முந்தைய பாகம்: ஓசியாவின் விளக்கம்
மல்கியாவின் தீர்க்கதரிசனத்தோடு முடியும் பழைய ஏற்பாடு, கர்த்தரின் வருகையையும் யோவான்ஸ்நானன் ஊழியத்தை குறித்தும் இவ்வாறு சொல்கிறது - 5.இதோ, கர்த்தருடைய பெரிதும் பயங்கரமுமான நாள் வருகிறதற்குமுன்னே நான் உங்களிடத்திற்கு எலியா தீர்க்கதரிசியை அனுப்புகிறேன். 6.நான் வந்து பூமியைச் சங்காரத்தால் அடிக்காதபடிக்கு, அவன் பிதாக்களுடைய இருதயத்தைப் பிள்ளைகளிடத்திற்கும், பிள்ளைகளுடைய இருதயத்தை அவர்கள் பிதாக்களிடத்திற்கும் திருப்புவான் - மல்கியா 4:5-6
இதில் யோவான்ஸ்நானை குறித்துச் சொல்லப்பட்ட "பிதாக்களுடைய இருதயத்தைப் பிள்ளைகளிடத்திற்கும், பிள்ளைகளுடைய இருதயத்தை அவர்கள் பிதாக்களிடத்திற்கும் திருப்புவான்" என்பதின் அர்த்தத்தை பரலோகமே விளக்கிச் சொல்லியிருக்கிறது என்றால் அது எவ்வளவு பெரிய பாக்கியம் - 13.தூதன் அவனை நோக்கி: சகரியாவே, பயப்படாதே, உன் வேண்டுதல் கேட்கப்பட்டது; உன் மனைவியாகிய எலிசபெத்து உனக்கு ஒரு குமாரனைப் பெறுவாள், அவனுக்கு யோவான் என்று பேரிடுவாயாக. 14.உனக்குச் சந்தோஷமும் மகிழ்ச்சியும் உண்டாகும், அவன் பிறப்பினிமித்தம் அநேகர் சந்தோஷப்படுவார்கள். 15.அவன் கர்த்தருக்கு முன்பாகப் பெரியவனாயிருப்பான், திராட்சரசமும் மதுவும் குடியான், தன் தாயின் வயிற்றிலிருக்கும்போதே பரிசுத்த ஆவியினால் நிரப்பப்பட்டிருப்பான். 16.அவன் இஸ்ரவேல் சந்ததியாரில் அநேகரை அவர்கள் தேவனாகிய கர்த்தரிடத்திற்குத் திருப்புவான். 17.பிதாக்களுடைய இருதயங்களைப் பிள்ளைகளிடத்திற்கும், கீழ்ப்படியாதவர்களை நீதிமான்களுடைய ஞானத்திற்கும் திருப்பி, உத்தமமான ஜனத்தைக் கர்த்தருக்கு ஆயத்தப்படுத்தும்படியாக, அவன் எலியாவின் ஆவியும் பலமும் உடையவனாய் அவருக்கு முன்னே நடப்பான் என்றான் - லூக்கா 1:13-17
இதில் பிள்ளைகள் என்பது பாவிகளாயிருந்தவர்களையும், பிதாக்கள் என்பது இயேசு கிறிஸ்துவையும் குறிக்கிறது, இந்த தீர்க்கதரிசனத்தில் மல்கியா ஏன் இயேசு கிறிஸ்துவை பிதாக்கள் என்று பண்மையில் குறிப்பிட்டார், ஏனென்றால் நம் கர்த்தராகிய இயேசு கிறிஸ்து திரியேக தேவனின் (பிதா, வார்த்தை, பரிசுத்த ஆவி) தற்சுரூபமாக இருப்பதினால் தான்.
அடுத்த பாகம்: யோவேலின் விளக்கம்