யோவான் புஸ்தகத்தில், நிலத்தில் புதைந்திருக்கிற பொக்கிஷத்தை போல, உவமைகள் மூலமாக சொல்லப்பட்டிருந்த பரலோகத்தின் தேவனின் கனிந்த இருதயத்தை பார்த்தோம், இப்பொழுது மத்தேயு, மாற்கு புஸ்தகத்தில் பரலோகத்தின் தேவனை குறித்து சொல்லப்பட்ட காரியங்களை பார்ப்போம்.
நம் இரட்சகராகிய இயேசு கிறிஸ்துவின் சிலுவை பாடுகளையும் உயிர்தெழுதலையும் குறித்து சொன்ன மாற்கு, ஒரு விஷயத்தை நிச்சயப்படுத்திருக்கிறார், அது என்னவென்றால், மரணத்தை வென்ற கர்த்தர் முதன் முதலாக மகதலேனா மரியாளுக்கு தரிசனம் ஆனார் என்பதாகும் - 9.வாரத்தின் முதலாம்நாள் அதிகாலையிலே இயேசு எழுந்திருந்தபின்பு, மகதலேனா மரியாளுக்கு முதல்முதல் தரிசனமானார். 10.அவளிடத்திலிருந்து அவர் ஏழு பிசாசுகளைத் துரத்தியிருந்தார். அவள் புறப்பட்டு, அவரோடேகூட இருந்தவர்கள் துக்கப்பட்டு அழுதுகொண்டிருக்கையில், அவர்களிடத்தில் போய், அந்தச் செய்தியை அறிவித்தாள். 11.அவர் உயிரோடிருக்கிறாரென்றும் அவளுக்குக் காணப்பட்டார் என்றும் அவர்கள் கேட்டபொழுது நம்பவில்லை - மாற்கு 16:9-11
அப்படியென்றால், மகதலேனா மரியாளுக்கு துணையாக சென்றது யார்? - 1.ஓய்வுநாளானபின்பு மகதலேனா மரியாளும், யாக்கோபின் தாயாகிய மரியாளும், சலோமே என்பவளும், அவருக்குச் சுகந்தவர்க்கமிடும்படி அவைகளை வாங்கிக்கொண்டு, 2.வாரத்தின் முதலாம்நாள் அதிகாலையிலே சூரியன் உதயமாகிறபோது கல்லறையினிடத்தில் வந்து, 3.கல்லறையின் வாசலிலிருக்கிற கல்லை நமக்காக எவன் புரட்டித்தள்ளுவான் என்று ஒருவரோடொருவர் சொல்லிக்கொண்டார்கள் - மாற்கு 16:1-3
மகதலேனா மரியாளுடன் சென்றவரை "மற்ற மரியாள்" என்று மத்தேயு அடையாளம் காட்டுகிறார், ஏனென்றால் "மரியாள்" என்று சொல்லும்போது நம் மனதில் முதலில் வருவது இயேசு கிறிஸ்துவின் பூமிக்குரிய தாய், ஆனால் "மற்ற மரியாள்" என்பது கிறிஸ்துவின் பரலோகத் தாயை[பரலோகத்தின் தேவனை] குறிக்கிறது, அவரே தன்னுடைய குமாரன் மரணத்தை வென்ற சந்தோஷத்தை பகிர்ந்து கொள்ள மகதலேனா மரியாளை அழைத்துச் சென்றார் - 1.ஓய்வுநாள் முடிந்து, வாரத்தின் முதலாம் நாள் விடிந்துவருகையில், மகதலேனா மரியாளும் மற்ற மரியாளும் கல்லறையைப் பார்க்க வந்தார்கள். 2.அப்பொழுது, பூமி மிகவும் அதிரும்படி, கர்த்தருடைய தூதன் வானத்திலிருந்திறங்கி வந்து, வாசலிலிருந்த கல்லைப் புரட்டித் தள்ளி, அதின்மேல் உட்கார்ந்தான். 3.அவனுடைய ரூபம் மின்னல் போலவும், அவனுடைய வஸ்திரம் உறைந்த மழையைப்போல வெண்மையாகவும் இருந்தது - மத்தேயு 28:1-3
இயேசு கிறிஸ்து சிலுவையில் அறையப்பட்ட நேரத்தில் மற்ற மரியாள்[பரலோகத்தின் தேவன்] அங்கே இருந்ததாகவும், அது மாத்திரம் இல்லாமல், அவர் தனது ஒரே பேறான மகனின் கல்லறைக்கு எதிரே அமர்ந்திருந்ததாகவும் மத்தேயு குறிப்பிட்டார், மத்தேயு அவரை "யாக்கோபுக்கும் யோசேக்கும் தாயாகிய மரியாள்" என்றும் குறிப்பிட்டுள்ளார் - 54.நூற்றுக்கு அதிபதியும், அவனோடேகூட இயேசுவைக் காவல் காத்திருந்தவர்களும், பூமியதிர்ச்சியையும் சம்பவித்த காரியங்களையும் கண்டு, மிகவும் பயந்து: மெய்யாகவே இவர் தேவனுடைய குமாரன் என்றார்கள். 55.மேலும், இயேசுவுக்கு ஊழியஞ்செய்யும்படி கலிலேயாவிலிருந்து அவரோடே வந்திருந்த அநேக ஸ்திரீகள் அங்கே தூரத்திலே நின்று பார்த்துக்கொண்டிருந்தார்கள். 56.அவர்களுக்குள்ளே மகதலேனா மரியாளும், யாக்கோபுக்கும் யோசேக்கும் தாயாகிய மரியாளும், செபெதேயுவின் குமாரருடைய தாயும் இருந்தார்கள். 57.சாயங்காலமானபோது, இயேசுவுக்குச் சீஷனும் ஐசுவரியவானுமாயிருந்த யோசேப்பு என்னும் பேர்கொண்ட அரிமத்தியா ஊரானாகிய ஒரு மனுஷன் வந்து, 58.பிலாத்துவினிடத்தில் போய், இயேசுவின் சரீரத்தைக் கேட்டான். அப்பொழுது, சரீரத்தைக்கொடுக்கும்படி பிலாத்து கட்டளையிட்டான். 59.யோசேப்பு அந்தச் சரீரத்தை எடுத்து, துய்யதான மெல்லிய துப்பட்டியிலே சுற்றி, 60.தான் கன்மலையில் வெட்டியிருந்த தன்னுடைய புதிய கல்லறையிலே அதை வைத்து, கல்லறையின் வாசலில் ஒரு பெரிய கல்லைப் புரட்டிவைத்துப்போனான். 61.அங்கே மகதலேனா மரியாளும், மற்ற மரியாளும் கல்லறைக்கு எதிராக உட்கார்ந்திருந்தார்கள் - மத்தேயு 27:54-61
மாற்கு மற்ற மரியாளை[பரலோகத்தின் தேவனை], சின்ன யாக்கோபுக்கும் யோசேக்கும் தாயாகிய மரியாள் என்றும் குறிப்பிட்டுள்ளார் - 37.இயேசு மகா சத்தமாய்க் கூப்பிட்டு ஜீவனை விட்டார். 38.அப்பொழுது, தேவாலயத்தின் திரைச்சீலை மேல்தொடங்கிக் கீழ்வரைக்கும் இரண்டாகக் கிழிந்தது. 39.அவருக்கு எதிரே நின்ற நூற்றுக்கு அதிபதி அவர் இப்படிக் கூப்பிட்டு ஜீவனை விட்டதைக் கண்டபோது: மெய்யாகவே இந்த மனுஷன் தேவனுடைய குமாரன் என்றான். 40.சில ஸ்திரீகளும் தூரத்திலிருந்து பார்த்துக்கொண்டிருந்தார்கள். அவர் கலிலேயாவிலிருந்தபோது அவருக்குப் பின்சென்று ஊழியஞ்செய்துவந்த மகதலேனா மரியாளும், சின்ன யாக்கோபுக்கும் யோசேக்கும் தாயாகிய மரியாளும், சலோமே என்பவளும், 41.அவருடனேகூட எருசலேமுக்கு வந்திருந்த வேறே அநேக ஸ்திரீகளும் அவர்களோடே இருந்தார்கள். 42.ஓய்வுநாளுக்கு முந்தினநாள் ஆயத்தநாளாயிருந்தபடியால், சாயங்காலமானபோது, 43.கனம்பொருந்திய ஆலோசனைக்காரனும் அரிமத்தியா ஊரானும் தேவனுடைய ராஜ்யம் வரக் காத்திருந்தவனுமாகிய யோசேப்பு என்பவன் வந்து, பிலாத்துவினிடத்தில் துணிந்துபோய், இயேசுவின் சரீரத்தைக் கேட்டான். 44.அவர் இத்தனை சீக்கிரத்தில் மரித்துப்போனாரா என்று பிலாத்து ஆச்சரியப்பட்டு, நூற்றுக்கு அதிபதியை அழைப்பித்து: அவர் இதற்குள்ளே மரித்தது நிச்சயமா என்று கேட்டான். 45.நூற்றுக்கு அதிபதியினாலே அதை அறிந்துகொண்டபின்பு, சரீரத்தை யோசேப்பினிடத்தில் கொடுத்தான். 46.அவன் போய், மெல்லிய துப்பட்டியை வாங்கிக்கொண்டுவந்து, அவரை இறக்கி, அந்தத் துப்பட்டியிலே சுற்றி, கன்மலையில் வெட்டியிருந்த கல்லறையிலே அவரை வைத்து, கல்லறையின் வாசலில் ஒரு கல்லைப் புரட்டிவைத்தான். 47.அவரை வைத்த இடத்தை மகதலேனா மரியாளும், யோசேயின் தாயாகிய மரியாளும் பார்த்தார்கள். - மாற்கு 15:37-47
மத்தேயு பரலோகத்தின் தேவனை வெவ்வேறு பெயர்களால் அழைத்த விதத்திற்குப் பின்னால் பல ரகசியங்கள் மறைந்துள்ளன.
யாக்கோபுக்கும் யோசேக்கும் தாயாகிய மரியாளும், செபெதேயுவின் குமாரருடைய தாயுமாக [சிலுவையின் அருகே நின்றபோது]
மற்ற மரியாள் [கிறிஸ்துவின் கல்லறைக்கு முன்பாக அவர் அமர்ந்திருந்தபோது]
மற்ற மரியாள் [உயிர்த்தெழுப்பப்பட்ட ராஜாவைப் பார்க்கச் செல்லும்போது]
தேவதூதர், இயேசு [உயிர்த்தெழுதலுக்குப் பிறகு]
அதேபோல், மாற்குவும் பரலோகத்தின் தேவனை வெவ்வேறு பெயர்களால் குறிப்பிட்டுள்ளார்.
சின்ன யாக்கோபுக்கும் யோசேக்கும் தாயாகிய மரியாளும், சலோமே [சிலுவையின் அருகில் நின்றபோது]
யோசேயின் தாயாகிய மரியாள் [கிறிஸ்துவின் கல்லறையைப் பார்த்துக் கொண்டிருந்தபோது]
யாக்கோபின் தாயார் மரியாள், சலோமே [உயிர்த்தெழுந்த ராஜாவைப் பார்க்கப் போகும்போது]
இயேசு [உயிர்த்தெழுதலுக்குப் பிறகு]
தொடர்ந்து படிக்க நமக்கு விரோதமாயிராதவன்
முந்தைய பாகத்தை படிக்க ஸ்திரீயே, அதோ, உன் மகன்