முந்தைய பாகம்: ஆகாய சுடர்களின் விளக்கம்
இதில் முதலாம் நதி இயேசு கிறிஸ்துவை குறிக்கிறது - 1.ஆதியிலே வார்த்தை இருந்தது, அந்த வார்த்தை தேவனிடத்திலிருந்தது, அந்த வார்த்தை தேவனாயிருந்தது. 2. அவர் ஆதியிலே தேவனோடிருந்தார். 3. சகலமும் அவர் மூலமாய் உண்டாயிற்று; உண்டானதொன்றும் அவராலேயல்லாமல் உண்டாகவில்லை. 4. அவருக்குள் ஜீவன் இருந்தது, அந்த ஜீவன் மனுஷருக்கு ஒளியாயிருந்தது. 5. அந்த ஒளி இருளிலே பிரகாசிக்கிறது; இருளானது அதைப் பற்றிக்கொள்ளவில்லை. 6. தேவனால் அனுப்பப்பட்ட ஒரு மனுஷன் இருந்தான், அவன் பேர் யோவான். 7. அவன் தன்னால் எல்லாரும் விசுவாசிக்கும்படி அந்த ஒளியைக்குறித்துச் சாட்சிகொடுக்க சாட்சியாக வந்தான். 8. அவன் அந்த ஒளியல்ல, அந்த ஒளியைக்குறித்துச் சாட்சிகொடுக்க வந்தவனாயிருந்தான். 9. உலகத்திலே வந்து எந்த மனுஷனையும் பிரகாசிப்பிக்கிற ஒளியே அந்த மெய்யான ஒளி - யோவான் 1:1-9
மற்ற மூன்று நதிகளாகிய கீகோன், இதெக்கேல், மற்றும் ஐபிராத்து நதிகள் பிதாவாகிய திரியேக தேவனை குறிக்கிறது, - 14.பின்பு தேவன்: பகலுக்கும் இரவுக்கும் வித்தியாசம் உண்டாகத்தக்கதாக வானம் என்கிற ஆகாயவிரிவிலே சுடர்கள் உண்டாகக்கடவது, அவைகள் அடையாளங்களுக்காகவும், காலங்களையும் நாட்களையும் வருஷங்களையும் குறிக்கிறதற்காகவும் இருக்கக்கடவது என்றார். 15. அவைகள் பூமியின்மேல் பிரகாசிக்கும்படிக்கு வானம் என்கிற ஆகாயவிரிவிலே சுடர்களாயிருக்கக்கடவது என்றார்; அது அப்படியே ஆயிற்று. 16. தேவன், பகலை ஆளப் பெரிய சுடரும், இரவை ஆளச் சிறிய சுடரும் ஆகிய இரண்டு மகத்தான சுடர்களையும், நட்சத்திரங்களையும் உண்டாக்கினார். 17. அவைகள் பூமியின்மேல் பிரகாசிக்கவும், 18. பகலையும் இரவையும் ஆளவும், வெளிச்சத்துக்கும் இருளுக்கும் வித்தியாசம் உண்டாக்கவும், தேவன் அவைகளை வானம் என்கிற ஆகாயவிரிவிலே வைத்தார்; தேவன் அது நல்லது என்று கண்டார். 19. சாயங்காலமும் விடியற்காலமுமாகி நாலாம் நாள் ஆயிற்று - ஆதியாகமம் 1:14-19
இந்த மூவரும் தான், பொன், பிதோலாகும், மற்றும் கோமேதகக் கல்லாக இயேசு கிறிஸ்து என்கிற பைசோன் ஆற்றில் இருக்கிறார்கள், இதுவே இயேசு கிறிஸ்துவின் திருத்துவதை விளக்குவதாகவும் இருக்கிறது - 10.தோட்டத்துக்குத் தண்ணீர் பாயும்படி ஏதேனிலிருந்து ஒரு நதி ஓடி, அங்கேயிருந்து பிரிந்து நாலு பெரிய ஆறுகளாயிற்று. 11.முதலாம் ஆற்றுக்குப் பைசோன் என்று பேர், அது ஆவிலா தேசம் முழுவதையும் சுற்றி ஓடும்; அவ்விடத்திலே பொன்(வார்த்தை) விளையும். 12.அந்தத் தேசத்தின் பொன் நல்லது; அவ்விடத்திலே பிதோலாகும்(கிருபையும்), கோமேதகக்(சத்தியமும்) கல்லும் உண்டு - ஆதியாகமம் 2:10-12
அதனால் தான், ஆதியாகமம் 3ஆம் அதிகாரத்தில் ஆதாமும் ஏவாளும் பாவத்தின் விளைவால் ஏதேன் தோட்டத்திலிருந்து அனுப்பிவிடப்படும் முன்பே, இயேசு கிறிஸ்துவின் மூலமாய் நமக்கு இரட்சிப்பு உண்டு என்பதை விளக்கும் பொருட்டு, ஆதியாகமம் 2ஆம் அதிகாரத்தில் இந்த பைசோன் ஆற்றில் பொன்(வார்த்தை) நல்லது என்றும், அவ்விடத்திலே பிதோலாகும், கோமேதகக் கல்லும்(கிருபையும் சத்தியமும்) உண்டு என்றும் சொல்லப்பட்டுள்ளது
அடுத்த பாகம்: ஏதேன் நதியின் விளக்கம்