நிறைவேற்றுகிறதற்கே வந்தேன்
இயேசு கிறிஸ்து திரியேக தேவனாக, அதாவது பிதா, வார்த்தை, பரிசுத்த ஆவியானவரின் தற்சுரூபமாய் இருக்கிறார்
இயேசு கிறிஸ்து திரியேக தேவனாக, அதாவது பிதா, வார்த்தை, பரிசுத்த ஆவியானவரின் தற்சுரூபமாய் இருக்கிறார்
முந்தைய பாகம்: எசேக்கியேலின் விளக்கம்
நம் இரட்சகராகிய இயேசு கிறிஸ்து திரியேக தேவனாய் இருக்கிறார், எப்படியெனில் வார்த்தையானவரின் குமாரன் மாம்சத்தில் வெளிப்பட்ட பொழுது, அவருக்குள் பிதாவானவரின் குமாரனும், பரிசுத்த ஆவியானவரின் குமாரனும் வாசம் செய்தார்கள் என்பதை வேதாகம ஆதாரத்துடன் பார்த்துக் கொண்டிருக்கிறோம், இந்த தொகுப்பில், பழைய ஏற்பாட்டு புத்தகத்தில் இந்த இரகசியம் எப்படியாக மறைந்திருக்கிறது என்பதை பார்ப்போம், ஏனென்றால் பழைய ஏற்பாட்டில் சொல்லப்பட்டவைகளை நிறைவேற்ற தானே இயேசு கிறிஸ்து இந்த பூமிக்கு வந்தார் - நியாயப்பிரமாணத்தையானாலும் தீர்க்கதரிசனங்களையானாலும் அழிக்கிறதற்கு வந்தேன் என்று எண்ணிக்கொள்ளாதேயுங்கள்; அழிக்கிறதற்கு அல்ல, நிறைவேற்றுகிறதற்கே வந்தேன் - மத்தேயு 5:17
வேதாகமத்தில் "எபிரெயர்" என்கிற வார்த்தையை பல இடங்களில் பார்க்கலாம், மோசேயிடம் தேவன் தன்னை "எபிரெயருடைய தேவனாகிய கர்த்தர்" என்று சொன்னதையும் பார்க்கலாம், இந்த "எபிரெயர்" என்கிற பெயர் எப்படி உண்டானது என்பதற்கு எந்த வரலாற்று ஆதாரமும் கிடையாது, இது ஒரு தேசத்தின் பெயரோ, அல்லது ஒரு பாஷையின் பெயரோ கிடையாது, வேதாகமத்தில் ஆபிரகாம் தான் முதல் முறையாக "எபிரெயன்" என்று அழைக்கப்பட்டார், அப்படி அழைக்கப்பட்டதற்கு காரணம் அவர் எஸ்கோல், ஆநேர் மற்றும் மம்ரே என்கிற மூன்று பேருடன் உடன்படிக்கை செய்திருந்தது தான், அந்த மூவர் இயேசு கிறிஸ்துவையே குறிக்கிறார்கள் - 12.ஆபிராமின் சகோதரனுடைய குமாரனாகிய லோத்து சோதோமிலே குடியிருந்தபடியால், அவனையும், அவன் பொருள்களையும் கொண்டுபோய்விட்டார்கள். 13.தப்பியோடின ஒருவன் எபிரெயனாகிய ஆபிராமிடத்தில் வந்து அதை அறிவித்தான்; ஆபிராம் தன்னோடே உடன்படிக்கை செய்திருந்த மனிதராகிய எஸ்கோலுக்கும் ஆநேருக்கும் சகோதரனாகிய மம்ரே என்னும் எமோரியனுடைய சமபூமியிலே அப்பொழுது குடியிருந்தான் - ஆதியாகமம் 14:1-13
அது மாத்திரம் இல்லாமல், பதினோரு ராஜ்ஜியங்கள் முறியடித்த நான்கு ராஜாக்களை, ஆபிரகாம் தன் வீட்டிலே பிறந்த முந்நூற்றுப் பதினெட்டு பேரை கொண்டு முறியடித்தார் என்றால் அது நம்ப கூடிய காரியமா? ஆனால் ஆபிரகாம் அவர்களை முறியடித்ததற்கு காரணம் அவனோடிருந்த ஆநேர், எஸ்கோல், மம்ரே என்பவர்களே, அவர்கள் நம் கர்த்தரின் திருத்துவதையே குறிக்கிறார்கள், மேலும் மெல்கிசேதேக்குக்கு ஆபிரகாம் தசமபாகம் கொடுத்ததாக சொல்லப்பட்டது, ஆனால் ஆபிரகாம் அதை கடைசியாக யாருக்கு கொடுத்தார்? ஆநேர், எஸ்கோல், மம்ரே என்கிற மூவருக்கு அல்லவா - 18.அன்றியும், உன்னதமான தேவனுடைய ஆசாரியனாயிருந்த சாலேமின் ராஜாவாகிய மெல்கிசேதேக்கு அப்பமும் திராட்சரசமும் கொண்டுவந்து, 19.அவனை ஆசீர்வதித்து: வானத்தையும் பூமியையும் உடையவராகிய உன்னதமான தேவனுடைய ஆசீர்வாதம் ஆபிராமுக்கு உண்டாவதாக. 20.உன் சத்துருக்களை உன் கையில் ஒப்புக்கொடுத்த உன்னதமான தேவனுக்கு ஸ்தோத்திரம் என்று சொன்னான். இவனுக்கு ஆபிராம் எல்லாவற்றிலும் தசமபாகம் கொடுத்தான். 21.சோதோமின் ராஜா ஆபிராமை நோக்கி: ஜனங்களை எனக்குத் தாரும், பொருள்களை நீர் எடுத்துக்கொள்ளும் என்றான். 22.அதற்கு, ஆபிராம் சோதோமின் ராஜாவைப் பார்த்து: ஆபிராமை ஐசுவரியவானாக்கினேன் என்று நீர் சொல்லாதபடிக்கு நான் ஒரு சரட்டையாகிலும் பாதரட்சையின் வாரையாகிலும், உமக்கு உண்டானவைகளில் யாதொன்றையாகிலும் எடுத்துக்கொள்ளேன் என்று, 23.வானத்தையும் பூமியையும் உடையவராகிய உன்னதமான தேவனாகிய கர்த்தருக்கு நேராக என் கையை உயர்த்துகிறேன். 24.வாலிபர் சாப்பிட்டது போக, என்னுடனே வந்த ஆநேர், எஸ்கோல், மம்ரே என்னும் புருஷருடைய பங்குமாத்திரமே வரவேண்டும்; இவர்கள் தங்கள் பங்கை எடுத்துக்கொள்ளட்டும் என்றான் - ஆதியாகமம் 14:14-24
ஆபிரகாம் பெலிஸ்தரின் தேசத்தில் இருக்கையில் மூன்று துறவுகளை வெட்டி இருந்தார், அந்த துறவுகள் ஜீவத்தண்ணீராம் இயேசு கிறிஸ்துவையே குறிக்கிறது, அதன் பின்பு பெலிஸ்தர்கள் அந்த துறவுகளை தூர்த்து போட்டது கிறிஸ்துவின் சிலுவை மரணத்தையும், அதன் பின்பு ஈசாக்கு அந்த துறவுகளை தோண்டியது இயேசு கிறிஸ்துவின் உயிர்த்தெழுதலையும் அறிவிக்கிறது, ஏன் ஆபிரகாம் மூன்று துறவுகள் தோண்டினார்? ஏசேக்கு, சித்னா, மற்றும் ரெகொபோத் என்று பெயரிடப்பட்டிருந்த அந்த துறவுகள் எதை அறிவிக்கிறது? அது நம் கர்த்தரின் திருத்துவதையே அறிவிக்கிறது - 14.அவனுக்கு ஆட்டுமந்தையும், மாட்டுமந்தையும், அநேக பணிவிடைக்காரரும் இருந்தபடியினாலே பெலிஸ்தர் அவன் பேரில் பொறாமைகொண்டு, 15.அவன் தகப்பனாகிய ஆபிரகாமின் நாட்களில் அவனுடைய வேலைக்காரர் வெட்டின துரவுகளையெல்லாம் தூர்த்து மண்ணினால் நிரப்பிப்போட்டார்கள். 16.அபிமெலேக்கு ஈசாக்கை நோக்கி: நீ எங்களை விட்டுப் போய்விடு; எங்களைப் பார்க்கிலும் மிகவும் பலத்தவனானாய் என்றான். 17.அப்பொழுது ஈசாக்கு அவ்விடம்விட்டுப் புறப்பட்டு, கேராரின் பள்ளத்தாக்கிலே கூடாரம் போட்டு, அங்கே குடியிருந்து, 18.தன் தகப்பனாகிய ஆபிரகாமின் நாட்களில் வெட்டினவைகளும், ஆபிரகாம் மரித்தபின் பெலிஸ்தர் தூர்த்துப்போட்டவைகளுமான துரவுகளை மறுபடியும் தோண்டி, தன் தகப்பன் அவைகளுக்கு இட்டிருந்த பேர்களின்படியே அவைகளுக்குப் பேரிட்டான். 19.ஈசாக்குடைய வேலைக்காரர் பள்ளத்தாக்கிலே வெட்டி, அங்கே சுரக்கும் நீரூற்றைக் கண்டார்கள். 20.கேராரூர் மேய்ப்பர் இந்தத் தண்ணீர் தங்களுடையது என்று சொல்லி, ஈசாக்குடைய மேய்ப்பருடனே வாக்குவாதம்பண்ணினார்கள்; அவர்கள் தன்னோடே வாக்குவாதம்பண்ணினபடியால், அந்தத் துரவுக்கு ஏசேக்கு என்று பேரிட்டான். 21.வேறொரு துரவை வெட்டினார்கள்; அதைக்குறித்தும் வாக்குவாதம்பண்ணினார்கள்; ஆகையால் அதற்கு சித்னா என்று பேரிட்டான். 22.பின்பு அவ்விடம்விட்டுப் பெயர்ந்துபோய், வேறொரு துரவை வெட்டினான்; அதைக்குறித்து அவர்கள் வாக்குவாதம்பண்ணவில்லை; அப்பொழுது அவன்: நாம் தேசத்தில் பலுகும்படிக்கு, இப்பொழுது கர்த்தர் நமக்கு இடம் உண்டாக்கினார் என்று சொல்லி, அதற்கு ரெகொபோத் என்று பேரிட்டான் - ஆதியாகமம் 26:14-22
அப்படியென்றால் நம்மை இரட்சிக்க தேவன் மூன்று நபர்களாக வர வேண்டுமா? அப்படி இல்லை இயேசு கிறிஸ்துவுக்குள் அந்த மூவரும் வாசம் செய்வார்கள் என்பதை அறிவுறுத்தவே ஈசாக்குக்கு தேவன் பெயெர்செபா என்கிற ஒரு துரவை கொடுத்தார், அந்த துரவில் எப்பொழுது தண்ணீர் வெளிப்பட்டது? அபிமெலேக்கு, அகுசாத், பிகோல் என்கிற மூவர் ஈசாக்குடன் உடன்படிக்கை செய்த பின்பு தானே! அந்த மூவர் இயேசு கிறிஸ்துவை அல்லவா குறிக்கிறார்கள் - 25.அங்கே அவன் ஒரு பலிபீடத்தைக் கட்டி, கர்த்தருடைய நாமத்தைத் தொழுதுகொண்டு, அங்கே தன் கூடாரத்தைப் போட்டான். அவ்விடத்தில் ஈசாக்கின் வேலைக்காரர் ஒரு துரவை வெட்டினார்கள். 26.அபிமெலேக்கும் அவன் சிநேகிதனாகிய அகுசாத்தும் அவன் சேனாபதியாகிய பிகோலும், கேராரிலிருந்து அவனிடத்துக்கு வந்தார்கள். 27.அப்பொழுது ஈசாக்கு அவர்களை நோக்கி: ஏன் என்னிடத்தில் வந்தீர்கள்? நீங்கள் என்னைப் பகைத்து, என்னை உங்களிடத்தில் இராதபடிக்குத் துரத்திவிட்டீர்களே என்றான். 28.அதற்கு அவர்கள்: நிச்சயமாய் கர்த்தர் உம்மோடேகூட இருக்கிறார் என்று கண்டோம்; ஆகையால் எங்களுக்கும் உமக்கும் ஒரு ஆணை ஏற்பாடு உண்டாகவேண்டும் என்று நாங்கள் நிர்ணயம் பண்ணினோம். 29.நாங்கள் உம்மைத் தொடாமல், நன்மையையே உமக்குச் செய்து, உம்மைச் சமாதானத்தோடே அனுப்பிவிட்டதுபோல, நீரும் எங்களுக்குத் தீங்குசெய்யாதபடிக்கு உம்மோடே உடன்படிக்கை பண்ணிக்கொள்ள வந்தோம்; நீர் கர்த்தரால் ஆசீர்வதிக்கப்பட்டவராமே என்றார்கள். 30.அவன் அவர்களுக்கு விருந்துபண்ணினான், அவர்கள் புசித்துக் குடித்தார்கள். 31.அதிகாலையில் எழுந்து ஒருவருக்கொருவர் ஆணையிட்டுக்கொண்டார்கள். பின்பு ஈசாக்கு அவர்களை அனுப்பிவிட்டான்; அவர்கள் அவனிடத்திலிருந்து சமாதானத்தோடே போய்விட்டார்கள். 32.அந்நாளில்தானே ஈசாக்கின் வேலைக்காரர் வந்து, தாங்கள் துரவு வெட்டின செய்தியை அவனுக்கு அறிவித்து, தண்ணீர் கண்டோம் என்றார்கள். 33.அதற்கு சேபா என்று பேரிட்டான்; ஆகையால் அந்த ஊரின் பேர் இந்நாள்வரைக்கும் பெயெர்செபா என்னப்படுகிறது - ஆதியாகமம் 26:25-33
அடுத்ததாக, யூதா தாமாருக்கு வாக்குகொடுத்த வெள்ளாட்டுக்குட்டி இயேசு கிறிஸ்துவையையே குறிக்கிறது, அப்பொழுது தாமார் அந்த வெள்ளாட்டுக்குட்டிக்கு பதிலாக கேட்ட யூதாவின் முத்திரை மோதிரம், ஆரம், கைக்கோல் என மூன்று பொருட்கள் இயேசு கிறிஸ்துவின் திரித்துவத்தை அறிவிக்கிறது, அதன் பின்பு யூதா தான் அடைமானமாக கொடுத்த முத்திரை மோதிரம், ஆரம், கைக்கோல் பெற்றுக்கொண்டான், ஆனால் அவன் வாக்குகொடுத்த வெள்ளாட்டுக்குட்டியை தாமாருக்கு கொடுக்கவில்லை, கடைசியாக தேவனே வெள்ளாட்டுக்குட்டியாக தாமாரின் சந்ததியில் வெளிப்பட்டார் - 15.யூதா அவளைக் கண்டு, அவள் தன் முகத்தை மூடியிருந்தபடியால், அவள் ஒரு வேசி என்று நினைத்து, 16.அந்த வழியாய் அவளிடத்தில் போய், அவள் தன் மருமகள் என்று அறியாமல்: நான் உன்னிடத்தில் சேரும்படி வருவாயா என்றான்; அதற்கு அவள்: நீர் என்னிடத்தில் சேரும்படி, எனக்கு என்ன தருவீர் என்றாள். 17.அதற்கு அவன்: நான் மந்தையிலிருந்து ஒரு வெள்ளாட்டுக்குட்டியை அனுப்புகிறேன் என்றான். அதற்கு அவள்: நீர் அதை அனுப்புமளவும் ஒரு அடைமானம் கொடுப்பீரா என்றாள். 18.அப்பொழுது அவன்: நான் உனக்கு அடைமானமாக என்ன கொடுக்கவேண்டும் என்று கேட்டான். அதற்கு அவள்: உம்முடைய முத்திரை மோதிரமும் உம்முடைய ஆரமும் உம்முடைய கைக்கோலும் கொடுக்கவேண்டும் என்றாள். அவன் அவைகளை அவளுக்குக் கொடுத்து, அவளிடத்தில் சேர்ந்தான்; அவள் அவனாலே கர்ப்பவதியாகி, 19.எழுந்துபோய், தன் முக்காட்டைக் களைந்து, தன் கைம்பெண்மைக்குரிய வஸ்திரங்களை உடுத்திக்கொண்டாள் - ஆதியாகமம் 38:15-19
கர்த்தர் மோசேயிடம், மூன்றாம் நாளில் எல்லா ஜனங்களின் முன்பாகவும் நான் உன்னோடு பேசுவேன், ஜனங்கள் கார்மேகத்திலிருந்து உண்டாகும் சத்ததை கேட்பார்கள் என்றார் - 9.அப்பொழுது கர்த்தர் மோசேயை நோக்கி: நான் உன்னோடே பேசும்போது ஜனங்கள் கேட்டு, உன்னை என்றைக்கும் விசுவாசிக்கும்படி, நான் கார்மேகத்தில் உன்னிடத்திற்கு வருவேன் என்றார். ஜனங்கள் சொன்ன வார்த்தைகளை மோசே கர்த்தருக்குச் சொன்னான். 10.பின்னும் கர்த்தர் மோசேயை நோக்கி: நீ ஜனங்களிடத்தில் போய், இன்றைக்கும் நாளைக்கும் அவர்களைப் பரிசுத்தப்படுத்து; அவர்கள் தங்கள் வஸ்திரங்களைத் தோய்த்து, 11.மூன்றாம் நாளைக்கு ஆயத்தப்பட்டிருக்கக்கடவர்கள்; மூன்றாம் நாளில் கர்த்தர் சகல ஜனங்களுக்கும் பிரத்தியட்சமாகச் சீனாய்மலையின்மேல் இறங்குவார் - யாத்திராகமம் 19:9-11
மூன்றாம் நாளில் கர்த்தர் வந்த பொழுது, கார்மேகம் மாத்திரம் வராமல், அதனோடு இடியும் மின்னல்களும் சேர்ந்து கொண்டன, அது நம் இரட்சகராகிய இயேசு கிறிஸ்து, வார்த்தையானவரின் குமாரனாக மாத்திரம் இல்லாமல், பிதாவானவரின் குமாரனாகவும், பரிசுத்த ஆவியானவரின் குமாரனாகவும் இருக்கிறார் என்கிற இரகசியத்தையே பறைசாற்றுகிறது, மேலும் மேகத்திலிருந்து தான் இடியும் மின்னலும் உண்டாகும், ஆனால் இங்கு முதலாவது இடியும், அதன் பின்பு மின்னலும், அதனை தொடர்ந்து கார்மேகமும் வந்தது, அவைகள் முறையே பிதா, பரிசுத்த ஆவியானவர், மற்றும் வார்த்தையானவரின் தனித்துவத்தை அறிவிக்கிறது - மூன்றாம் நாள் விடியற்காலத்தில் இடிமுழக்கங்களும் மின்னல்களும், மலையின்மேல் கார்மேகமும் மகா பலத்த எக்காளசத்தமும் உண்டாயிற்று; பாளயத்திலிருந்த ஜனங்கள் எல்லாரும் நடுங்கினார்கள் - யாத்திராகமம் 19:16
அதனை தொடர்ந்து, தேவன் ஆசாரிய ஊழியத்திற்கு தெரிந்தெடுக்கப்பட்ட லேவி கோத்திரத்தின் அடையாளமாக, லேவியினுடைய கோலின்மேல் ஆரோனின் பேரை எழுதச் சொன்னார் - 1.பின்பு கர்த்தர் மோசேயை நோக்கி: 2.நீ இஸ்ரவேல் புத்திரரோடே பேசி, அவர்கள் பிதாக்களின் வம்சங்களாகிய ஒவ்வொரு வம்சத்தினுடைய பிரபுவினிடத்தில், ஒவ்வொரு கோலாகப் பன்னிரண்டு கோலை வாங்கி, அவனவன் கோலில் அவனவன் பேரை எழுதுவாயாக. 3.லேவியினுடைய கோலின்மேல் ஆரோனின் பேரை எழுதக்கடவாய்; அவர்களுடைய பிதாக்களின் ஒவ்வொரு வம்சத்தலைவனுக்காகவும் ஒவ்வொரு கோல் இருக்கவேண்டும் - எண்ணாகமம் 17:1-3
ஆனால் இந்த ஆரோன், லேவியின் குமாரனாக மாத்திரம் இல்லாமல், கோகாத்தின் குமாரனாகவும், அம்ராமின் குமாரனாகவும் இருந்தார், அது போலவே, நம் கர்த்தராகிய இயேசு கிறிஸ்து, வார்த்தையானவரின் குமாரனாக மாத்திரம் இல்லாமல், பிதாவானவரின் குமாரனாகவும், பரிசுத்த ஆவியானவரின் குமாரனாகவும் இருக்கிறார் - 16.உற்பத்திக்கிரமப்படி பிறந்த லேவியின் குமாரருடைய நாமங்களாவன, கெர்சோன், கோகாத், மெராரி என்பவைகள். லேவி நூற்று முப்பத்தேழு வருஷம் உயிரோடிருந்தான். 17.அவரவர் வம்சங்களின்படி பிறந்த கெர்சோனின் குமாரர் லிப்னீ, சிமேயீ என்பவர்கள். 18.கோகாத்தின் குமாரர் அம்ராம், இத்சேயார், எப்ரோன், ஊசியேல் என்பவர்கள்; கோகாத் நூற்று முப்பத்து மூன்று வருஷம் உயிரோடிருந்தான். 19.மெராரியின் குமாரர் மகேலி, மூசி என்பவர்கள்; அவரவர் சந்ததியின்படி லேவியினுடைய வம்சங்களின் தலைவர் இவர்களே. 20.அம்ராம் தன் அத்தையாகிய யோகெபேத்தை விவாகம்பண்ணினான்; அவள் அவனுக்கு ஆரோனையும் மோசேயையும் பெற்றாள்; அம்ராம் நூற்று முப்பத்தேழு வருஷம் உயிரோடிருந்தான் - யாத்திராகமம் 6:16-20
உடன்படிக்கைப் பெட்டியும் இயேசு கிறிஸ்துவின் திருத்துவத்தையே விளக்குகிறது, அதனால் தான் அதற்குள் வார்த்தையானவரை குறிக்கும் உடன்படிக்கையின் கற்பலகைகளுடன், பிதாவை குறிக்கும் மன்னா வைக்கப்பட்ட பொற்பாத்திரமும், பரிசுத்த ஆவியானவரை குறிக்கும் ஆரோனுடைய தளிர்த்த கோலும் வைக்கப்பட்டிருந்தன - 1.அன்றியும், முதலாம் உடன்படிக்கையானது ஆராதனைக்கேற்ற முறைமைகளும் பூமிக்குரிய பரிசுத்த ஸ்தலமும் உடையதாயிருந்தது. 2.எப்படியெனில், ஒரு கூடாரம் உண்டாக்கப்பட்டிருந்தது; அதின் முந்தின பாகத்தில் குத்துவிளக்கும், மேஜையும், தேவசமுகத்தப்பங்களும் இருந்தன; அது பரிசுத்த ஸ்தலமென்னப்படும். 3.இரண்டாந் திரைக்குள்ளே மகா பரிசுத்த ஸ்தலமென்னப்பட்ட கூடாரம் இருந்தது. 4.அதிலே பொன்னாற்செய்த தூபகலசமும், முழுவதும் பொற்றகடு பொதிந்திருக்கப்பட்ட உடன்படிக்கைப் பெட்டியும் இருந்தன; அந்தப் பெட்டியிலே மன்னா வைக்கப்பட்ட பொற்பாத்திரமும், ஆரோனுடைய தளிர்த்த கோலும், உடன்படிக்கையின் கற்பலகைகளும் இருந்தன. 5.அதற்கு மேலே மகிமையுள்ள கேருபீன்கள் வைக்கப்பட்டுக் கிருபாசனத்தை நிழலிட்டிருந்தன; இவைகளைக்குறித்து விவரமாய்ப்பேச இப்பொழுது சமயமில்லை - எபிரெயர் 9:1-5
இந்த உடன்படிக்கைப் பெட்டியின் மேல் இரண்டு கேருபீன்கள் இருந்தன, ஏசாயா தீர்க்கதரிசி அவைகளை சேராபீன்கள் என்று அழைத்து, அவைகள் ஒவ்வொன்றும் அவ்வாறு செட்டைகள் உடைவைகளாய் இருந்தன, அதாவது ஒவ்வொரு சேராபீனும் திருத்துவம் உள்ளவர்களாய் இருந்தார்கள் என்று எழுதியுள்ளார் - 1.உசியா ராஜா மரணமடைந்த வருஷத்தில், ஆண்டவர் உயரமும் உன்னதமுமான சிங்காசனத்தின்மேல் வீற்றிருக்கக்கண்டேன்; அவருடைய வஸ்திரத்தொங்கலால் தேவாலயம் நிறைந்திருந்தது. 2.சேராபீன்கள் அவருக்கு மேலாக நின்றார்கள்; அவர்களில் ஒவ்வொருவனுக்கும் அவ்வாறு செட்டைகளிருந்தன; அவனவன் இரண்டு செட்டைகளால் தன் தன் முகத்தை மூடி, இரண்டு செட்டைகளால் தன் தன் கால்களை மூடி, இரண்டு செட்டைகளால் பறந்து - ஏசாயா 6:1-2
இதில் ஆறு செட்டைகளுடன் இருந்த முதல் கேருபீன், பிதாவாகிய தேவனை குறிக்கிறது, இதை தான் அப்போஸ்தலனாகிய யோவான், அதரிசனமான தேவன் பரலோகத்தில் பிதா, வார்த்தை, பரிசுத்த ஆவி என்ற மூன்று நபர்களாக இருப்பதாகவும், அதே சமயத்தில் அவர்கள் மூன்று பேரும் பிரிக்க முடியாத ஒரே தேவனாகவும் என்று குறிப்பிட்டுள்ளார் - பரலோகத்திலே சாட்சியிடுகிறவர்கள் மூவர், பிதா, வார்த்தை, பரிசுத்த ஆவி என்பவர்களே, இம்மூவரும் ஒன்றாயிருக்கிறார்கள் - I யோவான் 5:7
ஆறு செட்டைகளுடன் இருந்த அடுத்த கேருபீனோ, நம் இரட்சகராகிய இயேசு கிறிஸ்துவின் திருத்துவத்தை குறிக்கிறது, இதை தான் அப்போஸ்தலனாகிய யோவான், பிதாவானவரின் குமாரன்[இரத்தம்], வார்த்தையானவரின் குமாரன்[ஜலம்], பரிசுத்த ஆவியானவரின் குமாரன்[ஆவி] என மூன்று பேரும் ஒருமைப்பட்டிருக்கிறார்கள், அவரே தேவகுமாரனாகிய இயேசு கிறிஸ்து என்று குறிப்பிட்டுள்ளார் - பூலோகத்திலே சாட்சியிடுகிறவைகள் மூன்று, ஆவி, ஜலம், இரத்தம் என்பவைகளே, இம்மூன்றும் ஒருமைப்பட்டிருக்கிறது - I யோவான் 5:8
இன்னொரு இடத்தில் தானே, ஏசாயா தீர்க்கதரிசி நம் இரட்சகராகிய இயேசு கிறிஸ்துவை "ஒருவன், ஒருவன், ஒருவன்" என்று அழைத்துள்ளார், எப்படியெனில் நம் கர்த்தராகிய இயேசு கிறிஸ்து வார்த்தையின் தற்சுரூபமாக மாத்திரம் இல்லாமல், பிதாவானவரின் தற்சுரூபமாகவும், பரிசுத்த ஆவியானவரின் தற்சுரூபமாகவும் இருக்கிறார் என்பதை இவ்வாறு எழுதியுள்ளார் - 5.ஒருவன், நான் கர்த்தருடையவன் என்பான்; ஒருவன், யாக்கோபின்பேரைத் தரித்துக்கொள்வான்; ஒருவன், தான் கர்த்தருடையவன் என்று கையெழுத்துப்போட்டு, இஸ்ரவேலின் நாமத்தைத் தரித்துக்கொள்வான். 6.நான் முந்தினவரும், நான் பிந்தினவருந்தானே; என்னைத்தவிர தேவன் இல்லையென்று, இஸ்ரவேலின் ராஜாவாகிய கர்த்தரும், சேனைகளின் கர்த்தராகிய அவனுடைய மீட்பரும் சொல்லுகிறார் - ஏசாயா 44:5-6
மோசே கானான்தேசத்தைச் சுற்றிப்பார்க்கும்படி அனுப்பிய இஸ்ரவேல் புத்திரர், அங்கேயிருந்து ஒரே குலையுள்ள ஒரு திராட்சக்கொடியையும், அதனோடு மாதளம் மற்றும் அத்திப்பழங்களையும் கொண்டுவந்தார்கள், இது நம் கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவின் திருத்துவதை வெளிப்படுத்துவதாகவே இருக்கிறது, எப்படியெனில் நம் கர்த்தராகிய இயேசு கிறிஸ்து, வார்த்தையானவரின் குமாரனாக மாத்திரம் இல்லாமல், பிதாவானவரின் குமாரனாகவும், பரிசுத்த ஆவியானவரின் குமாரனாகவும் இருக்கிறார் என்பதை அறிவிக்கிறது - 17.அவர்களை மோசே கானான்தேசத்தைச் சுற்றிப்பார்க்கும்படி அனுப்புகையில், அவர்களை நோக்கி: நீங்கள் இப்படித் தெற்கே போய், மலையில் ஏறி, 18.தேசம் எப்படிப்பட்டதென்றும், அங்கே குடியிருக்கிற ஜனங்கள் பலவான்களோ பலவீனர்களோ, கொஞ்சம்பேரோ அநேகம்பேரோ என்றும், 19.அவர்கள் குடியிருக்கிற தேசம் எப்படிப்பட்டது, அது நல்லதோ கெட்டதோ என்றும், அவர்கள் பட்டணங்கள் எப்படிப்பட்டதென்றும், அவர்கள் கூடாரங்களில் குடியிருக்கிறவர்களோ கோட்டைகளில் குடியிருக்கிறவர்களோ என்றும், 20.நிலம் எப்படிப்பட்டது, அது வளப்பமானதோ இளப்பமானதோ என்றும், அதில் விருட்சங்கள் உண்டோ இல்லையோ என்றும் பாருங்கள்; தைரியங்கொண்டிருந்து, தேசத்தின் கனிகளிலே சிலவற்றைக் கொண்டுவாருங்கள் என்றான். அக்காலம் திராட்சச்செடி முதற்பழம் பழுக்கிற காலமாயிருந்தது. 21.அவர்கள் போய், சீன் வனாந்தரந்தொடங்கி, ஆமாத்துக்குப் போகிற வழியாகிய ரேகொப்மட்டும், தேசத்தைச் சுற்றிப்பார்த்து, 22.தெற்கேயும் சென்று, எபிரோன்மட்டும் போனார்கள்; அங்கே ஏனாக்கின் குமாரராகிய அகீமானும் சேசாயும் தல்மாயும் இருந்தார்கள். எபிரோன் எகிப்திலுள்ள சோவானுக்கு ஏழுவருஷத்திற்குமுன்னே கட்டப்பட்டது. 23.பின்பு, அவர்கள் எஸ்கோல் பள்ளத்தாக்குமட்டும் போய், அங்கே ஒரே குலையுள்ள ஒரு திராட்சக்கொடியை அறுத்தார்கள்; அதை ஒரு தடியிலே இரண்டுபேர் கட்டித் தூக்கிக்கொண்டுவந்தார்கள்: மாதளம்பழங்களிலும் அத்திப்பழங்களிலும் சிலவற்றைக் கொண்டுவந்தார்கள். 24.இஸ்ரவேல் புத்திரர் அங்கே அறுத்த திராட்சக்குலையினிமித்தம், அவ்விடம் எஸ்கோல் பள்ளத்தாக்கு என்னப்பட்டது - எண்ணாகமம் 13:17-24
இப்படி இஸ்ரவேல் புத்திரர் ஒரே குலையுள்ள ஒரு திராட்சையையும், அதனோடு மாதளம் மற்றும் அத்திப்பழங்களையும் கொண்டு வந்த பொழுது, வார்த்தையானவர் மாம்சத்தில் வெளிப்பட போவதை அறிவிக்க "நல் வார்த்தையை" கொண்டு வந்தார்கள் என்று எபிரேய பாஷையில் எழுதப்பட்டுள்ளது - 25.அவர்கள் தேசத்தைச் சுற்றிப்பார்த்து, நாற்பதுநாள் சென்றபின்பு திரும்பினார்கள். 26.அவர்கள் பாரான் வனாந்தரத்தில் இருக்கிற காதேசுக்கு வந்து, மோசே ஆரோன் என்பவர்களிடத்திலும் இஸ்ரவேல் புத்திரராகிய சபையார் எல்லாரிடத்திலும் சேர்ந்து, அவர்களுக்கும் சபையார் அனைவருக்கும் சமாசாரத்தை அறிவித்து [brought back WORD], தேசத்தின் கனிகளை அவர்களுக்குக் காண்பித்தார்கள். 27.அவர்கள் மோசேயை நோக்கி: நீர் எங்களை அனுப்பின தேசத்துக்கு நாங்கள் போய்வந்தோம்; அது பாலும் தேனும் ஓடுகிற தேசந்தான்; இது அதினுடைய கனி - எண்ணாகமம் 13:25-27
மேலும், சாமுவேல் சவுலிடம் "மூன்று மனுஷரை" குறித்து ஏன் பேசினார்? பெத்லகேம் ஊரானாகிய தாவீதின் சந்ததியில் பிறக்க போகும் இரட்சகரை குறித்து அல்லவா பேசினார்? அவர் வார்த்தையானவரின் குமாரனாக மாத்திரம் இல்லாமல், பிதாவானவரின் குமாரனாகவும், பரிசுத்த ஆவியானவரின் குமாரனாகவும் இருக்க போகிறார் என்பதை அறிவிக்க தானே மூன்று மனுஷர் என்று சொன்னார் - 1.அப்பொழுது சாமுவேல் தைலக்குப்பியை எடுத்து, அவன் தலையின்மேல் வார்த்து, அவனை முத்தஞ்செய்து: கர்த்தர் உன்னைத் தம்முடைய சுதந்தரத்தின்மேல் தலைவனாக அபிஷேகம்பண்ணினார் அல்லவா? 2.நீ இன்றைக்கு என்னைவிட்டுப் போகிறபோது, பென்யமீன் எல்லையாகிய செல்சாகில் ராகேலின் கல்லறையண்டையில் இரண்டு மனுஷரைக் காண்பாய்; அவர்கள் உன்னைப் பார்த்து: நீ தேடப்போன கழுதைகள் அகப்பட்டது; இதோ, உன் தகப்பன் கழுதைகளின்மேலிருந்த கவலையை விட்டு, உங்களுக்காக விசாரப்பட்டு, என் மகனுக்காக என்னசெய்வேன்? என்கிறான் என்று சொல்லுவார்கள். 3.நீ அவ்விடத்தை விட்டு அப்புறம் கடந்துபோய், தாபோரிலுள்ள சமபூமியில் சேரும்போது, தேவனைப் பணியும்படி பெத்தேலுக்குப் போகிற மூன்று மனுஷர் அங்கே உன்னைக் கண்டு சந்திப்பார்கள்; ஒருவன் மூன்று ஆட்டுக்குட்டிகளையும், இன்னொருவன் மூன்று அப்பங்களையும், வேறொருவன் திராட்சரசமுள்ள ஒரு துருத்தியையும் கொண்டுவந்து, 4.உன்னுடைய சுகசெய்தியை விசாரித்து, உனக்கு இரண்டு அப்பங்களைக் கொடுப்பார்கள்; அவைகளை நீ அவர்கள் கையிலே வாங்கவேண்டும் - I சாமுவேல் 10:3-4
ஆனால் வாக்குத்தத்தம் பண்ணப்பட்ட இயேசு கிறிஸ்துவை வரவேற்பதற்கு பதிலாக, அதை தடுக்க அல்லவா சவுல் பிரயாசப்பட்டான், அது எவ்வளவு தவறு என்பதை தன்னுடைய மூன்று குமாரரை இழந்த போது தானே புரிந்துக் கொண்டான், அப்பொழுது தானே இயேசு கிறிஸ்துவின் மரணம் பிதாவாகிய தேவனுக்கு எப்படி வேதனை அளிக்கும் என்பதை புரிந்துக் கொண்டான், அது தானே "என் மகனுக்காக என்னசெய்வேன்" என்கிற புலம்பல் - 1.பெலிஸ்தர் இஸ்ரவேலரோடே யுத்தம்பண்ணினார்கள்; இஸ்ரவேலர் பெலிஸ்தருக்கு முன்பாக முறிந்தோடி, கில்போவா மலையிலே வெட்டுண்டு விழுந்தார்கள். 2.பெலிஸ்தர் சவுலையும் அவன் குமாரரையும் நெருங்கித் தொடர்ந்து, சவுலின் குமாரராகிய யோனத்தானையும் அபினதாபையும் மல்கிசூகாவையும் வெட்டிப்போட்டார்கள். 3.சவுலுக்கு விரோதமாய் யுத்தம் பலத்தது; வில்வீரர் அவனைக் கண்டு நெருங்கினார்கள்; அப்பொழுது சவுல் வில்வீரரால் மிகவும் காயப்பட்டு, 4.தன் ஆயுததாரியை நோக்கி: அந்த விருத்தசேதனம் இல்லாதவர்கள் வந்து, என்னைக் குத்திப்போட்டு, என்னை அவமானப்படுத்தாதபடிக்கு, நீ உன் பட்டயத்தை உருவி, என்னைக் குத்திப்போடு என்றான்; அவனுடைய ஆயுததாரி மிகவும் பயப்பட்டதினால், அப்படிச் செய்யமாட்டேன் என்றான்; அப்பொழுது சவுல் பட்டயத்தை நட்டு அதின்மேல் விழுந்தான் - I சாமுவேல் 31:1-4
எசேக்கியா ராஜாவின் நாட்களில், அசீரியர்கள் எருசலேமை முற்றிகை போட்ட பொழுது எலியாக்கீம், செப்னா, யோவாக் என்னும் மூன்று பேர் எருசலேமுக்குகாக பரிந்து பேசினார்கள், அவர்கள் இயேசு கிறிஸ்துவின் திருத்துவத்தை முன்னறிவிக்கும் பாத்திரங்களாகவே இருந்தார்கள் - 13.யூதாவின் ராஜாவாகிய எசேக்கியாவின் பதினாலாம் வருஷத்திலே அசீரியா ராஜாவாகிய சனகெரிப் யூதாவிலிருக்கிற அரணான சகல பட்டணங்களுக்கும் விரோதமாய் வந்து அவைகளைப் பிடித்தான். 14.அப்பொழுது யூதாவின் ராஜாவாகிய எசேக்கியா லாகீசிலுள்ள அசீரியா ராஜாவுக்கு ஆள் அனுப்பி: நான் குற்றஞ்செய்தேன்; என்னைவிட்டுத் திரும்பிப்போம்; நீர் என்மேல் சுமத்துவதைச் சுமப்பேன் என்று சொன்னான்; அப்படியே அசீரியா ராஜா யூதாவின் ராஜாவாகிய எசேக்கியாவின்மேல் முந்நூறு தாலந்து வெள்ளியையும் முப்பது தாலந்து பொன்னையும் சுமத்தினான். 15.ஆதலால் எசேக்கியா கர்த்தரின் ஆலயத்திலும் ராஜாவுடைய அரமனை பொக்கிஷங்களிலும் அகப்பட்ட எல்லா வெள்ளியையும் கொடுத்தான். 16.அக்காலத்திலே யூதாவின் ராஜாவாகிய எசேக்கியா கர்த்தருடைய ஆலயக்கதவுகளிலும் நிலைகளிலும் தான் அழுத்தியிருந்த பொன் தகடுகளைக் கழற்றி அவைகளை அசீரியா ராஜாவுக்குக் கொடுத்தான். 17.ஆகிலும் அசீரியா ராஜா லாகீசிலிருந்து தர்தானையும் ரப்சாரீசையும் ரப்சாக்கேயையும் பெரிய சேனையோடே எருசலேமுக்கு எசேக்கியா ராஜாவினிடத்தில் அனுப்பினான்; அவர்கள் எருசலேமுக்கு வந்து, வண்ணார் துறையின் வழியிலுள்ள மேல்குளத்துச் சாலகத்தண்டையிலே நின்று, 18.ராஜாவை அழைப்பித்தார்கள்; அப்பொழுது இல்க்கியாவின் குமாரனாகிய எலியாக்கீம் என்னும் அரமனை விசாரிப்புக்காரனும், செப்னா என்னும் சம்பிரதியும், ஆசாப்பின் குமாரனாகிய யோவாக் என்னும் கணக்கனும் அவர்களிடத்திற்குப் புறப்பட்டுப்போனார்கள். 19.ரப்சாக்கே அவர்களை நோக்கி: அசீரியா ராஜாவாகிய மகா ராஜாவானவர் உரைக்கிறதும், நீங்கள் எசேக்கியாவுக்குச் சொல்லவேண்டியதும் என்னவென்றால்: நீ நம்பியிருக்கிற இந்த நம்பிக்கை என்ன? - II இராஜாக்கள் 18:13-19
மேலும் எசாயா தீர்க்கதரிசியிடம் காரியத்தைச் சொல்லவும் மூன்று பேர்களே அனுப்பப்பட்டார்கள், இவர்களும் நம் இரட்சகராகிய இயேசு கிறிஸ்துவின் திருத்துவத்தை முன்னறிவிக்கும் பாத்திரங்களாகவே இருந்தார்கள் - 1.ராஜாவாகிய எசேக்கியா அதைக் கேட்டபோது, தன் வஸ்திரங்களைக் கிழித்து, இரட்டு உடுத்திக்கொண்டு, கர்த்தருடைய ஆலயத்தில் பிரவேசித்து, 2.அரமனை விசாரிப்புக்காரனாகிய எலியாக்கீமையும், சம்பிரதியாகிய செப்னாவையும், ஆசாரியர்களின் மூப்பரையும், ஆமோத்தின் குமாரனாகிய ஏசாயா என்னும் தீர்க்கதரிசியினிடத்துக்கு இரட்டு உடுத்திக்கொண்டவர்களாக அனுப்பினான். 3.இவர்கள் அவனை நோக்கி: இந்த நாள் நெருக்கமும் கண்டிதமும் தூஷணமும் அநுபவிக்கிற நாள்; பிள்ளைபேறு நோக்கியிருக்கிறது, பெறவோ பெலனில்லை. 4.ஜீவனுள்ள தேவனை நிந்திக்கும்படி அசீரியா ராஜாவாகிய தன் ஆண்டவனால் அனுப்பப்பட்ட ரப்சாக்கே சொன்ன வார்த்தைகளையெல்லாம் உமது தேவனாகிய கர்த்தர் கேட்டிருக்கிறார்; உமது தேவனாகிய கர்த்தர் கேட்டிருக்கிற வார்த்தைகளினிமித்தம் தண்டனை செய்வார்; ஆகையால் இன்னும் மீதியாயிருக்கிறவர்களுக்காக விண்ணப்பஞ்செய்வீராக என்று எசேக்கியா சொல்லச்சொன்னார் என்றார்கள். 5.இவ்விதமாய் எசேக்கியா ராஜாவின் ஊழியக்காரர் ஏசாயாவினிடத்தில் வந்து சொன்னார்கள் - II இராஜாக்கள் 19:1-5
யோவேல் தன் தீர்க்கதரிசனத்தில் கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவை குறித்து சொல்லும் பொழுது இரத்தம், அக்கினி, புகைஸ்தம்பம் என்று குறிப்பிட்டு இயேசு கிறிஸ்துவின் திரித்துவத்தை விளக்கியுள்ளார் - 30.வானத்திலும் பூமியிலும் இரத்தம் அக்கினி புகைஸ்தம்பங்களாகிய அதிசயங்களைக் காட்டுவேன். 31.கர்த்தருடைய பெரிதும் பயங்கரமுமான நாள் வருமுன்னே சூரியன் இருளாகவும், சந்திரன் இரத்தமாகவும் மாறும். 31.அப்பொழுது கர்த்தருடைய நாமத்தைத் தொழுதுகொள்ளுகிறவனெவனோ அவன் இரட்சிக்கப்படுவான்; கர்த்தர் சொன்னபடி, சீயோன் பர்வதத்திலும் எருசலேமிலும் கர்த்தர் வரவழைக்கும் மீதியாயிருப்பவர்களிடத்திலும் இரட்சிப்பு உண்டாயிருக்கும் - யோவேல் 2:30-32
அப்போஸ்தலனாகிய பேதுரு தனது முதல் பிரசங்கத்திலேயே யோவேலின் தீர்க்கதரிசனத்தை நினைவு கூர்ந்து இயேசு கிறிஸ்துவின் திரித்துவத்தை இப்படி எழுதியுள்ளார் - 16.தீர்க்கதரிசியாகிய யோவேலினால் உரைக்கப்பட்டபடியே இது நடந்தேறுகிறது. 17.கடைசிநாட்களில் நான் மாம்சமான யாவர்மேலும் என் ஆவியை ஊற்றுவேன், அப்பொழுது உங்கள் குமாரரும் உங்கள் குமாரத்திகளும் தீர்க்கதரிசனஞ்சொல்லுவார்கள்; உங்கள் வாலிபர் தரிசனங்களை அடைவார்கள்; உங்கள் மூப்பர் சொப்பனங்களைக் காண்பார்கள்; 18.என்னுடைய ஊழியக்காரர்மேலும், என்னுடைய ஊழியக்காரிகள்மேலும் அந்நாட்களில் என் ஆவியை ஊற்றுவேன், அப்பொழுது அவர்கள் தீர்க்கதரிசனஞ் சொல்லுவார்கள். 19.அல்லாமலும் உயர வானத்திலே அற்புதங்களையும், தாழ பூமியிலே இரத்தம், அக்கினி, புகைக்காடாகிய அதிசயங்களையும் காட்டுவேன். 20.கர்த்தருடைய பெரிதும் பிரகாசமுமான நாள் வருமுன்னே சூரியன் இருளாகவும், சந்திரன் இரத்தமாகவும் மாறும். 21.அப்பொழுது கர்த்தருடைய நாமத்தைத் தொழுதுகொள்ளுகிறவனெவனோ அவன் இரட்சிக்கப்படுவான் என்று தேவன் உரைத்திருக்கிறார் - அப்போஸ்தலர் 2:16-21
மல்கியாவின் தீர்க்கதரிசனத்தோடு முடியும் பழைய ஏற்பாடு, கர்த்தரின் வருகையையும் யோவான்ஸ்நானன் ஊழியத்தை குறித்தும் இவ்வாறு சொல்கிறது - 5.இதோ, கர்த்தருடைய பெரிதும் பயங்கரமுமான நாள் வருகிறதற்குமுன்னே நான் உங்களிடத்திற்கு எலியா தீர்க்கதரிசியை அனுப்புகிறேன். 6.நான் வந்து பூமியைச் சங்காரத்தால் அடிக்காதபடிக்கு, அவன் பிதாக்களுடைய இருதயத்தைப் பிள்ளைகளிடத்திற்கும், பிள்ளைகளுடைய இருதயத்தை அவர்கள் பிதாக்களிடத்திற்கும் திருப்புவான் - மல்கியா 4:5-6
இதில் யோவான்ஸ்நானை குறித்துச் சொல்லப்பட்ட "பிதாக்களுடைய இருதயத்தைப் பிள்ளைகளிடத்திற்கும், பிள்ளைகளுடைய இருதயத்தை அவர்கள் பிதாக்களிடத்திற்கும் திருப்புவான்" என்பதின் அர்த்தத்தை பரலோகமே விளக்கிச் சொல்லியிருக்கிறது என்றால் அது எவ்வளவு பெரிய பாக்கியம் - 13.தூதன் அவனை நோக்கி: சகரியாவே, பயப்படாதே, உன் வேண்டுதல் கேட்கப்பட்டது; உன் மனைவியாகிய எலிசபெத்து உனக்கு ஒரு குமாரனைப் பெறுவாள், அவனுக்கு யோவான் என்று பேரிடுவாயாக. 14.உனக்குச் சந்தோஷமும் மகிழ்ச்சியும் உண்டாகும், அவன் பிறப்பினிமித்தம் அநேகர் சந்தோஷப்படுவார்கள். 15.அவன் கர்த்தருக்கு முன்பாகப் பெரியவனாயிருப்பான், திராட்சரசமும் மதுவும் குடியான், தன் தாயின் வயிற்றிலிருக்கும்போதே பரிசுத்த ஆவியினால் நிரப்பப்பட்டிருப்பான். 16.அவன் இஸ்ரவேல் சந்ததியாரில் அநேகரை அவர்கள் தேவனாகிய கர்த்தரிடத்திற்குத் திருப்புவான். 17.பிதாக்களுடைய இருதயங்களைப் பிள்ளைகளிடத்திற்கும், கீழ்ப்படியாதவர்களை நீதிமான்களுடைய ஞானத்திற்கும் திருப்பி, உத்தமமான ஜனத்தைக் கர்த்தருக்கு ஆயத்தப்படுத்தும்படியாக, அவன் எலியாவின் ஆவியும் பலமும் உடையவனாய் அவருக்கு முன்னே நடப்பான் என்றான் - லூக்கா 1:13-17
இதில் பிள்ளைகள் என்பது பாவிகளாயிருந்தவர்களையும், பிதாக்கள் என்பது இயேசு கிறிஸ்துவையும் குறிக்கிறது, இந்த தீர்க்கதரிசனத்தில் மல்கியா ஏன் இயேசு கிறிஸ்துவை பிதாக்கள் என்று பண்மையில் குறிப்பிட்டார், ஏனென்றால் நம் கர்த்தராகிய இயேசு கிறிஸ்து திரியேக தேவனின் (பிதா, வார்த்தை, பரிசுத்த ஆவி) தற்சுரூபமாக இருப்பதினால் தான்.
அடுத்த பாகம்: பலிபீடம், தேவாலயம், மற்றும் சிங்காசனம்