவன் கர்த்தரோடு இருந்தார் - இதோ, நீங்கள் சிதறுண்டு, அவனவன் தன்தன் இடத்துக்குப் போய், என்னைத் தனியே விட்டுவிடுங்காலம் வரும்; அது இப்பொழுது வந்திருக்கிறது; ஆனாலும் நான் தனித்திரேன், பிதா என்னுடனேகூட இருக்கிறார் - யோவான் 16:32
மேலும், யோசுவா தீர்க்கதரிசனமாக, பிரதான ஆசாரியராகிய இயேசு கிறிஸ்துவின் கால்கள் யோர்தானின் தண்ணீரிலே பட்டமாத்திரத்தில், அதாவது கர்த்தர் ஞானஸ்நானம் எடுத்த நாள் முதல், பிதாவாகிய தேவன் அவரோடு இருப்பார் என்பதை இப்படி சொல்லாயிருந்தார் - 9.யோசுவா இஸ்ரவேல் புத்திரரை நோக்கி: நீங்கள் இங்கே சேர்ந்து, உங்கள் தேவனாகிய கர்த்தருடைய வார்த்தைகளைக் கேளுங்கள் என்றான். 10.பின்பு யோசுவா: ஜீவனுள்ள தேவன் உங்கள் நடுவே இருக்கிறார் என்பதையும், அவர் கானானியரையும் ஏத்தியரையும் ஏவியரையும் பெரிசியரையும் கிர்காசியரையும் எமோரியரையும் எபூசியரையும் உங்களுக்கு முன்பாகத் துரத்திவிடுவார் என்பதையும், நீங்கள் அறிந்துகொள்வதற்கு அடையாளமாக: 11.இதோ, சர்வ பூமிக்கும் ஆண்டவராயிருக்கிறவருடைய உடன்படிக்கைப் பெட்டி உங்களுக்கு முன்னே யோர்தானிலே போகிறது. 12.இப்பொழுதும் இஸ்ரவேல் கோத்திரங்களிலே பன்னிரண்டுபேரை, ஒவ்வொரு கோத்திரத்துக்கு ஒவ்வொருவராகப் பிரித்தெடுங்கள். 13.சம்பவிப்பது என்னவென்றால், சர்வபூமிக்கும் ஆண்டவராகிய கர்த்தரின் பெட்டியைச் சுமக்கிற ஆசாரியர்களின் உள்ளங்கால்கள் யோர்தானின் தண்ணீரிலே பட்டமாத்திரத்தில், மேலேயிருந்து ஓடிவருகிற யோர்தானின் தண்ணீர் ஓடாமல் ஒரு குவியலாக நிற்கும் என்றான் - யோசுவா 3:9-13
இப்படி கர்த்தரை குறித்து சொல்லப்பட்ட தீர்க்கதரிசனங்கள் நிறைவேறினது என்பதை விளக்கவே, யுஸ்து மற்றும் பர்சபா மற்றும் யோசேப்பு என்கிற மூன்று நாமங்களுடைய ஒருவர் கர்த்தர் ஞானஸ்நானம் எடுத்த நாள் முதல் அவர் எடுத்துக்கொள்ளப்பட்ட நாள்வரைக்கும் கர்த்தரோடு இருந்தார் என்பதை மறைமுகமாக குறிப்பிட்டுள்ளார்.
நாம் மேலோட்டமாக படிக்கும் பொழுது, அவர் ஒரு சாதாரண நபராகவும், அபோஸ்தலராக தேர்ந்தெடுக்கபட தகுதியற்ற நபராகவும் தான் நமக்கு தோன்றும், ஆனால், அவர் தான் சர்வவல்லமையுள்ள தேவன், தன்னுடைய ஒரே பேறான குமாரனை தனியே விட்டுவிடாத தேவன், இயேசு கிறிஸ்துவை போல நாமும், பிதாவுக்குப் பிரியமானவைகளை செய்வோமானால், அவர் நம்மோடு இருப்பார் என்பதில் சந்தேகம் இல்லை.
முந்தைய பாகத்தை படிக்க இங்கே ஒரு பையன் இருக்கிறான்