பண்டிகைப்பலியைக் கொண்டுபோய் பலிபீடத்தின் கொம்புகளில் கயிறுகளால் கட்டுங்கள் என்று இயேசு கிறிஸ்துவின் சிலுவை மரணத்தை குறித்து சங்கீதகாரன் தீர்க்கதரிசனமாய் சொன்னபொழுது, இயேசு கிறிஸ்து எருசலேமுக்குள் பிரவேசிக்கையில் "ஓசன்னா! கர்த்தருடைய நாமத்தினாலே வருகிறவர் ஸ்தோத்திரிக்கப்பட்டவர்" என்று ஜனங்கள் ஆர்ப்பரிக்க போவதை குறித்தும் தீர்க்கதரிசனம் சொல்லியிருந்தார் - 24.இது கர்த்தர் உண்டுபண்ணின நாள், இதிலே களிகூர்ந்து மகிழக்கடவோம். 25.கர்த்தாவே, இரட்சியும் (ஓசன்னா); கர்த்தாவே, காரியத்தை வாய்க்கப்பண்ணும். 26.கர்த்தருடைய நாமத்தினாலே வருகிறவர் ஸ்தோத்திரிக்கப்பட்டவர்; கர்த்தருடைய ஆலயத்திலிருந்து உங்களை ஆசீர்வதிக்கிறோம். 27.கர்த்தர் நம்மைப் பிரகாசிப்பிக்கிற தேவனாயிருக்கிறார்; பண்டிகைப்பலியைக் கொண்டுபோய் பலிபீடத்தின் கொம்புகளில் கயிறுகளால் கட்டுங்கள். 28.நீர் என் தேவன், நான் உம்மைத் துதிப்பேன்; நீர் என் தேவன், நான் உம்மை உயர்த்துவேன். 29.கர்த்தரைத் துதியுங்கள், அவர் நல்லவர்; அவர் கிருபை என்றுமுள்ளது - சங்கீதம் 118:24-29
இதில் ஓசன்னா(ஹோஷி-யன்னா) என்கிற வார்த்தைக்கு கர்த்தாவே இரட்சியும் என்பது அர்த்தமாகும், இப்படி சங்கீதகாரன் தீர்க்கதரிசனமாய் சொல்லியிருந்ததை, ஏறக்குறைய 800 ஆண்டுகள் கழித்து, இயேசு கிறிஸ்து எருசலேம் நகரத்திற்குள் பண்டிகைப்பலியாய் பிரவேசிக்கையில் மக்கள் பாடி நிறைவேற்றினார்கள் - 6.சீஷர்கள் போய், இயேசு தங்களுக்குக் கட்டளையிட்டபடியே செய்து, 7.கழுதையையும் குட்டியையும் கொண்டுவந்து, அவைகள்மேல் தங்கள் வஸ்திரங்களைப் போட்டு, அவரை ஏற்றினார்கள். 8.திரளான ஜனங்கள் தங்கள் வஸ்திரங்களை வழியிலே விரித்தார்கள்; வேறு சிலர் மரக்கிளைகளைத் தறித்து வழியிலே பரப்பினார்கள். 9.முன்நடப்பாரும், பின்நடப்பாருமாகிய திரளான ஜனங்கள்: தாவீதின் குமாரனுக்கு ஓசன்னா! கர்த்தரின் நாமத்தினாலே வருகிறவர் ஸ்தோத்திரிக்கப்பட்டவர், உன்னதத்திலே ஓசன்னா என்று சொல்லி ஆர்ப்பரித்தார்கள். 10.அவர் எருசலேமுக்குள் பிரவேசிக்கையில், நகரத்தார் யாவரும் ஆச்சரியப்பட்டு, இவர் யார்? என்று விசாரித்தார்கள். 11.அதற்கு ஜனங்கள்: இவர் கலிலேயாவிலுள்ள நாசரேத்திலிருந்து வந்த தீர்க்கதரிசியாகிய இயேசு என்றார்கள் - மத்தேயு 21:6-11