கிருபையினாலும் சத்தியத்தினாலும் நிறைந்தவராய்
இயேசு கிறிஸ்து திரியேக தேவனாக, அதாவது பிதா, வார்த்தை, பரிசுத்த ஆவியானவரின் தற்சுரூபமாய் இருக்கிறார்
இயேசு கிறிஸ்து திரியேக தேவனாக, அதாவது பிதா, வார்த்தை, பரிசுத்த ஆவியானவரின் தற்சுரூபமாய் இருக்கிறார்
முந்தைய பாகம்: சகரியாவின் விளக்கம்
நம் கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவானவர், பிதா, வார்த்தை, மற்றும் பரிசுத்த ஆவி என்கிற காணக்கூடாத தேவனுடைய தற்சுரூபமாயிருக்கிறார், எப்படியெனில், திரியேக தேவனில் வார்த்தையானவர் மாம்சத்தில் வெளிப்பட்ட பொழுது, அவர் பரிசுத்தஆவியினாலும் பிதாவின் வல்லமையினாலும் நிரப்பப்பட்டவராக இருந்தார், இருக்கிறார், வெளிப்படுவார், இதை தான் அப்போஸ்தலனாகிய யோவான், வார்த்தையானவர் கிருபையினாலும் சத்தியத்தினாலும் நிறைந்தவராய் நமக்குள்ளே வாசம்பண்ணினார் என்று விளக்கியுள்ளார் - அந்த வார்த்தை மாம்சமாகி, கிருபையினாலும் சத்தியத்தினாலும் நிறைந்தவராய், நமக்குள்ளே வாசம்பண்ணினார்; அவருடைய மகிமையைக் கண்டோம்; அது பிதாவுக்கு ஒரே பேறானவருடைய மகிமைக்கு ஏற்ற மகிமையாகவே இருந்தது - யோவான் 1:14
அப்போஸ்தலனாகிய பேதுரு இதை குறித்துச் சொல்லும் பொழுது, திரியேக தேவனில் வார்த்தையானவர் இயேசு கிறிஸ்துவாக வெளிப்பட்டார், அதே சமயத்தில் அவர் பரிசுத்த ஆவியினாலும், பிதாவின் வல்லமையினாலும் நிரப்பப்பட்டவராக இருந்தார் என்றும் கூறியுள்ளார் - நசரேயனாகிய இயேசுவைத் தேவன் பரிசுத்த ஆவியினாலும் வல்லமையினாலும் அபிஷேகம்பண்ணினார்; தேவன் அவருடனேகூட இருந்தபடியினாலே அவர் நன்மைசெய்கிறவராயும் பிசாசின் வல்லமையில் அகப்பட்ட யாவரையும் குணமாக்குகிறவராயும் சுற்றித்திரிந்தார் - அப்போஸ்தலர் 10:38
இதை தான், சங்கீதகாரனாகிய தாவீது தேவரீர்[வார்த்தையானவரின் குமாரன்] என்னோடேகூட இருக்கிறீர்; உமது கோலும்[கிருபையும்] உமது தடியும்[சத்தியமும்] என்னைத் தேற்றும் என்று கூறியுள்ளார் - 1.கர்த்தர் என் மேய்ப்பராயிருக்கிறார்; நான் தாழ்ச்சியடையேன். 2.அவர் என்னைப் புல்லுள்ள இடங்களில் மேய்த்து, அமர்ந்த தண்ணீர்கள் அண்டையில் என்னைக் கொண்டுபோய் விடுகிறார். 3.அவர் என் ஆத்துமாவைத் தேற்றி, தம்முடைய நாமத்தினிமித்தம் என்னை நீதியின் பாதைகளில் நடத்துகிறார். 4.நான் மரண இருளின் பள்ளத்தாக்கிலே நடந்தாலும் பொல்லாப்புக்குப் பயப்படேன்; தேவரீர் என்னோடேகூட இருக்கிறீர்; உமது கோலும் உமது தடியும் என்னைத் தேற்றும் - சங்கீதம் 23:1-4
மேலும், இயேசு கிறிஸ்துவின் சிலுவை மரணத்தினால் நமக்கு கிடைத்த கிருபையையும் சத்தியத்தையும் தான், இஸ்ரவேல் புத்திரர் அன்று "பாலும் தேனும் ஓடுகிற தேசம்" என்று சாட்சி பகிர்ந்தார்கள் - 25.அவர்கள் தேசத்தைச் சுற்றிப்பார்த்து, நாற்பதுநாள் சென்றபின்பு திரும்பினார்கள். 26.அவர்கள் பாரான் வனாந்தரத்தில் இருக்கிற காதேசுக்கு வந்து, மோசே ஆரோன் என்பவர்களிடத்திலும் இஸ்ரவேல் புத்திரராகிய சபையார் எல்லாரிடத்திலும் சேர்ந்து, அவர்களுக்கும் சபையார் அனைவருக்கும் சமாசாரத்தை அறிவித்து, தேசத்தின் கனிகளை அவர்களுக்குக் காண்பித்தார்கள். 27.அவர்கள் மோசேயை நோக்கி: நீர் எங்களை அனுப்பின தேசத்துக்கு நாங்கள் போய்வந்தோம்; அது பாலும் தேனும் ஓடுகிற தேசந்தான்; இது அதினுடைய கனி - எண்ணாகமம் 13:25-27
நித்திய ஜீவனை தரும் இந்த பாலையும் தேனையும், அதாவது இயேசு கிறிஸ்துவிடம் இருந்த சத்திய ஆவியை நாம் பெற்றுக் கொள்வதை தான், பரிசுத்தஆவியினாவர் என்னுடையதில் எடுத்து உங்களுக்கு தருவார் என்றும், அது போலவே இயேசு கிறிஸ்துவிடம் இருந்த கிருபையின் ஆவியை நாம் பெற்றுக் கொள்வதை தான், பிதா என்னுடையதில் எடுத்து உங்களுக்கு தருவார் என்று இயேசு கிறிஸ்து கூறினார் - 13.சத்திய ஆவியாகிய அவர் வரும்போது, சகல சத்தியத்திற்குள்ளும் உங்களை நடத்துவார்; அவர் தம்முடைய சுயமாய்ப் பேசாமல், தாம் கேள்விப்பட்டவைகள் யாவையுஞ்சொல்லி, வரப்போகிற காரியங்களை உங்களுக்கு அறிவிப்பார். 14.அவர் என்னுடையதில் எடுத்து உங்களுக்கு அறிவிப்பதினால் என்னை மகிமைப்படுத்துவார். 15.பிதாவினுடையவைகள் யாவும் என்னுடையவைகள்; அதினாலே அவர் என்னுடையதில் எடுத்து உங்களுக்கு அறிவிப்பார் என்றேன் - யோவான் 16:13-15
இப்படி தன்னுடைய திருத்துவதை மறைமுகமாக சொல்லிக் கொண்டு வந்த கர்த்தர், இன்னொரு உபதேசத்தில், என் நண்பனாக என்னோடே ஒருவர் இருக்கிறார், என்னோடு சிதறாமல் சேர்க்கிறவர் ஒருவர் இருக்கிறார் என்றும் இரண்டு பேரை குறிப்பிட்டார், அது யாராக இருக்கும்? அது பிதாவின் குமாரனும் பரிசுத்த ஆவியானவரின் குமாரனுமே அன்றி வேறு யாரும் இல்லை - 28.நான் தேவனுடைய ஆவியினாலே பிசாசுகளைத் துரத்துகிறபடியால், தேவனுடைய ராஜ்யம் உங்களிடத்தில் வந்திருக்கிறதே. 29.அன்றியும், பலவானை முந்திக் கட்டினாலொழியப் பலவானுடைய வீட்டுக்குள் ஒருவன் புகுந்து, அவன் உடைமைகளை எப்படிக் கொள்ளையிடக்கூடும்? கட்டினானேயாகில், அவன் வீட்டைக் கொள்ளையிடலாம். 30.என்னோடே இராதவன் எனக்கு விரோதியாயிருக்கிறான்; என்னோடே சேர்க்காதவன் சிதறடிக்கிறான் - மத்தேயு 12:28-30
இதை ஒரு உதாரணத்தோடு பார்த்தால் எளிதாக புரிந்து கொள்ளலாம், ஒரு பட்டணத்தில் ஒரு நல்ல நகை வியாபாரி இருந்தார், அந்த பட்டணத்தில் அவர் மாத்திரமே உண்மையான தங்க நகைகளையும் உண்மையான வைர நகைகளையும் விற்கிறவராய் இருந்தார், ஆனால் அந்த பட்டணத்தில் ஏராளமான போலி வியாபாரிகளும் இருந்தார்கள், அவர்களிடம் இருந்ததெல்லாம் கவரிங் நகைகளும் போலியான வைரங்களுமே, அதனால் அந்த நல்ல நகை வியாபாரி "எங்கள் கடையில் விற்காத நகைகள் தங்கமும் அல்ல", "நாங்கள் செதுக்காதது வைரங்களும் அல்ல" என்று சொன்னார், அப்படியென்றால் அந்த நல்ல வியாபாரியிடம் தான் உண்மையான தங்கமும் வைரமும் இருக்கிறது என்று தானே அர்த்தம், அது போல தான் இங்கு கர்த்தர் "என்னோடே இராதவன் எனக்கு விரோதியாயிருக்கிறான்" என்று சொன்னது, கர்த்தரோடு நல்ல நண்பர் ஒருவர் இருக்கிறார் என்றும், மேலும் "என்னோடே சேர்க்காதவன் சிதறடிக்கிறான்" என்று சொன்னது, கர்த்தரோடு சிதறாமல் சேர்க்கிற ஒருவர் இருக்கிறார் என்பதே அர்த்தமாய் இருக்கிறது.
ஒருவேளை அந்த நல்ல நகை வியாபாரி தன்னிடம் உண்மையான தங்கமும் வைரமும் இருக்க, போலியான தங்கதையும் வைரத்தையும் விற்று ஊராரை ஏமாற்றும் வியாபாரியை பார்த்தால் என்ன சொல்வார், தகரத்தையும் பீங்கானையும் விற்கிறவனே என்று தானே சொல்வார், அது போல தான் கர்த்தர் வேதபாரகரையும் பரிசேரையும் கொள்ளையினாலும் அநீதத்தினாலும் நிறைந்த போஜனபானபாத்திரங்களே என்று அழைத்தார் - 24.குருடரான வழிகாட்டிகளே, கொசுகில்லாதபடி (கொசு இல்லாதபடி) வடிகட்டி, ஒட்டகத்தை விழுங்குகிறவர்களாயிருக்கிறீர்கள். 25.மாயக்காரராகிய வேதபாரகரே! பரிசேயரே! உங்களுக்கு ஐயோ, போஜனபானபாத்திரங்களின் வெளிப்புறத்தைச் சுத்தமாக்குகிறீர்கள்; உட்புறத்திலோ அவைகள் கொள்ளையினாலும் அநீதத்தினாலும் நிறைந்திருக்கிறது - மத்தேயு 23:24-25
இன்னொரு இடத்தில், மாயத்தினாலும் அக்கிரமத்தினாலும் நிறைந்த மாயக்காரர்களே என்று அழைத்தார் - 28.அப்படியே நீங்களும் மனுஷருக்கு நீதிமான்கள் என்று புறம்பே காணப்படுகிறீர்கள்; உள்ளத்திலோ மாயத்தினாலும் அக்கிரமத்தினாலும் நிறைந்திருக்கிறீர்கள். 29.மாயக்காரராகிய வேதபாரகரே! பரிசேயரே! உங்களுக்கு ஐயோ, நீங்கள் தீர்க்கதரிசிகளின் கல்லறைகளைக் கட்டி, நீதிமான்களின் சமாதிகளைச் சிங்காரித்து: 30.எங்கள் பிதாக்களின் நாட்களில் இருந்தோமானால், அவர்களோடே நாங்கள் தீர்க்கதரிசிகளின் இரத்தப்பழிக்கு உடன்பட்டிருக்கமாட்டோம் என்கிறீர்கள். 31.ஆகையால், தீர்க்கதரிசிகளைக் கொலை செய்தவர்களுக்குப் புத்திரராயிருக்கிறீர்கள் என்று உங்களைக்குறித்து நீங்களே சாட்சிகளாயிருக்கிறீர்கள் - மத்தேயு 23:28-31
இன்னொரு இடத்தில், மரித்தவர்களின் எலும்புகளினாலும் சகல அசுத்தத்தினாலும் நிறைந்த கல்லறைகளே என்று அழைத்தார், இப்படி அழைத்ததிலும் கர்த்தருடைய பரிசுத்த திருத்துவம் விளங்கத்தான் செய்கிறது - 26.குருடனான பரிசேயனே! போஜனபானபாத்திரங்களின் வெளிப்புறம் சுத்தமாகும்படி அவைகளின் உட்புறத்தை முதலாவது சுத்தமாக்கு. 27.மாயக்காரராகிய வேதபாரகரே! பரிசேயரே! உங்களுக்கு ஐயோ, வெள்ளையடிக்கப்பட்ட கல்லறைகளுக்கு ஒப்பாயிருக்கிறீர்கள், அவைகள் புறம்பே அலங்காரமாய்க் காணப்படும், உள்ளேயோ மரித்தவர்களின் எலும்புகளினாலும் சகல அசுத்தத்தினாலும் நிறைந்திருக்கும் - மத்தேயு 23:26-27
முதல் பாகம்: இயேசு கிறிஸ்துவின் திரித்துவம்