வேலைக்காரன் தன் எஜமானைப்போலவும் இருப்பது போதும்
வேலைக்காரன் தன் எஜமானைப்போலவும் இருப்பது போதும்
இயேசு கிறிஸ்து தன் பன்னிரண்டு சீஷர்களை அப்போஸ்தல ஊழியத்திற்கு தெரிந்துக் கொண்டதை தான் இந்த வசனங்களில் பார்க்கிறோம் - 1.அப்பொழுது, அவர் தம்முடைய பன்னிரண்டு சீஷர்களையும் தம்மிடத்தில் வரவழைத்து, அசுத்த ஆவிகளைத் துரத்தவும், சகல வியாதிகளையும், சகல நோய்களையும் நீக்கவும் அவர்களுக்கு அதிகாரம் கொடுத்தார். 2.அந்தப் பன்னிரண்டு அப்போஸ்தலருடைய நாமங்களாவன: முந்தினவன் பேதுரு என்னப்பட்ட சீமோன், அவன் சகோதரன் அந்திரேயா, செபெதேயுவின் குமாரன் யாக்கோபு, அவன் சகோதரன் யோவான், 3.பிலிப்பு, பர்த்தொலொமேயு, தோமா, ஆயக்காரனாகிய மத்தேயு, அல்பேயுவின் குமாரன் யாக்கோபு, ததேயு என்னும் மறுநாமமுள்ள லெபேயு, 4.கானானியனாகிய சீமோன், அவரைக் காட்டிக்கொடுத்த யூதாஸ்காரியோத்து என்பவைகளே - மத்தேயு 10:1-4
இப்படி ஊழியத்திற்கு அழைத்த இயேசு கிறிஸ்து, சொல்லிக்கொடுத்த பாடம் தான் "சீஷன் தன் போதகனைப்போலவும், வேலைக்காரன் தன் எஜமானைப்போலவும் இருப்பது போதும்" என்பதாகும், ஏனென்றால் ஒரு பக்குவப்படாத ஊழியக்காரன், மக்கள் முன்பு பெரிய காரியங்களை செய்ய வேண்டும், பிரபலமாக வேண்டும் என்று தன்னை அறியாமலேயே ஒரு முதன்மையான இடத்தை விரும்புகிறவனாக தான் இருப்பான், இது மிகவும் ஆபத்தானதாகவும், பிசாசின் தந்திரமாகவும் இருக்கிறது, அதனை திருத்தி கொள்ள வேண்டும் என்பதற்காகத் தான் வேலைக்காரன் தன் எஜமானைப்போலவும் இருப்பது போதும் என்று கர்த்தரே சொல்லி கொடுத்தார் - 24.சீஷன் தன் போதகனிலும், வேலைக்காரன் தன் எஜமானிலும் மேற்பட்டவனல்ல. 25.சீஷன் தன் போதகனைப்போலவும், வேலைக்காரன் தன் எஜமானைப்போலவும் இருப்பது போதும். வீட்டெஜமானையே பெயல்செபூல் என்று சொன்னார்களானால், அவன் வீட்டாரை அப்படிச் சொல்வது அதிக நிச்சயமல்லவா? - மத்தேயு 10:24-25
அது மாத்திரம் இல்லாமல், ஊழியத்தில் மேலான ஊழியமான இயேசு கிறிஸ்து சீஷன் என்கிற ஊழியத்தின் அடையாளமே சிறியர்(தாழ்மையுள்ளவர்கள்) என்பது தான் என்றும் சொல்லி கொடுத்தார் - 40.உங்களை ஏற்றுக்கொள்ளுகிறவன் என்னை ஏற்றுக்கொள்ளுகிறான்; என்னை ஏற்றுக்கொள்ளுகிறவன் என்னை அனுப்பினவரை ஏற்றுக்கொள்ளுகிறான். 41.தீர்க்கதரிசி என்னும் நாமத்தினிமித்தம் தீர்க்கதரிசியை ஏற்றுக்கொள்ளுகிறவன் தீர்க்கதரிசிக்கேற்ற பலனை அடைவான்; நீதிமான் என்னும் நாமத்தினிமித்தம் நீதிமானை ஏற்றுக்கொள்ளுகிறவன் நீதிமானுக்கேற்ற பலனை அடைவான். 42.சீஷன் என்னும் நாமத்தினிமித்தம் இந்தச் சிறியரில் ஒருவனுக்கு ஒருகலசம் தண்ணீர் மாத்திரம் குடிக்கக் கொடுக்கிறவனும் தன் பலனை அடையாமற்போகான் என்று மெய்யாகவே உங்களுக்குச் சொல்லுகிறேன் என்றார் - மத்தேயு 10:40-42
அதனால் தான் "தீர்க்கதரிசி என்னும் நாமத்தினிமித்தம் தீர்க்கதரிசியை ஏற்றுக்கொள்ளுகிறவன், தீர்க்கதரிசி என்னும் நாமத்தினிமித்தம் தீர்க்கதரிசியை ஏற்றுக்கொள்ளுகிறவன் தீர்க்கதரிசிக்கேற்ற பலனை அடைவான்; நீதிமான் என்னும் நாமத்தினிமித்தம் நீதிமானை ஏற்றுக்கொள்ளுகிறவன் நீதிமானுக்கேற்ற பலனை அடைவான்" என்று சொன்ன கர்த்தர் "சீஷன் என்னும் நாமத்தினிமித்தம் இந்தச் சிறியரில் ஒருவனுக்கு ஒருகலசம் தண்ணீர் மாத்திரம் குடிக்கக் கொடுக்கிறவனும் தன் பலனை அடையாமற்போகான் என்று மெய்யாகவே உங்களுக்குச் சொல்லுகிறேன் என்றார்" என்று சொன்னார்.
ஒருவேளை இந்த உலகம் ஒரு தீர்க்கதரிசியை கவுரவப்படுத்தலாம், ஒரு நீதிமானைக் கூட ஏற்றுக்கொள்ளலாம், ஆனால் ஒருவன் இயேசு கிறிஸ்துவின் உண்மையான சீஷனாக(அப்போஸ்தலனாக) இருந்தால், வீட்டு வாசலிலேயே ஒருகலசம் தண்ணீர் மாத்திரம் குடிக்கக் கொடுத்து அனுப்பப்படும் நபராக தான் இருப்பார், அப்படி பட்ட சிறியவராக தான் இருக்கவும் வேண்டும், அது தான் கர்த்தரின் பார்வையில் மேலான ஊழியம்.
நீங்களோ ரபீ என்றழைக்கப்படாதிருங்கள்
இவ்வாறு ஊழியத்தின் துவக்கத்தில், தன் சீஷர்களிடம் ஏளிமையாய் இருக்க சொல்லி கொடுத்த இயேசு கிறிஸ்து, தான் சிலுவைக்கு போகும் முன்பு, நாம் எக்காரணத்தைக் கொண்டும் மற்றவர்களை காட்டிலும் ஒரு விசேஷமானவர்கள் போல ஒரு அடைமொழியோடு அழைக்கப்படக் கூடாது என்றும் அறிவுறுத்தினார் - 8.நீங்களோ ரபீ என்றழைக்கப்படாதிருங்கள்; கிறிஸ்து ஒருவரே உங்களுக்குப் போதகராயிருக்கிறார், நீங்கள் எல்லாரும் சகோதரராயிருக்கிறீர்கள். 9.பூமியிலே ஒருவனையும் உங்கள் பிதா என்று சொல்லாதிருங்கள்; பரலோகத்திலிருக்கிற ஒருவரே உங்களுக்குப் பிதாவாயிருக்கிறார். 10.நீங்கள் குருக்கள் என்றும் அழைக்கப்படாதிருங்கள்; கிறிஸ்து ஒருவரே உங்களுக்குக் குருவாயிருக்கிறார் - மத்தேயு 23:8-10