ஒரே பரிசுத்தராகிய இயேசு கிறிஸ்து, தன்னை குறித்துச் சொல்லும் பொழுது "மனுஷகுமாரன் போஜனபானம்பண்ணுகிறவராய் வந்தார்" என்று சொன்னதை தான் இந்த வசனத்தில் பார்க்கிறோம் - 16.இந்தச் சந்ததியை யாருக்கு ஒப்பிடுவேன்? சந்தைவெளிகளில் உட்கார்ந்து, தங்கள் தோழரைப் பார்த்து: 17.உங்களுக்காகக் குழல் ஊதினோம், நீங்கள் கூத்தாடவில்லை; உங்களுக்காகப் புலம்பினோம், நீங்கள் மாரடிக்கவில்லை என்று குறைசொல்லுகிற பிள்ளைகளுக்கு ஒப்பாயிருக்கிறது. 18.எப்படியெனில், யோவான் போஜனபானம்பண்ணாதவனாய் வந்தான்; அதற்கு அவர்கள்: அவன் பிசாசு பிடித்திருக்கிறவன் என்றார்கள். 19.மனுஷகுமாரன் போஜனபானம்பண்ணுகிறவராய் வந்தார்; அதற்கு அவர்கள்: இதோ, போஜனப்பிரியனும் மதுபானப்பிரியனுமான மனுஷன், ஆயக்காரருக்கும் பாவிகளுக்கும் சிநேகிதன் என்கிறார்கள். ஆனாலும் ஞானமானது அதன் பிள்ளைகளால் நீதியுள்ளதென்று ஒப்புக்கொள்ளப்படும் என்றார். 20.அப்பொழுது, தமது பலத்த செய்கைகளில் அதிகமானவைகளைச் செய்யக் கண்ட பட்டணங்கள், மனந்திரும்பாமற் போனபடியினால், அவைகளை அவர் கடிந்து கொள்ளத்தொடங்கினார் - மத்தேயு 11:12-20
ஏன் இயேசு கிறிஸ்து "மனுஷகுமாரன் போஜனபானம்பண்ணுகிறவராய் வந்தார்" என்று சொல்ல வேண்டும்? ஏனென்றால் பரலோகத்தின் தேவனுக்கு ஏறெடுக்கும் விசேஷித்த பலியோடு போஜனபலியும் பானபலியும் இணைந்திருக்க வேண்டும், அப்பொழுது தான் அது தேவனுக்கு ஏற்ற சுகந்த வாசனை பலியாக இருக்கும் என்று வேதாகமம் சொல்லுகிறது, இது மாம்சத்தில் வெளிப்பட்ட வார்த்தையானவர், பிதா மற்றும் பரிசுத்த ஆவியானவரால் நிறைந்திருக்க வேண்டும், அதாவது வார்த்தையானவரோடு பிதாவும் பரிசுத்த ஆவியானவரும் பாடுபட வேண்டும் என்பதை குறிப்பதாகவே இருந்தது - 8.நீ சர்வாங்க தகனபலிக்காகிலும், விசேஷித்த பொருத்தனை பலிக்காகிலும், சமாதான பலிக்காகிலும், ஒரு காளையைக் கர்த்தருக்குச் செலுத்த ஆயத்தப்படுத்தும்போது, 9.அதனோடே பத்தில் மூன்று பங்கானதும், அரைப்படி எண்ணெயிலே பிசைந்ததுமான மெல்லிய மாவின் போஜனபலியையும், 10.பானபலியாக அரைப்படி திராட்சரசத்தையும், கர்த்தருக்குச் சுகந்தவாசனையான தகனபலியாகப் படைக்கவேண்டும். 11.இந்தப்பிரகாரமாகவே ஒவ்வொரு மாட்டுக்காகிலும், ஆட்டுக்கடாவுக்காகிலும், செம்மறியாட்டுக் குட்டிக்காகிலும், வெள்ளாட்டுக் குட்டிக்காகிலும் செய்து படைக்கவேண்டும். 12.நீங்கள் படைக்கிறவைகளின் இலக்கத்திற்குத்தக்கதாய் ஒவ்வொன்றிற்காகவும் இந்தப்பிரகாரம் செய்யவேண்டும். 13.சுதேசத்தில் பிறந்தவர்கள் யாவரும் கர்த்தருக்குச் சுகந்த வாசனையான தகனபலியைச் செலுத்தும்போது இவ்விதமாகவே செய்யவேண்டும் - எண்ணாகமம் 15:1-13
இதை இஸ்ரவேலின் பாளையத்திற்குள் ஒரு அந்நியனைப் போல் தங்கி, நமது பாளையத்திற்குள் தலைமுறை தலைமுறையாக வாசம் செய்யும் தேவ குமாரனாகிய இயேசு கிறிஸ்து தான் செய்து முடிக்க வேண்டும் என்றும் பிதாவினால் நிர்ணயிக்கப்பட்டது - உங்களிடத்திலே தங்கியிருக்கிற அந்நியனாவது, உங்கள் நடுவிலே உங்கள் தலைமுறைதோறும் குடியிருக்கிறவனாவது, கர்த்தருக்குச் சுகந்த வாசனையான தகனபலி செலுத்தவேண்டுமானால், நீங்கள் செய்கிறபடியே அவனும் செய்யவேண்டும் - எண்ணாகமம் 15:14
இதை தவறாக புரிந்துக்கொண்டு, கர்த்தர் தன்னுடைய ஊழிய நாட்களில் மதுபானம் பண்ணினார் என்றும், அதனால் மது அருந்தினால் தப்பில்லை என்று தவறான அர்த்தம் கொள்பவர்களும் உண்டு, ஆனால் கர்த்தர் தன்னை குறித்து மனுஷகுமாரன் போஜனபானம்பண்ணுகிறவராய் வந்தார் என்று சொன்னது, வார்த்தையானவருக்குள் வாசம் செய்த பிதா மற்றும் பரிசுத்த ஆவியானவரையே குறிப்பதாய் இருந்தது, இதை தான் ஏசாயா தீர்க்கதரிசி, தேவகுமாரனாகிய இயேசு கிறிஸ்து வெண்ணெயையும் தேனையும் சாப்பிடுவார் என்று சொல்லியிருந்தார் - 14.ஆதலால் ஆண்டவர் தாமே உங்களுக்கு ஒரு அடையாளத்தைக் கொடுப்பார்; இதோ, ஒரு கன்னிகை கர்ப்பவதியாகி ஒரு குமாரனைப் பெறுவாள், அவருக்கு இம்மானுவேல் என்று பேரிடுவாள். 15.தீமையை வெறுத்து நன்மையைத் தெரிந்துகொள்ள அறியும் வயதுமட்டும் அவர் வெண்ணெயையும் தேனையும் சாப்பிடுவார் - ஏசாயா 7:14-15
ஆனாலும் ஞானமானவர் அவர் பிள்ளைகளால் பரிசுத்தர் என்றே அழைக்கப்படுவார்
மேலும் இயேசு கிறிஸ்து, நான் "மனுஷகுமாரன் போஜனபானம்பண்ணுகிறவராய் வந்தார்" என்று சொன்னாலும், என் பிள்ளைகள் கர்த்தர் பரிசுத்தர் என்றே சொல்லுவார்கள் என்பதை "ஆனாலும் ஞானமானது அதன் பிள்ளைகளெல்லாராலும் நீதியுள்ளதென்று ஒப்புக்கொள்ளப்படும்" என்று சொன்னார் - 31.பின்னும் கர்த்தர் சொன்னது: இந்தச் சந்ததியை யாருக்கு ஒப்பிடுவேன்? இவர்கள் யாருக்கு ஒப்பாயிருக்கிறார்கள்? 32.சந்தை வெளியில் உட்கார்ந்து, ஒருவரையொருவர் பார்த்து: உங்களுக்காகக் குழல் ஊதினோம், நீங்கள் கூத்தாடவில்லை; உங்களுக்காகப் புலம்பினோம், நீங்கள் அழவில்லை என்று குறை சொல்லுகிற பிள்ளைகளுக்கு ஒப்பாயிருக்கிறார்கள். 33.எப்படியெனில், யோவான்ஸ்நானன் அப்பம் புசியாதவனும் திராட்சரசம் குடியாதவனுமாய் வந்தான்; அதற்கு நீங்கள்: அவன் பிசாசு பிடித்திருக்கிறவன் என்கிறீர்கள். 34.மனுஷகுமாரன் போஜனபானம்பண்ணுகிறவராய் வந்தார்; அதற்கு நீங்கள்: இதோ, போஜனப்பிரியனும் மதுபானப்பிரியனுமான மனுஷன், ஆயக்காரருக்கும் பாவிகளுக்கும் சிநேகிதன் என்கிறீர்கள். 35.ஆனாலும் ஞானமானது அதன் பிள்ளைகளெல்லாராலும் நீதியுள்ளதென்று ஒப்புக்கொள்ளப்படும் என்றார் - லூக்கா 7:31-35
போதகர் ஆயக்காரரோடும் பாவிகளோடும் போஜனம் பண்ணுகிறதென்ன?
மத்தேயு இயேசு கிறிஸ்துவை குறித்துச் சாட்சி கொடுக்கும் பொழுது, பரிசேயர் கர்த்தரை ஆயக்காரரோடும் பாவிகளோடும் போஜனம் பண்ணுகிறதென்ன என்றே கேட்டார்கள்? ஒருவேளை கர்த்தர் மதுபானம் பண்ணியிருந்தால், போஜனபானம் பண்ணுகிறதென்னவென்று அல்லவா கேட்டிருப்பார்கள் என்று கர்த்தரின் நீதியை பறை சாட்டுகிறார் - 9.இயேசு அவ்விடம் விட்டுப் புறப்பட்டுப்போகையில், ஆயத்துறையில் உட்கார்ந்திருந்த மத்தேயு என்னும் ஒரு மனுஷனைக் கண்டு: எனக்குப் பின்சென்றுவா என்றார்; அவன் எழுந்து அவருக்குப் பின்சென்றான். 10.பின்பு அவர் வீட்டிலே போஜனபந்தியிருக்கையில், அநேக ஆயக்காரரும் பாவிகளும் வந்து, இயேசுவோடும் அவர் சீஷரோடுங்கூடப் பந்தியிருந்தார்கள். 11.பரிசேயர் அதைக் கண்டு, அவருடைய சீஷர்களை நோக்கி: உங்கள் போதகர் ஆயக்காரரோடும் பாவிகளோடும் போஜனம் பண்ணுகிறதென்னவென்று கேட்டார்கள். 12.இயேசு அதைக் கேட்டு: பிணியாளிகளுக்கு வைத்தியன் வேண்டியதேயல்லாமல் சுகமுள்ளவர்களுக்கு வேண்டியதில்லை. 13.பலியையல்ல, இரக்கத்தையே விரும்புகிறேன் என்பதின் கருத்து இன்னதென்று போய்க் கற்றுக்கொள்ளுங்கள்; நீதிமான்களையல்ல, பாவிகளையே மனந்திரும்புகிறதற்கு அழைக்க வந்தேன் என்றார் - மத்தேயு 9:9-13
அவர் போஜனபந்தியிருக்கையில்
மாற்கு இயேசு கிறிஸ்துவை குறித்துச் சாட்சி கொடுக்கும் பொழுது, நம் கர்த்தர் போஜனம் மாத்திரமே பண்ணினார் என்று குறிப்பிட்டுள்ளார் - 14.அவர் நடந்துபோகையில், அல்பேயுவின் குமாரனாகிய லேவி ஆயத்துறையில் உட்கார்ந்திருக்கிறதைக் கண்டு: எனக்குப் பின்சென்றுவா என்றார்; அவன் எழுந்து அவருக்குப் பின்சென்றான். 15.அப்பொழுது, அவனுடைய வீட்டிலே அவர் போஜனபந்தியிருக்கையில், அநேக ஆயக்காரரும் பாவிகளும் அவரோடுகூட வந்திருந்தபடியால், அவர்களும் இயேசுவோடும் அவர் சீஷரோடுங்கூடப் பந்தியிருந்தார்கள் - மாற்கு 2:14-15
ஆனால், இந்த வேதபாரகர்களும் பரிசேயர்களும் கர்த்தர் போஜனம் பண்ணுகிறதை பார்த்த பொழுதும், திரித்து பேசுகிறவர்களாய் கர்த்தர் போஜனபானம் பண்ணுகிறதென்ன என்று கேட்டார்கள், இந்த நய வஞ்சக கேள்விகளின் மத்தியிலும் கர்த்தர் அவர்களின் இரட்சிப்பை குறித்தே பதிலளித்தார் என்று கர்த்தரின் நீதியை பறை சாட்டுகிறார் - 16.அவர் ஆயக்காரரோடும் பாவிகளோடும் போஜனம்பண்ணுகிறதை வேதபாரகரும் பரிசேயரும் கண்டு, அவருடைய சீஷரை நோக்கி: அவர் ஆயக்காரரோடும் பாவிகளோடும் போஜனபானம் பண்ணுகிறதென்னவென்று கேட்டார்கள். 17.இயேசு அதைக் கேட்டு: பிணியாளிகளுக்கு வைத்தியன் வேண்டியதேயல்லாமல் சுகமுள்ளவர்களுக்கு வேண்டியதில்லை; நீதிமான்களையல்ல, பாவிகளையே மனந்திரும்புகிறதற்கு அழைக்கவந்தேன் என்றார் - மாற்கு 2:16-17
உம்முடைய சீஷர் போஜனபானம்பண்ணுகிறார்களே?
மாற்கு இயேசு கிறிஸ்துவை குறித்துச் சாட்சி கொடுக்கும் பொழுது, கர்த்தரின் நடவடிக்கைகளை கூர்ந்து கவனித்த வேதபாரகர்களாளும் பரிசேயர்களாளும் உம்முடைய சீஷர் போஜனபானம்பண்ணுகிறார்களே? என்று கேட்க முடிந்ததே அன்றி கர்த்தர் மேல் ஒரு குறையும் கண்டு பிடிக்க முடிய வில்லை என்று கர்த்தரின் நீதியை பறை சாட்டுகிறார் - 27.இவைகளுக்குப் பின்பு, அவர் புறப்பட்டு, ஆயத்துறையில் உட்கார்ந்திருந்த லேவி என்னும் பேருடைய ஒரு ஆயக்காரனைக் கண்டு: எனக்குப் பின்சென்று வா என்றார். 28.அவன் எல்லாவற்றையும் விட்டு, எழுந்து, அவருக்குப் பின்சென்றான். 29.அந்த லேவி என்பவன் தன் வீட்டிலே அவருக்குப் பெரிய விருந்துபண்ணினான். அநேக ஆயக்காரரும் மற்றவர்களும் அவர்களோடேகூடப் பந்தியிருந்தார்கள். 30.வேதபாரகரும் பரிசேயரும் அவருடைய சீஷருக்கு விரோதமாக முறுமுறுத்து: நீங்கள் ஆயக்காரரோடும் பாவிகளோடும் போஜனபானம்பண்ணுகிறதென்னவென்று கேட்டார்கள். 31.இயேசு அவர்களுக்குப் பிரதியுத்தரமாக: பிணியாளிகளுக்கு வைத்தியன் வேண்டியதேயல்லாமல் சுகமுள்ளவர்களுக்கு வேண்டியதில்லை. 32.நீதிமான்களையல்ல, பாவிகளையே மனந்திரும்புகிறதற்கு அழைக்க வந்தேன் என்றார். 33.பின்பு அவர்கள் அவரை நோக்கி: யோவானுடைய சீஷர் அநேகந்தரம் உபவாசித்து ஜெபம்பண்ணிக்கொண்டுவருகிறார்கள், பரிசேயருடைய சீஷரும் அப்படியே செய்கிறார்கள், உம்முடைய சீஷர் போஜனபானம்பண்ணுகிறார்களே, அதெப்படியென்று கேட்டார்கள். 34.அதற்கு அவர்: மணவாளன் தங்களோடிருக்கையில் மணவாளனுடைய தோழர்களை நீங்கள் உபவாசிக்கச் செய்யக்கூடுமா? 35.மணவாளன் அவர்களை விட்டு எடுபடும் நாட்கள் வரும், அந்த நாட்களிலே உபவாசிப்பார்கள் என்றார் - லூக்கா 5:27-35