பழைய ஏற்பாட்டின் தீர்க்கதரிசியான மோசேயின் பிறப்பும் அவரது வாழ்க்கையும், தேவ குமாரனாகிய இயேசு கிறிஸ்துவை குறித்த இரகசியங்களை விளக்குவதாகவே இருக்கிறது, இதை தான் தேவன் மோசேயிடம் இப்படிச் சொன்னார் - உன்னைப்போல ஒரு தீர்க்கதரிசியை நான் அவர்களுக்காக அவர்கள் சகோதரரிலிருந்து எழும்பப்பண்ணி, என் வார்த்தைகளை அவர் வாயில் அருளுவேன்; நான் அவருக்குக் கற்பிப்பதையெல்லாம் அவர்களுக்குச் சொல்லுவார் - உபாகமம் 18:18
இந்த மோசேக்கு இரண்டு தாயார்கள் இருந்தார்கள், ஒருவர் மோசேயை பெற்றேடுத்த எபிரெய ஸ்திரீயாகிய "லேவியின் குமாரத்தி", மற்றோருவர் நாணற்பெட்டியில் விடப்பட்ட மோசேயை கண்டெடுத்து வளர்த்த "பார்வோனின் குமாரத்தி" - 1.லேவியின் குடும்பத்தாரில் ஒருவன் லேவியின் குமாரத்திகளில் ஒருத்தியை விவாகம்பண்ணினான். 2.அந்த ஸ்திரீ கர்ப்பவதியாகி, ஒரு ஆண்பிள்ளையைப் பெற்று, அது அழகுள்ளது என்று கண்டு, அதை மூன்று மாதம் ஒளித்துவைத்தாள். 3.அவள் அதை அப்புறம் ஒளித்துவைக்கக்கூடாமல், ஒரு நாணற்பெட்டியை எடுத்து, அதற்குப் பிசினும் கீலும் பூசி, அதிலே பிள்ளையை வளர்த்தி, நதியோரமாய் நாணலுக்குள்ளே வைத்தாள். 4.அதற்கு என்ன சம்பவிக்கும் என்பதை அறியும்படி அதின் தமக்கை தூரத்திலே நின்றுகொண்டிருந்தாள். 5.அப்பொழுது பார்வோனுடைய குமாரத்தி நதியில் ஸ்நானம்பண்ண வந்தாள்; அவளுடைய தாதிகள் நதியோரத்தில் உலாவினார்கள்; அவள் நாணலுக்குள்ளே இருக்கிற பெட்டியைக் கண்டு, தன் தாதியை அனுப்பி அதைக் கொண்டுவரும்படி செய்தாள். 6.அதைத் திறந்தபோது பிள்ளையைக் கண்டாள்; பிள்ளை அழுதது; அவள் அதின்மேல் இரக்கமுற்று, இது எபிரெயர் பிள்ளைகளில் ஒன்று என்றாள் - யாத்திராகமம் 2:1-6
அது போலவே, தேவ குமாரனாகிய இயேசு கிறிஸ்துவுக்கு இரண்டு தாயார்கள் இருந்தார்கள், ஒருவர் உண்மையான தாயாகிய பரலோகத்தின் தேவன், அவரே தன்னுடைய மடியிலுருந்த இயேசுவை, நாணற்பெட்டியாகிய மரியாளின் கர்ப்பபையில் வைத்தார், மற்றொருவர் நாணற்பெட்டியில் விடப்பட்ட மோசேயை வளர்த்த பார்வோனின் குமாரத்தியை போல, தன் கர்ப்பபையில் விடப்பட்ட இயேசு கிறிஸ்துவை பெற்று வளர்த்த மரியாள்.
இந்த மோசே விடப்பட்ட நாணற்பெட்டியானது, மரியாளின் கர்ப்பபையையே குறிக்கிறது, அதானால் தான் ஒரு குழந்தை கர்ப்பத்திலிருந்து வெளிப்பட்டவுடன் அழுவது போல, நாணற்பெட்டியை திறந்தபோது பிள்ளையாகிய மோசே அழுததாக வேதாகமத்தில் எழுதப்பட்டுள்ளது.
மேலும் மோசே வளர்ந்த பொழுது, தான் பார்வோனுடைய குமாரத்தியின் மகன் என்று என்னப்படுவதை வெறுத்தார் என்பதை பார்க்கிறோம் - 24.விசுவாசத்தினாலே மோசே தான் பெரியவனானபோது பார்வோனுடைய குமாரத்தியின் மகன் என்னப்படுவதை வெறுத்து, 25.அநித்தியமான பாவசந்தோஷங்களை அநுபவிப்பதைப்பார்க்கிலும் தேவனுடைய ஜனங்களோடே துன்பத்தை அநுபவிப்பதையே தெரிந்துகொண்டு, 26.இனிவரும் பலன்மேல் நோக்கமாயிருந்து, எகிப்திலுள்ள பொக்கிஷங்களிலும் கிறிஸ்துவினிமித்தம் வரும் நிந்தையை அதிக பாக்கியமென்று எண்ணினான் - எபிரெயர் 11:24-26
யாராவது மோசேயை பார்வோனுடைய குமாரத்தியின் மகன் சொன்னால், அது அவருக்கு பொய் பேசுவதாக தான் இருந்தது, ஏனென்றால் அவர் பார்வோனுடைய குமாரத்தியின் மகனே அல்ல, அதை தான் இயேசு கிறிஸ்துவின் வாழ்க்கையிலும் பார்க்கிறோம், தன்னை மரியாளுடைய குமாரன் என்று அழைத்தவர்களிடம் நீங்கள் என்னை கனவீனபடுத்துகிறீர்கள் என்றே கர்த்தர் பதில் சொன்னார் - 3.இவன் தச்சன் அல்லவா? மரியாளுடைய குமாரன் அல்லவா? யாக்கோபு யோசே யூதா சீமோன் என்பவர்களுக்குச் சகோதரன் அல்லவா? இவன் சகோதரிகளும், இங்கே நம்மிடத்தில் இருக்கிறார்கள் அல்லவா? என்று சொல்லி, அவரைக்குறித்து இடறலடைந்தார்கள். 4.இயேசு அவர்களை நோக்கி: தீர்க்கதரிசி ஒருவன் தன் ஊரிலும் தன் இனத்திலும் தன் வீட்டிலுமேயன்றி வேறெங்கும் கனவீனமடையான் என்றார் - மாற்கு 6:3-4
மோசே பார்வோனுடைய குமாரத்தியை வெறுக்கவில்லை, மாறாக அவரின் மகன் என்று என்னப்படுவதை வெறுத்தார், அதை தான் இயேசு கிறிஸ்துவின் வாழ்க்கையிலும் பார்க்கிறோம், இயேசு கிறிஸ்து மரியாளை நேசித்தார், ஆனால், தான் மரியாளுடைய குமாரன் என்று அழைக்கப்படுவதை அவர் விரும்பவில்லை, காரணம், தேவனுடைய பார்வையில் அது ஒரு பொய்யான காரியமாய் இருக்கிறது, மேலும், நம்மை இரட்சிக்க, சிலுவையின் வேதனையையும் நிந்தனைகளையும் அமைதியாய் பொறுத்துக்கொண்ட கர்த்தர், தன்னை மரியாளுடைய குமாரன் என்று சொன்ன பொழுது அமைதியாய் இருக்கவில்லை, தன்னுடைய ஆட்சபேனையை உடனே தெரிவித்தார்.
மோசேக்கு இரண்டு தாயார்கள் இருந்த வேளையில், பால்கொடுத்து வளர்த்தது " பிள்ளையின் தாய்" என்று சொல்லும் பொழுது, அது எபிரெய ஸ்திரீயாகிய லேவியின் குமாரத்தியை குறிக்கிறதேயன்றி, பார்வோனுடைய குமாரத்தியை அல்ல - 7.அப்பொழுது அதின் தமக்கை பார்வோனின் குமாரத்தியை நோக்கி: உமக்கு இந்தப் பிள்ளையை வளர்க்கும்படி எபிரெய ஸ்திரீகளில் பால்கொடுக்கிற ஒருத்தியை நான் போய் உம்மிடத்தில் அழைத்துக்கொண்டு வரட்டுமா என்றாள். 8.அதற்குப் பார்வோனுடைய குமாரத்தி: அழைத்துக்கொண்டுவா என்றாள். இந்தப் பெண் போய்ப் பிள்ளையின் தாயையே அழைத்துக்கொண்டுவந்தாள். 9.பார்வோனுடைய குமாரத்தி அவளை நோக்கி: நீ இந்தப் பிள்ளையை எடுத்துக்கொண்டுபோய், அதை எனக்கு வளர்த்திடு, நான் உனக்குச் சம்பளம் கொடுக்கிறேன் என்றாள். அந்த ஸ்திரீ பிள்ளையை எடுத்துக்கொண்டுபோய், அதை வளர்த்தாள். 10.பிள்ளை பெரிதானபோது, அவள் அதைப் பார்வோனுடைய குமாரத்தியினிடத்தில் கொண்டுபோய் விட்டாள். அவளுக்கு அவன் குமாரனானான். அவள்: அவனை ஜலத்தினின்று எடுத்தேன் என்று சொல்லி, அவனுக்கு மோசே என்று பேரிட்டாள் - யாத்திராகமம் 2:7-10
அது போலவே, வேதாகமத்தில், அதிலும் குறிப்பாக யோவான் சுவிஷேச புஸ்தகத்தில், "இயேசுவின் தாய்" என்று சொல்லப்பட்டது பரலோகத்தின் தேவனை குறிக்கிறதே அன்றி, மரியாளை அல்ல, சாலொமோன் ஞானியும், பரலோகத்தின் தேவனை "இயேசுவின் தாய்" என்றும், இயேசு கிறிஸ்துவை "அவரின் ஒரே பிள்ளை" என்றும் குறிப்பிடுகிறார், தேவனிடத்திலிருந்து வந்த இயேசு கிறிஸ்துவை "ஒரே பிள்ளை" என்றால், தேவனை "அவரின் தாய்" என்று சாலொமோன் ஞானி குறிப்பிட்டது சரி தானே! - என் புறாவோ, என் உத்தமியோ ஒருத்தியே; அவள் தன் தாய்க்கு ஒரே பிள்ளை; அவள் தன்னைப் பெற்றவளுக்கு அருமையானவள் - உன்னதப்பாட்டு 6:9
தொடர்ந்து படிக்க யோவான் சுவிஷேச புஸ்தகத்தில் இயேசுவின் தாய்
முந்தைய பாகத்தை படிக்க முன்னுரை