இஸ்ரவேல் மக்கள் தேவன் வாக்குத்தத்தம் செய்த கானான் தேசத்தை நோக்கி பயணம் செய்து கொண்டிருந்த பொழுது, வனாந்திரத்தில் கர்த்தர் பிலேயாமிடம் இஸ்ரவேல் மக்களை குறித்து சொன்ன காரியங்களை தான் இந்த வசனத்தில் பார்க்கிறோம் - 4.தேவன் பிலேயாமைச் சந்தித்தார்; அப்பொழுது அவன் அவரை நோக்கி: நான் ஏழு பலிபீடங்களை ஆயத்தம்பண்ணி, ஒவ்வொரு பலிபீடத்தில் ஒவ்வொரு காளையையும் ஒவ்வொரு ஆட்டுக்கடாவையும் பலியிட்டேன் என்றான். 5.கர்த்தர் பிலேயாமின் வாயிலே வாக்கு அருளி: நீ பாலாகினிடத்தில் திரும்பிப்போய், இவ்விதமாய்ச் சொல்லக்கடவாய் என்றார். 6.அவனிடத்துக்கு அவன் திரும்பிபோனான்; பாலாக் மோவாபுடைய சகல பிரபுக்களோடுங்கூடத் தன் சர்வாங்க தகனபலியண்டையிலே நின்றுகொண்டிருந்தான். 7.அப்பொழுது அவன் தன் வாக்கியத்தை எடுத்துரைத்து: மோவாபின் ராஜாவாகிய பாலாக் என்னைக் கிழக்கு மலைகளிலுள்ள ஆராமிலிருந்து வரவழைத்து: நீ வந்து எனக்காக யாக்கோபைச் சபிக்கவேண்டும்; நீ வந்து இஸ்ரவேலை வெறுத்துவிடவேண்டும் என்று சொன்னான். 8.தேவன் சபிக்காதவனை நான் சபிப்பதெப்படி? கர்த்தர் வெறுக்காதவனை நான் வெறுப்பதெப்படி? 9.கன்மலையுச்சியிலிருந்து நான் அவனைக் கண்டு, குன்றுகளிலிருந்து அவனைப் பார்க்கிறேன்; அந்த ஜனங்கள் ஜாதிகளோடே கலவாமல் தனியே வாசமாயிருப்பார்கள். 10.யாக்கோபின் தூளை எண்ணத்தக்கவன் யார்? இஸ்ரவேலின் காற்பங்கை எண்ணுகிறவன் யார்? நீதிமான் மரிப்பதுபோல் நான் மரிப்பேனாக, என் முடிவு அவன் முடிவுபோல் இருப்பதாக என்றான். 11.அப்பொழுது பாலாக் பிலேயாமை நோக்கி: நீர் எனக்கு என்ன செய்தீர்; என் சத்துருக்களைச் சபிக்கும்படி உம்மை அழைப்பித்தேன்; நீர் அவர்களை ஆசீர்வதிக்கவே ஆசீர்வதித்தீர் என்றான். 12.அதற்கு அவன்: கர்த்தர் என் வாயில் அருளினதையே சொல்வது என் கடமையல்லவா என்றான் - எண்ணாகமம் 23:4-12
கர்த்தர் சொன்ன இந்த ஆசீர்வாத வசனத்தின் மத்தியில் "நீதிமான் மரிப்பதுபோல் நான் மரிப்பேனாக, என் முடிவு அவன் முடிவுபோல் இருப்பதாக" என்று யாரை குறித்து சொன்னார்? இது இஸ்ரவேல் மக்களை குறித்ததும் அல்ல, பிலேயாமை குறித்ததும் அல்ல என்றால் யாரை குறித்து சொன்னார்?
அது மாத்திரம் இல்லாமல், யாக்கோபின் தூளை எண்ணத்தக்கவன் யார்? இஸ்ரவேலின் காற்பங்கை எண்ணுகிறவன் யார்? என்று சொல்லும் பொழுது அது வானத்தையும் பூமியையும் உண்டாக்கின சர்வவல்லமையுள்ள தேவனால் மாத்திரமே கூடும்
இந்த காரியங்கள் நடந்து, ஏறக்குறைய 1200 ஆண்டுகள் கழித்து, சர்வவல்லமையுள்ள தேவனாகிய இயேசு கிறிஸ்து பிலாத்துவுக்கு முன்பாக நிற்கும் பொழுது பிலாத்துவின் மனைவி இயேசு கிறிஸ்துவை நீதிமான் என்று அறிக்கை செய்தாள் - 17.பொறாமையினாலே அவரை ஒப்புக்கொடுத்தார்கள் என்று பிலாத்து அறிந்து, 18.அவர்கள் கூடியிருக்கையில், அவர்களை நோக்கி: எவனை நான் உங்களுக்கு விடுதலையாக்கவேண்டுமென்றிருக்கிறீர்கள்? பரபாசையோ? கிறிஸ்து என்னப்படுகிற இயேசுவையோ? என்று கேட்டான். 19.அவன் நியாயாசனத்தில் உட்கார்ந்திருக்கையில், அவனுடைய மனைவி அவனிடத்தில் ஆளனுப்பி: நீர் அந்த நீதிமானை ஒன்றும் செய்யவேண்டாம்; அவர்நிமித்தம் இன்றைக்குச் சொப்பனத்தில் வெகு பாடுபட்டேன் என்று சொல்லச் சொன்னாள் - மத்தேயு 27:17-19
அதன் பின்பு பிலாத்துவும் இயேசு கிறிஸ்துவை நீதிமான் என்று அறிக்கை செய்து, சொல்லப்பட்டிருந்த தீர்க்கதரிசனத்தை நிறைவேற்ற அவரை மரண ஆக்கினைக்கு ஒப்புக்கொடுத்தான் - 22.பிலாத்து அவர்களை நோக்கி: அப்படியானால், கிறிஸ்து என்னப்பட்ட இயேசுவை நான் என்ன செய்யவேண்டும் என்று கேட்டான். அவனைச் சிலுவையில் அறையவேண்டும் என்று எல்லாரும் சொன்னார்கள். 23.தேசாதிபதியோ: ஏன், என்ன பொல்லாப்புச் செய்தான் என்றான். அதற்கு அவர்கள்: அவனைச் சிலுவையில் அறையவேண்டும் என்று அதிகமதிகமாய்க் கூக்குரலிட்டுச் சொன்னார்கள். 24.கலகம் அதிகமாகிறதேயல்லாமல் தன் பிரயத்தனத்தினாலே பிரயோஜனமில்லையென்று பிலாத்து கண்டு, தண்ணீரை அள்ளி, ஜனங்களுக்கு முன்பாகக் கைகளைக் கழுவி: இந்த நீதிமானுடைய இரத்தப்பழிக்கு நான் குற்றமற்றவன், நீங்களே பார்த்துக்கொள்ளுங்கள் என்றான் - மத்தேயு 27:22-24
இப்படி ஒரு பாவமும் அறியாத நீதிமானாய் வாழ்ந்து மரித்த இயேசுவினால் மாத்திரமே நமக்கு நித்திய ஜீவன் உண்டு.