கர்த்தரின் பதில் எப்படி இருந்திருக்கும்?
கர்த்தரின் பதில் எப்படி இருந்திருக்கும்?
இயேசு கிறிஸ்துவின் சகல காரியங்களையும் விளக்கிச் சொன்ன சுவிசேஷ புத்தகங்கள், கெனேசரேத்து நாட்டு மக்கள் கர்த்தரிடம், உம்முடைய வஸ்திரத்தின் ஓரத்தையாகிலும் தொட்டு கொள்ளலாமா என்று கேட்டதற்கு, கர்த்தர் என்ன பதில் சொன்னார் என்பதை பற்றி ஒன்றும் குறிப்பிடாமல் போனதென்ன? - 34.பின்பு, அவர்கள் கடலைக் கடந்து, கெனேசரேத்து நாட்டில் சேர்ந்தார்கள். 35.அவ்விடத்து மனுஷர் அவரை இன்னார் என்று அறிந்து, சுற்றுப்புறமெங்கும் செய்தி அனுப்பி, பிணியாளிகளெல்லாரையும் அவரிடத்தில் கொண்டுவந்து, 36.அவருடைய வஸ்திரத்தின் ஓரத்தையாகிலும் அவர்கள் தொடும்படி உத்தரவாகவேண்டுமென்று அவரை வேண்டிக்கொண்டார்கள்; தொட்ட யாவரும் சொஸ்தமானார்கள் - மத்தேயு 14:34-36
மார்கு எழுதின சுவிசேஷ புத்தகத்திலும், கெனேசரேத்து நாட்டு மக்கள் உம்முடைய வஸ்திரத்தின் ஓரத்தையாகிலும் தொட்டு கொள்ளலாமா என்று கேட்டார்கள் என்று சொல்லப்பட்டுள்ளது, ஆனால் கர்த்தர் அவர்களுக்கு என்ன பதில் சொன்னார் என்பதை பற்றி ஒன்றும் குறிப்பிடாமல் போனதென்ன? 53.அவர்கள் கடலைக் கடந்து கெனேசரேத்தென்னும் நாட்டிற்கு வந்து, கரை பிடித்தார்கள். 54.அவர்கள் படவிலிருந்து இறங்கினவுடனே, ஜனங்கள் அவரை அறிந்து, 55.அந்தச் சுற்றுப்புறமெங்கும் ஓடித்திரிந்து, பிணியாளிகளைப் படுக்கைகளில் கிடத்தி, அவர் வந்திருக்கிறார் என்று கேள்விப்பட்ட இடங்களிலெல்லாம் சுமந்து கொண்டுவந்தார்கள். 56.அல்லாமலும் அவர் பிரவேசித்த கிராமங்கள் பட்டணங்கள் நாடுகள் எவைகளோ, அவைகளின் சந்தைவெளிகளிலே வியாதிக்காரரை வைத்து, அவருடைய வஸ்திரத்தின் ஓரத்தையாகிலும் அவர்கள் தொடும்படி உத்தரவாகவேண்டும் என்று அவரை வேண்டிக்கொண்டார்கள்; அவரைத் தொட்ட யாவரும் சொஸ்தமானார்கள் - மாற்கு 6:53-56
இறுதியில், ஜனங்கள் கர்த்தரை தொட்டு சுகமடைந்தார்கள் என்று பார்க்கிறோம், அப்படியென்றால் கர்த்தர் என்ன சொல்லி தன்னை தொட்டு கொள்ள அனுமதித்திருப்பார், கர்த்தர் அவர்களுக்கு சொன்ன பதில் என்னவாக இருந்திருக்கும்?
"சரி தொடுங்கள்" என்று சொல்லி இருப்பாரோ?
இல்லையென்றால், "தொடுங்கள், இனி மேல் இந்த மாதிரி கேட்க கூடாது" என்று சொல்லி இருப்பாரோ?
இல்லையென்றால் "பிள்ளைகள் தகப்பனிடம் இப்படி கேட்கலாமா" என்று சொல்லி இருப்பாரோ?
இல்லையென்றால் "தொடுங்கள், இதற்காகத் தானே இந்த பூமிக்கு வந்தேன்" என்று சொல்லி இருப்பாரோ?
உண்மை என்னவென்றால், இயேசு கிறிஸ்துவின் தெய்வீக அன்பு நிறைந்த பதிலுக்கு ஈடான வார்த்தைகள் கிடையாது, அதனால் தான் மத்தேயுவும் மற்றும் மார்கும் கர்த்தர் என்ன பதில் சொன்னார் என்பதை எழுதாமல் விட்டு விட்டார்கள், அவரே நமக்காக தன்னையே தந்த அன்பின் தெய்வம்!