பிதா குமாரன் பரிசுத்த ஆவியின் நாமம் என்ன?
இயேசு கிறிஸ்து
இயேசு கிறிஸ்து
முந்தைய பாகம்: நான் தேவர்களாய் இருக்கிறேன்
கர்த்தர் தன்னுடைய சீஷர்களை "பிதா குமாரன் பரிசுத்த ஆவியின் நாமத்திலே" ஞானஸ்நானம் கொடுக்க கட்டளையிட, இரகசியம் அறிந்த சீஷர்களோ இயேசுவின் நாமத்திலே ஞானஸ்நானம் கொடுத்து, இயேசு தான் பிதா, குமாரன், பரிசுத்த ஆவியாகிய திரியேக தேவன் என்பதை உலகுக்கு உணர்த்தினார்கள், இதை இயேசு கிறிஸ்துவின் திரித்துவம் என்கிற கடந்த தொகுப்பில் பார்த்தோம்.
உலக மனிதர்கள் யாருக்காவது ஒரு உதவிகள் செய்தால் அதை சொல்லி காட்டுவார்கள், அதில் பெருமையையும் ஆதாயத்தையும் தேடிக் கொள்வார்கள், ஆனால் எந்த ஒரு தகப்பனாவது அல்லது தாயாவது தன்னுடைய குழந்தைக்கு உணவுட்டுவதை சொல்லி காட்டுவார்களா? அது போல தான் பிதாவானவரின் குமாரனும், பரிசுத்த ஆவியானவரின் குமாரனும் வார்த்தையானவரின் குமாரனோடு சிலுவையில் நமக்காக பட்ட பாடுகளை வெளியே சொல்லிக் கொள்வதில்லை, அவசியமானதினால் வார்த்தையானவரின் குமாரன் மாத்திரமே இதை உலகத்திற்கு அறிவித்தார், மேலும் தன்னை ஏற்றுக் கொள்பவர்கள், இந்த இரகசியத்தை அறிந்துக் கொள்ளவேண்டும் என்பதற்காக கர்த்தர் தன்னுடைய ஊழிய நாட்கள் முழுவதும் தன்னோடு இருக்கும் பிதாவானவரின் குமாரனை பற்றியும், பரிசுத்த ஆவியானவரின் குமாரனை பற்றியும் மறைமுகமாகவும் உவமைகளாகவும் சொல்லிக் கொண்டு வந்தார், அவைகளை இந்த தொகுப்பில் பார்ப்போம்.
மரியாள் கர்ப்பந்தரிக்க போகும் செய்தியை அறிவிக்க வந்த தூதனானவர், மரியாளிடம் "பரிசுத்த ஆவி உன்மேல் வரும்" என்று சொல்லி இயேசுவானவர் திருத்துவத்தின் மூன்றாம் நபராகிய பரிசுத்த ஆவியானவரின் குமாரனாகவும், "உன்னதமானவருடைய பலம் உன்மேல் நிழலிடும்" என்று சொல்லி இயேசுவானவர் திருத்துவத்தின் முதலாம் நபராகிய பிதாவானவரின் குமாரனாகவும் இருப்பார் என்று சொன்ன பொழுது, மரியாள் உம்முடைய "வார்த்தையின்படி" எனக்கு ஆகக்கடவது என்று கூறி, பிறக்க போகும் வார்த்தையானவரின் குமாரனை குறித்து பூரிப்படைந்தாள் - 34.அதற்கு மரியாள் தேவதூதனை நோக்கி: இது எப்படியாகும்? புருஷனை அறியேனே என்றாள். 35.தேவதூதன் அவளுக்குப் பிரதியுத்தரமாக: பரிசுத்த ஆவி உன்மேல் வரும்; உன்னதமானவருடைய பலம் உன்மேல் நிழலிடும்; ஆதலால் உன்னிடத்தில் பிறக்கும் பரிசுத்தமுள்ளது தேவனுடைய குமாரன் என்னப்படும். 36.இதோ, உனக்கு இனத்தாளாயிருக்கிற எலிசபெத்தும் தன் முதிர்வயதிலே ஒரு புத்திரனைக் கர்ப்பந்தரித்திருக்கிறாள்; மலடியென்னப்பட்ட அவளுக்கு இது ஆறாம் மாதம். 37.தேவனாலே கூடாதகாரியம் ஒன்றுமில்லை என்றான். 38.அதற்கு மரியாள்: இதோ, நான் ஆண்டவருக்கு அடிமை, உம்முடைய வார்த்தையின்படி எனக்கு ஆகக்கடவது என்றாள். அப்பொழுது தேவதூதன் அவளிடத்திலிருந்து போய்விட்டான் - லூக்கா 1:26-38
இப்படியாக வார்த்தையானவரின் குமாரனோடு, பிதாவானவரின் குமாரனும், பரிசுத்த ஆவியானவரின் குமாரனும் இருந்த படியால் தான், சாஸ்திரிகள் "பொன்", "தூபவர்க்கம்", "வெள்ளைப்போளம்" என்னும் மூன்று பொருட்களை காணிக்கையாக கொண்டு வந்தார்கள் - அவர்கள் அந்த வீட்டுக்குள் பிரவேசித்து, பிள்ளையையும் அதின் தாயாகிய மரியாளையும் கண்டு, சாஷ்டாங்கமாய் விழுந்து அதைப் [இயேசுவை] பணிந்துகொண்டு, தங்கள் பொக்கிஷங்களைத் திறந்து, பொன்னையும் தூபவர்க்கத்தையும் வெள்ளைப்போளத்தையும் அதற்குக் காணிக்கையாக வைத்தார்கள் - மத்தேயு 2:11
அதனால் தான், இயேசு கிறிஸ்துவின் வருகையை குறித்துப் பாடிய சாலொமோன் ஞானியும் மூன்று விதமான நறுமண பொருட்களை சொல்லி இப்படியாக பாடினார் - "வெள்ளைப்போளத்தினாலும்", "சாம்பிராணியினாலும்", "வர்த்தகருடைய சகலவித கந்தப்பொடியினாலும்" உண்டாகிய வாசனையை வீசி, தூபஸ்தம்பங்களைப்போல் வனாந்தரத்திலிருந்து வருகிற இவர் யார்? - உன்னதப்பாட்டு 3:1-11
இப்படி மேசியாவானவர், வார்த்தையானவரின் குமாரனும், பிதாவானவரின் குமாரனும், பரிசுத்த ஆவியானவரின் குமாரனுமாக இருப்பதினால் தான், யோவானிடம் நீர் கிறிஸ்துவுமல்ல [வார்த்தையானவரின் குமாரனுமல்ல], எலியாவுமல்ல [பரிசுத்த ஆவியானவரின் குமாரனுமல்ல], தீர்க்கதரிசியானவருமல்லவென்றால் [பிதாவின் குமாரனுமல்லவென்றால்] ஏன் ஞானஸ்நானம் கொடுக்கிறீர் என்று கேட்டார்கள் - 25.அவர்கள் அவனை நோக்கி: நீர் கிறிஸ்துவுமல்ல, எலியாவுமல்ல, தீர்க்கதரிசியானவருமல்லவென்றால், ஏன் ஞானஸ்நானங் கொடுக்கிறீர் என்று கேட்டார்கள் - யோவான் 1:25
அதற்கு பதிலளித்த யோவான், நீங்கள் அறியாதிருக்கிற ஒருவரும் [பரிசுத்த ஆவியானவரின் குமாரனும்], என்னிலும் மேன்மையுள்ள ஒருவரும் [பிதாவானவரின் குமாரனும்], பாதரட்சையை அணிந்து மாம்சத்தில் வெளிப்பட்ட ஒருவருமாய் [வார்த்தையானவரின் குமாரனுமாய்] இயேசு கிறிஸ்து இங்கே இருக்கிறார் என்று சொன்னார் - 26.யோவான் அவர்களுக்குப் பிரதியுத்தரமாக: நான் ஜலத்தினாலே ஞானஸ்நானங்கொடுக்கிறேன்; நீங்கள் அறியாதிருக்கிற ஒருவர் உங்கள் நடுவிலே நிற்கிறார். 27.அவர் எனக்குப் பின்வந்தும் என்னிலும் மேன்மையுள்ளவர்; அவருடைய பாதரட்சையின் வாரை அவிழ்ப்பதற்கும் நான் பாத்திரனல்ல என்றான். 28.இவைகள் யோர்தானுக்கு அக்கரையில் யோவான் ஞானஸ்நானங்கொடுத்த பெத்தாபராவிலே நடந்தன - யோவான் 1:26-27
மத்தேயு தன் பங்கிற்கு, ஏசாயாவின் (42ம் அதிகாரம்) தீர்க்கதரிசனத்தை விளக்கிச் சொல்லும் பொழுது, வார்த்தையானவரின் குமாரனை "என்னுடைய தாசன்" என்றும், அவருக்குள் வாசம் செய்த பிதாவானவரின் குமாரனை "என்னுடைய நேசன்" என்றும், பரிசுத்த ஆவியானவரின் குமாரனை "என் ஆவியை அவர்மேல் அமரப்பண்ணுவேன்" என்று சொல்லி கர்த்தரின் திருத்துவதை குறிப்பிட்டுள்ளார் - 17.ஏசாயா தீர்க்கதரிசியால் உரைக்கப்பட்டது நிறைவேறும்படி இப்படி நடந்தது. அவன் உரைத்ததாவது: 18.இதோ, நான் தெரிந்துகொண்ட என்னுடைய தாசன், என் ஆத்துமாவுக்குப் பிரியமாயிருக்கிற என்னுடைய நேசன்; என் ஆவியை அவர்மேல் அமரப்பண்ணுவேன், அவர் புறஜாதியாருக்கு நியாயத்தை அறிவிப்பார். 19.வாக்குவாதம் செய்யவுமாட்டார், கூக்குரலிடவுமாட்டார்; அவருடைய சத்தத்தை ஒருவனும் வீதிகளில் கேட்பதுமில்லை 20.அவர் நியாயத்திற்கு ஜெயங்கிடைக்கப் பண்ணுகிறவரைக்கும், நெரிந்த நாணலை முறிக்காமலும், மங்கி எரிகிற திரியை அணைக்காமலும் இருப்பார். 21.அவருடைய நாமத்தின்மேல் புறஜாதியார் நம்பிக்கையாயிருப்பார்கள் என்பதே - மத்தேயு 12:9-88
இப்படி வார்த்தையானவரின் குமாரனோடு பிதாவானவரின் குமாரனும் இருந்தபடியால் தான் கர்த்தர் இதை சொன்னார் - 23.என்னைப் பகைக்கிறவன் என் பிதாவையும் பகைக்கிறான். 24.வேறொருவரும் செய்யாத கிரியைகளை நான் அவர்களுக்குள்ளே செய்யாதிருந்தேனானால், அவர்களுக்குப் பாவமிராது; இப்பொழுது அவர்கள் என்னையும் என் பிதாவையும் கண்டும் பகைத்துமிருக்கிறார்கள் - யோவான் 15:23-24
எப்படி கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவை பகைக்கிறவன் பிதாவை பகைக்கிறானோ, அதுபோலவே கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவை பகைக்கிறவன் பரிசுத்த ஆவியானவரையும் பகைக்கிறான் என்பதை தான் கர்த்தர் இப்படி சொன்னார் - 32.எவனாகிலும் மனுஷகுமாரனுக்கு விரோதமான வார்த்தை சொன்னால் அது அவனுக்கு மன்னிக்கப்படும்; எவனாகிலும் பரிசுத்த ஆவிக்கு விரோதமாகப் பேசினால் அது இம்மையிலும் மறுமையிலும் அவனுக்கு மன்னிக்கப்படுவதில்லை. 33.மரம் நல்லதென்றால், அதின் கனியும் நல்லதென்று சொல்லுங்கள்; மரம் கெட்டதென்றால், அதின் கனியும் கெட்டதென்று சொல்லுங்கள்; மரமானது அதின் கனியினால் அறியப்படும். 34.விரியன் பாம்புக் குட்டிகளே, நீங்கள் பொல்லாதவர்களாயிருக்க, நலமானவைகளை எப்படிப் பேசுவீர்கள்? இருதயத்தின் நிறைவினால் வாய் பேசும். 35.நல்ல மனுஷன் இருதயமாகிய நல்ல பொக்கிஷத்திலிருந்து நல்லவைகளை எடுத்துக்காட்டுகிறான், பொல்லாத மனுஷன் பொல்லாத பொக்கிஷத்திலிருந்து பொல்லாதவைகளை எடுத்துக்காட்டுகிறான் - மத்தேயு 12:32-35
இதை ஒரு உதாரணத்தோடு பார்த்தால் எளிதாக புரிந்து கொள்ளலாம், ஒரு ராஜா தன்னுடைய எதிராளிகளிடம் இப்படியாக சொன்னாராம், நேற்று வரை நீங்கள் ஒரு குடிமகனுக்கு தான் எதிராளியாக இருந்தீர்கள், ஆனால் இன்று முதல் இந்த தேசத்தின் ராஜாவுக்காக ராஜாவுக்கே எதிராளியாக இருக்கிறீர்கள், ஆமாம் நேற்று வரை அவர் ஒரு குடிமகன் தான், ஆனால் இன்று அவர் ராஜாவாக முடிசூட்டி இருக்கிறார், அது போல தான் இயேசு கிறிஸ்துவும் பரிசுத்த ஆவியினால் அபிஷேகம் பண்ணப்பட்டிருந்தார், அப்படியென்றால் இயேசு கிறிஸ்துவுக்கு விரோதமாக பேசுவது பரிசுத்த ஆவியானவருக்கு விரோதமாக பேசுவதாக தானே அர்த்தம், அது மிகவும் ஆபத்தானது என்பதை உணர்த்த தான் கர்த்தர் இப்படி சொன்னார், இப்படியாக நம் கர்த்தராகிய இயேசு கிறிஸ்து, தான் வார்த்தையானவர் மாத்திரம் அல்ல, தானே பிதாவாகவும் பரிசுத்த ஆவியானவருமாய் இருக்கிறார்.
ஒரு முறை, விபசாரத்திலே கண்டுபிடிக்கப்பட்ட ஸ்திரீயை விட்டு எல்லோரும் சென்ற பொழுது, "இயேசு தனித்திருந்தார், அந்த ஸ்திரீ நடுவே நின்றாள்" என்று வேதாகமம் சொல்லுகிறது, இது எப்படியாகும்? தனியே இருக்கும் ஒருவரின் நடுவாக எப்படி இருக்க முடியும்? எப்படியென்றால் வார்த்தையானவரின் குமாரனோடு, பிதாவானவரின் குமாரனும் பரிசுத்த ஆவியானவரின் இருந்த பொழுது, அந்த மூவரின் நடுவே அந்த ஸ்திரீ அடைக்கலம் அடைந்தாள் என்கிற பரம இரகசியத்தை அறிவிக்கவே இப்படியாக எழுதப்பட்டுள்ளது - 1.இயேசு ஒலிவமலைக்குப் போனார். 2.மறுநாள் காலையிலே அவர் திரும்பி தேவாலயத்திற்கு வந்தபோது, ஜனங்களெல்லாரும் அவரிடத்தில் வந்தார்கள். அவர் உட்கார்ந்து அவர்களுக்கு உபதேசம்பண்ணினார். 3.அப்பொழுது விபசாரத்திலே கண்டுபிடிக்கப்பட்ட ஒரு ஸ்திரீயை வேதபாரகரும் பரிசேயரும் அவரிடத்தில் கொண்டுவந்து, அவளை நடுவே நிறுத்தி: 4.போதகரே, இந்த ஸ்திரீ விபசாரத்தில் கையும் மெய்யுமாய்ப் பிடிக்கப்பட்டாள். 5.இப்படிப்பட்டவர்களைக் கல்லெறிந்து கொல்லவேண்டுமென்று மோசே நியாயப்பிரமாணத்தில் நமக்குக் கட்டளையிட்டிருக்கிறாரே, நீர் என்ன சொல்லுகிறீர் என்றார்கள். 6.அவர்மேல் குற்றஞ்சுமத்துவதற்கான காரணம் உண்டாகும்பொருட்டு அவரைச் சோதிக்கும்படி இப்படிச் சொன்னார்கள். இயேசுவோ குனிந்து, விரலினால் தரையிலே எழுதினார். 7.அவர்கள் ஓயாமல் அவரைக் கேட்டுக்கொண்டிருக்கையில், அவர் நிமிர்ந்து பார்த்து: உங்களில் பாவமில்லாதவன் இவள்மேல் முதலாவது கல்லெறியக்கடவன் என்று சொல்லி, 8.அவர் மறுபடியும் குனிந்து, தரையிலே எழுதினார். 9.அவர்கள் அதைக் கேட்டு, தங்கள் மனச்சாட்சியினால் கடிந்துகொள்ளப்பட்டு, பெரியோர்முதல் சிறியோர்வரைக்கும் ஒவ்வொருவராய்ப் போய்விட்டார்கள். இயேசு தனித்திருந்தார், அந்த ஸ்திரீ நடுவே நின்றாள். 10.இயேசு நிமிர்ந்து அந்த ஸ்திரீயைத் தவிர வேறொருவரையுங் காணாமல்: ஸ்திரீயே, உன்மேல் குற்றஞ்சாட்டினவர்கள் எங்கே? ஒருவனாகிலும் உன்னை ஆக்கினைக்குள்ளாகத் தீர்க்கவில்லையா என்றார். 11.அதற்கு அவள்: இல்லை, ஆண்டவரே, என்றாள். இயேசு அவளை நோக்கி: நானும் உன்னை ஆக்கினைக்குள்ளாகத் தீர்க்கிறதில்லை; நீ போ, இனிப் பாவஞ்செய்யாதே என்றார் - யோவான் 8:1-11
இப்படியாக இயேசு கிறிஸ்துவானவர் திரியேக தேவனாக இருப்பதினால் தான், திமிர்வாதக்காரனை இயேசு கிறிஸ்துவின் மத்தியில் இறக்கினார்கள் என்று மூலபாஷையில் சொல்லப்பட்டுள்ளது, அதாவது பிதா, வார்த்தை மற்றும் பரிசுத்த ஆவியானவரின் குமாரர்களுக்கு மத்தியில் அந்த திமிர்வாதக்காரனை இறக்கினார்களாம் - 18.அப்பொழுது சில மனுஷர் திமிர்வாதக்காரன் ஒருவனைப் படுக்கையோடே எடுத்துக்கொண்டுவந்து, அவனை உள்ளே கொண்டுபோகவும் அவர் முன்பாக வைக்கவும் வகைதேடினார்கள். 19.ஜனக்கூட்டம் மிகுதியாயிருந்தபடியால் அவனை உள்ளே கொண்டுபோகிறதற்கு வகைகாணாமல், வீட்டின்மேல் ஏறி, தட்டோடுகள் வழியாய் ஜனங்களின் மத்தியில் இயேசுவுக்கு முன்பாக[midst before Jesus] அவனைப் படுக்கையோடே இறக்கினார்கள். 20.அவர்களுடைய விசுவாசத்தை அவர் கண்டு, திமிர்வாதக்காரனை நோக்கி: மனுஷனே, உன் பாவங்கள் உனக்கு மன்னிக்கப்பட்டது என்றார் - லூக்கா 5:18-20
அதனால் தான், இயேசு கிறிஸ்து சூம்பின கையையுடைய மனுஷனை நடுவே நில் என்று சொன்னார், அதாவது பிதாவானவரின் குமாரன், வார்த்தையானவரின் குமாரன், மற்றும் பரிசுத்த ஆவியானவரின் குமாரனுக்கு நடுவாக நிற்க சொன்னார், அவனும் கர்த்தரின் வார்த்தைக்கு கீழ்ப்படிந்து சுகத்தை பெற்றுக் கொண்டான் - 1.மறுபடியும் அவர் ஜெபஆலயத்தில் பிரவேசித்தார். அங்கே சூம்பின கையையுடைய ஒரு மனுஷன் இருந்தான். 2.அவர் ஓய்வுநாளில் அவனைச் சொஸ்தமாக்கினால் அவர்பேரில் குற்றஞ்சாட்டலாமென்று அவர்மேல் நோக்கமாயிருந்தார்கள். 3.அப்பொழுது அவர் சூம்பின கையையுடைய மனுஷனை நோக்கி: எழுந்து நடுவே நில் என்று சொல்லி; 4.அவர்களைப் பார்த்து: ஓய்வுநாட்களில் நன்மைசெய்வதோ, தீமைசெய்வதோ, ஜீவனைக் காப்பதோ அழிப்பதோ, எது நியாயம் என்றார். அதற்கு அவர்கள் பேசாமலிருந்தார்கள். 5.அவர்களுடைய இருதயகடினத்தினிமித்தம் அவர் விசனப்பட்டு, கோபத்துடனே சுற்றிலும் இருந்தவர்களைப் பார்த்து, அந்த மனுஷனை நோக்கி: உன் கையை நீட்டு என்றார்; அவன் நீட்டினான்; அவன் கை மறுகையைப்போலச் சொஸ்தமாயிற்று. 6.உடனே பரிசேயர் புறப்பட்டுப்போய், அவரைக் கொலைசெய்யும்படி, அவருக்கு விரோதமாய் ஏரோதியரோடேகூட ஆலோசனைபண்ணினார்கள் - மாற்கு 3:1-6
இப்படி நம் இரட்சகராகிய இயேசு கிறிஸ்து, வார்த்தையானவரின் குமாரனும், பிதாவானவரின் குமாரனும், பரிசுத்த ஆவியானவரின் குமாரனுமாக இருப்பதினால் தான், கர்த்தர் தன்னை மூன்று அப்பங்களோடு ஒப்பிட்டுச் சொன்னார் - 5.பின்னும் அவர் அவர்களை நோக்கி: உங்களில் ஒருவன் தனக்குச் சிநேகிதனாயிருக்கிறவனிடத்தில் பாதிராத்திரியிலே போய்: சிநேகிதனே, 6.என் சிநேகிதன் ஒருவன் வழிப்பிரயாணமாய் என்னிடத்தில் வந்திருக்கிறான், அவன்முன் வைக்கிறதற்கு என்னிடத்தில் ஒன்றுமில்லை, நீ மூன்று அப்பங்களை எனக்குக் கடனாகத் தரவேண்டும் என்று கேட்டுக்கொண்டான். 7.வீட்டுக்குள் இருக்கிறவன் பிரதியுத்தரமாக: என்னைத் தொந்தரவு செய்யாதே, கதவு பூட்டியாயிற்று, என் பிள்ளைகள் என்னோடேகூடப் படுத்திருக்கிறார்கள், நான் எழுந்திருந்து, உனக்குத் தரக்கூடாது என்று சொன்னான். 8.பின்பு, தனக்கு அவன் சிநேகிதனாயிருக்கிறதினிமித்தம் எழுந்து அவனுக்குக் கொடாவிட்டாலும், தன்னிடத்தில் அவன் வருந்திக் கேட்கிறதினிமித்தமாவது எழுந்திருந்து, அவனுக்குத் தேவையானதைக் கொடுப்பான் என்று உங்களுக்குச் சொல்லுகிறேன் - லூக்கா 11:5-8
தன்னை மூன்று அப்பங்களோடு ஒப்பிட்டுச் சொன்ன கர்த்தர், வார்த்தையானவரின் குமாரன், பரிசுத்த ஆவியானவரின் குமாரன், மற்றும் பிதாவானவரின் குமாரனின் தனித்துவத்தை விளக்க, நானே "வழியும்", "சத்தியமும்", "ஜீவனுமாயிருக்கிறேன்" என்றும் சொன்னார் - 4.தோமா அவரை நோக்கி: ஆண்டவரே, நீர் போகிற இடத்தை அறியோமே, வழியை நாங்கள் எப்படி அறிவோம் என்றான். 5.அதற்கு இயேசு: நானே வழியும் சத்தியமும் ஜீவனுமாயிருக்கிறேன்; என்னாலேயல்லாமல் ஒருவனும் பிதாவினிடத்தில் வரான். 7.என்னை அறிந்தீர்களானால் என் பிதாவையும் அறிந்திருப்பீர்கள்; இதுமுதல் நீங்கள் அவரை அறிந்தும் அவரைக் கண்டும் இருக்கிறீர்கள் என்றார். 8.பிலிப்பு அவரை நோக்கி: ஆண்டவரே, பிதாவை எங்களுக்குக் காண்பியும், அது எங்களுக்குப் போதும் என்றான். 9.அதற்கு இயேசு: பிலிப்புவே, இவ்வளவுகாலம் நான் உங்களுடனேகூட இருந்தும் நீ என்னை அறியவில்லையா? என்னைக் கண்டவன் பிதாவைக் கண்டான்; அப்படியிருக்க, பிதாவை எங்களுக்குக் காண்பியும் என்று நீ எப்படி சொல்லுகிறாய்? 10.நான் பிதாவிலும், பிதா என்னிலும் இருக்கிறதை நீ விசுவாசிக்கிறதில்லையா? நான் உங்களுடனே சொல்லுகிற வசனங்களை என் சுயமாய்ச் சொல்லவில்லை; என்னிடத்தில் வாசமாயிருக்கிற பிதாவானவரே இந்தக் கிரியைகளைச் செய்துவருகிறார். 11.நான் பிதாவிலும் பிதா என்னிலும் இருக்கிறதை நம்புங்கள்; அப்படியில்லாவிட்டாலும் என் கிரியைகளினிமித்தமாவது என்னை நம்புங்கள் - யோவான் 14:5-11
தன் சீஷர்களை ஊழியத்திற்கு அனுப்பும் பொழுது, தான் பிதாவானவரின் குமாரனாகவும், வார்த்தையானவரின் குமாரனாகவும், எல்லோரையும் நிரப்பும் பரிசுத்த ஆவியானவரின் குமாரனாகவும் இருந்ததினால் தான், "தீர்க்கதரிசி என்னும் நாமத்தினிமித்தம்", "நீதிமான் என்னும் நாமத்தினிமித்தம்", "சீஷன் என்னும் நாமத்தினிமித்தம்" என்று மூன்று முறை சொல்லி அனுப்பினார் - 40.உங்களை ஏற்றுக்கொள்ளுகிறவன் என்னை ஏற்றுக்கொள்ளுகிறான்; என்னை ஏற்றுக்கொள்ளுகிறவன் என்னை அனுப்பினவரை ஏற்றுக்கொள்ளுகிறான். 41.தீர்க்கதரிசி என்னும் நாமத்தினிமித்தம் தீர்க்கதரிசியை ஏற்றுக்கொள்ளுகிறவன் தீர்க்கதரிசிக்கேற்ற பலனை அடைவான்; நீதிமான் என்னும் நாமத்தினிமித்தம் நீதிமானை ஏற்றுக்கொள்ளுகிறவன் நீதிமானுக்கேற்ற பலனை அடைவான். 42.சீஷன் என்னும் நாமத்தினிமித்தம் இந்தச் சிறியரில் ஒருவனுக்கு ஒருகலசம் தண்ணீர் மாத்திரம் குடிக்கக் கொடுக்கிறவனும் தன் பலனை அடையாமற்போகான் என்று மெய்யாகவே உங்களுக்குச் சொல்லுகிறேன் என்றார் - மத்தேயு 10:40-42
மேலும் தன் சீஷர்களிடம், தான் வார்த்தையானவரின் குமாரனாகவும் [ரபீயாகவும்], பிதாவானவரின் குமாரனாகவும் [பிதாவாகவும்], பரிசுத்த ஆவியானவரின் குமாரனாகவும் [குருக்களாகவும்] இருக்கிறேன் என்பதை இப்படியாகச் சொல்லி கொடுத்தார் - 8.நீங்களோ ரபீ என்றழைக்கப்படாதிருங்கள்; கிறிஸ்து ஒருவரே உங்களுக்குப் போதகராயிருக்கிறார், நீங்கள் எல்லாரும் சகோதரராயிருக்கிறீர்கள். 9.பூமியிலே ஒருவனையும் உங்கள் பிதா என்று சொல்லாதிருங்கள்; பரலோகத்திலிருக்கிற ஒருவரே உங்களுக்குப் பிதாவாயிருக்கிறார். 10.நீங்கள் குருக்கள் என்றும் அழைக்கப்படாதிருங்கள்; கிறிஸ்து ஒருவரே உங்களுக்குக் குருவாயிருக்கிறார். 11.உங்களில் பெரியவனாயிருக்கிறவன் உங்களுக்கு ஊழியக்காரனாயிருக்கக்கடவன். 12.தன்னை உயர்த்துகிறவன் தாழ்த்தப்படுவான், தன்னைத் தாழ்த்துகிறவன் உயர்த்தப்படுவான் - மத்தேயு 23:1-12
இயேசு கிறிஸ்து மரியாளிடம் "தேவையானது ஒன்றே" என்று தன்னை குறித்துச் சொல்ல காரணம் என்ன? ஒருவேளை இயேசு கிறிஸ்து திருத்துவதில் இரண்டாவது நபராக மாத்திரம் இருந்திருந்தால், மரியாளிடம் இப்பொழுது என்னையும், நான் மரித்து உயிர்த்தெழுந்த பிறகு பரிசுத்த ஆவியானவரையும், அதன் பின்பு பிதாவையும் தேட வேண்டும் என்று தானே சொல்லிருப்பார், ஆனால் அப்படி சொல்லாமல் தேவையானது ஒன்றே என்று சொல்ல காரணம், கர்த்தரே பிதாவானவரின் குமாரனும், வார்த்தையானவரின் குமாரனும், மற்றும் பரிசுத்த ஆவியானவரின் குமாரனுமாக இருப்பதினால் தான், மேலும் இந்த மேலான ரகசியத்தை நாம் அறிந்துக் கொள்ள வேண்டும் என்பதற்காகத் தான் "தேவையானது ஒன்றே" என்று இயேசு கிறிஸ்து தன்னை குறித்துச் சொன்னார் - 38.பின்பு, அவர்கள் பிரயாணமாய்ப் போகையில், அவர் ஒரு கிராமத்தில் பிரவேசித்தார். அங்கே மார்த்தாள் என்னும் பேர்கொண்ட ஒரு ஸ்திரீ அவரைத் தன் வீட்டிலே ஏற்றுக்கொண்டாள். 39.அவளுக்கு மரியாள் என்னப்பட்ட ஒரு சகோதரி இருந்தாள்; அவள் இயேசுவின் பாதத்தருகே உட்கார்ந்து, அவருடைய வசனத்தைக் கேட்டுக்கொண்டிருந்தாள். 40.மார்த்தாளோ பற்பல வேலைகளைச் செய்வதில் மிகவும் வருத்தமடைந்து, அவரிடத்தில் வந்து: ஆண்டவரே, நான் தனியே வேலைசெய்யும்படி என் சகோதரி என்னை விட்டு வந்திருக்கிறதைக் குறித்து உமக்குக் கவையில்லையா (அக்கறையில்லையா)? எனக்கு உதவிசெய்யும்படி அவளுக்குச் சொல்லும் என்றாள். 41.இயேசு அவளுக்குப் பிரதியுத்தரமாக: மார்த்தாளே, மார்த்தாளே, நீ அநேக காரியங்களைக் குறித்துக் கவலைப்பட்டுக் கலங்குகிறாய். 42.தேவையானது ஒன்றே, மரியாள் தன்னை விட்டெடுபடாத நல்ல பங்கைத் தெரிந்துகொண்டாள் என்றார் - லூக்கா 10:38-42
கர்த்தர் பிதாவானவரின் குமாரனாகவும், வார்த்தையானவரின் குமாரனாகவும், எல்லோரையும் நிரப்பும் பரிசுத்த ஆவியானவரின் குமாரனாகவும் இருந்ததினால் தான், பேதுருவிடம் நீ என்னை மூன்றுதரம் மறுதலிப்பாய் என்றார் - 55.அவர்கள் முற்றத்தின் நடுவிலே நெருப்பை மூட்டி, அதைச் சுற்றி உட்கார்ந்தபோது, பேதுருவும் அவர்கள் நடுவிலே உட்கார்ந்தான். 56.அப்பொழுது, ஒரு வேலைக்காரி அவனை நெருப்பண்டையிலே உட்கார்ந்திருக்கக்கண்டு, அவனை உற்றுப்பார்த்து: இவனும் அவனோடிருந்தான் என்றாள். 57.அதற்கு அவன்: ஸ்திரீயே, அவனை அறியேன் என்று மறுதலித்தான். 58.சற்றுநேரத்துக்குப் பின்பு வேறொருவன் அவனைக் கண்டு: நீயும் அவர்களில் ஒருவன் என்றான். அதற்குப் பேதுரு: மனுஷனே, நான் அல்ல என்றான். 59.ஏறக்குறைய ஒருமணி நேரத்துக்குப்பின்பு வேறொருவன் அவனைப் பார்த்து: மெய்யாகவே இவனும் அவனோடிருந்தான், இவன் கலிலேயன்தான் என்று சாதித்தான். 60.அதற்குப் பேதுரு: மனுஷனே, நீ சொல்லுகிறதை அறியேன் என்றான். அவன் இப்படிச் சொன்னவுடனே சேவல் கூவிற்று. 61.அப்பொழுது கர்த்தர் திரும்பி, பேதுருவை நோக்கிப்பார்த்தார். சேவல் கூவுகிறதற்கு முன்னே நீ என்னை மூன்றுதரம் மறுதலிப்பாய் என்று கர்த்தர் தன்னிடத்தில் சொன்ன வசனத்தை உடனே பேதுரு நினைவுகூர்ந்து, 62.வெளியே போய், மனங்கசந்து அழுதான்.
கர்த்தர் தன் சீஷர்களுடன் தனித்திருக்கும் பொழுது பரலோகராஜ்யத்தில் என்னோடு பந்தியிருப்பீர்கள் என்று சொன்னதை தான் இந்த வசனத்தில் பார்க்கிறோம் - நீங்கள் என் ராஜ்யத்திலே என் பந்தியில் போஜனபானம்பண்ணி, இஸ்ரவேலின் பன்னிரண்டு கோத்திரங்களையும் நியாயந்தீர்க்கிறவர்களாய்ச் சிங்காசனங்களின்மேல் உட்காருவீர்கள் என்றார் - லூக்கா 22:30
ஆனால் ஜனங்களிடம் பரலோகராஜ்யத்தில் "ஆபிரகாம் ஈசாக்கு யாக்கோபு என்பவர்களோடே பந்தியிருப்பார்கள்" என்று சொல்ல காரணம் என்ன? ஆபிரகாம் ஈசாக்கு யாக்கோபு என்று யாரை குறிப்பிட்டார்? - 10.இயேசு இதைக் கேட்டு ஆச்சரியப்பட்டு, தமக்குப் பின் செல்லுகிறவர்களை நோக்கி: இஸ்ரவேலருக்குள்ளும் நான் இப்படிப்பட்ட விசுவாசத்தைக் காணவில்லை என்று, மெய்யாகவே உங்களுக்குச் சொல்லுகிறேன். 11.அநேகர் கிழக்கிலும் மேற்கிலுமிருந்து வந்து, பரலோகராஜ்யத்தில் ஆபிரகாம் ஈசாக்கு யாக்கோபு என்பவர்களோடே பந்தியிருப்பார்கள். 12.ராஜ்யத்தின் புத்திரரோ புறம்பான இருளிலே தள்ளப்படுவார்கள்; அங்கே அழுகையும் பற்கடிப்பும் உண்டாயிருக்குமென்று உங்களுக்குச் சொல்லுகிறேன் என்றார் - மத்தேயு 8:10-12
ஒருவேளை கர்த்தர் சொன்னது உண்மையிலேயே ஆபிரகாம் ஈசாக்கு யாக்கோபு என்பவர்களை குறிக்குமானால், இந்த வாக்குத்தத்தை சாராள் எப்படி எடுத்துக் கொள்வார்? சாராள் இந்த பூமியிலேயே ஆபிரகாமையும் ஈசாக்கையும் கண்டவர் அல்லவா? ஒருவேளை ஆபிரகாமுக்கு முன்னோரான ஏனோக்கு இந்த வாக்குத்தத்தை எப்படி எடுத்துக் கொள்வார், ஆபிரகாம் ஈசாக்கு யாக்கோபு மூன்று பேருமே அவருக்கு பேரக்குழந்தைகள் தானே? இதற்காகவா நாங்கள் பரலோகம் செல்ல வேண்டும் என்று தானே கேட்பார்கள்? கர்த்தர் "ஆபிரகாம் ஈசாக்கு யாக்கோபு" என்று உவமையாக சொன்னது, பிதாவானவரின் குமாரன், வார்த்தையானவரின் குமாரன், பரிசுத்த ஆவியானவரின் குமாரனையே குறிக்கிறது, அது நம் கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவே!
இப்படி நம் கர்த்தராகிய இயேசு கிறிஸ்து, பிதாவானவரின் மைந்தனாகவும், வார்த்தையானவரின் மைந்தனாகவும், பரிசுத்த ஆவியானவரின் மைந்தனாகவும் இருந்ததினால் தான், சிலுவைக்குப் போகும் முன்பு, கெத்செமனே என்னப்பட்ட இடத்தில், மூன்று முறை ஜெபம் செய்தார், அதாவது பிதாவின் மைந்தனாகவும், பரிசுத்த ஆவியானவரின் மைந்தனாகவும், வார்த்தையானவரின் மைந்தனாகவும் ஜெபம் செய்தார் - 36.அப்பொழுது, இயேசு அவர்களோடே கெத்செமனே என்னப்பட்ட இடத்திற்கு வந்து, சீஷர்களை நோக்கி: நான் அங்கே போய் ஜெபம்பண்ணுமளவும் நீங்கள் இங்கே உட்கார்ந்திருங்கள் என்று சொல்லி; 37.பேதுருவையும், செபெதேயுவின் குமாரர் இருவரையும் கூட்டிக்கொண்டுபோய், துக்கமடையவும், வியாகுலப்படவும் தொடங்கினார். 38.அப்பொழுது, அவர்: என் ஆத்துமா மரணத்துக்கேதுவான துக்கங்கொண்டிருக்கிறது; நீங்கள் இங்கே தங்கி, என்னோடேகூட விழித்திருங்கள் என்று சொல்லி, 39.சற்று அப்புறம்போய், முகங்குப்புற விழுந்து: என் பிதாவே, இந்தப்பாத்திரம் என்னைவிட்டு நீங்கக்கூடுமானால் நீங்கும்படிசெய்யும்; ஆகிலும் என் சித்தத்தின்படியல்ல, உம்முடைய சித்தத்தின்படியே ஆகக்கடவது என்று ஜெபம்பண்ணினார். 40.பின்பு, அவர் சீஷர்களிடத்தில் வந்து, அவர்கள் நித்திரைபண்ணுகிறதைக் கண்டு, பேதுருவை நோக்கி: நீங்கள் ஒரு மணி நேரமாவது என்னோடேகூட விழித்திருக்கக்கூடாதா? 41.நீங்கள் சோதனைக்குட்படாதபடிக்கு விழித்திருந்து ஜெபம்பண்ணுங்கள்; ஆவி உற்சாகமுள்ளதுதான், மாம்சமோ பலவீனமுள்ளது என்றார். 42.அவர் மறுபடியும் இரண்டாந்தரம் போய்: என் பிதாவே, இந்தப் பாத்திரத்தில் நான் பானம்பண்ணினாலொழிய இது என்னைவிட்டு நீங்கக்கூடாதாகில், உம்முடைய சித்தத்தின்படி ஆகக்கடவது என்று ஜெபம்பண்ணினார். 43.அவர் திரும்ப வந்தபோது, அவர்கள் மறுபடியும் நித்திரைபண்ணுகிறதைக் கண்டார்; அவர்களுடைய கண்கள் மிகுந்த நித்திரைமயக்கம் அடைந்திருந்தது. 44.அவர் மறுபடியும் அவர்களை விட்டுப்போய், மூன்றாந்தரமும் அந்த வார்த்தைகளையே சொல்லி ஜெபம்பண்ணினார் - மத்தேயு 26:36-44
அதனால் தான், பிலாத்து இயேசு கிறிஸ்துவை மூன்று முறை விசாரித்து, வார்த்தையானவரின் குமாரன், பிதாவானவரின் குமாரன், பரிசுத்த ஆவியானவரின் குமாரன் என மூன்று பேரிடமும் ஒரு குற்றமும் காணப்படவில்லை என்றான் - 21.அவர்களோ: அவனைச் சிலுவையில் அறையும், சிலுவையில் அறையும் என்று கூக்குரலிட்டார்கள். 22.அவன் மூன்றாந்தரம் அவர்களை நோக்கி: ஏன், இவன் என்ன பொல்லாப்புச் செய்தான்? மரணத்துக்கு ஏதுவான குற்றம் ஒன்றும் இவனிடத்தில் நான் காணவில்லையே; ஆகையால் நான் இவனை தண்டித்து, விடுதலையாக்குவேன் என்றான். 23.அப்படியிருந்தும் அவரைச் சிலுவையில் அறையவேண்டுமென்று அவர்கள் உரத்த சத்தத்தோடு கேட்டுக்கொண்டேயிருந்தார்கள். அவர்களும் பிரதான ஆசாரியரும் இட்ட சத்தம் மேற்கொண்டது. 24.அப்பொழுது அவர்கள் கேட்டுக்கொண்டபடியே ஆகட்டும் என்று பிலாத்து தீர்ப்புசெய்து, 25.கலகத்தினிமித்தமும் கொலைபாதகத்தினிமித்தமும் காவலில் போடப்பட்டிருந்தவனை அவர்கள் கேட்டுக்கொண்டபடியே விடுதலையாக்கி, இயேசுவையோ அவர்கள் இஷ்டத்துக்கு ஒப்புக்கொடுத்தான் - லூக்கா 23:21-25
மேலும், பிதாவானவரின் மைந்தன், வார்த்தையானவரின் மைந்தன், பரிசுத்த ஆவியானவரின் மைந்தன் என மூன்று பேருமே நம்முடைய இரட்சிப்புக்காக பாடு பட்டதினால் தான் " நசரேயனாகிய இயேசு யூதருடைய ராஜா" என்று மூன்று பாஷைகளில் ஞான அர்த்தமுள்ளவைகளாக சிலுவையின் மேல் எழுதப்பட்டிருந்தது - 17.அவர் தம்முடைய சிலுவையைச் சுமந்துகொண்டு, எபிரெயு பாஷையிலே கொல்கொதா என்று சொல்லப்படும் கபாலஸ்தலம் என்கிற இடத்திற்குப் புறப்பட்டுப்போனார். 18.அங்கே அவரைச் சிலுவையில் அறைந்தார்கள்; அவரோடேகூட வேறிரண்டுபேரை இரண்டு பக்கங்களிலும் இயேசுவை நடுவிலுமாகச் சிலுவைகளில் அறைந்தார்கள். 19.பிலாத்து ஒரு மேல்விலாசத்தை எழுதி, சிலுவையின்மேல் போடுவித்தான். அதில் நசரேயனாகிய இயேசு யூதருடைய ராஜா என்று எழுதியிருந்தது. 20.இயேசு சிலுவையில் அறையப்பட்ட இடம் நகரத்திற்குச் சமீபமாயிருந்தபடியினால், யூதரில் அநேகர் அந்த மேல்விலாசத்தை வாசித்தார்கள்; அது எபிரெயு கிரேக்கு லத்தீன் பாஷைகளில் எழுதியிருந்தது. 21.அப்பொழுது யூதருடைய பிரதான ஆசாரியர் பிலாத்துவை நோக்கி: யூதருடைய ராஜா என்று நீர் எழுதாமல், தான் யூதருடைய ராஜா என்று அவன் சொன்னதாக எழுதும் என்றார்கள். 22.பிலாத்து பிரதியுத்தரமாக: நான் எழுதினது எழுதினதே என்றான் - யோவான் 19:17-22
இயேசு கிறிஸ்துவின் திரித்துவத்தை பிரதிபலிக்கின்ற தேவாலயத்தின் திரைச்சீலையானது இளநீலநூல் இரத்தாம்பரநூல் சிவப்புநூல் என மூன்று விதமான நூலால் திரிக்கப்பட்ட மெல்லிய பஞ்சுநூலினால் நெய்யப்பட்டிருந்தது - 36.இளநீலநூலும் இரத்தாம்பரநூலும் சிவப்புநூலும் திரித்த மெல்லிய பஞ்சுநூலுமாகிய இவற்றால் சித்திரத் தையல் வேலையான ஒரு தொங்குதிரையும் கூடாரத்தின் வாசலுக்கு உண்டாக்கி, 37.அந்தத் தொங்குதிரைக்குச் சீத்திம் மரத்தால் ஐந்து தூண்களைச் செய்து, அவைகளைப் பொன்தகட்டால் மூடி, அவைகளுக்குப் பொன் கொக்கிகளை உண்டாக்கி, அவைகளுக்கு ஐந்து வெண்கலப் பாதங்களை வார்ப்பிக்கக்கடவாய் - யாத்திராகமம் 26:36-37
அதனால் தான், கிறிஸ்து தன் ஜீவனை வீட்ட பொழுது தேவாலயத்தின் திரைச்சீலையும் மேல்தொடங்கிக் கீழ்வரைக்கும் இரண்டாகக் கிழிந்தது - 37.இயேசு மகா சத்தமாய்க் கூப்பிட்டு ஜீவனை விட்டார். 38.அப்பொழுது, தேவாலயத்தின் திரைச்சீலை மேல்தொடங்கிக் கீழ்வரைக்கும் இரண்டாகக் கிழிந்தது - மாற்கு 15:37-38
எப்படியாக திமிர்வாதக்காரனை இயேசு கிறிஸ்துவின் மத்தியில் இறக்கினார்களோ, அது போலவே மகதலேனா மரியாள் இயேசு கிறிஸ்து உயிர்த்தெழுந்த கல்லறைக்குள் மத்தியில் நின்று கொண்டிருந்தாள், ஒரு பக்கம் இரண்டு தூதர்கள், மறுபக்கம் கர்த்தர், ஆனால் மாறியளோ இரண்டு பக்கமும் திரும்பி கடைசியாக இயேசுவை ரபூனி என்று அழைத்தாள், ஏனென்றால் வார்த்தையானவரின் மைந்தனோடு, பரிசுத்த ஆவியானவரின் மைந்தனும், பிதாவானவரின் மைந்தனும் மரணத்தை வென்றவாராய் அங்கிருந்தார்கள் - 11.மரியாள் கல்லறையினருகே வெளியே நின்று அழுதுகொண்டிருந்தாள்; அப்படி அழுதுகொண்டிருக்கையில் அவள் குனிந்து கல்லறைக்குள்ளே பார்த்து, 12.இயேசுவின் சரீரம் வைக்கப்பட்டிருந்த இடத்திலே வெள்ளுடை தரித்தவர்களாய் இரண்டு தூதர்கள், தலைமாட்டில் ஒருவனும் கால்மாட்டில் ஒருவனுமாக, உட்கார்ந்திருக்கிறதைக் கண்டாள். 13.அவர்கள் அவளை நோக்கி: ஸ்திரீயே, ஏன் அழுகிறாய் என்றார்கள். அதற்கு அவள்: என் ஆண்டவரை எடுத்துக்கொண்டு போய்விட்டார்கள், அவரை வைத்த இடம் எனக்குத் தெரியவில்லை என்றாள். 14.இவைகளைச் சொல்லிப் பின்னாகத் திரும்பி, இயேசு நிற்கிறதைக் கண்டாள்; ஆனாலும் அவரை இயேசு என்று அறியாதிருந்தாள். 15.இயேசு அவளைப் பார்த்து: ஸ்திரீயே, ஏன் அழுகிறாய், யாரைத் தேடுகிறாய் என்றார். அவள், அவரைத் தோட்டக்காரனென்று எண்ணி: ஐயா, நீர் அவரை எடுத்துக்கொண்டுபோனதுண்டானால், அவரை வைத்த இடத்தை எனக்குச் சொல்லும், நான் போய் அவரை எடுத்துக்கொள்ளுவேன் என்றாள். 16.இயேசு அவளை நோக்கி: மரியாளே என்றார். அவள் திரும்பிப் பார்த்து: ரபூனி என்றாள்; அதற்குப் போதகரே என்று அர்த்தமாம் - யோவான் 20:11-16
எப்படி மகதலேனா மரியாள் பரிசுத்த ஆவியானவரின் குமாரனையும், பிதாவானவரின் குமாரனையும் இயேசு கிறிஸ்துவின் சரீரம் வைக்கப்பட்டிருந்த இடத்திலே வெள்ளுடை தரித்தவர்களாய் தரிசித்து, அதன் பின்பு வார்த்தையானவரின் குமாரனை தரிசித்தாளோ, அது போலவே சோர்வடைந்திருந்த சீஷர்களை பலப்படுத்த பரிசுத்த ஆவியானவரின் குமாரனும், பிதாவானவரின் குமாரனும் "வேறு இரண்டு பேராய்" அவர்களுடன் அமர்ந்திருந்தார்களாம், அதன் பின்பு வார்த்தையானவரின் குமாரனையும் தரிசித்து தங்களை ஊழியத்திற்கு அர்பணித்தார்கள் - 1.இவைகளுக்குப்பின்பு இயேசு திபேரியா கடற்கரையிலே மறுபடியும் சீஷருக்குத் தம்மை வெளிப்படுத்தினார்; வெளிப்படுத்தின விவரமாவது: 2.சீமோன்பேதுருவும், திதிமு என்னப்பட்ட தோமாவும், கலிலேயா நாட்டிலுள்ள கானா ஊரானாகிய நாத்தான்வேலும், செபெதேயுவின் குமாரரும், அவருடைய சீஷரில் வேறு இரண்டுபேரும் கூடியிருக்கும்போது, 3.சீமோன்பேதுரு மற்றவர்களை நோக்கி: மீன்பிடிக்கப்போகிறேன் என்றான். அதற்கு அவர்கள்: நாங்களும் உம்முடனேகூட வருகிறோம் என்றார்கள். அவர்கள் புறப்பட்டுப்போய், உடனே படவேறினார்கள். அந்த இராத்திரியிலே அவர்கள் ஒன்றும் பிடிக்கவில்லை. 4.விடியற்காலமானபோது, இயேசு கரையிலே நின்றார்; அவரை இயேசு என்று சீஷர்கள் அறியாதிருந்தார்கள் - யோவான் 21:1-4
அப்பொழுது கர்த்தர் பேதுருவிடம் மூன்று முறை "என்னை நேசிக்கிறாயா?" என்று கேட்டதும் கர்த்தரின் திருத்துவதை விளக்குவதாகவே இருந்தது, பேதுருவும் அதை அறிந்து கொண்டு தன்னை முழுமையாக ஒப்புக்கொடுத்தார் - 15.அவர்கள் போஜனம்பண்ணினபின்பு, இயேசு சீமோன்பேதுருவை நோக்கி: யோனாவின் குமாரனாகிய சீமோனே, இவர்களிலும் அதிகமாய் நீ என்னிடத்தில் அன்பாயிருக்கிறாயா என்றார். அதற்கு அவன்: ஆம் ஆண்டவரே, உம்மை நேசிக்கிறேன் என்பதை நீர் அறிவீர் என்றான். அவர்: என் ஆட்டுக்குட்டிகளை மேய்ப்பாயாக என்றார். 16.இரண்டாந்தரம் அவர் அவனை நோக்கி: யோனாவின் குமாரனாகிய சீமோனே, நீ என்னிடத்தில் அன்பாயிருக்கிறாயா என்றார். அதற்கு அவன்: ஆம் ஆண்டவரே, உம்மை நேசிக்கிறேன் என்பதை நீர் அறிவீர் என்றான். அவர்: என் ஆடுகளை மேய்ப்பாயாக என்றார். 17.மூன்றாந்தரம் அவர் அவனை நோக்கி: யோனாவின் குமாரனாகிய சீமோனே, நீ என்னை நேசிக்கிறாயா என்றார். என்னை நேசிக்கிறாயா என்று அவர் மூன்றாந்தரம் தன்னைக் கேட்டபடியினாலே, பேதுரு துக்கப்பட்டு: ஆண்டவரே, நீர் எல்லாவற்றையும் அறிந்திருக்கிறீர், நான் உம்மை நேசிக்கிறேன் என்பதையும் நீர் அறிவீர் என்றான். இயேசு: என் ஆடுகளை மேய்ப்பாயாக என்றார் - யோவான் 21:15-17
கடைசியாக என்னுடைய சமாதானத்தையே உங்களுக்குக் கொடுக்கிறேன் என்று சொன்ன கர்த்தர், கிருபையையும் [பிதாவானவரின் குமாரனையும்], சத்தியத்தையும் [பரிசுத்த ஆவியானவரின் குமாரனையும்] எப்பொழுதும் நம்மோடிருக்கும் படி விட்டுச் சென்றார், அவர்களே வெண்மையான வஸ்திரந்தரித்தவர்களாய் சீஷர்களுடன் இருந்தார்கள் - 9.இவைகளை அவர் சொன்னபின்பு, அவர்கள் பார்த்துக்கொண்டிருக்கையில், உயர எடுத்துக்கொள்ளப்பட்டார்; அவர்கள் கண்களுக்கு மறைவாக ஒரு மேகம் அவரை எடுத்துக்கொண்டது. 10.அவர் போகிறபோது அவர்கள் வானத்தை அண்ணாந்து பார்த்துக்கொண்டிருக்கையில், இதோ, வெண்மையான வஸ்திரந்தரித்தவர்கள் இரண்டுபேர் அவர்களருகே நின்று: 11.கலிலேயராகிய மனுஷரே, நீங்கள் ஏன் வானத்தை அண்ணாந்துபார்த்து நிற்கிறீர்கள்? உங்களிடத்தினின்று வானத்துக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட இந்த இயேசுவானவர் எப்படி உங்கள் கண்களுக்கு முன்பாக வானத்துக்கு எழுந்தருளிப்போனாரோ, அப்படியே மறுபடியும் வருவார் என்றார்கள் - அப்போஸ்தலர் 1:9-11
இப்படி நம்மை பார்த்துக் கொள்வதற்காக கர்த்தர் விட்டு சென்ற கிருபையையும் [பிதாவானவரின் குமாரன்] சத்தியத்தையுமே [பரிசுத்த ஆவியானவரின் குமாரன்] எண்ணெயும் திராட்சரசமும் என்றும், இரண்டு பணம் என்றும் உவமைகளாக சொல்லியிருந்தார் - 30.இயேசு பிரதியுத்தரமாக: ஒரு மனுஷன் எருசலேமிலிருந்து எரிகோவுக்குப் போகையில் கள்ளர் கையில் அகப்பட்டான்; அவர்கள் அவன் வஸ்திரங்களை உரிந்துகொண்டு, அவனைக் காயப்படுத்தி, குற்றுயிராக விட்டுப் போனார்கள். 31.அப்பொழுது தற்செயலாய் ஒரு ஆசாரியன் அந்த வழியே வந்து, அவனைக் கண்டு, பக்கமாய் விலகிப்போனான். 32.அந்தப்படியே ஒரு லேவியனும் அந்த இடத்துக்கு வந்து, அவனைக் கண்டு, பக்கமாய் விலகிப்போனான். 33.பின்பு சமாரியன் ஒருவன் பிரயாணமாய் வருகையில், அவனைக் கண்டு, மனதுருகி, 34.கிட்ட வந்து, அவனுடைய காயங்களில் எண்ணெயும் திராட்சரசமும் வார்த்து, காயங்களைக் கட்டி, அவனைத் தன் சுயவாகனத்தின்மேல் ஏற்றி, சத்திரத்துக்குக் கொண்டுபோய், அவனைப் பராமரித்தான். 35.மறுநாளிலே தான் புறப்படும்போது இரண்டு பணத்தை எடுத்து, சத்திரத்தான் கையில் கொடுத்து: நீ இவனை விசாரித்துக்கொள், அதிகமாய் ஏதாகிலும் இவனுக்காகச் செலவழித்தால், நான் திரும்பிவரும்போது அதை உனக்குத் தருவேன் என்றான் - லூக்கா 10:30-35
தொடர்ந்து படிக்க ஆபிரகாமின் விளக்கம்