பலிபீடம், தேவாலயம், மற்றும் சிங்காசனம்
இயேசு கிறிஸ்து திரியேக தேவனாக, அதாவது பிதா, வார்த்தை, பரிசுத்த ஆவியானவரின் தற்சுரூபமாய் இருக்கிறார்
இயேசு கிறிஸ்து திரியேக தேவனாக, அதாவது பிதா, வார்த்தை, பரிசுத்த ஆவியானவரின் தற்சுரூபமாய் இருக்கிறார்
முந்தைய பாகம்: கிறிஸ்துவின் விளக்கம்
நம் இரட்சகராகிய இயேசு கிறிஸ்து, வார்த்தையானவர் மாத்திரம் அல்ல, அவருக்குள் பரலோகத்தின் தேவனாகிய பிதாவும், பரிசுத்த ஆவியானவரும் வாசம் செய்தார்கள், இப்படியாக நம் கர்த்தர் திரியேக தேவனாக இருக்கிறார் என்பதை கடந்த தொகுப்புகளில் பார்த்தோம், எப்படியெனில் திருத்துவத்தில் இரண்டாவது நபராகிய வார்த்தையானவர் தன் குமாரனை அனுப்பிய பொழுது(அந்த வார்த்தை மாம்சமாகி - யோவான் 1:14), திருத்துவத்தில் முதல் நபராகிய பிதாவினுடைய குமாரனும் (என்னிடத்தில் வாசமாயிருக்கிற பிதா - யோவான் 14:10), பரிசுத்த ஆவியானவரின் குமாரனும் (கர்த்தருடைய ஆவியானவர் என்மேலிருக்கிறார் - லூக்கா 4:18) இயேசு கிறிஸ்துவுக்குள் வாசம் செய்தார்கள்.
அதனால் தான், பழைய ஏற்பாட்டின் தீர்க்கதரிசி, இயேசு கிறிஸ்துவை தேவர்கள் என்றும், உன்னதமானவரின் மக்கள்(குமாரர்கள்) என்றும் பன்மையில் குறிப்பிட்டு, திருத்துவத்தில் பிதா, வார்த்தை, பரிசுத்த ஆவியானவர் என மூன்று பேருமே, நம்முடைய இரட்சிப்புக்காக பாடுப்பட்டார்கள் என்பதை விளக்கியுள்ளார் - 6.நீங்கள் தேவர்கள் என்றும், நீங்களெல்லாரும் உன்னதமானவரின் மக்கள் என்றும் நான் சொல்லியிருந்தேன். 7.ஆனாலும் நீங்கள் மனுஷரைப்போலச் செத்து, லோகப்பிரபுக்களில் ஒருவனைப்போல விழுந்துபோவீர்கள் - சங்கீதம் 82:6-7
அது மாத்திரம் இல்லாமல், இயேசு கிறிஸ்து சிலுவையில் நமக்காக பாடுபட்ட போது, பரலோக தேவனும் அதே பாடுகளை அனுபவித்தார் என்பதை இயேசு கிறிஸ்து இப்படி விளக்கியுள்ளார், எப்படியெனில் வார்த்தையானவரின் குமாரன் மேல்[பலிபீடத்தின்பேரில்] சத்தியம் பண்ணுகிறவன் வார்த்தையானவரின் பேரில் சத்தியம்பண்ணுகிறான், அதாவது வார்த்தையானவரின் குமாரனை சிலுவையில் அறைகிறவன் வார்த்தையானவரையே சிலுவையில் அறைகிறான் என்றார் - 19.மதிகேடரே, குருடரே! எது முக்கியம்? காணிக்கையோ, காணிக்கையைப் பரிசுத்தமாக்குகிற பலிபீடமோ? 20.ஆகையால், பலிபீடத்தின்பேரில் சத்தியம் பண்ணுகிறவன் அதின்பேரிலும் அதின்மேலுள்ள எல்லாவற்றின்பேரிலும் சத்தியம்பண்ணுகிறான் - மத்தேயு 23:19-20
மேலும் தன்னோடிருக்கும் பிதாவினுடைய குமாரன் மேல்[தேவாலயத்தின்பேரில்] சத்தியம் பண்ணுகிறவன் பிதாவின் பேரில் சத்தியம்பண்ணுகிறான் என்றும், பரிசுத்த ஆவியானவரின் குமாரன் மேல்[வானத்தில் தேவனுடைய சிங்காசனத்தின் பேரில்] சத்தியம் பண்ணுகிறவன் பரிசுத்த ஆவியானவரின் பேரில் சத்தியம்பண்ணுகிறான் என்றும் சொன்னார் - 21.தேவாலயத்தின்பேரில் சத்தியம்பண்ணுகிறவன் அதின்பேரிலும் அதில் வாசமாயிருக்கிறவர்பேரிலும் சத்தியம்பண்ணுகிறான். 22.வானத்தின்பேரில் சத்தியம் பண்ணுகிறவன் தேவனுடைய சிங்காசனத்தின் பேரிலும் அதில் வீற்றிருக்கிறவர் பேரிலும் சத்தியம் பண்ணுகிறான் - மத்தேயு 23:20-22
இதில் பலிபீடம் என்பது மாமிசத்தில் வெளிப்பட்டிருந்த வார்த்தையானவரின் குமாரனையும், தேவாலயம் என்பது பிதாவினுடைய குமாரனையும், வானம் என்பது பரிசுத்த ஆவியானவரின் குமாரனையும் குறிக்கிறது, அதனால் தான் சோதனைக்காரன், முதலாவது மாமிசத்தில் வெளிப்பட்டிருந்த வார்த்தையானவரின் குமாரனை சரிரத்திற்கு அடுத்த காரியமான ஆகாரத்தை கொண்டு சோதித்தான் - 1.அப்பொழுது இயேசு பிசாசினால் சோதிக்கப்படுவதற்கு ஆவியானவராலே வனாந்தரத்திற்குக் கொண்டுபோகப்பட்டார். 2.அவர் இரவும் பகலும் நாற்பது நாள் உபவாசமாயிருந்தபின்பு, அவருக்குப் பசியுண்டாயிற்று. 3.அப்பொழுது சோதனைக்காரன் அவரிடத்தில் வந்து: நீர் தேவனுடைய குமாரனேயானால், இந்தக் கல்லுகள் அப்பங்களாகும்படி சொல்லும் என்றான். 4.அவர் பிரதியுத்தரமாக: மனுஷன் அப்பத்தினாலேமாத்திரமல்ல, தேவனுடைய வாயிலிருந்து புறப்படுகிற ஒவ்வொரு வார்த்தையினாலும் பிழைப்பான் என்று எழுதியிருக்கிறதே என்றார் - மத்தேயு:1-4
அடுத்ததாக பிதாவின் குமாரனை தேவாலயத்து உப்பரிகையின்மேல் நிறுத்தி சோதித்தான் - 5.அப்பொழுது பிசாசு அவரைப் பரிசுத்த நகரத்திற்குக் கொண்டுபோய், தேவாலயத்து உப்பரிகையின்மேல் அவரை நிறுத்தி: 6.நீர் தேவனுடைய குமாரனேயானால் தாழக்குதியும்; ஏனெனில், தம்முடைய தூதர்களுக்கு உம்மைக்குறித்துக் கட்டளையிடுவார்; உமது பாதம் கல்லில் இடறாதபடிக்கு, அவர்கள் உம்மைக் கைகளில் ஏந்திக்கொண்டு போவார்கள் என்பதாய் எழுதியிருக்கிறது என்று சொன்னான். 7.அதற்கு இயேசு: உன் தேவனாகிய கர்த்தரைப் பரீட்சை பாராதிருப்பாயாக என்றும் எழுதியிருக்கிறதே என்றார்.
அடுத்ததாக பரிசுத்த ஆவியானவரை மிகவும் உயர்ந்த மலையின்மேல் கொண்டுபோய் சோதித்தான் - 8.மறுபடியும், பிசாசு அவரை மிகவும் உயர்ந்த மலையின்மேல் கொண்டுபோய், உலகத்தின் சகல ராஜ்யங்களையும் அவைகளின் மகிமையையும் அவருக்குக் காண்பித்து: 9.நீர் சாஷ்டாங்கமாய் விழுந்து, என்னைப் பணிந்துகொண்டால், இவைகளையெல்லாம் உமக்குத் தருவேன் என்று சொன்னான். 10.அப்பொழுது இயேசு: அப்பாலே போ சாத்தானே; உன் தேவனாகிய கர்த்தரைப் பணிந்துகொண்டு, அவர் ஒருவருக்கே ஆராதனை செய்வாயாக என்று எழுதியிருக்கிறதே என்றார். 11.அப்பொழுது பிசாசானவன் அவரைவிட்டு விலகிப்போனான். உடனே தேவதூதர்கள் வந்து, அவருக்குப் பணிவிடை செய்தார்கள் - மத்தேயு:1-11
இதை விளக்கவே, இயேசு கிறிஸ்து தன்னை யோனாவோடு ஒப்பிட்டு சொல்லி, தனக்குள் வாசம் செய்யும் பிதாவின் ஆவியானவரை யோனாவிலும் பெரியவர் இங்கே இருக்கிறார் என்றும், பரிசுத்த ஆவியானவரை சாலொமோனிலும் பெரியவர் இங்கே இருக்கிறார் என்று சொன்னார் - 40.யோனா இரவும் பகலும் மூன்றுநாள் ஒரு பெரிய மீனின் வயிற்றில் இருந்ததுபோல, மனுஷகுமாரனும் இரவும் பகலும் மூன்றுநாள் பூமியின் இருதயத்தில் இருப்பார். 41.யோனாவின் பிரசங்கத்தைக் கேட்டு நினிவே பட்டணத்தார் மனந்திரும்பினார்கள். இதோ, யோனாவிலும் பெரியவர் இங்கே இருக்கிறார். ஆதலால் நியாயத்தீர்ப்புநாளிலே நினிவே பட்டணத்தார் இந்தச் சந்ததியாரோடெழுந்து நின்று இவர்கள்மேல் குற்றஞ்சுமத்துவார்கள். 42.தென்தேசத்து ராஜஸ்திரீ பூமியின் எல்லைகளிலிருந்து சாலொமோனுடைய ஞானத்தைக் கேட்க வந்தாள். இதோ, சாலொமோனிலும் பெரியவர் இங்கே இருக்கிறார். ஆதலால் நியாயத்தீர்ப்புநாளிலே அந்த ராஜஸ்திரீ இந்தச் சந்ததியாரோடெழுந்து நின்று இவர்கள்மேல் குற்றஞ்சுமத்துவாள் - மத்தேயு 12:41-42
மத்தேயுவின் புத்தகத்தில் யோனாவிலும் பெரியவரை முதலாவது சொல்லி, அடுத்ததாக சாலொமோனிலும் பெரியவரை குறித்துச் சொல்லப்பட்டுள்ளது, ஆனால் திரியக தேவனில் பிதா வார்த்தை பரிசுத்த ஆவியானவர் என்கிற மூவருமே சமமானவர்கள் என்பதை விளக்கவே லூக்காவின் சுவிசேஷ புத்தகத்தில் சாலொமோனிலும் பெரியவரை முதலாவது சொல்லி, அதன் பின்பு யோனாவிலும் பெரியவரை குறித்துச் சொல்லப்பட்டுள்ளது - 30.யோனா நினிவே பட்டணத்தாருக்கு அடையாளமாயிருந்ததுபோல, மனுஷகுமாரனும் இந்தச் சந்ததிக்கு அடையாளமாயிருப்பார். 31.தென்தேசத்து ராஜஸ்திரீ சாலொமோனுடைய ஞானத்தைக் கேட்க பூமியின் எல்லைகளிலிருந்து வந்தாள்; இதோ, சாலொமோனிலும் பெரியவர் இங்கே இருக்கிறார்; ஆதலால் நியாயத்தீர்ப்புநாளிலே அந்த ராஜஸ்திரீ இந்தச் சந்ததியாரோடெழுந்து நின்று, இவர்கள்மேல் குற்றஞ்சுமத்துவாள். 32.யோனாவின் பிரசங்கத்தைக் கேட்டு நினிவே பட்டணத்தார் மனந்திரும்பினார்கள்; இதோ, யோனாவிலும் பெரியவர் இங்கே இருக்கிறார்; ஆதலால் நியாயத்தீர்ப்புநாளிலே நினிவே பட்டணத்தார் இந்தச் சந்ததியாரோடெழுந்து நின்று, இவர்கள்மேல் குற்றஞ்சுமத்துவார்கள் - லூக்கா 11:30-32
அது போலவே, இயேசு கிறிஸ்துவின் சோதனையிலும், மத்தேயுவின் புத்தகத்தில் தேவாலயத்தில் வாசம் பண்ணுகிறவரை முதலாவது சொல்லி, அடுத்ததாக வானத்தில் தேவனுடைய சிங்காசனத்தில் வீற்றிருக்கிறவரை குறித்துச் சொல்லப்பட்டுள்ளது, ஆனால் லூக்காவின் சுவிசேஷ புத்தகத்தில் வானத்தில் தேவனுடைய சிங்காசனத்தில் வீற்றிருக்கிறவரை முதலாவது சொல்லி, அதன் பின்பு தேவாலயத்தில் வாசம் பண்ணுகிறவரை குறித்துச் சொல்லப்பட்டுள்ளது - 1.இயேசு பரிசுத்த ஆவியினாலே நிறைந்தவராய் யோர்தானை விட்டுத் திரும்பி, ஆவியானவராலே வனாந்தரத்திற்குக் கொண்டு போகப்பட்டு, 2.நாற்பதுநாள் பிசாசினால் சோதிக்கப்பட்டார். அந்த நாட்களில் அவர் ஒன்றும் புசியாதிருந்தார்; அந்த நாட்கள் முடிந்தபின்பு அவருக்குப் பசியுண்டாயிற்று. 3.அப்பொழுது பிசாசு அவரை நோக்கி: நீர் தேவனுடைய குமாரனேயானால், இந்தக் கல் அப்பமாகும்படி சொல்லும் என்றான். 4.அவர் பிரதியுத்தரமாக: மனுஷன் அப்பத்தினாலேமாத்திரமல்ல, தேவனுடைய ஒவ்வொரு வார்த்தையினாலும் பிழைப்பான் என்று எழுதியிருக்கிறதே என்றார். 5.பின்பு பிசாசு அவரை உயர்ந்த மலையின்மேல் கொண்டுபோய், உலகத்தின் சகல ராஜ்யங்களையும் ஒரு நிமிஷத்திலே அவருக்குக் காண்பித்து: 6.இவைகள் எல்லாவற்றின்மேலுமுள்ள அதிகாரத்தையும் இவைகளின் மகிமையையும் உமக்குத் தருவேன், இவைகள் எனக்கு ஒப்புக்கொடுக்கப்பட்டிருக்கிறது; எனக்கு இஷ்டமானவனுக்கு இவைகளைக் கொடுக்கிறேன். 7.நீர் என்னைப் பணிந்துகொண்டால் எல்லாம் உம்முடையதாகும் என்று சொன்னான். 8.இயேசு அவனுக்குப் பிரதியுத்தரமாக: எனக்குப் பின்னாகப்போ சாத்தானே, உன் தேவனாகிய கர்த்தரைப் பணிந்துகொண்டு, அவர் ஒருவருக்கே ஆராதனைசெய்வாயாக என்று எழுதியிருக்கிறதே என்றார். 9.அப்பொழுது அவன் அவரை எருசலேமுக்குக் கொண்டுபோய், தேவாலயத்து உப்பரிகையின்மேல் அவரை நிறுத்தி: நீர் தேவனுடைய குமாரனேயானால், இங்கேயிருந்து தாழக்குதியும். 10.ஏனெனில், உம்மைக் காக்கும்படிக்குத் தம்முடைய தூதர்களுக்கு உம்மைக்குறித்துக் கட்டளையிடுவார் என்றும், 11.உமது பாதம் கல்லில் இடறாதபடிக்கு, அவர்கள் உம்மைக் கைகளில் ஏந்திக்கொண்டுபோவார்கள் என்றும், எழுதியிருக்கிறது என்று சொன்னான். 12.அதற்கு இயேசு: உன் தேவனாகிய கர்த்தரைப் பரீட்சை பாராதிருப்பாயாக என்று சொல்லியிருக்கிறதே என்றார். 13.பிசாசானவன் சோதனையெல்லாம் முடித்தபின்பு, சிலகாலம் அவரை விட்டு விலகிப்போனான் - லூக்கா 4:1-13
அடுத்த பாகம்: கானா ஊரிலே ஒரு கலியாணம்