பலிபீடம், தேவாலயம், சிங்காசனம்
இயேசு கிறிஸ்து திரியேக தேவனாக, அதாவது பிதா, வார்த்தை, பரிசுத்த ஆவியானவரின் தற்சுரூபமாய் இருக்கிறார்
இயேசு கிறிஸ்து திரியேக தேவனாக, அதாவது பிதா, வார்த்தை, பரிசுத்த ஆவியானவரின் தற்சுரூபமாய் இருக்கிறார்
முந்தைய பாகம்: நிறைவேற்றுகிறதற்கே வந்தேன்
நம் இரட்சகராகிய இயேசு கிறிஸ்து, வார்த்தையானவரின் குமாரன் மாத்திரம் அல்ல, அவருக்குள் பிதாவானவரின் குமாரனும், பரிசுத்த ஆவியானவரின் குமாரனும் வாசம் செய்தார்கள் என்பதையும், இம்மூவரும் நம்முடைய இரட்சிப்புக்காக சிலுவையில் பாடுகளை அனுபவித்தார்கள் என்பதையும் கடந்த தொகுப்புகளில் பார்த்தோம், இந்த தொகுப்பில், சிலுவையில் இம்மூவரும் நமக்காக பாடுபட்ட பொழுது, பரலோகத்தில் பிதா, வார்த்தை, பரிசுத்த ஆவியாகிய மூவரும் அதே பாடுகளை அனுபவித்தார்கள் என்பதை பார்ப்போம்.
இங்கு இயேசு கிறிஸ்து "பொன்னைப் பரிசுத்தமாக்குகிற தேவாலயமோ?", "காணிக்கையைப் பரிசுத்தமாக்குகிற பலிபீடமோ?" என்று கேட்டதின் அர்த்தம் என்ன? - 16.குருடரான வழிகாட்டிகளே! உங்களுக்கு ஐயோ, எவனாகிலும் தேவாலயத்தின்பேரில் சத்தியம்பண்ணினால் அதினால் ஒன்றுமில்லையென்றும், எவனாகிலும் தேவாலயத்தின் பொன்னின்பேரில் சத்தியம்பண்ணினால் அவன் கடனாளியென்றும் சொல்லுகிறீர்கள். 17.மதிகேடரே, குருடரே! எது முக்கியம்? பொன்னோ, பொன்னைப் பரிசுத்தமாக்குகிற தேவாலயமோ? 18.மேலும், எவனாகிலும் பலிபீடத்தின் பேரில் சத்தியம்பண்ணினால் அதினால் ஒன்றுமில்லையென்றும், எவனாகிலும் அதின்மேல் இருக்கிற காணிக்கையின்பேரில் சத்தியம்பண்ணினால் அவன் கடனாளி என்றும் சொல்லுகிறீர்கள். 19.மதிகேடரே, குருடரே! எது முக்கியம்? காணிக்கையோ, காணிக்கையைப் பரிசுத்தமாக்குகிற பலிபீடமோ? - மத்தேயு 23:16-19
முதலாவது பரிசுத்தம் பண்ணும் அதிகாரம் உள்ளவர் தேவன் மாத்திரமே என்பதை அறிந்துக் கொள்ள வேண்டும், அப்படியென்றால் இங்கு உவமையாக சொல்லப்பட்ட "பரிசுத்தமாக்குகிற தேவாலயமும்", "பரிசுத்தமாக்குகிற பலிபீடமும்" தேவனை தானே குறிக்க வேண்டும்? இங்கு கர்த்தர் சொன்ன "தேவாலயம்" என்பது பிதாவானவரின் குமாரனையும், "பலிபீடம்" என்பது வார்த்தையானவரின் குமாரனையும் குறிக்கிறது.
இப்படி இயேசு கிறிஸ்து தான் பிதாவானவரின் குமாரனாகவும் [தேவாலயமாகவும்], வார்த்தையானவரின் குமாரனாகவும் [பலிபீடமாகவும்] இருப்பதை சொல்லி, தங்களோடு பரிசுத்த ஆவியானவரின் குமாரனும் இருப்பதை தேவாலயத்துக்கும் பலிபீடத்துக்கும் நடுவே நிற்கும் பரகியாவின் குமாரனாகிய சகரியா என்று சொன்னார் - 35.நீதிமானாகிய ஆபேலின் இரத்தம்முதல் தேவாலயத்துக்கும் பலிபீடத்துக்கும் நடுவே நீங்கள் கொலைசெய்த பரகியாவின் குமாரனாகிய சகரியாவின் இரத்தம்வரைக்கும், பூமியின்மேல் சிந்தப்பட்ட நீதிமான்களின் இரத்தப்பழியெல்லாம் உங்கள்மேல் வரும்படியாக இப்படிச் செய்வீர்கள். 36.இவைகளெல்லாம் இந்தச் சந்ததியின்மேல் வருமென்று, மெய்யாகவே உங்களுக்குச் சொல்லுகிறேன் - மத்தேயு 23:35-36
மேலும் அதே அதிகாரத்தில் தானே, இம்மூவரும் நம்முடைய இரட்சிப்புக்காக சிலுவையில் பாடு பட்டார்கள் என்பதை, பிதாவானவரின் குமாரனை "தீர்க்கதரிசி" என்றும், வார்த்தையானவரின் குமாரனை "ஞானி" என்றும், பரிசுத்த ஆவியானவரின் குமாரனை "வேதபாரகர்" என்றும் உவமையாக சொல்லி இப்படிச் சொன்னார் - 34.ஆகையால், இதோ, தீர்க்கதரிசிகளையும் ஞானிகளையும் வேதபாரகரையும் உங்களிடத்தில் அனுப்புகிறேன்; அவர்களில் சிலரைக் கொன்று சிலுவைகளில் அறைவீர்கள், சிலரை உங்கள் ஆலயங்களில் வாரினால் அடித்து, ஊருக்கு ஊர் துன்பப்படுத்துவீர்கள் - மத்தேயு 23:34
லூக்காவின் புஸ்தகத்தில், வார்த்தையானவரின் குமாரனை தேவஞானம் என்றும், பிதாவானவரின் குமாரனை "தீர்க்கதரிசி" என்றும், பரிசுத்த ஆவியானவரின் குமாரனை "அப்போஸ்தலர்" என்றும் உவமையாக சொல்லப்பட்டுள்ளது - 49.ஆதலால் தேவஞானமானது: நான் தீர்க்கதரிசிகளையும் அப்போஸ்தலர்களையும் அவர்களிடத்தில் அனுப்புவேன்; அவர்களில் சிலரைக் கொலைசெய்து, சிலரைத் துன்பப்படுத்துவார்கள் - லூக்கா 11:49
மேலும் சிலுவையில் இம்மூவரும் நமக்காக பாடுபடும் பொழுது, பரலோகத்திலிருந்த பிதா, வார்த்தை, பரிசுத்த ஆவியானவரும் அதே வேதனைகளை அடைவார்கள் என்றும் சொன்னார், எப்படியெனில் வார்த்தையானவரின் குமாரன் மேல்[பலிபீடத்தின்பேரில்] சத்தியம் பண்ணுகிறவன் வார்த்தையானவரின் பேரில் சத்தியம்பண்ணுகிறான், அதாவது வார்த்தையானவரின் குமாரனை சிலுவையில் அறைகிறவன் வார்த்தையானவரையே சிலுவையில் அறைகிறான் என்றார் - 20.ஆகையால், பலிபீடத்தின்பேரில் சத்தியம் பண்ணுகிறவன் அதின்பேரிலும் அதின்மேலுள்ள எல்லாவற்றின்பேரிலும் சத்தியம்பண்ணுகிறான் - மத்தேயு 23:20
மேலும் தன்னோடிருக்கும் பிதாவினுடைய குமாரன் மேல்[தேவாலயத்தின்பேரில்] சத்தியம் பண்ணுகிறவன் பிதாவானவரின் பேரில் சத்தியம்பண்ணுகிறான் என்றும், பரிசுத்த ஆவியானவரின் குமாரன் மேல்[வானத்தில் தேவனுடைய சிங்காசனத்தின் பேரில்] சத்தியம் பண்ணுகிறவன் பரிசுத்த ஆவியானவரின் பேரில் சத்தியம்பண்ணுகிறான் என்றும் சொன்னார் - 21.தேவாலயத்தின்பேரில் சத்தியம்பண்ணுகிறவன் அதின்பேரிலும் அதில் வாசமாயிருக்கிறவர்பேரிலும் சத்தியம்பண்ணுகிறான். 22.வானத்தின்பேரில் சத்தியம் பண்ணுகிறவன் தேவனுடைய சிங்காசனத்தின் பேரிலும் அதில் வீற்றிருக்கிறவர் பேரிலும் சத்தியம் பண்ணுகிறான் - மத்தேயு 23:21-22
இப்படியாக "பலிபீடம்" என்பது மாமிசத்தில் வெளிப்பட்டிருந்த வார்த்தையானவரின் குமாரனையும், "தேவாலயம்" என்பது பிதாவினுடைய குமாரனையும், "வானத்தில் தேவனுடைய சிங்காசனம்" என்பது பரிசுத்த ஆவியானவரின் குமாரனையும் குறிப்பதினால் தான், பிசாசானவன், முதலாவது மாமிசத்தில் வெளிப்பட்டிருந்த வார்த்தையானவரின் குமாரனை [பலிபீடமாக வெளிப்பட்டவரை] சரிரத்திற்கு அடுத்த காரியமான ஆகாரத்தை கொண்டு சோதித்தான் - 1.அப்பொழுது இயேசு பிசாசினால் சோதிக்கப்படுவதற்கு ஆவியானவராலே வனாந்தரத்திற்குக் கொண்டுபோகப்பட்டார். 2.அவர் இரவும் பகலும் நாற்பது நாள் உபவாசமாயிருந்தபின்பு, அவருக்குப் பசியுண்டாயிற்று. 3.அப்பொழுது சோதனைக்காரன் அவரிடத்தில் வந்து: நீர் தேவனுடைய குமாரனேயானால், இந்தக் கல்லுகள் அப்பங்களாகும்படி சொல்லும் என்றான். 4.அவர் பிரதியுத்தரமாக: மனுஷன் அப்பத்தினாலேமாத்திரமல்ல, தேவனுடைய வாயிலிருந்து புறப்படுகிற ஒவ்வொரு வார்த்தையினாலும் பிழைப்பான் என்று எழுதியிருக்கிறதே என்றார் - மத்தேயு:1-4
அடுத்ததாக, பிதாவானவரின் குமாரனை [தேவாலயமாக வெளிப்பட்டவரை] தேவாலயத்து உப்பரிகையின்மேல் நிறுத்தி சோதித்தான் - 5.அப்பொழுது பிசாசு அவரைப் பரிசுத்த நகரத்திற்குக் கொண்டுபோய், தேவாலயத்து உப்பரிகையின்மேல் அவரை நிறுத்தி: 6.நீர் தேவனுடைய குமாரனேயானால் தாழக்குதியும்; ஏனெனில், தம்முடைய தூதர்களுக்கு உம்மைக்குறித்துக் கட்டளையிடுவார்; உமது பாதம் கல்லில் இடறாதபடிக்கு, அவர்கள் உம்மைக் கைகளில் ஏந்திக்கொண்டு போவார்கள் என்பதாய் எழுதியிருக்கிறது என்று சொன்னான். 7.அதற்கு இயேசு: உன் தேவனாகிய கர்த்தரைப் பரீட்சை பாராதிருப்பாயாக என்றும் எழுதியிருக்கிறதே என்றார்.
அடுத்ததாக, பரிசுத்த ஆவியானவரின் குமாரனை [வானத்தில் தேவனுடைய சிங்காசனமாக வெளிப்பட்டவரை] மிகவும் உயர்ந்த மலையின்மேல் கொண்டுபோய் சோதித்தான் - 8.மறுபடியும், பிசாசு அவரை மிகவும் உயர்ந்த மலையின்மேல் கொண்டுபோய், உலகத்தின் சகல ராஜ்யங்களையும் அவைகளின் மகிமையையும் அவருக்குக் காண்பித்து: 9.நீர் சாஷ்டாங்கமாய் விழுந்து, என்னைப் பணிந்துகொண்டால், இவைகளையெல்லாம் உமக்குத் தருவேன் என்று சொன்னான். 10.அப்பொழுது இயேசு: அப்பாலே போ சாத்தானே; உன் தேவனாகிய கர்த்தரைப் பணிந்துகொண்டு, அவர் ஒருவருக்கே ஆராதனை செய்வாயாக என்று எழுதியிருக்கிறதே என்றார். 11.அப்பொழுது பிசாசானவன் அவரைவிட்டு விலகிப்போனான். உடனே தேவதூதர்கள் வந்து, அவருக்குப் பணிவிடை செய்தார்கள் - மத்தேயு:1-11
மத்தேயுவின் புத்தகத்தில் தேவாலயத்தில் வாசம் பண்ணுகிறவரை முதலாவது சொல்லி, அடுத்ததாக வானத்தில் தேவனுடைய சிங்காசனத்தில் வீற்றிருக்கிறவரை குறித்துச் சொல்லப்பட்டுள்ளது, ஆனால் லூக்காவின் சுவிசேஷ புத்தகத்தில் வானத்தில் தேவனுடைய சிங்காசனத்தில் வீற்றிருக்கிறவரை முதலாவது சொல்லி, அதன் பின்பு தேவாலயத்தில் வாசம் பண்ணுகிறவரை குறித்துச் சொல்லப்பட்டதற்கு காரணம் திருத்துவத்தில் மூவருமே சமமானவர்கள் என்பதை விளக்க மாத்திரமா? 1.இயேசு பரிசுத்த ஆவியினாலே நிறைந்தவராய் யோர்தானை விட்டுத் திரும்பி, ஆவியானவராலே வனாந்தரத்திற்குக் கொண்டு போகப்பட்டு, 2.நாற்பதுநாள் பிசாசினால் சோதிக்கப்பட்டார். அந்த நாட்களில் அவர் ஒன்றும் புசியாதிருந்தார்; அந்த நாட்கள் முடிந்தபின்பு அவருக்குப் பசியுண்டாயிற்று. 3.அப்பொழுது பிசாசு அவரை நோக்கி: நீர் தேவனுடைய குமாரனேயானால், இந்தக் கல் அப்பமாகும்படி சொல்லும் என்றான். 4.அவர் பிரதியுத்தரமாக: மனுஷன் அப்பத்தினாலேமாத்திரமல்ல, தேவனுடைய ஒவ்வொரு வார்த்தையினாலும் பிழைப்பான் என்று எழுதியிருக்கிறதே என்றார். 5.பின்பு பிசாசு அவரை உயர்ந்த மலையின்மேல் கொண்டுபோய், உலகத்தின் சகல ராஜ்யங்களையும் ஒரு நிமிஷத்திலே அவருக்குக் காண்பித்து: 6.இவைகள் எல்லாவற்றின்மேலுமுள்ள அதிகாரத்தையும் இவைகளின் மகிமையையும் உமக்குத் தருவேன், இவைகள் எனக்கு ஒப்புக்கொடுக்கப்பட்டிருக்கிறது; எனக்கு இஷ்டமானவனுக்கு இவைகளைக் கொடுக்கிறேன். 7.நீர் என்னைப் பணிந்துகொண்டால் எல்லாம் உம்முடையதாகும் என்று சொன்னான். 8.இயேசு அவனுக்குப் பிரதியுத்தரமாக: எனக்குப் பின்னாகப்போ சாத்தானே, உன் தேவனாகிய கர்த்தரைப் பணிந்துகொண்டு, அவர் ஒருவருக்கே ஆராதனைசெய்வாயாக என்று எழுதியிருக்கிறதே என்றார். 9.அப்பொழுது அவன் அவரை எருசலேமுக்குக் கொண்டுபோய், தேவாலயத்து உப்பரிகையின்மேல் அவரை நிறுத்தி: நீர் தேவனுடைய குமாரனேயானால், இங்கேயிருந்து தாழக்குதியும். 10.ஏனெனில், உம்மைக் காக்கும்படிக்குத் தம்முடைய தூதர்களுக்கு உம்மைக்குறித்துக் கட்டளையிடுவார் என்றும், 11.உமது பாதம் கல்லில் இடறாதபடிக்கு, அவர்கள் உம்மைக் கைகளில் ஏந்திக்கொண்டுபோவார்கள் என்றும், எழுதியிருக்கிறது என்று சொன்னான். 12.அதற்கு இயேசு: உன் தேவனாகிய கர்த்தரைப் பரீட்சை பாராதிருப்பாயாக என்று சொல்லியிருக்கிறதே என்றார். 13.பிசாசானவன் சோதனையெல்லாம் முடித்தபின்பு, சிலகாலம் அவரை விட்டு விலகிப்போனான் - லூக்கா 4:1-13
மத்தேயுவின் புத்தகத்தில், இயேசு கிறிஸ்து தன்னை யோனாவோடு ஒப்பிட்டு சொல்லி, தனக்குள் வாசம் செய்யும் பிதாவானவரின் ஆவியானவரை யோனாவிலும் பெரியவர் இங்கே இருக்கிறார் என்றும், பரிசுத்த ஆவியானவரை சாலொமோனிலும் பெரியவர் இங்கே இருக்கிறார் என்று சொன்னார் - 40.யோனா இரவும் பகலும் மூன்றுநாள் ஒரு பெரிய மீனின் வயிற்றில் இருந்ததுபோல, மனுஷகுமாரனும் இரவும் பகலும் மூன்றுநாள் பூமியின் இருதயத்தில் இருப்பார். 41.யோனாவின் பிரசங்கத்தைக் கேட்டு நினிவே பட்டணத்தார் மனந்திரும்பினார்கள். இதோ, யோனாவிலும் பெரியவர் இங்கே இருக்கிறார். ஆதலால் நியாயத்தீர்ப்புநாளிலே நினிவே பட்டணத்தார் இந்தச் சந்ததியாரோடெழுந்து நின்று இவர்கள்மேல் குற்றஞ்சுமத்துவார்கள். 42.தென்தேசத்து ராஜஸ்திரீ பூமியின் எல்லைகளிலிருந்து சாலொமோனுடைய ஞானத்தைக் கேட்க வந்தாள். இதோ, சாலொமோனிலும் பெரியவர் இங்கே இருக்கிறார். ஆதலால் நியாயத்தீர்ப்புநாளிலே அந்த ராஜஸ்திரீ இந்தச் சந்ததியாரோடெழுந்து நின்று இவர்கள்மேல் குற்றஞ்சுமத்துவாள் - மத்தேயு 12:41-42
ஆனால், லூக்காவின் சுவிசேஷ புத்தகத்தில், சாலொமோனிலும் பெரியவரை முதலாவது சொல்லி, அதன் பின்பு யோனாவிலும் பெரியவரை குறித்துச் சொல்லப்பட்டுள்ளது - 30.யோனா நினிவே பட்டணத்தாருக்கு அடையாளமாயிருந்ததுபோல, மனுஷகுமாரனும் இந்தச் சந்ததிக்கு அடையாளமாயிருப்பார். 31.தென்தேசத்து ராஜஸ்திரீ சாலொமோனுடைய ஞானத்தைக் கேட்க பூமியின் எல்லைகளிலிருந்து வந்தாள்; இதோ, சாலொமோனிலும் பெரியவர் இங்கே இருக்கிறார்; ஆதலால் நியாயத்தீர்ப்புநாளிலே அந்த ராஜஸ்திரீ இந்தச் சந்ததியாரோடெழுந்து நின்று, இவர்கள்மேல் குற்றஞ்சுமத்துவாள். 32.யோனாவின் பிரசங்கத்தைக் கேட்டு நினிவே பட்டணத்தார் மனந்திரும்பினார்கள்; இதோ, யோனாவிலும் பெரியவர் இங்கே இருக்கிறார்; ஆதலால் நியாயத்தீர்ப்புநாளிலே நினிவே பட்டணத்தார் இந்தச் சந்ததியாரோடெழுந்து நின்று, இவர்கள்மேல் குற்றஞ்சுமத்துவார்கள் - லூக்கா 11:30-32
இங்கு நினிவே பட்டணத்தாருக்கு யோனாவிலும் பெரியவரை குறித்து பிரசிங்கிக்கப்பட்டது, கேட்டு ஏற்றுக் கொண்டவர்கள் நரக அக்கினிக்கு நீங்கலாக்கி இரட்சிக்கப்பட்டார்கள், அது போல தான் இயேசு கிறிஸ்துவை குறித்து அவரே தேவன் என்று [பிதாவானவரின் குமாரனாகவும் இருக்கிறார் என்று] பிரசங்கிக்கப்படுகிறது, அநேகரும் இரட்சிக்கப்படுகிறார்கள்.
ஆனால் தென்தேசத்து ராஜஸ்திரீயோ சாலொமோனுடைய ஞானத்தை [சாலொமோனிலும் பெரியவரை] கேட்டு பெற்றுக் கொள்ள வந்தாள், அது போலவே நாமும் வாஞ்சித்து பெற்றுக் கொள்ள வேண்டியவராய் பரிசுத்த ஆவியானவர் இருக்கிறார்.
அது மாத்திரம் இல்லாமல், அந்த நினிவே பட்டணத்தார் அநேகராய் இருந்தது போல இயேசு கிறிஸ்துவை தேவன் என்று ஏற்றுக் கொண்டவர்கள் அநேகராய் இருக்கிறார்கள், ஆனால் சாலொமோனுடைய ஞானத்தை பெற்றுக் கொண்டதென்தேசத்து ராஜஸ்திரீயை போல, பரிசுத்த ஆவியை பெற்றுக் கொள்கிறவர்களோ வெகு சிலராய் இருக்கிறார்கள்.
அதனால், நாம் வார்த்தையானவரின் குமாரனின் இரத்தத்தால் கழுவப்பட்டு, அவர் பிதாவானவரின் குமாரனுமாய் இருக்கிறார் என்று அவரின் கிருபையை பெற்றுக் கொண்டு, பரிசுத்த ஆவியானவரை வாஞ்சித்து சத்திய ஆவியை பெற்றுக் கொண்டவர்களாய் இருக்க வேண்டும்.
மேலும், மத்தேயுவின் புத்தகத்தின் படி, சிலர் சுவிஷேச கூட்டங்களின் மூலமாக யோனாவிலும் பெரியவரை விசுவாசித்து, அதன் பின்பு, சாலொமோனிலும் பெரியவரை பெற்றுக் கொள்கிறார்கள். சிலர், லூக்காவின் சுவிசேஷ புத்தகத்தின் படி, சாலொமோனிலும் பெரியவரின் நடத்துதலால் யோனாவிலும் பெரியவரை கண்டு கொள்கிறார்கள்.
சிங்காசனம், தேவாலயம், பலிபீடம்
இப்படி தேவகுமாரனாகிய இயேசு கிறிஸ்து, வார்த்தையானவரின் குமாரனாகவும் [பலிபீடம்], பிதாவானவரின் குமாரனாகவும் [தேவாலயம்], பரிசுத்த ஆவியானவரின் குமாரனாகவும் [சிங்காசனம்] இருக்கிறார், அந்த மூன்று பேரையும் பெற்றுக் கொண்டதினால் தான், அதாவது சிங்காசம், தேவாலயம், மற்றும் பலிபீட அனுபவத்தை பெற்றதினால் தான் ஏசாயா தீர்க்கதரிசி தேவனால் வல்லமையாக பயன்படுத்தப்பட்டார் - 1.உசியா ராஜா மரணமடைந்த வருஷத்தில், ஆண்டவர் உயரமும் உன்னதமுமான சிங்காசனத்தின்மேல் வீற்றிருக்கக்கண்டேன்; அவருடைய வஸ்திரத்தொங்கலால் தேவாலயம் நிறைந்திருந்தது. 2.சேராபீன்கள் அவருக்கு மேலாக நின்றார்கள்; அவர்களில் ஒவ்வொருவனுக்கும் அவ்வாறு செட்டைகளிருந்தன; அவனவன் இரண்டு செட்டைகளால் தன் தன் முகத்தை மூடி, இரண்டு செட்டைகளால் தன் தன் கால்களை மூடி, இரண்டு செட்டைகளால் பறந்து; 3.ஒருவரையொருவர் நோக்கி: சேனைகளின் கர்த்தர் பரிசுத்தர், பரிசுத்தர், பரிசுத்தர், பூமியனைத்தும் அவருடைய மகிமையால் நிறைந்திருக்கிறது என்று கூப்பிட்டுச் சொன்னார்கள். 4.கூப்பிடுகிறவர்களின் சத்தத்தால் வாசல்களின் நிலைகள் அசைந்து, ஆலயம் புகையினால் நிறைந்தது. 5.அப்பொழுது நான்: ஐயோ! அதமானேன், நான் அசுத்த உதடுகளுள்ள மனுஷன், அசுத்த உதடுகளுள்ள ஜனங்களின் நடுவில் வாசமாயிருக்கிறவன்; சேனைகளின் கர்த்தராகிய ராஜாவை என் கண்கள் கண்டதே என்றேன். 6.அப்பொழுது சேராபீன்களில் ஒருவன் பலிபீடத்திலிருந்து, தன் கையிலே பிடித்த குறட்டால் ஒரு நெருப்புத் தழலை எடுத்து, என்னிடத்தில் பறந்து வந்து, 7.அதினால் என் வாயைத் தொட்டு: இதோ, இது உன் உதடுகளைத் தொட்டதினால் உன் அக்கிரமம் நீங்கி, உன் பாவம் நிவிர்த்தியானது என்றான் - ஏசாயா 6:1-7
அடுத்த பாகம்: சகரியாவின் விளக்கம்