போஜனபானம்பண்ணுகிறவராய் வந்தார்
இயேசு கிறிஸ்து திரியேக தேவனாக, அதாவது பிதா, வார்த்தை, பரிசுத்த ஆவியானவரின் தற்சுரூபமாய் இருக்கிறார் !
இயேசு கிறிஸ்து திரியேக தேவனாக, அதாவது பிதா, வார்த்தை, பரிசுத்த ஆவியானவரின் தற்சுரூபமாய் இருக்கிறார் !
முந்தைய பாகம்: வாசல், ஆடுகளின் மேய்ப்பர், மற்றும் வாசலைக் காக்கிறவர்
நம் இரட்சகராகிய இயேசு கிறிஸ்து, வார்த்தையானவரின் குமாரன் மாத்திரம் அல்ல, அவருக்குள் பிதாவின் குமாரனும், பரிசுத்த ஆவியானவரின் குமாரனும் வாசம் செய்தார்கள் என்பதையும், அந்த மூவருமே நமக்காக மரணத்தை ருசி பார்த்தார்கள் என்பதையும் கடந்த தொகுப்புகளில் பார்த்தோம், இந்த தொகுப்பிலும் அவர்கள் மூவரின் மரணத்தை குறித்துப் பார்ப்போம்.
பரலோகத்தின் தேவனுக்கு ஒரு விசேஷித்த பலியை செலுத்தும் பொழுது, அதனோடு போஜனபலியையும், பானபலியையும் சேர்த்து படைக்க வேண்டும், அப்பொழுது தான் அது தேவனுக்கு ஏற்ற சுகந்த வாசனையான தகனபலியாய் இருக்கும் என்று வேதாகமம் சொல்லுகிறது, ஏப்படியெனில், ஏறெடுக்கும் பலியானது ஒரு ஆட்டுக்குட்டியாக இருக்குமானால், அதனோடு 1/10 பங்கு மரக்கால் மெல்லிய மாவோடு 1/4 படி எண்ணெயில் பிசைந்த போஜனபலியும், 1/4 படி திராட்சரசமாகிய பானபலியையும் படைக்கவேண்டும் - 1.கர்த்தர் மோசேயை நோக்கி: 2.நீ இஸ்ரவேல் புத்திரரோடே சொல்லவேண்டியது என்னவென்றால்: நீங்கள் குடியிருக்கும்படி நான் உங்களுக்குக் கொடுக்கும் தேசத்தில் நீங்கள் போய்ச் சேர்ந்தபின்பு, 3.விசேஷித்த பொருத்தனையாயாவது, உற்சாக பலியாயாவது, உங்கள் பண்டிகைகளில் செலுத்தும் பலியாயாவது, கர்த்தருக்கு மாடுகளிலாகிலும் ஆடுகளிலாகிலும் சர்வாங்க தகனபலியையாவது மற்ற யாதொரு பலியையாவது கர்த்தருக்குச் சுகந்த வாசனையான தகனமாகப் பலியிடும்போது, 4.தன் படைப்பைக் கர்த்தருக்குச் செலுத்துகிறவன் சர்வாங்க தகனபலிக்காகிலும் மற்றப் பலிக்காகிலும் ஒரு ஆட்டுக்குட்டியுடனே, ஒரு மரக்காலிலே பத்தில் ஒரு பங்கும் காற்படி எண்ணெயிலே பிசைந்ததுமான மெல்லிய மாவின் போஜனபலியைச் செலுத்தக்கடவன். 5.பானபலியாக காற்படி திராட்சரசத்தையும் படைக்கவேண்டும் - எண்ணாகமம் 15:1-5
அது ஒரு ஆட்டுக்கடாவாக இருக்குமானால், அதனோடு 2/10 பங்கு மரக்கால் மெல்லிய மாவோடு 1/3 படி எண்ணெயில் பிசைந்த போஜனபலியும், 1/3 படி திராட்சரசமாகிய பானபலியையும் படைக்கவேண்டும் - 6.ஆட்டுக்கடாவாயிருந்ததேயாகில், பத்தில் இரண்டு பங்கானதும், ஒரு படியில் மூன்றில் ஒரு பங்காகிய எண்ணெயிலே பிசைந்ததுமான மெல்லிய மாவின் போஜனபலியையும், 7.பானபலியாக ஒரு படியில் மூன்றில் ஒரு பங்கு திராட்சரசத்தையும் கர்த்தருக்குச் சுகந்த வாசனையான படைப்பாகப் படைக்கவேண்டும் - எண்ணாகமம் 15:6-7
அது ஒரு காளையாக இருக்குமானால், அதனோடு 3/10 பங்கு மரக்கால் மெல்லிய மாவோடு 1/2 படி எண்ணெயில் பிசைந்த போஜனபலியும், 1/2 படி திராட்சரசமாகிய பானபலியையும் படைக்கவேண்டும் - 8.நீ சர்வாங்க தகனபலிக்காகிலும், விசேஷித்த பொருத்தனை பலிக்காகிலும், சமாதான பலிக்காகிலும், ஒரு காளையைக் கர்த்தருக்குச் செலுத்த ஆயத்தப்படுத்தும்போது, 9.அதனோடே பத்தில் மூன்று பங்கானதும், அரைப்படி எண்ணெயிலே பிசைந்ததுமான மெல்லிய மாவின் போஜனபலியையும், 10.பானபலியாக அரைப்படி திராட்சரசத்தையும், கர்த்தருக்குச் சுகந்தவாசனையான தகனபலியாகப் படைக்கவேண்டும். 11.இந்தப்பிரகாரமாகவே ஒவ்வொரு மாட்டுக்காகிலும், ஆட்டுக்கடாவுக்காகிலும், செம்மறியாட்டுக் குட்டிக்காகிலும், வெள்ளாட்டுக் குட்டிக்காகிலும் செய்து படைக்கவேண்டும். 12.நீங்கள் படைக்கிறவைகளின் இலக்கத்திற்குத்தக்கதாய் ஒவ்வொன்றிற்காகவும் இந்தப்பிரகாரம் செய்யவேண்டும். 13.சுதேசத்தில் பிறந்தவர்கள் யாவரும் கர்த்தருக்குச் சுகந்த வாசனையான தகனபலியைச் செலுத்தும்போது இவ்விதமாகவே செய்யவேண்டும் - எண்ணாகமம் 15:8-13
இதை இஸ்ரவேலரோடு தங்கியிருக்கிற அந்நியன் செலுத்த வேண்டும் என்று சொன்னது மாத்திரம் இல்லாமல், தலைமுறைதோறும் குடியிருக்கிறவன் என்று சொல்லும் பொழுது, அது மனிதனை குறிக்காமல் தேவ குமாரனாகிய இயேசு கிறிஸ்துவையே குறிப்பதாய் இருக்கிறது, ஏனென்றால் அவரே நித்திய நித்தியமாய் வாழ்கிறவர், அவரின் சிலுவை மரணமே தேவனுக்கு ஏற்ற நித்திய சுகந்த வாசனையான தகனபலியாய் இருக்கிறது - 14.உங்களிடத்திலே தங்கியிருக்கிற அந்நியனாவது, உங்கள் நடுவிலே உங்கள் தலைமுறைதோறும் குடியிருக்கிறவனாவது, கர்த்தருக்குச் சுகந்த வாசனையான தகனபலி செலுத்தவேண்டுமானால், நீங்கள் செய்கிறபடியே அவனும் செய்யவேண்டும். 15.சபையாராகிய உங்களுக்கும் உங்களிடத்தில் தங்குகிற அந்நியனுக்கும் ஒரே பிரமாணம் இருக்கவேண்டும் என்பது உங்கள் தலைமுறைகளில் நித்திய கட்டளையாயிருக்கக்கடவது; கர்த்தருக்கு முன்பாக அந்நியனும் உங்களைப்போலவே இருக்கவேண்டும். 16.உங்களுக்கும் உங்களிடத்தில் தங்குகிற அந்நியனுக்கும் ஒரே பிரமாணமும் ஒரே முறைமையும் இருக்கக்கடவது என்று சொல் என்றார் - எண்ணாகமம் 15:14-16
மேலும், பரலோகத்தின் தேவனுக்கு செலுத்தும் பலியோடு, போஜனபலியையும், பானபலியையும் சேர்த்து படைக்கவேண்டும், அப்பொழுது தான் அது தேவனுக்கு பிரியமான சுகந்த பலியாக இருக்கும் என்றும் வேதாகமம் சொல்லுகிறது.
அதிபதியின்மேல் சுமந்த கடன்
எசேக்கியேல் தீர்க்கதரிசி இதனை குறித்துச் சொல்லும் பொழுது, சுமுத்திரையான தராசு, சுமுத்திரையான மரக்காள் மற்றும் சுமுத்திரையான அளவுகுடமும் என்று மூன்று காரியங்களை சொல்லி, அதிபதியாகிய இயேசு கிறிஸ்து தகனபலியோடு போஜனபலியையும் பானபலியையும் செலுத்த வேண்டும் என்று சொல்லாயிருந்தார், இது வார்த்தையானவரின் குமாரனோடு, பிதாவானவரின் குமாரனும், பரிசுத்த ஆவியானவரின் குமாரனும் மரணத்தை ருசிபார்க்க வேண்டும் என்பதை குறிப்பதாகவே இருந்தது - 10.சுமுத்திரையான தராசும், சுமுத்திரையான மரக்காலும், சுமுத்திரையான அளவுகுடமும் உங்களுக்கு இருக்கக்கடவது. 11.மரக்காலும் அளவுகுடமும் ஒரே அளவாயிருந்து, மரக்கால் கலத்திலே பத்தில் ஒரு பங்கும், அளவுகுடம் கலத்திலே பத்தில் ஒரு பங்கும் பிடிக்கக்கடவது; கலத்தின்படியே அதின் அளவு நிருணயிக்கப்படுவதாக. 12.சேக்கலானது இருபது கேரா; இருபது சேக்கலும் இருபத்தைந்து சேக்கலும் பதினைந்து சேக்கலும் உங்களுக்கு ஒரு இராத்தலாகும். 13.நீங்கள் செலுத்தவேண்டிய காணிக்கையாவது: ஒரு கலம் கோதுமையிலே ஒரு மரக்காலில் ஆறிலொருபங்கையும், ஒரு கலம் வாற்கோதுமையிலே ஒரு மரக்காலில் ஆறிலொரு பங்கையும் படைக்கக்கடவீர்கள். 14.அளவுகுடத்தால் அளக்கிற எண்ணெயின் கட்டளையாவது: பத்துக்குடம் பிடிக்கிற கலத்துக்குச் சரியான ஒரு ஜாடி எண்ணெயிலே பத்தில் ஒரு பங்கைப் படைப்பீர்களாக; பத்து அளவுகுடம் ஒரு கலமாகும். 15.இஸ்ரவேல் தேசத்திலே நல்ல மேய்ச்சலை மேய்கிற மந்தையிலே இருநூறு ஆடுகளில் ஒரு ஆடும், அவர்களுடைய பாவநிவாரணத்திற்காக போஜனபலியாகவும் தகனபலியாகவும் சமாதானபலியாகவும் செலுத்தப்படக்கடவதென்று கர்த்தராகிய ஆண்டவர் உரைக்கிறார். 16.இஸ்ரவேலின் அதிபதிக்கு முன்பாக தேசத்தின் ஜனங்களெல்லோரும் இந்தக் காணிக்கையைச் செலுத்தக் கடனாளிகளாயிருக்கிறார்கள். 17.இஸ்ரவேல் வம்சத்தார் கூடிவரக் குறிக்கப்பட்ட சகல பண்டிகைகளிலும் மாதப்பிறப்புகளிலும் ஓய்வுநாட்களிலும் தகனபலிகளையும் போஜனபலிகளையும் பானபலிகளையும் செலுத்துவது அதிபதியின்மேல் சுமந்த கடனாயிருக்கும்; அவன் இஸ்ரவேல் வம்சத்தாருக்காகப் பாவநிவாரணம்பண்ணும்படிக்குப் பாவநிவாரணபலியையும் போஜனபலியையும் தகனபலியையும் சமாதானபலியையும் படைப்பானாக - எசேக்கியேல் 45:10-17
போஜனபானம் பண்ணுகிறவராய் வந்தார்
இப்படி வார்த்தையானவரின் குமாரனோடு, பிதாவானவரின் குமாரனும், பரிசுத்த ஆவியானவரின் குமாரனும் மரணத்தை ருசிபார்க்க வேண்டும் என்பதை தான், இயேசு கிறிஸ்து என் மாம்சமே மெய்யான போஜனம்[பிதாவானவரின் குமாரன்], என் இரத்தமே மெய்யான பானம்[பரிசுத்த ஆவியானவரின் குமாரன்] என்றார் - 55.என் மாம்சம் மெய்யான போஜனமாயிருக்கிறது, என் இரத்தம் மெய்யான பானமாயிருக்கிறது. 56.என் மாம்சத்தைப் புசித்து, என் இரத்தத்தைப் பானம்பண்ணுகிறவன் என்னிலே நிலைத்திருக்கிறான், நானும் அவனிலே நிலைத்திருக்கிறேன். 57.ஜீவனுள்ள பிதா என்னை அனுப்பினதுபோலவும், நான் பிதாவினால் பிழைத்திருக்கிறதுபோலவும், என்னைப் புசிக்கிறவனும் என்னாலே பிழைப்பான். 58.வானத்திலிருந்திறங்கின அப்பம் இதுவே; இது உங்கள் பிதாக்கள் புசித்த மன்னாவைப் போலல்ல, அவர்கள் மரித்தார்களே; இந்த அப்பத்தைப் புசிக்கிறவனோ என்றென்றைக்கும் பிழைப்பான் என்றார் - யோவான் 6:30-58
மேலும் இயேசு கிறிஸ்து, பிதாவானவரின் குமாரனும், பரிசுத்த ஆவியானவரின் குமாரனும் என்னோடு தான் இருக்கிறார்கள் என்பதை அறிவுருத்தவே மனுஷகுமாரன் போஜனபானம் பண்ணுகிறவராய் வந்தார் என்று சொன்னார் - 16.இந்தச் சந்ததியை யாருக்கு ஒப்பிடுவேன்? சந்தைவெளிகளில் உட்கார்ந்து, தங்கள் தோழரைப் பார்த்து: 17.உங்களுக்காகக் குழல் ஊதினோம், நீங்கள் கூத்தாடவில்லை; உங்களுக்காகப் புலம்பினோம், நீங்கள் மாரடிக்கவில்லை என்று குறைசொல்லுகிற பிள்ளைகளுக்கு ஒப்பாயிருக்கிறது. 18.எப்படியெனில், யோவான் போஜனபானம் பண்ணாதவனாய் வந்தான்; அதற்கு அவர்கள்: அவன் பிசாசு பிடித்திருக்கிறவன் என்றார்கள். 19.மனுஷகுமாரன் போஜனபானம் பண்ணுகிறவராய் வந்தார்; அதற்கு அவர்கள்: இதோ, போஜனப்பிரியனும் மதுபானப்பிரியனுமான மனுஷன், ஆயக்காரருக்கும் பாவிகளுக்கும் சிநேகிதன் என்கிறார்கள். ஆனாலும் ஞானமானது அதன் பிள்ளைகளால் நீதியுள்ளதென்று ஒப்புக்கொள்ளப்படும் என்றார். 20.அப்பொழுது, தமது பலத்த செய்கைகளில் அதிகமானவைகளைச் செய்யக் கண்ட பட்டணங்கள், மனந்திரும்பாமற் போனபடியினால், அவைகளை அவர் கடிந்து கொள்ளத்தொடங்கினார் - மத்தேயு 11:12-20
இப்படி போஜனபலியாகிய பிதாவின் குமாரனும், பானபலியாகிய பரிசுத்த ஆவியானவரின் குமாரனும் தனக்குள் வாசம் செய்வதை தான், போஜனப்பிரியனும் மதுபானப்பிரியனுமான மனுஷன் என்று இயேசு கிறிஸ்து தன்னை குறித்து உவமையாக சொன்னார் - 31.பின்னும் கர்த்தர் சொன்னது: இந்தச் சந்ததியை யாருக்கு ஒப்பிடுவேன்? இவர்கள் யாருக்கு ஒப்பாயிருக்கிறார்கள்? 32.சந்தை வெளியில் உட்கார்ந்து, ஒருவரையொருவர் பார்த்து: உங்களுக்காகக் குழல் ஊதினோம், நீங்கள் கூத்தாடவில்லை; உங்களுக்காகப் புலம்பினோம், நீங்கள் அழவில்லை என்று குறை சொல்லுகிற பிள்ளைகளுக்கு ஒப்பாயிருக்கிறார்கள். 33.எப்படியெனில், யோவான்ஸ்நானன் அப்பம் புசியாதவனும் திராட்சரசம் குடியாதவனுமாய் வந்தான்; அதற்கு நீங்கள்: அவன் பிசாசு பிடித்திருக்கிறவன் என்கிறீர்கள். 34.மனுஷகுமாரன் போஜனபானம்பண்ணுகிறவராய் வந்தார்; அதற்கு நீங்கள்: இதோ, போஜனப்பிரியனும் மதுபானப்பிரியனுமான மனுஷன், ஆயக்காரருக்கும் பாவிகளுக்கும் சிநேகிதன் என்கிறீர்கள். 35.ஆனாலும் ஞானமானது அதன் பிள்ளைகளெல்லாராலும் நீதியுள்ளதென்று ஒப்புக்கொள்ளப்படும் என்றார் - லூக்கா 7:31-35
ஏசாயா தீர்க்கதரிசி இதை குறித்து சொல்லும் பொழுது, தேவகுமாரனாகிய இயேசு கிறிஸ்து வெண்ணெயையும் தேனையும் சாப்பிடுவார் என்று சொல்லியிருந்தார் - 14.ஆதலால் ஆண்டவர் தாமே உங்களுக்கு ஒரு அடையாளத்தைக் கொடுப்பார்; இதோ, ஒரு கன்னிகை கர்ப்பவதியாகி ஒரு குமாரனைப் பெறுவாள், அவருக்கு இம்மானுவேல் என்று பேரிடுவாள். 15.தீமையை வெறுத்து நன்மையைத் தெரிந்துகொள்ள அறியும் வயதுமட்டும் அவர் வெண்ணெயையும் தேனையும் சாப்பிடுவார் - ஏசாயா 7:14-15
இப்படியாக வார்த்தையானவரின் குமாரன் தன்னை பலியாய் அர்ப்பணித்த பொழுது, அவருக்குள் இருந்த பிதாவின் குமாரன் போஜனபலியாகவும், பரிசுத்த ஆவியானவரின் குமாரன் பானபலியாகவும் பாடுபட்டதினால் தான் இயேசு கிறிஸ்துவின் சிலுவை மரணம் பரலோக தேவனுக்கு ஏற்ற சுகந்த வாசனையான பலியாய் இருந்தது.
அடுத்த பாகம்: கோராகின் விளக்கம்