சாராளின் விளக்கம்
இயேசு கிறிஸ்து திரியேக தேவனாக, அதாவது பிதா, வார்த்தை, பரிசுத்த ஆவியானவரின் தற்சுரூபமாய் இருக்கிறார்
இயேசு கிறிஸ்து திரியேக தேவனாக, அதாவது பிதா, வார்த்தை, பரிசுத்த ஆவியானவரின் தற்சுரூபமாய் இருக்கிறார்
முந்தைய பாகம்: ஆபிரகாமின் விளக்கம்
இப்படி தேவக்குமாரனாகிய இயேசு கிறிஸ்து பிதா, வார்த்தை, பரிசுத்த ஆவி என்கிற மூன்று பேரிடத்திலிருந்து உண்டாவனராகவும், அவர்களின் தற்சுரூபமாகவும் இருக்கிறார் என்கிற ரகசியத்தை ஆபிரகாமுக்கு விளக்கிச் சொன்ன தேவன், கர்த்தரின் திருத்துவதை காண கிருபை செய்தார், எப்படியெனில் மம்ரேயின் சமபூமியிலே கர்த்தரை அவன் மூன்று நபர்களாக அதாவது பிதா, வார்த்தை, பரிசுத்த ஆவியானவராக தரிசித்தான், இது அப்போஸ்தலனாகிய பேதுரு, யாக்கோபு மற்றும் யோவான் இயேசு கிறிஸ்துவின் மறுரூப மகிமையை கண்ட பொழுது அவரை மூன்று நபர்களாக தரிசித்ததிற்க்கு ஒப்பாகவே இருந்தது - 1.பின்பு, கர்த்தர் மம்ரேயின் சமபூமியிலே அவனுக்குத் தரிசனமானார். அவன் பகலின் உஷ்ணவேளையில் கூடாரவாசலிலே உட்கார்ந்திருந்து, 2.தன் கண்களை ஏறெடுத்துப் பார்க்கும்போது, இதோ, மூன்று புருஷர் அவனுக்கு எதிரே நின்றார்கள்; அவர்களைக் கண்டவுடனே, அவன் கூடாரவாசலிலிருந்து அவர்களுக்கு எதிர்கொண்டு ஓடித் தரைமட்டும் குனிந்து; 3.ஆண்டவரே, உம்முடைய கண்களில் எனக்குக் கிருபை கிடைத்ததானால், நீர் உமது அடியேனைவிட்டுக் கடந்துபோகவேண்டாம் - ஆதியாகமம் 18:1-3
இப்படி கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவை தரிசித்த ஆபிரகாம், கர்த்தரை அப்பம் புசிக்க வரும்படி வருந்தி கேட்டுக்கொண்டான் - கொஞ்சம் தண்ணீர் கொண்டுவரட்டும், உங்கள் கால்களைக் கழுவி, மரத்தடியில் சாய்ந்துகொண்டிருங்கள். நீங்கள் உங்கள் இருதயங்களைத் திடப்படுத்தக் கொஞ்சம் அப்பம் கொண்டுவருகிறேன்; அப்புறம் நீங்கள் உங்கள் வழியே போகலாம்; இதற்காகவே அடியேன் இடம்வரைக்கும் வந்தீர்கள் என்றான். அதற்கு அவர்கள்: நீ சொன்னபடி செய் என்றார்கள் - ஆதியாகமம் 18:4-5
அப்பொழுது ஆபிரகாம், நம்மை மீட்க பிதா, வார்த்தை, பரிசுத்த ஆவியாகிய திரியேக தேவனே ஜீவ அப்பமாக வரப்போகிறார் என்பதை அறிவுறுத்த மூன்றுபடி மாவை எடுத்து அதை ஒன்றாக பிசைந்து அப்பம் சுட சொன்னார், மேலும் கிறிஸ்துவானவர் சாராளின் சந்ததியில் தான் ஜீவ அப்பமாக வரப்போகிறார் என்பதை அறிவுறுத்த தன்னுடைய வீட்டில் ஆகார் மற்றும் எத்தனையோ வேலைகாரிகள் இருந்த பொழுதும், சாராளை அப்பம் சுட சொன்னார் - அப்பொழுது ஆபிரகாம் தீவிரமாய்க் கூடாரத்தில் சாராளிடத்திற்குப் போய்: நீ சீக்கிரமாய் மூன்றுபடி மெல்லிய மாவு எடுத்துப் பிசைந்து, அப்பம் சுடு என்றான். ஆபிரகாம் மாட்டுமந்தைக்கு ஓடி, ஒரு நல்ல இளங்கன்றைப் பிடித்து, வேலைக்காரன் கையிலே கொடுத்தான்; அவன் அதைச் சீக்கிரத்தில் சமைத்தான் - ஆதியாகமம் 18:6-7
அப்பம் என்றால் என்ன?
ஆனால் அன்று சாப்பாடு பரிமாறும் பொழுது தான் ரகசியம் விளங்கினது, எப்படியெனில் சாராள் செய்ய வேண்டிய அப்பம் ஏன் பரிமாறப்படவில்லை, அதற்கு பதிலாக வெண்ணை, பால், சமைப்பித்த கன்று என்கிற மூன்று காரியங்கள் பரிமாறப்பட்டது - ஆபிரகாம் வெண்ணெயையும் பாலையும் சமைப்பித்த கன்றையும் எடுத்து வந்து, அவர்கள் முன்பாக வைத்து, அவர்கள் அருகே மரத்தடியில் நின்றுகொண்டிருந்தான்; அவர்கள் புசித்தார்கள் - ஆதியாகமம் 18:8
அப்பம் என்பதின் ஆவிக்குரிய அர்த்தம் என்னவென்றால், அதில் மூன்று காரியங்கள் இருக்க வேண்டும், அது அடிக்கப்பட்ட கன்று குட்டி, அதனோடு அந்த கன்றுக்காக பசு சுரந்த வெண்ணையும் பாலும் இருக்க வேண்டும், அதுவே ஜீவஅப்பம், இதில் அடிக்கப்பட்ட கன்று குட்டியானது வார்த்தையானவரையும், வெண்ணை என்பது கிறிஸ்துவுக்குள் வாசம் செய்த பிதாவின் கிருபையின் ஆவியனவரையும், பால் என்பது பரிசுத்த ஆவியானவரையும் குறிக்கிறது.
சாராள் செய்ய வேண்டிய அப்பம் ஏன் பரிமாறப்படவில்லை?
ஏனென்றால் ஆபிரகாம் சாரளிடம் அப்பம் சுட சொன்னது ஒரு தீர்க்கதரிசனமாக இருந்தது, அவள் பிதா, வார்த்தை, பரிசுத்த ஆவியாகிய திரியேக தேவனே ஜீவ அப்பமாக வர வேண்டும் என்று காத்திருந்தாளாம் - 20.மேலும் அவர்: தேவனுடைய ராஜ்யத்தை நான் எதற்கு ஒப்பிடுவேன்? 21.அது புளித்தமாவுக்கு ஒப்பாயிருக்கிறது; அதை ஒரு ஸ்திரீ எடுத்து முழுவதும் புளிக்கும்வரைக்கும் மூன்றுபடிமாவிலே அடக்கிவைத்தாள் என்றார் - லூக்கா 13:20-21
இப்படி சாராள் அப்பம் சுடாமல், கர்த்தர் தானே நமது ஜீவ அப்பம் என்று தியானித்துக் கொண்டிருந்த சமயத்தில் தான், கர்த்தர் தாம் ஜீவ அப்பமாக வரப்போவதை ஆபிரகாம் மற்றும் சாராளிடம் வாக்குதத்தமாக சொன்னார் - 9.அவர்கள் அவனை நோக்கி: உன் மனைவி சாராள் எங்கே என்றார்கள்? அதோ கூடாரத்தில் இருக்கிறாள் என்றான். 10.அப்பொழுது அவர்: ஒரு உற்பவகாலத்திட்டத்தில் நிச்சயமாய் உன்னிடத்திற்குத் திரும்ப வருவேன்; அப்பொழுது உன் மனைவியாகிய சாராளுக்கு ஒரு குமாரன் இருப்பான் என்றார். சாராள் அவருக்குப் பின்புறமாய்க் கூடாரவாசலில் இதைக் கேட்டுக்கொண்டிருந்தாள் - ஆதியாகமம் 18:9-10
இப்படி வாக்குதத்தம் பெற்ற சாராளினிடத்தில் பிறந்த ஈசாக்கின் வம்சத்தில் ஜீவ அப்பமாக வெளிப்பட்டவர் தான் நம் இரட்சகராகிய இயேசு கிறிஸ்து, மூன்றுபடி மாவில் சுடப்பட்ட அப்பமாக, அதாவது பிதா, வார்த்தை, பரிசுத்த ஆவி என்ற திரியேக தேவனின் தற்சுரூபமாய் இந்த பூமிக்கு வந்தார் - 48.ஜீவ அப்பம் நானே. 49.உங்கள் பிதாக்கள் வனாந்தரத்திலே மன்னாவைப் புசித்திருந்தும் மரித்தார்கள். 50.இதிலே புசிக்கிறவன் மரியாமலிருக்கும்படி வானத்திலிருந்திறங்கின அப்பம் இதுவே. 51.நானே வானத்திலிருந்திறங்கின ஜீவ அப்பம்; இந்த அப்பத்தைப் புசிக்கிறவன் என்றென்றைக்கும் பிழைப்பான்; நான் கொடுக்கும் அப்பம் உலகத்தின் ஜீவனுக்காக நான் கொடுக்கும் என் மாம்சமே என்றார் - யோவான் 6:48-51
அப்பொழுது அதனால்
மேலும், கர்த்தர் கொடுத்த "ஒரு உற்பவகாலத்திட்டத்தில் நிச்சயமாய் உன்னிடத்திற்குத் திரும்ப வருவேன்; அப்பொழுது உன் மனைவியாகிய சாராளுக்கு ஒரு குமாரன் இருப்பான்" என்ற வாக்குத்தத்தில் "அப்பொழுது" என்கிற வார்த்தைக்கு பதிலாக "அதனால்" என்கிற வார்த்தையே பயன்படுத்தப்பட்டிருக்க வேண்டும், அதாவது "தேவன் வரப்போவதினால் ஒரு குமாரன் இருப்பார்" என்பதே அதன் அர்த்தம் ஆகும் - 9.அவர்கள் அவனை நோக்கி: உன் மனைவி சாராள் எங்கே என்றார்கள்? அதோ கூடாரத்தில் இருக்கிறாள் என்றான். 10.அப்பொழுது அவர்: ஒரு உற்பவகாலத்திட்டத்தில் நிச்சயமாய் உன்னிடத்திற்குத் திரும்ப வருவேன்; அப்பொழுது அதனால் உன் மனைவியாகிய சாராளுக்கு ஒரு குமாரன் இருப்பான்[I will certainly return unto thee according to the time of life; and, lo, Sarah thy wife shall have a son] என்றார். சாராள் அவருக்குப் பின்புறமாய்க் கூடாரவாசலில் இதைக் கேட்டுக்கொண்டிருந்தாள் - ஆதியாகமம் 18:9-10
ஈசாக்கு பிறந்த பொழுது கர்த்தர் ஏன் எந்த தரிசனமும் தரவில்லை?
இப்படி கர்த்தர் சொன்ன வாக்குத்தத்தம் இயேசு கிறிஸ்துவின் பிறப்பை குறித்ததாகவே இருந்தது, இல்லாவிட்டால் வாக்குத்தத்ததின் படி ஈசாக்கு பிறந்த பொழுது கர்த்தர் வந்திருக்க வேண்டுமே? ஆனால் ஈசாக்கு பிறந்த பொழுது கர்த்தர் வரவில்லையே? அந்த சமயத்தில் ஆபிரகாம் கர்த்தரை தரிசித்ததாகவும் வேதாகமத்தில் ஒன்றுமே சொல்லப்படவில்லையே - 1.கர்த்தர் தாம் சொல்லியிருந்தபடி சாராள்பேரில் கடாட்சமானார்; கர்த்தர் தாம் உரைத்தபடியே சாராளுக்குச் செய்தருளினார். 2.ஆபிரகாம் முதிர்வயதாயிருக்கையில், சாராள் கர்ப்பவதியாகி, தேவன் குறித்திருந்த காலத்திலே அவனுக்கு ஒரு குமாரனைப் பெற்றாள். 3.அப்பொழுது ஆபிரகாம் தனக்குச் சாராள் பெற்ற குமாரனுக்கு ஈசாக்கு என்று பேரிட்டான். 4.தன் குமாரனாகிய ஈசாக்கு பிறந்த எட்டாம் நாளிலே, ஆபிரகாம் தனக்குத் தேவன் கட்டளையிட்டிருந்தபடி அவனுக்கு விருத்தசேதனம்பண்ணினான் - ஆதியாகமம் 21:1-4
காரணம், "ஒரு உற்பவகாலத்திட்டத்தில் நிச்சயமாய் உன்னிடத்திற்குத் திரும்ப வருவேன்; அப்பொழுது அதனால் உன் மனைவியாகிய சாராளுக்கு ஒரு குமாரன் இருப்பான்" என்கிற வாக்குத்தத்தம், இயேசு கிறிஸ்துவின் பிறப்பை குறித்ததாகவே இருந்தது, இதை தான் அப்போஸ்தலனாகிய பவுல் இவ்வாறு சொல்லுகிறார் - அந்த வாக்குத்தத்தமான வார்த்தையாவது: குறித்த காலத்திலே வருவேன், அப்பொழுது சாராள் ஒரு குமாரனைப் பெறுவாள் என்பதே - ரோமர் 9:9
அடுத்த பாகம்: மோசேயின் விளக்கம்