கிறிஸ்தவர்கள் பலரும், யூத மதத்தை கிறிஸ்தவத்தின் தாய் மதமாகத் தான் பார்க்கிறார்கள், இதற்கு முக்கியமான காரணம் யூதர்கள் வேதாகமத்திலுள்ள பழைய ஏற்பாட்டிற்கு சொந்தக்காரர்களாக இருப்பது தான்.
ஆனால் இந்த யூதர்கள் இயேசு கிறிஸ்துவை இரட்சகர் என்று ஏற்றுக்கொள்ளாதவர்கள், இப்படிப்பட்டவர்கள் தேவனுடைய பார்வையில் எப்படி இருக்கிறார்கள்? பழைய ஏற்பாட்டு காலத்தில் ஏசாயா தீர்க்கதரிசி மெசியா வேண்டும் என்று கேட்க மறுத்த ஆகாசிடம் நீங்கள் "தேவனையும் விசனப்படுத்தப் பார்க்கிறீர்களோ?" என்று தானே கேட்டார் - 10.பின்னும் கர்த்தர் ஆகாசை நோக்கி: 11.நீ உன் தேவனாகிய கர்த்தரிடத்தில் ஒரு அடையாளத்தை வேண்டிக்கொள்; அதை ஆழத்திலிருந்தாகிலும், உன்னதத்திலிருந்தாகிலும் உண்டாகக் கேட்டுக்கொள் என்று சொன்னார். 12.ஆகாசோ: நான் கேட்கமாட்டேன், நான் கர்த்தரைப் பரீட்சைசெய்யமாட்டேன் என்றான். 13.அப்பொழுது ஏசாயா: தாவீதின் வம்சத்தாரே, கேளுங்கள்; நீங்கள் மனுஷரை விசனப்படுத்துகிறது போதாதென்று என் தேவனையும் விசனப்படுத்தப் பார்க்கிறீர்களோ? 14.ஆதலால் ஆண்டவர் தாமே உங்களுக்கு ஒரு அடையாளத்தைக் கொடுப்பார்; இதோ, ஒரு கன்னிகை கர்ப்பவதியாகி ஒரு குமாரனைப் பெறுவாள், அவருக்கு இம்மானுவேல் என்று பேரிடுவாள் - ஏசாயா 7:10-14
இப்படி இயேசு கிறிஸ்துவை மேசியாவாக ஏற்றுக் கொள்ளாத யூத மதமானது, தேவனை விசனப்படுத்துகிற மதமாகவும், கிறிஸ்தவத்திற்கு எதிராக செயல்பட்ட முதல் மதமாகவும் இருக்கிறது - ஏனெனில் இயேசுவைக் கிறிஸ்து என்று எவனாவது அறிக்கைபண்ணினால் அவனை ஜெபஆலயத்துக்குப் புறம்பாக்கவேண்டுமென்று யூதர்கள் அதற்குமுன்னமே கட்டுப்பாடு செய்திருந்தார்கள் - யோவான் 9:22b
மனிதர்களுடைய வேதமாக மாறிய தோரா
இயேசு கிறிஸ்து தன்னை இரட்சகராக ஏற்றுக்கொள்ளாத யூதர்களை வைத்திருந்த பழைய ஏற்பாடு புஸ்தகத்தை "அவர்களுடைய வேதம்" என்று சொன்னதை நாம் சற்றே ஆராய்ந்து பார்க்க வேண்டும், அந்த யூதர்கள் வைத்துக் கொண்டிருந்த பழைய ஏற்பாடு புத்தகம் தேவனால் அருளப்பட்டது தான், அந்த பழைய ஏற்பாடு புத்தகம் இயேசு கிறிஸ்து தான் மெசியாவாக வரப்போகிறவர் என்று தீர்க்கதரிசனமாக கூறுகிறது, ஆனால் அவர்கள் கர்த்தரை ஏற்றுக்கொள்ளாததினால் அது "தேவனுடைய வேதம்" என்று அழைக்கப்படுவதற்கு பதிலாக "அவர்களுடைய வேதம்" என்று அழைக்கப்பட்டது - 23.என்னைப் பகைக்கிறவன் என் பிதாவையும் பகைக்கிறான். 24.வேறொருவரும் செய்யாத கிரியைகளை நான் அவர்களுக்குள்ளே செய்யாதிருந்தேனானால், அவர்களுக்குப் பாவமிராது; இப்பொழுது அவர்கள் என்னையும் என் பிதாவையும் கண்டும் பகைத்துமிருக்கிறார்கள். 25.முகாந்தரமில்லாமல் என்னைப் பகைத்தார்கள் என்று அவர்களுடைய வேதத்தில் எழுதியிருக்கிற வாக்கியம் நிறைவேறும்படிக்கு இப்படியாயிற்று - யோவான் 15:23-25
இப்படி இயேசு கிறிஸ்து இல்லாத நியாயப்பிரமாண புத்தகத்தால் எந்த பலனும் இல்லை, அதை நன்மைக்கேதுவல்லாத கட்டளைகள் மற்றும் ஜீவனுக்கேதுவல்லாத நியாயங்கள் என்றே எசேக்கியேல் கூறியுள்ளார் - 23.ஆனாலும் அவர்கள் என் நியாயங்களின்படி செய்யாமல், என் கட்டளைகளை வெறுத்து, என் ஓய்வுநாட்களை பரிசுத்தக் குலைச்சலாக்கினபடியாலும், அவர்களுடைய கண்கள் அவர்கள் பிதாக்களின் நரகலான விக்கிரகங்களின்மேல் நோக்கமாயிருந்தபடியாலும், 24.நான் அவர்களைப் புறஜாதிகளுக்குள்ளே சிதறடித்து, அவர்களை தேசங்களிலே தூற்றிப்போடுகிறதற்கு வனாந்தரத்திலே ஆணையிட்டேன். 25.ஆகையால் நன்மைக்கேதுவல்லாத கட்டளைகளையும் ஜீவனுக்கேதுவல்லாத நியாயங்களையும் நான் அவர்களுக்குக் கொடுத்தேன் - எசேக்கியேல் 20:23-25
மந்திரவாதிகள் என்று அழைக்கப்பட்ட ஆசாரியர்கள்
தேவனால் அங்கீகரிக்கப்பட்டு, ஆரோனின் வம்சத்தில் வந்து, பிரதான ஆசாரியனாக இருந்த ஸ்கேவாவின் குமாரர்கள், தங்களுக்குள் இயேசு கிறிஸ்து இல்லாததினால் எப்படி அழைக்கப்பட்டார்கள்? "தேசாந்தரிகளாய்த் திரிகிற மந்திரவாதிகள்" என்று அல்லவா அழைக்கப்பட்டார்கள் - 11.பவுலின் கைகளினாலே தேவன் விசேஷித்த அற்புதங்களைச் செய்தருளினார். 12.அவனுடைய சரீரத்திலிருந்து உறுமால்களையும் கச்சைகளையும் கொண்டுவந்து, வியாதிக்காரர்மேல் போட வியாதிகள் அவர்களைவிட்டு நீங்கிப்போயின; பொல்லாத ஆவிகளும் அவர்களைவிட்டுப் புறப்பட்டன. 13.அப்பொழுது தேசாந்தரிகளாய்த் திரிகிற மந்திரவாதிகளாகிய யூதரில் சிலர் பொல்லாத ஆவிகள் பிடித்திருந்தவர்கள்மேல் கர்த்தராகிய இயேசுவின் நாமத்தைச் சொல்லத் துணிந்து: பவுல் பிரசங்கிக்கிற இயேசுவின்பேரில் ஆணையிட்டு உங்களுக்குக் கட்டளையிடுகிறோம் என்றார்கள். 14.பிரதான ஆசாரியனாகிய ஸ்கேவா என்னும் ஓர் யூதனுடைய குமாரர் ஏழுபேர் இப்படிச் செய்தார்கள். 15.பொல்லாத ஆவி அவர்களை நோக்கி: இயேசுவை அறிவேன், பவுலையும் அறிவேன், நீங்கள் யார் என்று சொல்லி, 16.பொல்லாத ஆவியையுடைய மனுஷன் அவர்கள்மேல் பாய்ந்து, பலாத்காரம்பண்ணி, அவர்களை மேற்கொள்ள, அவர்கள் நிருவாணிகளும் காயப்பட்டவர்களுமாகி அந்த வீட்டை விட்டு ஓடிப்போனார்கள். 17.இது எபேசுவிலே குடியிருந்த யூதர் கிரேக்கர் அனைவருக்கும் தெரியவந்தபோது, அவர்களெல்லாரும் பயமடைந்தார்கள்; கர்த்தராகிய இயேசுவின் நாமம் மகிமைப்பட்டது - அப்போஸ்தலர் 19:11-17
அப்பயென்றால், ஆசாரியர்களாக இருந்தாலும், தங்களுக்குள் இயேசு கிறிஸ்து இல்லாவிட்டால், தேவனுடைய பார்வையில் அவர்கள் தேசாந்தரிகளாய்த் திரிகிற மந்திரவாதிகளாய் தான், அதாவது ஒரு குடுகுடுப்பை காரனை போலத்தான் இருப்பார்கள்.