நான் தேவர்களாய் இருக்கிறேன்
இயேசு கிறிஸ்து திரியேக தேவனாக, அதாவது பிதா, வார்த்தை, பரிசுத்த ஆவியானவரின் தற்சுரூபமாய் இருக்கிறார்
இயேசு கிறிஸ்து திரியேக தேவனாக, அதாவது பிதா, வார்த்தை, பரிசுத்த ஆவியானவரின் தற்சுரூபமாய் இருக்கிறார்
முந்தைய பாகம்: இயேசு கிறிஸ்துவின் திரித்துவம்
கர்த்தர் தன்னுடைய சீஷர்களை "பிதா குமாரன் பரிசுத்த ஆவியின் நாமத்திலே" ஞானஸ்நானம் கொடுக்க கட்டளையிட, இரகசியம் அறிந்த சீஷர்களோ இயேசுவின் நாமத்திலே ஞானஸ்நானம் கொடுத்து, இயேசு தான் பிதா, குமாரன், பரிசுத்த ஆவியாகிய திரியேக தேவன் என்பதை உலகுக்கு உணர்த்தினார்கள், இதை இயேசு கிறிஸ்துவின் திரித்துவம் என்கிற கடந்த தொகுப்பில் பார்த்தோம்.
யூதர்கள் இயேசு கிறிஸ்துவிடம், நீர் உம்மை "தேவன்" என்று எப்படிச் சொல்லலாம்? என்று கேட்க, கர்த்தரோ அவர்களிடம், என்னை "தேவர்கள்" என்றல்லவா வேதாகமம் சொல்லுகிறது என்று சொன்னதற்கு காரணம், கர்த்தர், வார்த்தையானவரின் குமாரன் மாத்திரம் அல்ல, அவருக்குள் பிதாவானவரின் குமாரனும், பரிசுத்த ஆவியானவரின் குமாரனும் வாசம் செய்தபடியால் தான் - 30.நானும் பிதாவும் ஒன்றாயிருக்கிறோம் என்றார். 31.அப்பொழுது யூதர்கள் மறுபடியும் அவர்மேல் கல்லெறியும்படி, கல்லுகளை எடுத்துக்கொண்டார்கள். 32.இயேசு அவர்களை நோக்கி: நான் என் பிதாவினாலே அநேக நற்கிரியைகளை உங்களுக்குக் காண்பித்தேன், அவைகளில் எந்தக் கிரியையினிமித்தம் என்மேல் கல்லெறிகிறீர்கள் என்றார். 33.யூதர்கள் அவருக்குப் பிரதியுத்தரமாக: நற்கிரியையினிமித்தம் நாங்கள் உன்மேல் கல்லெறிகிறதில்லை; நீ மனுஷனாயிருக்க, உன்னை தேவன் என்று சொல்லி, இவ்விதமாக தேவதூஷணஞ் சொல்லுகிறபடியினால் உன்மேல் கல்லெறிகிறோம் என்றார்கள். 34.இயேசு அவர்களுக்குப் பிரதியுத்தரமாக: தேவர்களாயிருக்கிறீர்கள் என்று நான் சொன்னேன் என்பதாய் உங்கள் வேதத்தில் எழுதியிருக்கவில்லையா? 35.தேவவசனத்தைப் பெற்றுக்கொண்டவர்களை தேவர்கள் என்று அவர் சொல்லியிருக்க, வேதவாக்கியமும் தவறாததாயிருக்க, 36.பிதாவினால் பரிசுத்தமாக்கப்பட்டும், உலகத்தில் அனுப்பப்பட்டும் இருக்கிற நான் என்னை தேவனுடைய குமாரன் என்று சொன்னதினாலே தேவதூஷணஞ் சொன்னாய் என்று நீங்கள் சொல்லலாமா? - யோவான் 10:30-36
இப்படி இயேசு கிறிஸ்துவானவர், வார்த்தையானவரின் குமாரனாக மாத்திரம் இல்லாமல், அவருக்குள் பிதாவானவரின் குமாரனும், பரிசுத்த ஆவியானவரின் குமாரனும் வாசம் செய்தபடியால் தான், ஞானதிருஷ்டிக்காரனாகிய ஆசாப் கர்த்தரை "தேவர்கள்" என்றும், "உன்னதமானவரின் மக்கள்" என்றும் பன்மையில் சொல்லி, அதன் பின்பு, "நீங்கள் மனுஷரைப்போலச் செத்து" என்று கர்த்தரின் சிலுவை மரணத்தையும், "தேவனே எழுந்தருளும்" என்று கர்த்தரின் உயிர்த்தெழுதலையும் தீர்க்கதரிசனமாக உரைத்தார் - 6.நீங்கள் தேவர்கள் என்றும், நீங்களெல்லாரும் உன்னதமானவரின் மக்கள் என்றும் நான் சொல்லியிருந்தேன். 7.ஆனாலும் நீங்கள் மனுஷரைப்போலச் செத்து, லோகப்பிரபுக்களில் ஒருவனைப்போல விழுந்துபோவீர்கள். 8.தேவனே, எழுந்தருளும், பூமிக்கு நியாயத்தீர்ப்புச் செய்யும்; நீரே சகல ஜாதிகளையும் சுதந்தரமாகக் கொண்டிருப்பவர் - சங்கீதம் 82:6-8
நாம் கிறிஸ்துவின் திரித்துவத்தைப் புரிந்துகொள்ளும்போது, இந்த தீர்க்கதரிசனங்கள் அனைத்தும் இயேசு என்கிற ஒரே ஒருவருக்காக எழுதப்பட்டதையும், அதின் அர்த்தத்தையும் எளிதாக புரிந்து கொள்ளலாம், இல்லையென்றால், பன்மையில் சொல்லப்பட்ட தீர்க்கதரிசனங்களின் நிமித்தமாக நாம் சீடர்களையும் கிறிஸ்துவுடன் சேர்க்க நேரிடும், அல்லது இந்த தீர்க்கதரிசனங்கள் நமக்காக எழுதப்பட்டது போலவும் தோன்றலாம், அது மிகவும் ஆபத்தானது.
உதாரணத்திற்கு, ஓய்வு நாளில் வேலை செய்வது தேவகட்டளையை மீறும் காரியம் என்று தன் மேல் குற்றம் சாட்டினவர்களிடம், இயேசு கிறிஸ்துவானவர் தன்னை "ஒரு ஆசாரியரோடு" ஒப்பிட்டு பேசுவதற்கு பதிலாக "ஆசாரியர்களோடு" ஒப்பிட்டு பேசினார் -5.அன்றியும், ஓய்வுநாட்களில் ஆசாரியர்கள் தேவாலயத்தில் ஓய்ந்திராமல், ஓய்வுநாளை வேலை நாளாக்கினாலும் குற்றமில்லாதிருக்கிறார்கள் என்று நீங்கள் வேதத்தில் வாசிக்கவில்லையா? 6.தேவாலயத்திலும் பெரியவர் இங்கே இருக்கிறார் என்று உங்களுக்குச் சொல்லுகிறேன். 7.பலியையல்ல இரக்கத்தையே விரும்புகிறேன் என்பதின் கருத்து இன்னதென்று அறிந்தீர்களானால், குற்றமில்லாதவர்களை நீங்கள் குற்றப்படுத்தமாட்டீர்கள். 8.மனுஷகுமாரன் ஓய்வுநாளுக்கும் ஆண்டவராய் இருக்கிறார் என்றார் - மத்தேயு 12:5-7
மேலும் குற்றமில்லாதவர்கள் என்று இயேசு கிறிஸ்து யாரை குறிப்பிட்டார்? தன்னோடிருக்கும் பிதாவானவரின் குமாரன் மற்றும் பரிசுத்த ஆவியானவரின் குமாரனையல்லவா "குற்றமில்லாதவர்கள்" என்று சொல்லி அவர்களுக்காக வாதாடினார்.
அதனால் தான், குஷ்டரோகமுள்ள பத்துப்பேரிடம் "எங்களிடம் உங்களைக் காண்பியுங்கள்" என்பதற்கு பதிலாக "ஆசாரியர்களுக்கு உங்களைக் காண்பியுங்கள்" என்றார், அதில் ஒருவன் மாத்திரமே, இயேசு கிறிஸ்துவாய் நின்று கொண்டிருந்த வார்த்தையானவரின் குமாரன், பிதாவானவரின் குமாரன், பரிசுத்த ஆவியானவரின் குமாரனின்[ஆசாரியர்களின்] பாதத்தருகே முகங்குப்புற விழுந்து தன் நன்றியை காண்பித்தான் - 14.அவர்களை அவர் பார்த்து: நீங்கள் போய், ஆசாரியர்களுக்கு உங்களைக் காண்பியுங்கள் என்றார். அந்தப்படி அவர்கள் போகையில் சுத்தமானார்கள். 15.அவர்களில் ஒருவன் தான் ஆரோக்கியமானதைக் கண்டு, திரும்பிவந்து, உரத்த சத்தத்தோடே தேவனை மகிமைப்படுத்தி, 16.அவருடைய பாதத்தருகே முகங்குப்புற விழுந்து, அவருக்கு ஸ்தோத்திரஞ்செலுத்தினான்; அவன் சமாரியனாயிருந்தான். 17.அப்பொழுது இயேசு: சுத்தமானவர்கள் பத்துப்பேர் அல்லவா, மற்ற ஒன்பதுபேர் எங்கே? - லூக்கா 17:14-175.
கர்த்தர் நிக்கொதேமுவிடம் நாங்கள் கண்டதைக்குறித்துச் சாட்சிகொடுக்கிறோம் என்று சொன்னதில், "நாங்கள்" என்பது தன்னுடைய சீஷர்களையும் சேர்த்து கர்த்தர் அப்படியாக சொன்னார் என்பது பொதுவான அபிப்பிராயம், ஆனால் இயேசு கிறிஸ்து மாத்திரமே பிதாவைக் கண்டவர் [யோவான் 6:46] என்று வேதாகமம் தெளிவாய் சொல்லியிருக்க, சீஷர்கள் எப்படி பிதாவை கண்டிருக்க முடியும்? கர்த்தர் "நாங்கள் கண்டதைக்குறித்துச் சாட்சிகொடுக்கிறோம்" என்று சொன்னதற்கு காரணம் வார்த்தையானவரின் குமாரனோடு, பிதாவானவரின் குமாரனும், பரிசுத்த ஆவியானவரின் குமாரனும் இருந்த படியால் தான் - 11.மெய்யாகவே மெய்யாகவே நான் உனக்குச் சொல்லுகிறேன், நாங்கள் அறிந்திருக்கிறதைச் சொல்லி, நாங்கள் கண்டதைக்குறித்துச் சாட்சிகொடுக்கிறோம்; நீங்களோ எங்கள் சாட்சியை ஏற்றுகொள்ளுவதில்லை. 12.பூமிக்கடுத்த காரியங்களை நான் உங்களுக்குச் சொல்லியும் நீங்கள் விசுவாசிக்கவில்லையே, பரமகாரியங்களை உங்களுக்குச் சொல்வேனானால் எப்படி விசுவாசிப்பீர்கள்?
இப்படி இயேசு கிறிஸ்து மாத்திரமே பிதாவை தரிசிப்பவராய் இருக்க, "தேவதூதர்கள் பரலோகத்திலே என் பரமபிதாவின் சமுகத்தை எப்போதும் தரிசிக்கிறார்கள்" என்று சொன்னதற்கு காரணம் என்ன? யார் இந்த "தேவதூதர்கள்"? இங்கு கர்த்தர் தன்னை தான் தேவதூதர்கள் என்று சொன்னார், வார்த்தையானவரின் குமாரனோடு, பிதாவானவரின் குமாரனும், பரிசுத்த ஆவியானவரின் குமாரனும் இருக்கிற படியால் தான் தன்னை "தேவதூதர்கள்" என்று பன்மையில் சொன்னார் - 10.இந்தச் சிறியரில் ஒருவனையும் அற்பமாய் எண்ணாதபடிக்கு எச்சரிக்கையாயிருங்கள்; அவர்களுக்குரிய தேவதூதர்கள் பரலோகத்திலே என் பரமபிதாவின் சமுகத்தை எப்போதும் தரிசிக்கிறார்கள் என்று உங்களுக்குச் சொல்லுகிறேன். 11.மனுஷகுமாரன் கெட்டுப்போனதை இரட்சிக்க வந்தார் - மத்தேயு 18:10-11
கர்த்தர் சமாரிய ஸ்திரீயிடம் "நாங்கள் அறிந்திருக்கிறதைத் தொழுதுகொள்ளுகிறோம்" என்று சொன்னது, தன்னுடைய சீஷர்களையும் சேர்த்து அப்படியாக சொன்னார் என்பது பொதுவான அபிப்பிராயம், ஆனால் அது அப்படியல்ல, வார்த்தையானவரின் குமாரனோடு, பிதாவானவரின் குமாரனும், பரிசுத்த ஆவியானவரின் குமாரனும் இருந்த படியால் தான் அப்படிச் சொன்னார் - 21.அதற்கு இயேசு: ஸ்திரீயே, நான் சொல்லுகிறதை நம்பு. நீங்கள் இந்த மலையிலும் எருசலேமிலும் மாத்திரமல்ல, எங்கும் பிதாவைத் தொழுதுகொள்ளுங்காலம் வருகிறது. 22.நீங்கள் அறியாததைத் தொழுதுகொள்ளுகிறீர்கள்; நாங்கள் அறிந்திருக்கிறதைத் தொழுதுகொள்ளுகிறோம்; ஏனென்றால் இரட்சிப்பு யூதர்கள் வழியாய் வருகிறது - யோவான் 4:21-22
கர்த்தர் "எங்கள் மூலமாய்க் கேள்விப்பட்டதை விசுவாசித்தவன் யார்?" என்று கேட்க காரணம் என்ன? அங்கு சுவிசேஷத்தை அறிவித்தது கர்த்தர் மாத்திரம் தானே! பின்பு ஏன் "எங்கள் மூலமாய்" என்று பண்மையில் சொல்லப்பட்டது? காரணம் வார்த்தையானவரின் குமாரனோடு, பிதாவானவரின் குமாரனும், பரிசுத்த ஆவியானவரின் குமாரனும் இருந்த படியால் தான் - 36.ஒளி உங்களோடிருக்கையில் நீங்கள் ஒளியின் பிள்ளைகளாகும்படிக்கு, ஒளியினிடத்தில் விசுவாசமாயிருங்கள் என்றார். இவைகளை இயேசு சொல்லி, அவர்களைவிட்டு மறைந்தார். 37.அவர் இத்தனை அற்புதங்களை அவர்களுக்கு முன்பாகச் செய்திருந்தும், அவர்கள் அவரை விசுவாசிக்கவில்லை. 38.கர்த்தாவே, எங்கள் மூலமாய்க் கேள்விப்பட்டதை விசுவாசித்தவன் யார்? கர்த்தருடைய புயம் யாருக்கு வெளிப்பட்டது என்று ஏசாயா தீர்க்கதரிசி சொன்ன வசனம் நிறைவேறும்படி இப்படி நடந்தது - யோவான் 12:36-38
ஒரு சாட்சி உண்மையாயிருக்க வேண்டுமென்றால், சாட்சி கொடுக்கிறவர்கள் இரண்டு அல்லது மூன்று பேராய் இருக்க வேண்டும், அதனால் தான் கர்த்தர் சாட்சி சொல்ல உன்னோடு இரண்டு பேரை கூட்டிக்கொண்டு போ என்று சொன்னார் - 15.உன் சகோதரன் உனக்கு விரோதமாகக் குற்றஞ்செய்தால், அவனிடத்தில் போய், நீயும் அவனும் தனித்திருக்கையில், அவன் குற்றத்தை அவனுக்கு உணர்த்து; அவன் உனக்குச் செவிகொடுத்தால், உன் சகோதரனை ஆதாயப்படுத்திக்கொண்டாய். 16.அவன் செவிகொடாமற்போனால், இரண்டு மூன்று சாட்சிகளுடைய வாக்கினாலே சங்கதிகளெல்லாம் நிலைவரப்படும்படி, இரண்டொருவரை உன்னுடனே கூட்டிக்கொண்டு போ - மத்தேயு 18:15-16
மேலும் தன்னோடு பிதாவானவரின் குமாரன், பரிசுத்த ஆவியானவரின் குமாரன் என இரண்டு பேர் இருந்த படியால் "என் சாட்சி உண்மையாயிருக்கிறது" என்றார், இதை உலகம் அன்றும் ஏற்றுக் கொள்ளவில்லை, இன்றும் புரிந்துக் கொள்ள தடுமாறுகிறது - 12.மறுபடியும் இயேசு ஜனங்களை நோக்கி: நான் உலகத்திற்கு ஒளியாயிருக்கிறேன், என்னைப் பின்பற்றுகிறவன் இருளிலே நடவாமல் ஜீவஒளியை அடைந்திருப்பான் என்றார். 13.அப்பொழுது பரிசேயர் அவரை நோக்கி: உன்னைக்குறித்து நீயே சாட்சிகொடுக்கிறாய்; உன்னுடைய சாட்சி உண்மையானதல்ல என்றார்கள். 14.இயேசு அவர்களுக்குப் பிரதியுத்தரமாக: என்னைக்குறித்து நானே சாட்சிகொடுத்தாலும், என் சாட்சி உண்மையாயிருக்கிறது; ஏனெனில் நான் எங்கேயிருந்து வந்தேனென்றும், எங்கே போகிறேனென்றும் அறிந்திருக்கிறேன்; நீங்களோ நான் எங்கேயிருந்து வருகிறேனென்றும், எங்கே போகிறேனென்றும் அறியீர்கள் - யோவான் 8:14
தொடர்ந்து படிக்க நான் தேவர்களாய் இருக்கிறேன்