அவரைத் தொட்ட யாவரும்
அவரைத் தொட்ட யாவரும்
முந்தைய பாகம்: இனிப் பாவஞ்செய்யாதே
இயேசு கிறிஸ்துவின் சகல காரியங்களையும் விளக்கிச் சொன்ன சுவிசேஷ புத்தகங்கள், கெனேசரேத்து நாட்டு மக்கள் கர்த்தரிடம், உம்முடைய வஸ்திரத்தின் ஓரத்தையாகிலும் தொட்டு கொள்ளலாமா என்று கேட்டதற்கு, கர்த்தர் என்ன பதில் சொன்னார் என்பதை பற்றி ஒன்றும் குறிப்பிடாமல் போனதென்ன? - 34.பின்பு, அவர்கள் கடலைக் கடந்து, கெனேசரேத்து நாட்டில் சேர்ந்தார்கள். 35.அவ்விடத்து மனுஷர் அவரை இன்னார் என்று அறிந்து, சுற்றுப்புறமெங்கும் செய்தி அனுப்பி, பிணியாளிகளெல்லாரையும் அவரிடத்தில் கொண்டுவந்து, 36.அவருடைய வஸ்திரத்தின் ஓரத்தையாகிலும் அவர்கள் தொடும்படி உத்தரவாகவேண்டுமென்று அவரை வேண்டிக்கொண்டார்கள்; தொட்ட யாவரும் சொஸ்தமானார்கள் - மத்தேயு 14:34-36
மார்கு எழுதின சுவிசேஷ புத்தகத்திலும், கெனேசரேத்து நாட்டு மக்கள் உம்முடைய வஸ்திரத்தின் ஓரத்தையாகிலும் தொட்டு கொள்ளலாமா என்று கேட்டார்கள் என்று சொல்லப்பட்டுள்ளது, ஆனால் கர்த்தர் அவர்களுக்கு என்ன பதில் சொன்னார் என்பதை பற்றி ஒன்றும் குறிப்பிடாமல் போனதென்ன? 53.அவர்கள் கடலைக் கடந்து கெனேசரேத்தென்னும் நாட்டிற்கு வந்து, கரை பிடித்தார்கள். 54.அவர்கள் படவிலிருந்து இறங்கினவுடனே, ஜனங்கள் அவரை அறிந்து, 55.அந்தச் சுற்றுப்புறமெங்கும் ஓடித்திரிந்து, பிணியாளிகளைப் படுக்கைகளில் கிடத்தி, அவர் வந்திருக்கிறார் என்று கேள்விப்பட்ட இடங்களிலெல்லாம் சுமந்து கொண்டுவந்தார்கள். 56.அல்லாமலும் அவர் பிரவேசித்த கிராமங்கள் பட்டணங்கள் நாடுகள் எவைகளோ, அவைகளின் சந்தைவெளிகளிலே வியாதிக்காரரை வைத்து, அவருடைய வஸ்திரத்தின் ஓரத்தையாகிலும் அவர்கள் தொடும்படி உத்தரவாகவேண்டும் என்று அவரை வேண்டிக்கொண்டார்கள்; அவரைத் தொட்ட யாவரும் சொஸ்தமானார்கள் - மாற்கு 6:53-56
இறுதியில், ஜனங்கள் கர்த்தரை தொட்டு சுகமடைந்தார்கள் என்று பார்க்கிறோம், அப்படியென்றால் கர்த்தர் என்ன சொல்லி தன்னை தொட்டு கொள்ள அனுமதித்திருப்பார், கர்த்தர் அவர்களுக்கு சொன்ன பதில் என்னவாக இருந்திருக்கும்?
"சரி தொடுங்கள்" என்று சொல்லி இருப்பாரோ?
இல்லையென்றால், "தொடுங்கள், இனி மேல் இந்த மாதிரி கேட்க கூடாது" என்று சொல்லி இருப்பாரோ?
இல்லையென்றால் "பிள்ளைகள் தகப்பனிடம் இப்படி கேட்கலாமா" என்று சொல்லி இருப்பாரோ?
இல்லையென்றால் "தொடுங்கள், இதற்காகத் தானே இந்த பூமிக்கு வந்தேன்" என்று சொல்லி இருப்பாரோ?
உண்மை என்னவென்றால், இயேசு கிறிஸ்துவின் தெய்வீக அன்பு நிறைந்த பதிலுக்கு ஈடான வார்த்தைகள் கிடையாது, அதனால் தான் மத்தேயுவும் மற்றும் மார்கும் கர்த்தர் என்ன பதில் சொன்னார் என்பதை எழுதாமல் விட்டு விட்டார்கள், அவரே நமக்காக தன்னையே தந்த அன்பின் தெய்வம்!
அவர் மாறுத்தரம் ஒன்றும் சொல்லவில்லை
நம் தேவனாகிய இயேசு கிறிஸ்து பேசுகிறவராகவும் பதிலளிகிறவராகவும் இருக்கும் பொழுது, அதிகாரத்தில் இருப்பவர்களிடத்திலும், தன்னை குற்றம் சாட்டினவர்களிடத்திலும் அதிகமாய் ஒன்றும் பேசவில்லை.
12.பிரதான ஆசாரியரும் மூப்பரும் அவர்மேல் குற்றஞ்சாட்டுகையில், அவர் மாறுத்தரம் ஒன்றும் சொல்லவில்லை. 13.அப்பொழுது, பிலாத்து அவரை நோக்கி: இவர்கள் உன்மேல் எத்தனையோ குற்றங்களைச் சாட்டுகிறார்களே, நீ அவைகளைக் கேட்கவில்லையா என்றான். 14.அவரோ ஒரு வார்த்தையும் மாறுத்தரமாகச் சொல்லவில்லை; அதனால் தேசாதிபதி மிகவும் ஆச்சரியப்பட்டான் - மத்தேயு 27:12-14
56.அநேகர் அவருக்கு விரோதமாகப் பொய்ச்சாட்சி சொல்லியும், அந்தச் சாட்சிகள் ஒவ்வவில்லை. 57.அப்பொழுது சிலர் எழுந்து, கைவேலையாகிய இந்தத் தேவாலயத்தை நான் இடித்துப்போட்டு, கைவேலையல்லாத வேறொன்றை மூன்று நாளைக்குள்ளே கட்டுவேன் என்று இவன் சொன்னதை நாங்கள் கேட்டோம் என்று, 58.அவருக்கு விரோதமாய்ப் பொய்ச்சாட்சி சொன்னார்கள். 59.அப்படிச் சொல்லியும் அவர்கள் சாட்சி ஒவ்வாமற்போயிற்று. 60.அப்பொழுது பிரதான ஆசாரியன் எழுந்து நடுவே நின்று, இயேசுவை நோக்கி: இவர்கள் உனக்கு விரோதமாய்ச் சொல்லுகிறதைக்குறித்து நீ ஒன்றும் சொல்லுகிறதில்லையா என்று கேட்டான் - மாற்கு 14:56-60
8.ஏரோது இயேசுவைக்குறித்து அநேக காரியங்களைக் கேள்விப்பட்டிருந்ததினாலும், அவரால் செய்யப்படும் அடையாளத்தைப் பார்க்கவேண்டுமென்று விரும்பியிருந்ததினாலும், அவரைக் காணும்படி வெகுநாளாய் ஆசைகொண்டிருந்தான். அந்தப்படி அவரைக் கண்டபோது, மிகவும் சந்தோஷப்பட்டு, 9.அநேக காரியங்களைக்குறித்து, அவரிடத்தில் வினாவினான். அவர் மறுமொழியாக அவனுக்கு ஒன்றும் சொல்லவில்லை - லூக்கா 23:8-9
7.யூதர்கள் அவனுக்குப் பிரதியுத்தரமாக: எங்களுக்கு ஒரு நியாயப்பிரமாணமுண்டு, இவன் தன்னை தேவனுடைய குமாரனென்று சொன்னபடியினால், அந்த நியாயப்பிரமாணத்தின்படியே, இவன் சாகவேண்டும் என்றார்கள். 8.பிலாத்து இந்த வார்த்தையைக் கேட்டபொழுது அதிகமாய்ப் பயந்து, 9.மறுபடியும் அரமனைக்குள்ளே போய், இயேசுவை நோக்கி: நீ எங்கேயிருந்து வந்தவன் என்றான். அதற்கு இயேசு மாறுத்தரம் ஒன்றும் சொல்லவில்லை. 10.அப்பொழுது பிலாத்து: நீ என்னோடே பேசுகிறதில்லையா? உன்னைச் சிலுவையில் அறைய எனக்கு அதிகாரமுண்டென்றும், உன்னை விடுதலைபண்ண எனக்கு அதிகாரமுண்டென்றும் உனக்குத் தெரியாதா என்றான் - யோவான் 19:7-10
இப்படி அதிகாரத்தில் இருப்பவர்களிடத்திலும், தன்னை குற்றம் சாட்டினவர்களிடத்திலும் பேசாதிருந்த தேவன், தனக்காக அழுது புலம்புகிறவர்களிடம் மனம் திறந்து பேசுகிறவராய் இருக்கிறார்
7.திரள்கூட்டமான ஜனங்களும் அவருக்காகப் புலம்பி அழுகிற ஸ்திரீகளும் அவருக்குப் பின்சென்றார்கள். 28.இயேசு அவர்கள் முகமாய்த் திரும்பி: எருசலேமின் குமாரத்திகளே, நீங்கள் எனக்காக அழாமல், உங்களுக்காகவும் உங்கள் பிள்ளைகளுக்காகவும் அழுங்கள். 29.இதோ, மலடிகள் பாக்கியவதிகளென்றும், பிள்ளைபெறாத கர்ப்பங்களும் பால்கொடாத முலைகளும் பாக்கியமுள்ளவைகளென்றும் சொல்லப்படும் நாட்கள்வரும். 30.அப்பொழுது மலைகளை நோக்கி: எங்கள்மேல் விழுங்களென்றும், குன்றுகளை நோக்கி: எங்களை மறைத்துக்கொள்ளுங்களென்றும் சொல்லத்தொடங்குவார்கள். 31.பச்சைமரத்துக்கு இவைகளைச் செய்தால், பட்டமரத்துக்கு என்ன செய்யமாட்டார்கள் என்றார் - லூக்கா 23:27-31
எனக்குச் சித்தமுண்டு
ஒருமுறை குஷ்டரோகி ஒருவன் இயேசு கிறிஸ்துவால் தனக்கு சுகம் தர முடியும் என்கிற நம்பிக்கையுடன் அவரிடம் வந்தான், அவன் உபயோகப்படுத்திய வார்த்தைகளும், இயேசு கிறிஸ்துவிடம் உமக்குச் சித்தமானால் என்னைச் சுத்தமாக்க உம்மால் ஆகும் என்று சொன்னதும் பரிசுத்த ஆவியானவரின் செயலாகவே இருந்தது, அந்த குஷ்டரோகியை சுத்தமான ஒருவன் தொட்டு பல வருடங்கள் கூட ஆகியிருக்கும், அவனை இயேசு கிறிஸ்து தொட்டது அவனுக்கு ஒரு பெரிய பூரிப்பை கொடுத்திருக்கும்.
அது மாத்திரம் இல்லாமல், தன்னிடம் வந்த குஷ்டரோகியிடம் எனக்குச் சித்தமுண்டு என்று இயேசு கிறிஸ்து சொன்ன வார்த்தை எவ்வளவு ஆறுதலை கொடுத்திருக்கும், இதில் கவனிக்க வேண்டியது என்னவென்றால் தன்னிடம் வேண்டிக்கொண்ட ஒருத்தரிடம் கூட நம் தேவனாகிய இயேசு கிறிஸ்து எனக்கு சித்தமில்லை என்று சொல்லி வெறுமையாய் அனுப்பவில்லை, மாறாக தன்னிடம் வந்த அனைவரையும் சுகப்படுத்தி அனுப்பினார் என்பதை தான் வேதாகமத்தில் பார்க்கிறோம் - 39.கலிலேயா நாடெங்கும் அவர்களுடைய ஜெபஆலயங்களில் அவர் பிரசங்கம்பண்ணிக்கொண்டும், பிசாசுகளைத் துரத்திக்கொண்டும் இருந்தார். 40.அப்பொழுது குஷ்டரோகி ஒருவன் அவரிடத்தில் வந்து, அவர் முன்பாக முழங்கால்படியிட்டு: உமக்குச் சித்தமானால் என்னைச் சுத்தமாக்க உம்மால் ஆகும் என்று வேண்டிக்கொண்டான். 41.இயேசு மனதுருகி, கையை நீட்டி, அவனைத் தொட்டு: எனக்குச் சித்தமுண்டு, சுத்தமாகு என்றார். 42.இப்படி அவர் சொன்னவுடனே, குஷ்டரோகம் அவனை விட்டு நீங்கிற்று, அவன் சுத்தமானான். 43.அப்பொழுது அவர் அவனை நோக்கி: நீ இதை ஒருவருக்கும் சொல்லாதபடிக்கு எச்சரிக்கையாயிரு; 44.ஆயினும் நீ போய், ஆசாரியனுக்கு உன்னைக் காண்பித்து, நீ சுத்தமானதினிமித்தம், மோசே கட்டளையிட்டிருக்கிறவைகளை அவர்களுக்குச் சாட்சியாகச் செலுத்து என்று கண்டிப்பாய்ச் சொல்லி, உடனே அவனை அனுப்பிவிட்டார். 45.அவனோ புறப்பட்டுப் போய்: இந்தச் சங்கதி எங்கும் விளங்கும்படியாகப் பிரசித்தம் பண்ணத்தொடங்கினான். அதினால் அவர் வெளியரங்கமாய் பட்டணத்தில் பிரவேசிக்கக்கூடாமல், வெளியே வனாந்தரமான இடங்களில் தங்கியிருந்தார்; எத்திசையிலுமிருந்து ஜனங்கள் அவரிடத்திற்கு வந்தார்கள் - மாற்கு 1:39-45
இப்படி தன்னிடம் வந்த ஒருவரையும் வெறுமையாய் அனுப்பாத தேவன் சொன்ன இந்த வார்த்தை தான் "என்னிடத்தில் வருகிறவனை நான் புறம்பே தள்ளுவதில்லை" என்பது - பிதாவானவர் எனக்குக் கொடுக்கிற யாவும் என்னிடத்தில் வரும், என்னிடத்தில் வருகிறவனை நான் புறம்பே தள்ளுவதில்லை - யோவான் 6:37
அது மாத்திரம் இல்லாமல் தன்னை ஏற்றுக்கொள்ளாத மக்களும் இரட்சிக்கப்பட்டு பரலோராஜ்யத்தை சுதந்தரிக்க வேண்டும் என்று பொறுமையுடன் காத்திருக்கிறவராகவே இருக்கிறார் என்பதை தான் இந்த வசனங்களில் பார்க்கிறோம் - 51.பின்பு, அவர் எடுத்துக்கொள்ளப்படும் நாட்கள் சமீபித்தபோது, அவர் எருசலேமுக்குப் போகத் தமது முகத்தைத் திருப்பி, 52.தமக்கு முன்னாகத் தூதர்களை அனுப்பினார். அவர்கள் போய், அவருக்கு இடத்தை ஆயத்தம்பண்ணும்படி சமாரியருடைய ஒரு கிராமத்திலே பிரவேசித்தார்கள். 53.அவர் எருசலேமுக்குப் போக நோக்கமாயிருந்தபடியினால் அவ்வூரார் அவரை ஏற்றுக்கொள்ளவில்லை. 54.அவருடைய சீஷராகிய யாக்கோபும் யோவானும் அதைக் கண்டபோது: ஆண்டவரே, எலியா செய்ததுபோல, வானத்திலிருந்து அக்கினி இறங்கி இவர்களை அழிக்கும்படி நாங்கள் கட்டளையிட உமக்குச் சித்தமா என்று கேட்டார்கள். 55.அவர் திரும்பிப்பார்த்து: நீங்கள் இன்ன ஆவியுள்ளவர்களென்பதை அறியீர்கள் என்று அதட்டி, 56.மனுஷகுமாரன் மனுஷருடைய ஜீவனை அழிக்கிறதற்கு அல்ல, இரட்சிக்கிறதற்கே வந்தார் என்றார். அதன்பின்பு அவர்கள் வேறொரு கிராமத்துக்குப் போனார்கள் - லூக்கா 9:51-56
அடுத்த பாகம்: ஆனாலும் ஞானமானது