சகரியாவின் விளக்கம்
இயேசு கிறிஸ்து திரியேக தேவனாக, அதாவது பிதா, வார்த்தை, பரிசுத்த ஆவியானவரின் தற்சுரூபமாய் இருக்கிறார்
இயேசு கிறிஸ்து திரியேக தேவனாக, அதாவது பிதா, வார்த்தை, பரிசுத்த ஆவியானவரின் தற்சுரூபமாய் இருக்கிறார்
முந்தைய பாகம்: பலிபீடம், தேவாலயம், மற்றும் சிங்காசனம்
இயேசு கிறிஸ்து தான் திரியேக தேவனாகவே சிலுவையில் பாடுபட போவதை பரகியாவின் குமாரனாகிய சகரியாவின் மரணத்தை கொண்டு விளக்கினதை முந்தின தொகுப்பில் பார்த்தோம், இந்த சகரியா பாபிலோனில் பிறந்து, எருசலேம் தேவாலயம் கட்டப்பட்ட காலத்தில் இஸ்ரவேல் தேசத்திற்க்கு புலம் பெயர்ந்து, ஒரு வல்லமையான தீர்க்கதரிசியாகிய வாழ்ந்து, தேவாலயத்துக்கும் பலிபீடத்துக்கும் நடுவே கொல்லப்பட்டவர், இவர் சரித்திரம் எழுதுகிற தீர்க்கதரிசியாகிய இத்தோவின் குடும்பத்தில் பிறந்தவர் என்பதையும் வேதாகமத்திலிருந்து அறிந்துக் கொள்ளலாம் - 1.தரியு அரசாண்ட இரண்டாம் வருஷம் எட்டாம் மாதத்திலே இத்தோவின் மகனான பெரகியாவின் குமாரனாகிய சகரியாவுக்கு உண்டான கர்த்தருடைய வார்த்தை: 2.கர்த்தர் உங்கள் பிதாக்களின்மேல் கடுங்கோபமாயிருந்தார். 3.ஆகையால் நீ அவர்களை நோக்கி: சேனைகளின் கர்த்தர் உரைக்கிறது என்னவென்றால்: என்னிடத்தில் திரும்புங்கள் என்று சேனைகளின் கர்த்தர் சொல்லுகிறார்; அப்பொழுது நான் உங்களிடத்துக்குத் திரும்புவேன் என்று சேனைகளின் கர்த்தர் சொல்லுகிறார் - சகரியா 1:1-3
அதனால் இவர் "இத்தோவின் குமாரனாகிய சகரியா" என்றும் அழைக்கப்பட்டார், இவர் தீர்க்கதரிசியாகிய ஆகாயுடன் சேர்ந்து எருசலேமின் தேவாலயம் கட்டப்பட தீர்க்கதரிசனம் சொன்னவர் - 1.அப்பொழுது ஆகாய் தீர்க்கதரிசியும், இத்தோவின் குமாரனாகிய சகரியா என்னும் தீர்க்கதரிசியும், யூதாவிலும் எருசலேமிலுமுள்ள யூதருக்கு இஸ்ரவேல் தேவனின் நாமத்திலே தீர்க்கதரிசனம் சொன்னார்கள். 2.அப்பொழுது செயல்த்தியேலின் குமாரனாகிய செருபாபேலும் யோசதாக்கின் குமாரனாகிய யெசுவாவும் எழும்பி, எருசலேமிலுள்ள தேவனுடைய ஆலயத்தைக் கட்டத்தொடங்கினார்கள்; அவர்களுக்குத் திடன்சொல்ல தேவனுடைய தீர்க்கதரிசிகளும் இருந்தார்கள் - எஸ்றா 5:1-2
அது மாத்திரம் இல்லாமல், அந்த தேவாலயம் கட்டி முடிக்கப்படவும் தீர்க்கதரிசனம் சொன்னவர் - 14.அப்படியே யூதரின் மூப்பர் கட்டினார்கள்; தீர்க்கதரிசியாகிய ஆகாயும் இத்தோவின் குமாரனாகிய சகரியாவும் தீர்க்கதரிசனம் சொல்லிவந்தபடியினால் அவர்களுடைய காரியம் கைகூடிவந்தது; அவர்கள் இஸ்ரவேலின் தேவனுடைய கட்டளைப்படியேயும், கோரேஸ், தரியு, பெர்சியாவின் ராஜாவாகிய அர்தசஷ்டா என்பவர்களுடைய கட்டளைப்படியேயும் அதைக்கட்டி முடித்தார்கள். 15.ராஜாவாகிய தரியு அரசாளுகிற ஆறாம் வருஷம் ஆதார் என்னும் மாதம் மூன்றாந்தேதியிலே அந்த ஆலயம் கட்டி முடிந்தது - எஸ்றா 5:14-15
இந்த சகரியா, தான் தீர்க்கதரிசனம் சொன்ன தேவாலயத்துக்கும் பலிபீடத்துக்கும் நடுவாகவே கொலை செய்யப்பட்டார் என்றும், அவரின் மரணமே பழைய ஏற்பாட்டின் ஆவிக்குரிய முற்றுப்புள்ளியாக இருக்கிறது என்றும் கர்த்தர் கூறினார், யார் சகரியாவை கொலை செய்திருப்பார்கள்? நிச்சியமாகவே ஆசாரியர்கள், வேதபாரகர், நியாயசாஸ்திரிகள் என தேவாலயத்தின் அதிகாரத்தில் இருப்பவர்கள் தான் அவரை கொலை செய்திருக்க வேண்டும், அவர்கள் தான் அங்கே இருப்பவர்கள் - 35.நீதிமானாகிய ஆபேலின் இரத்தம்முதல் தேவாலயத்துக்கும் பலிபீடத்துக்கும் நடுவே நீங்கள் கொலைசெய்த பரகியாவின் குமாரனாகிய சகரியாவின் இரத்தம்வரைக்கும், பூமியின்மேல் சிந்தப்பட்ட நீதிமான்களின் இரத்தப்பழியெல்லாம் உங்கள்மேல் வரும்படியாக இப்படிச் செய்வீர்கள். 36.இவைகளெல்லாம் இந்தச் சந்ததியின்மேல் வருமென்று, மெய்யாகவே உங்களுக்குச் சொல்லுகிறேன் - மத்தேயு 23:35-36
சகரியா தீர்க்கதரிசி கண்ட தரிசனம், நம் பரலோகத்தின் தேவன் திரியேக தேவனாக, அதாவது பிதா, வார்த்தை, பரிசுத்த ஆவியாக இருக்கிறார் என்பதையும், அம்மூவரின் ஒரே பேறானவராகிய இயேசு கிறிஸ்துவின் மூலமே நமக்கு நித்திய ஜீவன் என்பதையும் அறிவிக்கிறது, அதற்கு முன்பாக ஏதேனிலிருந்து ஓடின நதிகள் எப்படியாக பரலோக இரகசியத்தை அறிவிக்கிறது என்று பார்ப்போம் - 10.தோட்டத்துக்குத் தண்ணீர் பாயும்படி ஏதேனிலிருந்து ஒரு நதி ஓடி, அங்கேயிருந்து பிரிந்து நாலு பெரிய ஆறுகளாயிற்று. 11.முதலாம் ஆற்றுக்குப் பைசோன் என்று பேர், அது ஆவிலா தேசம் முழுவதையும் சுற்றி ஓடும்; அவ்விடத்திலே பொன் விளையும். 12.அந்தத் தேசத்தின் பொன் நல்லது; அவ்விடத்திலே பிதோலாகும், கோமேதகக் கல்லும் உண்டு. 13.இரண்டாம் ஆற்றுக்குக் கீகோன் என்று பேர், அது எத்தியோப்பியா தேசம் முழுவதையும் சுற்றி ஓடும். 14.மூன்றாம் ஆற்றுக்கு இதெக்கேல் என்று பேர், அது அசீரியாவுக்குக் கிழக்கே ஓடும்; நாலாம் ஆற்றுக்கு ஐபிராத்து என்று பேர் - ஆதியாகமம் 2:10-14
இந்த உலகத்தில் ஏத்தனையோ நதிகள் இருக்க தான் செய்தன, அப்படி இருக்கும் பொழுது ஏதேனிலிருந்து ஓடின ஒரு நதியை குறித்தும், அதிலிருந்து பிரிந்த நாலு பெரிய ஆறுகளை குறித்தும் ஆதியாகமம் புஸ்தகத்தில் சொல்லப்படக் காரணம் என்ன? இவைகள் இயேசு கிறிஸ்துவையும், பிதாவாகிய திரியேக தேவனையும் நாம் அறிந்துக் கொள்ள வேண்டும் என்கிற மேலான நோக்கத்தினால் தான் எழுதப்பட்டுள்ளது.
ஆதாமும் ஏவாளும் தாங்கள் நிர்வாணி என்பதை அறியும் முன்பே, அதாவது பாவத்தின் விளைவால் மகிமையின் சாயலை இழந்து ஏதேன் தோட்டத்திலிருந்து அனுப்பிவிடப்படும் முன்பே, இந்த பைசோன் என்கிற நதியை குறித்தும், அந்த பைசோன் நதியில் பொன் உண்டு என்றும், அவ்விடத்திலே பிதோலாகும், கோமேதகக் கல்லும் உண்டு என்றும் சொல்லப்பட காரணம் என்ன? காரணம், இந்த பைசோன் நதியானது, தேவ குமாரனாகிய இயேசு கிறிஸ்துவை குறிக்கிறது, அதனால் தான் இந்த பைசோன் நதியில், பொன் [வார்த்தை], பிதோலாகும் [கிருபையும்], மற்றும் கோமேதகக் கல் [சத்தியமும்] என்கிற மூன்று விலையேறப் பெற்றக் காரியங்கள் இருந்ததாக எழுதப்பட்டுள்ளது, அவைகள் நம் இரட்சகராகிய இயேசு கிறிஸ்துவுக்குள் வார்த்தை பிதா பரிசுத்த ஆவியானவர் என்ற மூன்று பேருமே வாசம் செய்கிறார்கள் என்பதை விளக்குகிறது - அந்த வார்த்தை மாம்சமாகி, கிருபையினாலும் சத்தியத்தினாலும் நிறைந்தவராய், நமக்குள்ளே வாசம்பண்ணினார் - யோவான் 1:14
மற்ற மூன்று நதிகளாகிய, கீகோன், இதெக்கேல், மற்றும் ஐபிராத்து என்பவைகள், நாம் காணக்கூடாத அதரிசனமான தேவன், பிதா, வார்த்தை, பரிசுத்த ஆவி என மூன்று நபர்களாக இருக்கிறார்கள் என்பதை விளக்குகிறது.
எப்படியாக ஏதேனிலிருந்து ஒரு நதி ஓடி, அங்கேயிருந்து பிரிந்து நாலு பெரிய ஆறுகளாயிற்றோ, அது போலவே, சகரியா கண்ட தரிசினத்தில் நான்கு விதமான குதிரைகள் இருந்தன, அவைகளில் முதலாவது குதிரை, தேவ குமாரனாகிய இயேசு கிறிஸ்துவை குறிக்கிறது, அந்த குதிரையின் மேல் ஒரு புருஷன் இருந்ததாக சொல்லப்பட காரணம், கர்த்தர் மனுஷ குமாரனாய் வெளிப்பட போகிறார் என்பதை உணர்த்தவே, அவருக்கு பின்னாலே இருந்த மூன்று விதமான குதிரைகள், அதாவது சிவப்பும் மங்கின நிறமும் வெண்மையுமான குதிரைகள் நாம் காணக்கூடாத அதரிசனமான தேவன், வார்த்தை, பிதா, பரிசுத்த ஆவி என மூன்று நபர்களாக இருக்கிறார்கள் என்பதை விளக்குகிறது - இதோ, இன்று ராத்திரி சிவப்புக்குதிரையின்மேல் ஏறியிருந்த ஒரு புருஷனைக் கண்டேன்; அவர் பள்ளத்தாக்கில் இருக்கிற மிருதுச்செடிகளுக்குள்ளே நின்றார்; அவருக்குப் பின்னாலே சிவப்பும் மங்கின நிறமும் வெண்மையுமான குதிரைகள் இருந்தன - சகரியா 1:8
வேதாகமத்தில் குதிரைகள் ஆவியாயிருக்கிற ஒருவரை குறிக்கும் உவமை பொருளாக பயன்படுத்தப்பட்டன, அதனால் தான் ஏசாயா தீர்க்கதரிசி ஆவியாயிருக்கிற கர்த்தரை, குதிரையை உவமையாக கொண்டு தீர்க்கதரிசனம் சொன்னார் - எகிப்தியர் தெய்வம் அல்ல, மனுஷர்தானே; அவர்களுடைய குதிரைகள் ஆவியல்ல, மாம்சந்தானே; கர்த்தர் தமது கரத்தை நீட்டுவார், அப்பொழுது சகாயம் செய்கிறவனும் இடறி, சகாயம் பெறுகிறவனும் விழுந்து, அனைவரும் ஏகமாய் அழிந்துபோவார்கள் - ஏசாயா 31:3
ஏசாயா தீர்க்கதரிசியை போலவே, ஆபகூக் தீர்க்கதரிசியும் தேவகுமாரனாகிய இயேசு கிறிஸ்துவை, குதிரையை உவமையாக கொண்டு, குதிரைகளின்மேலும் இரட்சிப்புண்டாக்குகிற உம்முடைய இரதங்களின்மேலும் ஏறிவருகிறராய் இருக்கிறார் என்று சொன்னார் - 8.கர்த்தர் நதிகளின்மேல் கோபமாயிருந்தாரோ? தேவரீர் உம்முடைய குதிரைகளின்மேலும் இரட்சிப்புண்டாக்குகிற உம்முடைய இரதங்களின்மேலும் ஏறிவருகிறபோது, உமது கோபம் நதிகளுக்கும் உமது சினம் சமுத்திரத்திற்கும் விரோதமாயிருந்ததோ? 9.கோத்திரங்களுக்கு ஆணையிட்டுக்கொடுத்த வாக்கின்படியே உம்முடைய வில் நாணேற்றப்பட்டதாக விளங்கினது; சேலா. நீர் பூமியைப் பிளந்து ஆறுகளை உண்டாக்கினீர். 10.பர்வதங்கள் உம்மைக்கண்டு நடுங்கின; ஜலம் பிரவாகித்துக் கடந்துபோயிற்று, ஆழி இரைந்தது, அதின் கைகளை உயர எடுத்தது. 11.சந்திரனும் சூரியனும் தன்தன் மண்டலத்தில் நின்றன; உமது அம்புகளின் ஜோதியிலும், உமது ஈட்டியினுடைய மின்னல் பிரகாசத்திலும் நடந்தன. 12.நீர் கோபத்தோடே பூமியில் நடந்தீர், உக்கிரத்தோடே ஜாதிகளைப் போரடித்தீர். 13.உமது ஜனத்தின் இரட்சிப்புக்காகவும் நீர் அபிஷேகம்பண்ணுவித்தவனின் இரட்சிப்புக்காகவுமே நீர் புறப்பட்டீர்; கழுத்தளவாக அஸ்திபாரத்தைத் திறப்பாக்கி, துஷ்டனுடைய வீட்டிலிருந்த தலைவனை வெட்டினீர்; சேலா - ஆபகூக் 3:8-13
தரிசனத்தின் துவக்கத்தில் நான்கு விதமான குதிரைகளை கண்ட சகரியா, இப்பொழுது [6ஆம் அதிகாரத்தில்] பரலோகத்தின் தேவனை நான்கு விதமான இரதங்களாக கண்டு, அவைகள் ஆவியாயிருக்கிற தேவனையே குறிக்கிறது என்கிற விளக்கத்தையும் பெற்றுக் கொள்கிறார், இதில் சிவப்புக் குதிரைகள் பூட்டபட்டிருந்த முதலாம் இரதமானது, தேவ குமாரனாகிய இயேசு கிறிஸ்துவையே குறிக்கிறது, அவரே தூதனாக சகரியாவுக்கு காரியங்களை விளக்கி கொண்டு வந்தார், மற்ற மூன்று இரதமானது நாம் காணக்கூடாத அதரிசனமான தேவன், வார்த்தை, பிதா, பரிசுத்த ஆவி என மூன்று நபர்களாக இருக்கிறார்கள் என்பதை விளக்குகிறது - 1.நான் திரும்பவும் என் கண்களை ஏறெடுத்து, இதோ, இரண்டு பர்வதங்களின் நடுவாகப் புறப்பட்டுவருகிற நாலு இரதங்களைக் கண்டேன்; அந்தப் பர்வதங்கள் வெண்கலப் பர்வதங்களாயிருந்தன. 2.முதலாம் இரதத்தில் சிவப்புக் குதிரைகளும், இரண்டாம் இரதத்தில் கறுப்புக் குதிரைகளும், 3.மூன்றாம் இரதத்தில் வெள்ளைக் குதிரைகளும், நான்காம் இரதத்தில் புள்ளிபுள்ளியான சிவப்புக் குதிரைகளும் பூட்டியிருந்தன. 4.நான் என்னோடே பேசின தூதனை நோக்கி: ஆண்டவனே, இவைகள் என்னவென்று கேட்டேன். 5.அந்தத் தூதன் எனக்குப் பிரதியுத்தரமாக: இவைகள் சர்வலோகத்துக்கும் ஆண்டவராயிருக்கிறவருடைய சமுகத்தில் நின்று புறப்படுகிற வானத்தினுடைய நாலு ஆவிகள் என்றார் - சகரியா 6:1-5
இந்த சகரியா தான் கண்ட முதல் தரிசினத்தில், சிவப்புக்குதிரையின்மேல் ஏறியிருந்த புருஷன் தேவ குமாரனாகிய இயேசு கிறிஸ்துவை குறித்ததினால் தான், அவரை "ஆண்டவரே" என்று அழைத்தார், அவரே "கர்த்தருடைய தூதன்" என்கிற அடையாளத்தோடு ஆபிரகாம், மோசே என ஒவ்வொருவருடனும் இடைபட்டவர் - 9.அப்பொழுது நான்: என் ஆண்டவரே, இவர்கள் யாரென்று கேட்டேன்; என்னோடே பேசுகிற தூதனானவர்: இவர்கள் யாரென்று நான் உனக்குக் காண்பிப்பேன் என்று சொன்னார்.10.அப்பொழுது மிருதுச்செடிகளுக்குள்ளே நின்ற அந்தப் புருஷன் பிரதியுத்தரமாக: இவர்கள் பூமியெங்கும் சுற்றிப்பார்க்கக் கர்த்தர் அனுப்பினவர்கள் என்றார். 11.பின்பு அவர்கள் மிருதுச்செடிகளுக்குள்ளே நின்ற கர்த்தருடைய தூதனை நோக்கி: நாங்கள் பூமியெங்கும் சுற்றிப்பார்த்தோம்; இதோ, பூமிமுழுவதும் அமைதலும் அமரிக்கையுமாய் இருக்கிறது என்றார்கள் - சகரியா 1:9-11
மேலும் சகரியா தீர்க்கதரிசி, நம் இரட்சகராகிய இயேசு கிறிஸ்துவின் பின்னாலே நின்ற மூன்று குதிரைகளை குறித்து விசாரிக்க, கர்த்தர் தனக்கு பின்னே நின்ற மூன்று விதமான குதிரைகளை "சேனைகளின் கர்த்தாவே" என்று அழைத்து, அவர் பரலோகத்தின் தேவன் என்பதை விளங்க செய்தார், அவரின் எண்ணமெல்லாம் நாம் இரட்சிக்கப்பட்டு கர்த்தரின் பிள்ளைகளாய் மாற வேண்டும் என்பதே - 12.அப்பொழுது கர்த்தருடைய தூதன் மறுமொழியாக: சேனைகளின் கர்த்தாவே, இந்த எழுபது வருஷமாய் நீர் கோபங்கொண்டிருக்கிற எருசலேமின்மேலும் யூதா பட்டணங்களின்மேலும் எந்தமட்டும் இரங்காதிருப்பீர் என்று சொல்ல, 13.அப்பொழுது கர்த்தர், என்னோடே பேசின தூதனுக்கு நல்வார்த்தைகளையும் ஆறுதலான வார்த்தைகளையும் பிரதியுத்தரமாகச் சொன்னார். 14.அப்பொழுது என்னோடே பேசின தூதன் என்னை நோக்கி: சேனைகளின் கர்த்தர் உரைக்கிறது என்னவென்றால்: நான் எருசலேமுக்காகவும் சீயோனுக்காகவும் மகா வைராக்கியம் கொண்டிருக்கிறேன் - சகரியா 1:12-14
இங்கு சகரியாவினால் பிதாவிடம் நேரடியாக பேச முடியவில்லை, இயேசு கிறிஸ்துவின் மூலமாக மாத்திரமே அவரை குறித்து அறிந்துக் கொள்ள முடிந்தது, கடைசியாக சகரியா பிதாவானவரின் சித்ததையும் இயேசு கிறிஸ்துவின் மூலமாக அறிந்துக் கொண்டார், அது இயேசு கிறிஸ்துவே தேவனுடைய ஆலயமாக வெளிப்பட வேண்டும் என்பதாகவும், அவரின் மூலமாகவே நமக்கு நன்மையும் தேற்றரவும் உண்டாகும் என்பதாகவும் இருந்தது - 15.நான் கொஞ்சங் கோபங்கொண்டிருந்தபோது அவர்கள் தங்கள் கேட்டை அதிகரிக்கத் தேடினபடியினால், சுகமாய் வாழுகிற புறஜாதிகள்பேரில் நான் கடுங்கோபங்கொண்டேன். 16.ஆகையால் மனஉருக்கத்தோடே எருசலேமினிடத்தில் திரும்பினேன் என்று கர்த்தர் சொல்லுகிறார்; என் ஆலயம் அதிலே கட்டப்படும்; எருசலேமின்மேல் அளவுநூல் பிடிக்கப்படும் என்று சேனைகளின் கர்த்தர் சொல்லுகிறார் என்று கூறு என்றார். 17.இன்னும் என் பட்டணங்கள் நன்மையினால் பரம்பியிருக்கும்; இன்னும் கர்த்தர் சீயோனைத் தேற்றரவு பண்ணுவார்; இன்னும் எருசலேமைத் தெரிந்துகொள்ளுவார் என்று சேனைகளின் கர்த்தர் சொல்லுகிறார் என்று பின்னும் கூறு என்றார் - சகரியா 1:15-17
சகரியாவின் முதல் தரிசினத்தில், எப்படியாக மிருதுச்செடிகளுக்குள்ளே நின்ற அந்தப் புருஷனுக்கு பின்பாக நின்ற மூன்று குதிரைகள் எப்படியாக பூமியின் மேல் நோக்கமாய் இருந்ததோ, அதோ போலவே சகரியாவின் அடுத்த தரிசினத்தில் மற்ற மூன்று இரதமானது பூமியின் மேல் நோக்கமாய் இருந்தது, ஆனால் இயேசு கிறிஸ்துவை குறிக்கும் சிவப்புக் குதிரைகள் பூட்டபட்டிருந்த முதலாம் இரதமோ பூமிக்கு வந்தது பிதாவானவரின் கோபத்தைச் சாந்திபண்ணிற்று - 6.ஒன்றில் பூட்டப்பட்டிருந்த கறுப்புக்குதிரைகள் வடதேசத்துக்குப் புறப்பட்டுப்போயின; வெண்மையான குதிரைகள் அவைகளின் பின்னாலே புறப்பட்டுப்போயின; புள்ளிபுள்ளியான குதிரைகள் தென்தேசத்துக்குப் புறப்பட்டுப்போயின. 7.சிவப்புக் குதிரைகளோவென்றால் புறப்பட்டுப்போய், பூமியிலே சுற்றித்திரியும்படி கேட்டுக்கொண்டன; அதற்கு அவர்: போய் பூமியில் சுற்றித்திரியுங்கள் என்றார்; அப்படியே பூமியிலே சுற்றித்திரிந்தன. 8.பின்பு அவர் என்னைக் கூப்பிட்டு: பார், வடதேசத்துக்குப் புறப்பட்டுப்போனவைகள், வடதேசத்திலே என் கோபத்தைச் சாந்திபண்ணிற்று என்று என்னோடே சொன்னார் - சகரியா 6:6-8
பரிசுத்த வேதாகமத்தில் குமாரனை குறித்தும் அவரின் திருத்துவதை குறித்தும் பல தீர்க்கதரிசிகள் விளக்கம் கொடுத்து இருக்கிறார்கள், தீர்க்கதரிசியாகிய எலிசா கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவின் வல்லமையை குறித்து சொல்லும் பொழுது மூன்று விதமான இரைச்சல் உண்டானது (இரதங்களின் இரைச்சல், குதிரைகளின் இரைச்சல், மகா இராணுவத்தின் இரைச்சல்) என்று சொல்லி இயேசு கிறிஸ்துவின் திரித்துவத்தை மறைமுகமாக குறிப்பிட்டுள்ளார் - 1.அப்பொழுது எலிசா: கர்த்தருடைய வார்த்தையைக் கேளுங்கள்; நாளை இந்நேரத்தில் சமாரியாவின் வாசலிலே ஒரு மரக்கால் கோதுமை மா ஒரு சேக்கலுக்கும், இரண்டு மரக்கால் வாற்கோதுமை ஒரு சேக்கலுக்கும் விற்கப்படும் என்று கர்த்தர் சொல்லுகிறார் என்றான். 2.அப்பொழுது ராஜாவுக்குக் கைலாகு கொடுக்கிற பிரதானி ஒருவன் தேவனுடைய மனுஷனுக்குப் பிரதியுத்தரமாக: இதோ, கர்த்தர் வானத்திலே மதகுகளை உண்டாக்கினாலும் இப்படி நடக்குமா என்றான். அதற்கு அவன்: உன்னுடைய கண்களினாலே அதைக் காண்பாய்; ஆனாலும் அதிலே சாப்பிடமாட்டாய் என்றான். 3.குஷ்டரோகிகளான நாலுபேர் ஒலிமுகவாசலில் இருந்தார்கள்; அவர்கள் ஒருவரை ஒருவர் நோக்கி: நாம் இங்கே இருந்து சாகவேண்டியது என்ன? 4.பட்டணத்திற்குள் போவோமென்றாலும் பட்டணத்தில் பஞ்சம் உண்டாயிருக்கிறதினால் அங்கே சாவோம்; நாம் இங்கே இருந்தாலும் சாவோம்; ஆகையால் இப்பொழுது சீரியருடைய இராணுவத்திற்குப் போவோம் வாருங்கள்; அவர்கள் நம்மை உயிரோடே வைத்தால் பிழைக்கிறோம்; நம்மைக் கொன்றால் சாகிறோம் என்று சொல்லி, 5.சீரியருடைய இராணுவத்திற்குப் போக இருட்டோடே எழுந்திருந்து, சீரியருடைய பாளயத்தின் முன்னணியில் வந்தார்கள்; அங்கே ஒருவருமில்லை. 6.ஆண்டவர் சீரியரின் இராணுவத்திற்கு இரதங்களின் இரைச்சலையும், குதிரைகளின் இரைச்சலையும், மகா இராணுவத்தின் இரைச்சலையும் கேட்கப்பண்ணினதினால், அவர்கள் ஒருவரை ஒருவர் நோக்கி: இதோ, நம்மிடத்தில் போருக்கு வர, இஸ்ரவேலின் ராஜா ஏத்தியரின் ராஜாக்களையும் எகிப்தியரின் ராஜாக்களையும் நமக்கு விரோதமாகக் கூலி பொருத்தினான் என்று சொல்லி, 7.இருட்டோடே எழுந்திருந்து ஓடிப்போய், தங்கள் கூடாரங்களையும் தங்கள் குதிரைகளையும் தங்கள் கழுதைகளையும் தங்கள் பாளயத்தையும் அவைகள் இருந்த பிரகாரமாக விட்டு, தங்கள் பிராணன்மாத்திரம் தப்பும்படி ஓடிப்போனார்கள் - II இராஜாக்கள் 7:1-7
இதற்கு இடையே யோவேல் தீர்க்கதரிசி கர்த்தரின் திருத்துவத்தை குறித்து சொன்ன ஒரு காரியத்தை பார்ப்போம், எப்படியாக ஏதேனிலிருந்து பிரிந்த நான்கு ஆறுகளில், முதலாம் ஆற்றில் பொன், பிதோலாகும், கோமேதகக் கல் என மூன்று காரியங்கள் இருந்தனவோ, அது போலவே யோவேல் கண்ட குதிரைகளிடம் இருந்து, ஓடுகிற இரதங்களின் இரைச்சல் போலவும், செத்தைகளை எரிக்கிற அக்கினிஜுவாலையின் இரைச்சல் போலவும், யுத்தத்துக்கு ஆயத்தப்பட்ட பலத்த ஜனத்தின் இரைச்சல் இரைச்சல் என மூன்று விதமான இரைச்சல் உண்டாயின, அதுவும் இயேசு கிறிஸ்துவின் திருத்துவதையே பறைசாற்றுகிறது - 1.சீயோனிலே எக்காளம் ஊதுங்கள், என் பரிசுத்த பர்வதத்திலே எச்சரிப்பின் சத்தமிடுங்கள்; தேசத்தின் குடிகள் எல்லாம் தத்தளிக்கக்கடவர்கள்; ஏனெனில் கர்த்தருடைய நாள் வருகிறது, அது சமீபமாயிருக்கிறது. 2.அது இருளும் அந்தகாரமுமான நாள்; அது மப்பும் மந்தாரமுமான நாள்; விடியற்கால வெளுப்பு பர்வதங்களின்மேல் பரவுகிறதுபோல ஏராளமான பலத்த ஒரு ஜாதி தீவிரமாக வந்து பரவும்; அப்படிப்பட்டது முன் ஒரு காலத்திலும் உண்டானதுமில்லை, இனித்தலைமுறை தலைமுறையாக வரும் வருஷங்களிலும் உண்டாவதுமில்லை. 3.அவைகளுக்கு முன்னாக அக்கினி பட்சிக்கும், அவைகளுக்குப் பின்னாக ஜுவாலை எரிக்கும்; அவைகளுக்கு முன்னாக தேசம் ஏதேன் தோட்டத்தைப்போலவும், அவைகளுக்குப் பின்னாகப் பாழான வனாந்தரத்தைப்போலவும் இருக்கும்; அவைகளுக்கு ஒன்றும் தப்பிப்போவதில்லை. 4.அவைகளின் சாயல் குதிரைகளின் சாயலை ஒத்தது; அவைகள் குதிரை வீரரைப்போல ஓடும். 5.அவைகள் ஓடுகிற இரதங்களின் இரைச்சல் போலவும், செத்தைகளை எரிக்கிற அக்கினிஜுவாலையின் இரைச்சல் போலவும், யுத்தத்துக்கு ஆயத்தப்பட்ட பலத்த ஜனத்தின் இரைச்சல் போலவும், பர்வதங்களுடைய சிகரங்களின்மேல் குதிக்கும் - யோவேல் 2:1-5
இப்பொழுது சகரியாவின் விளக்கத்தை பார்ப்போம், துவக்கத்தில் நான்கு விதமான குதிரைகளாகவும், அதன் பின்பு நான்கு விதமான இரதங்களாகவும், ஆவியாய் இருக்கிற பரலோகத்தின் தேவனை தரிசித்த சகரியா, கடைசியாக பரலோகத்தின் தேவனை எல்தா, தொபியா, யெதாயா, மற்றும் யோசியா என்னும் நான்கு நபர்களை கொண்டு விளக்குகிறார் - 9.பின்பு கர்த்தருடைய வார்த்தை எனக்கு உண்டாகி, அவர்: 10.சிறையிருப்பின் மனுஷராகிய எல்தாயும், தொபியாவும், யெதாயாவும் பாபிலோனிலிருந்து வந்திருக்கும் அந்நாளிலே நீ போய், செப்பனியாவின் குமாரனாகிய யோசியாவின் வீட்டுக்குள் பிரவேசித்து. 11.அங்கே அவர்கள் கையிலே வெள்ளியையும் பொன்னையும் வாங்கி, கிரீடங்களைச் செய்வித்து, யோத்சதாக்கின் குமாரனாகிய யோசுவா என்னும் பிரதான ஆசாரியனுடைய சிரசிலே வைத்து, 12.அவனோடே சொல்லவேண்டியது: சேனைகளின் கர்த்தர் உரைக்கிறது என்னவென்றால், இதோ, ஒரு புருஷன், அவருடைய நாமம் கிளை என்னப்படும்; அவர் தம்முடைய ஸ்தானத்திலிருந்து முளைத்தெழும்பிக் கர்த்தருடைய ஆலயத்தைக் கட்டுவார். 13.அவரே கர்த்தருடைய ஆலயத்தைக் கட்டுவார்; அவர் மகிமைபொருந்தினவராய், தம்முடைய சிங்காசனத்தின்மேல் வீற்றிருந்து ஆளுகை செய்வார்; தம்முடைய சிங்காசனத்தின்மேல் ஆசாரியராயும் இருப்பார்; இவ்விரண்டின் நடுவாகச் சமாதானத்தின் ஆலோசனை விளங்கும் - சகரியா 6:9-13
இதில் எல்தா, தொபியா, யெதாயா என்பவர்கள் பிதாவின் திருத்துவதை பிரதிபலிக்கிறார்கள், அதே சமயத்தில், எல்தா, தொபியா, யெதாயா என்கிற மூவரும் ஒரே நபராக இருப்பதினால், அவர்களுக்கு செப்பனியா என்கிற பொதுவான பெயரும் கொடுக்கப்பட்டுள்ளது, நான்காவது நபராகிய யோசியா குமாரனாகிய இயேசு கிறிஸ்துவையும் குறிக்கிறது, அதனால் தான் நான்காவது நபரை குறித்துச் சொல்லும் பொழுது, யோசியா என்று சொல்லாமல் செப்பனியாவின் குமாரனாகிய யோசியா என்று வேதாகமம் சொல்லுகிறது.
இந்த முழு தரிசனமும், தேவனுடைய சித்தமும் கிறிஸ்துவின் சிலுவை மரணத்தினால் உண்டாகும் இரட்சிப்பை குறித்ததாகவே இருந்தது, அதாவது பாவத்தை வென்று மரணத்தை சங்கரித்து உண்டாகும் நித்திய ஜீவனுக்கு அடுத்ததாகவே இருந்தது, அதனை தொடர்ந்து சகரியா தீர்க்கதரிசி கர்த்தரின் இரண்டாம் வருகையை இப்படியாக எழுதியுள்ளார் - 14.இந்தக் கிரீடங்களோவென்றால், கர்த்தருடைய ஆலயத்திலே, ஏலேமுக்கும், தொபியாவுக்கும், யெதாயாவுக்கும், செப்பனியாவின் குமாரனாகிய ஏனுக்கும் நினைப்பூட்டுதலுக்கென்று வைக்கப்படுவதாக. 15.தூரத்திலுள்ளவர்கள் வந்து கர்த்தருடைய ஆலயத்தைக்கூட இருந்து கட்டுவார்கள்; அப்பொழுது சேனைகளின் கர்த்தர் என்னை உங்களிடத்திற்கு அனுப்பினாரென்று அறிந்துகொள்வீர்கள்; நீங்கள் உங்கள் தேவனாகிய கர்த்தரின் சத்தத்தைக்கேட்டு நடந்தீர்களானால் இது நிறைவேறும் என்று சொல் என்றார். - சகரியா 6:14
கடைசியாக எசேக்கியேலின் தீர்க்கதரிசியின் தரிசனத்தை பார்ப்போம், எப்படியாக ஏதேனிலிருந்து ஒரு நதி ஓடி, அங்கேயிருந்து பிரிந்து நாலு பெரிய ஆறுகளாயிற்றோ, அது போலவே, சகரியா நான்கு விதமான குதிரைகளை தரிசினத்தில் கண்டரோ, அது போலவே எசேக்கியேல் தீர்க்கதரிசி, பிதாவையும் குமாரனையும் நான்கு ஜீவன்களாக கண்டார் - 4.இதோ, வடக்கேயிருந்து புசல்காற்றும் பெரிய மேகமும், அத்தோடே கலந்த அக்கினியும் வரக்கண்டேன்; அதைச் சுற்றிலும் பிரகாசமும், அதின் நடுவில் அக்கினிக்குள்ளிருந்து விளங்கிய சொகுசாவின் நிறமும் உண்டாயிருந்தது. 5.அதின் நடுவிலிருந்து நாலு ஜீவன்கள் தோன்றின; அவைகளின் சாயல் மனுஷ சாயலாயிருந்தது. 6.அவைகளில் ஒவ்வொன்றுக்கும் நந்நான்கு முகங்களும், ஒவ்வொன்றுக்கும் நந்நான்கு செட்டைகளும் இருந்தன. 7.அவைகளுடைய கால்கள் நிமிர்ந்த கால்களாயிருந்தன; அவைகளுடைய உள்ளங்கால்கள் கன்றுக்குட்டியின் உள்ளங்கால்களுக்கு ஒப்பாயிருந்தன; அவைகள் துலக்கப்பட்ட வெண்கலத்தின் வருணமாய் மின்னிக்கொண்டிருந்தன. 8.அவைகளுடைய செட்டைகளின்கீழ் அவைகளின் நாலு பக்கங்களிலும் மனுஷ கைகள் இருந்தன; அந்த நாலுக்கும் அதினதின் முகங்களும் அதினதின் செட்டைகளும் உண்டாயிருந்தன. 9.அவைகள் ஒவ்வொன்றின் செட்டைகளும் மற்றதின் செட்டைகளோடே சேர்ந்திருந்தன; அவைகள் செல்லுகையில் திரும்பாமல் ஒவ்வொன்றும் தன்தன் திசைக்கு நேர்முகமாய்ச் சென்றன. 10.அவைகளுடைய முகங்களின் சாயலாவது, வலதுபக்கத்தில் நாலும் மனுஷமுகமும் சிங்கமுகமும், இடதுபக்கத்தில் நாலும் எருது முகமும் கழுகு முகமுமாயிருந்தன. 11.அவைகளுடைய முகங்கள் இப்படியிருக்க, அவைகளுடைய செட்டைகள் மேலே பிரிந்திருந்தன, ஒவ்வொன்றுக்குமுள்ள இரண்டிரண்டு செட்டைகள் ஒன்றோடொன்று சேர்ந்திருந்தன; மற்ற இரண்டிரண்டு செட்டைகள் அவைகளுடைய உடல்களை மூடின. 12.அவைகள் ஒவ்வொன்றும் தன்தன் திசைக்கு நேர்முகமாய்ச் சென்றது; ஆவி போகவேண்டுமென்றிருந்த எவ்விடத்துக்கும் அவைகள் போயின; போகையில் அவைகள் திரும்பிப்பார்க்கவில்லை. 13.ஜீவன்களுடைய சாயல் எப்படியிருந்ததென்றால், அவைகள் எரிகிற அக்கினித்தழலின் தோற்றமும் தீவர்த்திகளின் தோற்றமுமாயிருந்தது; அந்த அக்கினி ஜீவன்களுக்குள்ளே உலாவிப் பிரகாசமாயிருந்தது; அக்கினியிலிருந்து மின்னல் புறப்பட்டது. 14.அந்த ஜீவன்கள் மின்னலின் தோற்றம்போல ஓடித்திரிந்தன - எசேக்கியேல் 1:4-14
அடுத்த பாகம்: கிருபையினாலும் சத்தியத்தினாலும் நிறைந்தவராய்