கர்த்தாராகிய இயேசு கிறிஸ்து தாவீது என்ற பெயருடன் அழைக்கப்பட்டதை வேதாகமத்தில் பலஇடங்களில் பார்க்கலாம் - 5.அவர்: நான் என் ஜனத்தை எகிப்துதேசத்திலிருந்து புறப்படப்பண்ணின நாள்முதற்கொண்டு, என் நாமம் விளங்கும்படி, ஒரு ஆலயத்தைக் கட்டவேண்டுமென்று நான் இஸ்ரவேலுடைய எல்லாக்கோத்திரங்களிலுமுள்ள வேறே யாதொரு பட்டணத்தைத் தெரிந்துகொள்ளாமலும், என் ஜனமாகிய இஸ்ரவேலின்மேல் அதிபதியாயிருக்கும்படி வேறே ஒருவரைத்தெரிந்துகொள்ளாமலும், 6.என் நாமம் விளங்கும் ஸ்தானமாக எருசலேமையும், என் ஜனமாகிய இஸ்ரவேலின்மேல் அதிபதியாயிருக்கத் தாவீதையும் தெரிந்துகொண்டேன் என்றார் - II நாளாகமம் 6:5-6
இப்படி தாவீது என்று அழைக்கப்பட்ட கர்த்தாராகிய இயேசு கிறிஸ்துவின் பாடுகளையும், சிலுவையில் கர்த்தர் வெற்றி சிறக்க போகிறதையும் குறித்து தான் சங்கீத புஸ்தகத்தில் தீர்க்கதரிசனமாக எழுதப்பட்டுள்ளது - 1.கர்த்தாவே, தாவீதையும் அவனுடைய சகல உபத்திரவத்தையும் நினைத்தருளும். 2.அவன்: நான் கர்த்தருக்கு ஒரு இடத்தையும், யாக்கோபின் வல்லவருக்கு ஒரு வாசஸ்தலத்தையும் காணுமட்டும், 3.என் வீடாகிய கூடாரத்தில் பிரவேசிப்பதுமில்லை, என் படுக்கையாகிய கட்டிலின்மேல் ஏறுவதுமில்லை; 4.என் கண்களுக்கு நித்திரையையும், என் இமைகளுக்கு உறக்கத்தையும் வரவிடுவதுமில்லை என்று, 5.கர்த்தருக்கு ஆணையிட்டு, யாக்கோபின் வல்லவருக்குப் பொருத்தனைபண்ணினான் - சங்கீதம் 132:1-5
இந்த தீர்க்கதரிசனத்தின் கடைசியில், இயேசு கிறிஸ்துவின் பிறப்பை குறித்தும், கர்த்தரின் சிலுவை பாடுகளை குறித்தும் ஒரே வசனத்தில் சொல்லப்பட்டிருக்கிறது - இதோ, நாம் எப்பிராத்தாவிலே அதின் செய்தியைக் கேட்டு, வனத்தின் வெளிகளில் அதைக் கண்டோம் - சங்கீதம் 132:6
இதில் எப்பிராத்தா என்பது இயேசு கிறிஸ்து பிறந்த பெத்லகேம் ஊரை குறிக்கிறது - எப்பிராத்தா என்னப்பட்ட பெத்லகேமே, நீ யூதேயாவிலுள்ள ஆயிரங்களுக்குள்ளே சிறியதாயிருந்தும், இஸ்ரவேலை ஆளப்போகிறவர் உன்னிடத்திலிருந்து புறப்பட்டு என்னிடத்தில் வருவார்; அவருடைய புறப்படுதல் அநாதி நாட்களாகிய பூர்வத்தினுடையது - மீகா 5:2
வனத்தின் வெளி, என்பது மூலபாஷையில் சிலுவை மரத்தையே குறிக்கிறது - Lo, we heard of it at Ephratah: we found it in the fields of the wood - Psalm 132:6
சொல்லப்பட்ட தீர்க்கதரிசனத்தின் படியே இயேசு கிறிஸ்து பெத்லகேமிலே பிறந்தார் - 1.ஏரோது ராஜாவின் நாட்களில் யூதேயாவிலுள்ள பெத்லகேமிலே இயேசு பிறந்தபொழுது, கிழக்கிலிருந்து சாஸ்திரிகள் எருசலேமுக்கு வந்து, 2.யூதருக்கு ராஜாவாகப் பிறந்திருக்கிறவர் எங்கே? கிழக்கிலே அவருடைய நட்சத்திரத்தைக் கண்டு, அவரைப் பணிந்துகொள்ள வந்தோம் என்றார்கள் - மத்தேயு 2:1-2
கடைசியில் நம்மேல் வைத்த அன்பினால் சிலுவை மரத்திலே பாடுபட்டு நம்மை இரட்சித்தார் - 38.நசரேயனாகிய இயேசுவைத் தேவன் பரிசுத்தஆவியினாலும் வல்லமையினாலும் அபிஷேகம்பண்ணினார்; தேவன் அவருடனேகூட இருந்தபடியினாலே அவர் நன்மைசெய்கிறவராயும் பிசாசின் வல்லமையில் அகப்பட்ட யாவரையும் குணமாக்குகிறவராயும் சுற்றித்திரிந்தார். 39.யூதருடைய தேசத்திலும் எருசலேமிலும் அவர் செய்தவைகளெல்லாவற்றிற்கும் நாங்கள் சாட்சிகளாயிருக்கிறோம். அவரை மரத்திலே தூக்கிக் கொலைசெய்தார்கள் - அப்போஸ்தலர் 10:38-39