முந்தைய பாகம்: கழுதையின்மேலும் கழுதைக்குட்டியாகிய மறியின்மேலும்
எந்த ஒரு மனிதனாலும், அல்லது எந்த ஒரு படைப்பினாலும், நம்முடைய பாவங்களுக்கும் சாபங்களும் பரிகாரம் ஆக முடியாது, அதனால், தேவனே நம்முடைய பாவங்களைச் சுமந்து தீர்த்தாரென்று வேதாகமம் சொல்லுகிறது - 5.அவர் நம்முடைய பாவங்களைச் சுமந்து தீர்க்க வெளிப்பட்டாரென்று அறிவீர்கள்; அவரிடத்தில் பாவமில்லை. 6.அவரில் நிலைத்திருக்கிற எவனும் பாவஞ்செய்கிறதில்லை; பாவஞ்செய்கிற எவனும் அவரைக் காணவுமில்லை, அவரை அறியவுமில்லை - I யோவான் 3:5-6
அதனால் தான் தேவகுமாரனாகிய இயேசு கிறிஸ்து சிலுவையைச் சுமந்துகொண்டு கொல்கொதாவிற்கு சென்றார் என்று யோவான் சுவிஷேச புஸ்தகம் சொல்லுகிறது - 15.அவர்கள்: இவனை அகற்றும் அகற்றும், சிலுவையில் அறையும் என்று சத்தமிட்டார்கள். அதற்குப் பிலாத்து: உங்கள் ராஜாவை நான் சிலுவையில் அறையலாமா என்றான். பிரதான ஆசாரியர் பிரதியுத்தரமாக: இராயனேயல்லாமல் எங்களுக்கு வேறே ராஜா இல்லை என்றார்கள். 16.அப்பொழுது அவரைச் சிலுவையில் அறையும்படிக்கு அவர்களிடத்தில் ஒப்புக்கொடுத்தான். அவர்கள் இயேசுவைப் பிடித்துக்கொண்டுபோனார்கள். 17.அவர் தம்முடைய சிலுவையைச் சுமந்துகொண்டு, எபிரெயு பாஷையிலே கொல்கொதா என்று சொல்லப்படும் கபாலஸ்தலம் என்கிற இடத்திற்குப் புறப்பட்டுப்போனார். 18.அங்கே அவரைச் சிலுவையில் அறைந்தார்கள்; அவரோடேகூட வேறிரண்டுபேரை இரண்டு பக்கங்களிலும் இயேசுவை நடுவிலுமாகச் சிலுவைகளில் அறைந்தார்கள் - யோவான் 19:13-17
காரியம் இப்படி இருக்க, மத்தேயு, மாற்கு மற்றும் லூக்கா என மற்ற மூன்று சுவிஷேச புஸ்தகங்கள் சிரேனே ஊரானாகிய சீமோனும் சிலுவையை சுமந்தார் என்று சொல்ல காரணம் என்ன? தேவனே செய்து முடிக்க வேண்டிய காரியத்தில் எப்படி ஒரு மனிதன் பங்கெடுக்க முடியும்?
இதுவரை மத்தேயு, மாற்கு மற்றும் லூக்கா என முதல் மூன்று சுவிஷேச புஸ்தகங்கள், இயேசு கிறிஸ்துவின் சிலுவை மரணத்தின் போது "அவரின் தாயாகிய மரியாள்" அங்கு இல்லை என்று அறிவிக்க, யோவான் சுவிஷேச புஸ்தகமானது, இயேசு கிறிஸ்துவின் தாயார் கர்த்தரின் சிலுவையினருகே நின்றுகொண்டிருந்தார் என்று சொன்னதிற்கான காரணத்தைப் பார்த்தோம். அது போலவே, இங்கு யோவான் சுவிஷேச புஸ்தகமானது, கர்த்தர் தம்முடைய சிலுவையைச் சுமந்துகொண்டு கொல்கொதாவிற்கு சென்றார் என்று சொல்ல, மற்ற மூன்று சுவிஷேச புஸ்தகங்கள் சிரேனே ஊரானாகிய சீமோன் சிலுவையைச் சுமந்துகொண்டு சென்றார் என்று சொல்வதற்கான காரணத்தை பார்ப்போம்.
மத்தேயு சுவிஷேச புஸ்தகத்தில் இதை குறித்துப் பின்வருமாறு எழுதப்பட்டுள்ளது, அந்த சிரேனே ஊரானது எருசலேமுக்கு அருகில் இருக்கும் ஊர் கிடையாது, அது ஏறக்குறைய 1700 தொலைவில் இருக்கும் ஒரு பட்டணம், ஒருவர் அங்கிருந்து எருசலேமுக்கு நடந்து வர ஏறக்குறைய 20 நாட்கள் ஆகும், அவர்களின் பாஷையும் வேறு, பழக்க வழக்கங்களும் வேறு, அப்படிபட்ட நபர் ஏன் எருசலேமுக்கு வர வேண்டும்? மேலும் அவர் கர்த்தரை சிலுவையில் அறைந்த கொல்கொதா வரைக்கும் சிலுவையை சுமத்துக் கொண்டு வந்ததாக எழுதப்பட்டுள்ளது - 31.அவரைப் பரியாசம்பண்ணினபின்பு, அவருக்கு உடுத்தின மேலங்கியைக் கழற்றி, அவருடைய வஸ்திரங்களை அவருக்கு உடுத்தி, அவரைச் சிலுவையில் அறையும்படி கொண்டுபோனார்கள். 32.போகையில், சிரேனே ஊரானாகிய சீமோன் என்னப்பட்ட ஒரு மனுஷனை அவர்கள் கண்டு, அவருடைய சிலுவையைச் சுமக்கும்படி அவனைப் பலவந்தம்பண்ணினார்கள். 33.கபாலஸ்தலம் என்று அர்த்தங்கொள்ளும் கொல்கொதா என்னும் இடத்துக்கு அவர்கள் வந்தபோது, 34.கசப்புக்கலந்த காடியை அவருக்குக் குடிக்கக் கொடுத்தார்கள்; அவர் அதை ருசிபார்த்து, குடிக்க மனதில்லாதிருந்தார் - மத்தேயு 27:31-34
லூக்கா சுவிஷேச புஸ்தகமானது, கர்த்தரின் சிலுவையைச் சிரேனே ஊரானாகிய சீமோன் சுமந்துகொண்டு கர்த்தருக்கு பின் சென்றதாக கூறுகிறது - 25.கலகத்தினிமித்தமும் கொலைபாதகத்தினிமித்தமும் காவலில் போடப்பட்டிருந்தவனை அவர்கள் கேட்டுக்கொண்டபடியே விடுதலையாக்கி, இயேசுவையோ அவர்கள் இஷ்டத்துக்கு ஒப்புக்கொடுத்தான். 26.அவர்கள் இயேசுவைக் கொண்டுபோகிறபோது, நாட்டிலிருந்து வருகிற சிரேனே ஊரானாகிய சீமோன் என்கிற ஒருவனைப் பிடித்து, சிலுவையை அவர் பின்னே சுமந்துகொண்டுவரும்படி அதை அவன்மேல் வைத்தார்கள். 27.திரள்கூட்டமான ஜனங்களும் அவருக்காகப் புலம்பி அழுகிற ஸ்திரீகளும் அவருக்குப் பின்சென்றார்கள் - லூக்கா 23:25-27
மாற்கு சுவிஷேச புஸ்தகமானது, இந்த சிரேனே ஊரானாகிய சீமோனுக்கு இரண்டு குமாரர்கள் இருந்ததாக என்று சொல்லியிருப்பதில் பரலோக ரகசியங்கள் இருந்தாலும், அவர் ஒரு முதிர் வயதான நபராக இருந்தார் என்கிற காரியத்தை விளங்க செய்கிறது, மேலும் சிரேனே ஊரானாகிய சீமோன் சிலுவையைச் சுமக்கும் படி பலவந்தம்பண்ண பட்டார் என்று சொல்லப்பட்டதை, மனநல துறையை சேர்ந்தவர்கள் ஆராய்ந்துச் சொல்லும் பொழுது, கர்த்தரின் காயங்களை கண்ட சிரேனே ஊரானாகிய சீமோன் வெளிப்படுத்திய உணர்வு தான் [மார்பில் அடித்துக் கொண்டவரை போல], அங்கிருந்த அனைவரை காட்டிலும் அவர் வெளிப்படுத்திய அன்பு தான், போர்சேவகர்கள் அவரை கர்த்தரின் சிலுவையை சுமக்க பலவந்தம்பண்ண காரணம் என்று சொல்லுகிறார்கள், இதற்கு மாற்றுக் கருத்தும் கிடையாது - 20.அவரைப் பரியாசம்பண்ணினபின்பு, சிவப்பான அங்கியைக் கழற்றி, அவருடைய வஸ்திரங்களை அவருக்கு உடுத்தி, அவரைச் சிலுவையில் அறையும்படி வெளியே கொண்டுபோனார்கள். 21.சிரேனே ஊரானும், அலெக்சந்தருக்கும் ரூப்புக்கும் தகப்பனுமாகிய சீமோன் என்னப்பட்ட ஒருவன் நாட்டிலிருந்து அவ்வழியே வருகையில், அவருடைய சிலுவையைச் சுமக்கும்படி அவனைப் பலவந்தம்பண்ணினார்கள். 22.கபாலஸ்தலம் என்று அர்த்தங்கொள்ளும் கொல்கொதா என்னும் இடத்துக்கு அவரைக் கொண்டுபோய், 23.வெள்ளைப்போளம் கலந்த திராட்சரசத்தை அவருக்குக் குடிக்கக் கொடுத்தார்கள்; அவர் அதை ஏற்றுக்கொள்ளவில்லை. 24.அப்பொழுது அவரைச் சிலுவையில் அறைந்தார்கள். அதன்பின்பு, அவருடைய வஸ்திரங்களைப் பங்கிட்டு, ஒவ்வொருவன் ஒவ்வொரு பங்கை எடுத்துக்கொள்ளும்படி அவைகளைக்குறித்துச் சீட்டுப்போட்டார்கள் - மாற்கு 15:20-24
ஏனென்றால், குமாரன் பலியாகும் பொழுது, தகப்பனாகிய ஆபிரகாமும் கட்டைகளை சுமக்க வேண்டியதாய் இருந்தது, இந்த தீர்க்கதரிசனத்தை தான், பிதாவாகிய தேவன், நாட்டிலிருந்து வருகிற சிரேனே ஊரானாகிய சீமோனாக சிலுவையை சுமந்து நிறைவேற்றினார், இல்லாவிட்டால் திடீரெனெ ஒருவர் வந்து ஏன் சிலுவையை சுமந்துக் கொண்டு செல்ல வேண்டும்? - ஆபிரகாம் அதிகாலையில் எழுந்து, தன் கழுதையின்மேல் சேணங்கட்டி, தன் வேலைக்காரரில் இரண்டுபேரையும் தன் குமாரன் ஈசாக்கையும் கூட்டிக்கொண்டு, தகனபலிக்குக் கட்டைகளையும் பிளந்துகொண்டு, தேவன் தனக்குக் குறித்த இடத்திற்குப் புறப்பட்டுப்போனான் - ஆதியாகமம் 22:3
இல்லாவிட்டால், நம்முடைய பாவங்களை இயேசுவும் சிரேனே ஊரானாகிய சீமோன் என்கிற மனிதனும் சுமந்தார்கள் என்று தானே சொல்லப்பட வேண்டும், அது அப்படியல்ல, நம் மேல் வைத்த அன்பினால், பிதாவாகிய தேவனும் குமாரனாகிய இயேசு கிறிஸ்துவோடு நமக்காக பாடுபட்டார் என்கிற பரம இரகசியத்தை விளக்கவே இவைகள் எழுதப்பட்டுள்ளது.
அடுத்த பாகம்: சூரியன் இருளடைந்தது