கர்த்தர், யோவானைக்குறித்து ஜனங்களுக்கு இப்படியாகச் சொன்னதின் நோக்கம் என்ன? 24.யோவானுடைய தூதர்கள் போனபின்பு அவர் யோவானைக்குறித்து ஜனங்களுக்குச் சொன்னது என்னவென்றால்: எதைப்பார்க்க வனாந்தரத்திற்குப் போனீர்கள்? காற்றினால் அசையும் நாணலையோ? 25.அல்லவென்றால், எதைப்பார்க்கப் போனீர்கள்? மெல்லிய வஸ்திரந்தரித்த மனுஷனையோ? அலங்கார வஸ்திரந்தரித்துச் செல்வமாய் வாழ்கிறவர்கள் அரசர் மாளிகைகளிலே இருக்கிறார்கள். 26.அல்லவென்றால், எதைப்பார்க்கப் போனீர்கள்? தீர்க்கதரிசியையோ? ஆம், தீர்க்கதரிசியைப் பார்க்கிலும் மேன்மையுள்ளவனையே என்று உங்களுக்குச் சொல்லுகிறேன் - லூக்கா 7:24-26
அது யோவானை மகிமைப்படுத்தவா என்றால், அது ஆராய்ந்து பார்க்க வேண்டிய விஷயம் தான், காரணம், ஒன்று இரண்டு அல்ல, பல தீர்க்கதரிசனங்கள், நம் கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவை தான் "வனாந்தரத்திலிருந்து வருகிறவர்" என்று சொல்லியிருக்கிறது - தேவனைப் பாடி, அவருடைய நாமத்தைக் கீர்த்தனம்பண்ணுங்கள்; வனாந்தரங்களில் ஏறிவருகிறவருக்கு வழியை ஆயத்தப்படுத்துங்கள்; அவருடைய நாமம் யேகோவா, அவருக்கு முன்பாகக் களிகூருங்கள் - சங்கீதம் 68:4 & வெள்ளைப்போளத்தினாலும் சாம்பிராணியினாலும் வர்த்தகருடைய சகலவித கந்தப்பொடியினாலும் உண்டாகிய வாசனையை வீசி, தூபஸ்தம்பங்களைப்போல் வனாந்தரத்திலிருந்து வருகிற இவர் யார்? - உன்னதப்பாட்டு 3:6 & தன் நேசர்மேல் சார்ந்துகொண்டு வனாந்தரத்திலிருந்து வருகிற இவள் யார்? கிச்சிலிமரத்தின்கீழ் உம்மை எழுப்பினேன்; அங்கே உமது தாய் உம்மைப் பெற்றாள்; அங்கே உம்மைப் பெற்றவள் வேதனைப்பட்டு உம்மைப் பெற்றாள் - உன்னதப்பாட்டு 8:5 & இவன் சகோதரருக்குள்ளே ஜனம்பெருத்தவனாயிருந்தாலும், கர்த்தருடைய காற்றாகிய கீழ்க்காற்று வனாந்தரத்திலிருந்து எழும்பிவரும்; அதனால் அவனுடைய ஊற்றுகள் வற்றிப்போகும்; அவனுடைய துரவு சுவறிப்போகும்; அது இச்சிக்கப்படத்தக்க சகல பதார்த்தங்களுள்ள உத்தம பதார்த்தங்களையும் வாரிக்கொண்டுபோகும் - ஓசியா 13:15
மேலும், செங்கடலை கடந்து வந்து கொண்டிருந்த இஸ்ரவேல் மக்கள் எப்படி கர்த்தருடைய மகிமையை, அதாவது கிறிஸ்துவை கண்டார்கள்? அவர்கள் வனாந்தரதிசையாகத் திரும்பிப் பார்த்ததினால் தானே - ஆரோன் இஸ்ரவேல் புத்திரராகிய சபையாருக்கெல்லாம் இதைச் சொல்லுகிறபோது, அவர்கள் வனாந்தரதிசையாகத் திரும்பிப்பார்த்தார்கள்; அப்பொழுது கர்த்தருடைய மகிமை மேகத்திலே காணப்பட்டது - யாத்திராகமம் 16:10
காரியம் இப்படி இருக்க, கர்த்தர் ஜனங்களிடம் யோவானை குறித்து சொல்லும் போது "எதைப்பார்க்க வனாந்தரத்திற்குப் போனீர்கள்" என்று கேட்க காரணம் என்ன? காரணம், நம் கர்த்தராகிய இயேசு கிறிஸ்து வனாந்திரத்தில் இருந்து வர வேண்டியதாய் இருந்ததினால் தான், கர்த்தரின் வருகையை அறிவிக்கும் யோவானும், அதை வனாந்திரத்திலிருந்து சொல்ல வேண்டியது அவசியமாய் இருந்தது - 1.என் ஜனத்தை ஆற்றுங்கள், தேற்றுங்கள்; 2.எருசலேமுடன் பட்சமாய்ப் பேசி, அதின் போர் முடிந்தது என்றும், அதின் அக்கிரமம் நிவிர்த்தியாயிற்று என்றும், அது தன் சகல பாவங்களினிமித்தமும் கர்த்தரின் கையில் இரட்டிப்பாய் அடைந்து தீர்ந்தது என்றும், அதற்குக் கூறுங்கள் என்று உங்கள் தேவன் சொல்லுகிறார். 3.கர்த்தருக்கு வழியை ஆயத்தப்படுத்துங்கள், அவாந்தரவெளியிலே நம்முடைய தேவனுக்குப் பாதையைச் செவ்வைபண்ணுங்கள் என்றும், 4.பள்ளமெல்லாம் உயர்த்தப்பட்டு, சகல மலையும் குன்றும் தாழ்த்தப்பட்டு, கோணலானது செவ்வையாகி, கரடுமுரடானவை சமமாக்கப்படும் என்றும். 5.கர்த்தரின் மகிமை வெளியரங்கமாகும், மாம்சமான யாவும் அதை ஏகமாய்க் காணும், கர்த்தரின் வாக்கு அதை உரைத்தது என்றும் வனாந்தரத்திலே கூப்பிடுகிற சத்தம் உண்டாயிற்று - ஏசாயா 40:1-5
இப்படியாக, யோவான் இயேசு கிறிஸ்துவின் வருகையை அறிவித்தவுடன், கர்த்தர் வருவார் என்று தீர்க்கதரிசனம் சொல்லுகிறது - இதோ, நான் என் தூதனை அனுப்புகிறேன், அவன் எனக்கு முன்பாகப் போய், வழியை ஆயத்தம்பண்ணுவான்; அப்பொழுது நீங்கள் தேடுகிற ஆண்டவரும் நீங்கள் விரும்புகிற உடன்படிக்கையின் தூதனுமானவர் தம்முடைய ஆலயத்துக்குத் தீவிரமாய் வருவார்; இதோ, வருகிறார் என்று சேனைகளின் கர்த்தர் சொல்லுகிறார் - மல்கியா 3:1
இதை ஒரு உதாரணத்தோடு பார்த்தால் மிகவும் எளிதாக புரிந்து கொள்ளலாம், நம்முடைய பள்ளி நாட்களில், குறிப்பாக சாப்பாட்டு வேளைகளில் ஒரு மணி அடிப்பார்கள், அந்த மணியின் சத்தம் சற்று வித்தியாசமாக இருக்கும், அந்த மணியின் சத்தத்தை கேட்டவுடன், எல்லா பள்ளி மாணவர்களும் அந்த சாப்பாடு பரிமாறுகிற இடத்திற்கு வருவார்கள், அது போல தான் இங்கு வனாந்தரத்தில் யோவானுடைய சத்தம் உண்டாயிற்று.
அந்த மணியின் சத்தத்தை கேட்டு, சாப்பாடு பரிமாறுகிற இடத்திற்கு வந்த மாணவர்களிடம், "இங்கு எதற்காக வந்தீர்கள்?" என்று கேட்டால், நாங்கள் மணியின் சத்தத்தை கேட்க வந்தோம் என்றா பதில் சொல்லுவார்கள்? நிச்சயமாக இல்லை, நாங்கள் சாப்பிட வந்தோம் என்றே சொல்லுவார்கள், அதுபோலத்தான் இங்கு இயேசு கிறிஸ்து ஜனங்களிடம் எதற்காக வனாந்தரத்திற்கு போனீர்கள் என்று கேட்டார்.
ஆனால், ஜனங்களோ நாங்கள் வனாந்தரத்திற்கு எங்கள் தேவனாகிய மேசியாவை தேடி போனோம் என்று சொல்லாமல் அமைதியாக இருந்தார்கள், அவர்களைப் பார்த்து தான் கர்த்தர் "இந்தச் சந்ததியை யாருக்கு ஒப்பிடுவேன்?" என்று வேதனையோடு சொன்னார் - 27.இதோ, நான் என் தூதனை உமக்கு முன்பாக அனுப்புகிறேன்; அவன் உமக்கு முன்னே போய், உமது வழியை ஆயத்தம்பண்ணுவான் என்று எழுதிய வாக்கியத்தால் குறிக்கப்பட்டவன் இவன்தான். 28.ஸ்திரீகளிடத்திலே பிறந்தவர்களில் யோவான்ஸ்நானனைப் பார்க்கிலும் பெரியதீர்க்கதரிசி ஒருவனுமில்லை; ஆகிலும், தேவனுடைய ராஜ்யத்தில் சிறியவனாயிருக்கிறவன் அவனிலும் பெரியவனாயிருக்கிறானென்று உங்களுக்குச் சொல்லுகிறேன் என்றார். 29.யோவானுடைய உபதேசத்தைக் கேட்ட ஆயக்காரர் முதலான சகல ஜனங்களும் அவனாலே ஞானஸ்நானம் பெற்று, தேவன் நீதிபரர் என்று அறிக்கையிட்டார்கள். 30.பரிசேயரும் நியாயசாஸ்திரிகளுமோ அவனாலே ஞானஸ்நானம் பெறாமல் தங்களுக்குக் கேடுண்டாக தேவனுடைய ஆலோசனையைத் தள்ளிவிட்டார்கள். 31.பின்னும் கர்த்தர் சொன்னது: இந்தச் சந்ததியை யாருக்கு ஒப்பிடுவேன்? இவர்கள் யாருக்கு ஒப்பாயிருக்கிறார்கள்? 32.சந்தை வெளியில் உட்கார்ந்து, ஒருவரையொருவர் பார்த்து: உங்களுக்காகக் குழல் ஊதினோம், நீங்கள் கூத்தாடவில்லை; உங்களுக்காகப் புலம்பினோம், நீங்கள் அழவில்லை என்று குறை சொல்லுகிற பிள்ளைகளுக்கு ஒப்பாயிருக்கிறார்கள் - லூக்கா 7:27-32
இஸ்ரவேலர்களாக வேறு பிரிக்கப்பட்டிருந்த ஜனங்கள், மேசியாவை குறித்த கேள்விக்கு பதில் சொல்ல முடியாமல் போய்விட்டார்கள், இப்பொழுதும் நாம் கிறிஸ்தவர்களாக வேறு பிரிக்கப்பட்டு, அதே மேசியாவிற்காக காத்துக் கொண்டிருக்கிறோம், நம்முடைய காத்திருப்பு எப்படியாக இருக்கிறது? பரிசுத்த ஆவியானவரின் உதவி இல்லாவிட்டால், நாமும் குறை சொல்லுகிற பிள்ளைகளுக்கு தான் ஒப்பாயிருப்போம்.
வனாந்தரமான ஓர் இடத்துக்குத் தனியே போனார்
இப்படி வனாந்தரத்திலிருந்து கூப்பிடுகிறவனாயிருந்த, யோவானின் ஊழியம் மாத்திரமல்ல, அவனின் மரணமும் கூட கிறிஸ்துவின் வருகையை அறிவிப்பதாகவே இருந்தது, அதனால் தான், இந்த யோவான் மரித்த பின்பும், கர்த்தர் வனாந்தரத்திற்கு சென்று தன்னைக் குறித்த தீர்க்கதரிசனங்களை நினைவு கூற செய்தார், இதில் வனாந்தரம் என்பது இயேசு கிறிஸ்து கடந்துச் சென்ற கஷ்டமான பாதைகளையும், சிலுவை மரணத்தையும் குறிக்கிறது - 1.அக்காலத்தில், காற்பங்கு தேசாதிபதியாகிய ஏரோது இயேசுவின் கீர்த்தியைக் கேள்விப்பட்டு, 2.தன் ஊழியக்காரரை நோக்கி: இவன் யோவான்ஸ்நானன்; இவன் மரித்தோரிலிருந்து எழுந்தான்; ஆகையால், இவனிடத்தில் பலத்த செய்கைகள் விளங்குகிறது என்றான். 3.ஏரோது தன் சகோதரனாகிய பிலிப்புவின் மனைவி ஏரோதியாளினிமித்தம் யோவானைப் பிடித்துக் கட்டி காவலில் வைத்திருந்தான். 4.ஏனெனில்: நீர் அவளை வைத்துக்கொள்வது நியாயமல்லவென்று யோவான் அவனுக்குச் சொல்லியிருந்தான். 5.ஏரோது அவனைக் கொலைசெய்ய மனதாயிருந்தும், ஜனங்கள் அவனைத் தீர்க்கதரிசியென்று எண்ணினபடியால் அவர்களுக்குப் பயந்திருந்தான். 6.அப்படியிருக்க, ஏரோதின் ஜென்மநாள் கொண்டாடப்படுகிறபோது, ஏரோதியாளின் குமாரத்தி அவர்கள் நடுவே நடனம்பண்ணி ஏரோதைச் சந்தோஷப்படுத்தினாள். 7.அதினிமித்தம் அவன்: நீ எதைக்கேட்டாலும் தருவேன் என்று அவளுக்கு ஆணையிட்டு வாக்குக்கொடுத்தான். 8.அவள் தன் தாயினால் ஏவப்பட்டபடியே: யோவான்ஸ்நானனுடைய தலையை இங்கே ஒரு தாலத்திலே எனக்குத் தாரும் என்று கேட்டாள். 9.ராஜா துக்கமடைந்தான். ஆகிலும், ஆணையினிமித்தமும், பந்தியில் கூட இருந்தவர்களினிமித்தமும், அதைக் கொடுக்கக் கட்டளையிட்டு, 10.ஆள் அனுப்பி, காவற்கூடத்திலே யோவானைச் சிரச்சேதம்பண்ணுவித்தான். 11.அவனுடைய சிரசை ஒரு தாலத்திலே கொண்டுவந்து, சிறு பெண்ணுக்குக் கொடுத்தார்கள்; அவள் அதைத் தன் தாயினிடத்தில் கொண்டுபோனாள். 12.அவனுடைய சீஷர்கள் வந்து உடலை எடுத்து அடக்கம்பண்ணி, பின்பு போய் அந்தச் சங்கதியை இயேசுவுக்கு அறிவித்தார்கள். 13.இயேசு அதைக் கேட்டு அவ்விடம் விட்டு, படவில் ஏறி, வனாந்தரமான ஓர் இடத்துக்குத் தனியே போனார். ஜனங்கள் அதைக் கேள்விப்பட்டு, பட்டணங்களிலிருந்து கால்நடையாய் அவரிடத்திற்குப் போனார்கள். 14.இயேசு வந்து, திரளான ஜனங்களைக் கண்டு, அவர்கள்மேல் மனதுருகி, அவர்களில் வியாதியஸ்தர்களாயிருந்தவர்களைச் சொஸ்தமாக்கினார் - மத்தேயு 14:1-14
இப்படி வனாந்தரமானது, நம் இரட்சிப்பின் தேவன் வெளிப்படும் அடையாளமாக இருப்பதை தான் ஏசாயா தீர்க்கதரிசி இப்படிச் சொன்னார் - 18.முந்தினவைகளை நினைக்கவேண்டாம்; பூர்வமானவைகளைச் சிந்திக்கவேண்டாம். 19.இதோ, நான் புதிய காரியத்தைச் செய்கிறேன்; இப்பொழுதே அது தோன்றும்; நீங்கள் அதை அறியீர்களா? நான் வனாந்தரத்திலே வழியையும்[வழியாகிய இயேசு கிறிஸ்து], அவாந்தரவெளியிலே ஆறுகளையும்[பரிசுத்த ஆவியானவரின் அபிஷேகம்] உண்டாக்குவேன். 20.நான் தெரிந்துகொண்ட என் ஜனத்தின் தாகத்துக்கு வனாந்தரத்திலே தண்ணீர்களையும் அவாந்தரவெளியிலே ஆறுகளையும் உண்டாக்குவதினால், காட்டுமிருகங்களும், வலுசர்ப்பங்களும், கோட்டான் குஞ்சுகளும் என்னைக் கனம்பண்ணும். 21.இந்த ஜனத்தை எனக்கென்று ஏற்படுத்தினேன்; இவர்கள் என் துதியைச் சொல்லிவருவார்கள் - ஏசாயா 43:18-21