முந்தைய பாகம்: முதலாங்கூடாரத்தின் விளக்கம்
கிறிஸ்துவை பிரதிபலிக்கின்ற சாட்சியின் கூடாரத்தின் திரைச்சீலையானது இளநீலநூல் இரத்தாம்பரநூல் சிவப்புநூல் என மூன்று விதமான நூலால் திரிக்கப்பட்ட மெல்லிய பஞ்சுநூலினால் நெய்யப்பட்டு இயேசு கிறிஸ்துவின் திரித்துவத்தை வெளிப்படுத்துகிறது - 36.இளநீலநூலும் இரத்தாம்பரநூலும் சிவப்புநூலும் திரித்த மெல்லிய பஞ்சுநூலுமாகிய இவற்றால் சித்திரத் தையல் வேலையான ஒரு தொங்குதிரையும் கூடாரத்தின் வாசலுக்கு உண்டாக்கி, 37.அந்தத் தொங்குதிரைக்குச் சீத்திம் மரத்தால் ஐந்து தூண்களைச் செய்து, அவைகளைப் பொன்தகட்டால் மூடி, அவைகளுக்குப் பொன் கொக்கிகளை உண்டாக்கி, அவைகளுக்கு ஐந்து வெண்கலப் பாதங்களை வார்ப்பிக்கக்கடவாய் - யாத்திராகமம் 26:36-37
இப்படி இயேசு கிறிஸ்துவின் திரித்துவத்தை வெளிப்படுத்துகிறதாய் இருந்த தேவாலயத்தின் திரைச்சீலை கிறிஸ்து தன் ஜீவனை வீட்ட பொழுது அதுவும் மேல்தொடங்கிக் கீழ்வரைக்கும் இரண்டாகக் கிழிந்தது, அது மாத்திரம் இல்லாமல், கிறிஸ்துவின் மரணம் எப்படி நாம் தேவனிடம் சேர வழிவகுத்ததோ, அப்படியே தேவாலயத்தின் திரைச்சீலையும் மேல்தொடங்கிக் கீழ்வரைக்கும் இரண்டாகக் கிழிந்தது நாம் தேவ சமூகத்தை அடைய வழி செய்தது - 37.இயேசு மகா சத்தமாய்க் கூப்பிட்டு ஜீவனை விட்டார். 38.அப்பொழுது, தேவாலயத்தின் திரைச்சீலை மேல்தொடங்கிக் கீழ்வரைக்கும் இரண்டாகக் கிழிந்தது - மாற்கு 15:37-38
அதனால் தான் வேதாகமும் இயேசு கிறிஸ்துவை திரை என்றே அழைக்கிறது - 19.ஆகையால், சகோதரரே, நாம் பரிசுத்த ஸ்தலத்தில் பிரவேசிப்பதற்கு இயேசுவானவர் தமது மாம்சமாகிய திரையின் வழியாய்ப் புதிதும் ஜீவனுமான மார்க்கத்தை நமக்கு உண்டுபண்ணினபடியால், 20.அந்த மார்க்கத்தின்வழியாய்ப் பிரவேசிப்பதற்கு அவருடைய இரத்தத்தினாலே நமக்குத் தைரியம் உண்டாயிருக்கிறபடியினாலும், 21.தேவனுடைய வீட்டின்மேல் அதிகாரியான மகா ஆசாரியர் நமக்கு ஒருவர் இருக்கிறபடியினாலும், 22.துர்மனச்சாட்சி நீங்கத் தெளிக்கப்பட்ட இருதயமுள்ளவர்களாயும், சுத்த ஜலத்தால் கழுவப்பட்ட சரீரமுள்ளவர்களாயும், உண்மையுள்ள இருதயத்தோடும் விசுவாசத்தின் பூரண நிச்சயத்தோடும் சேரக்கடவோம் - எபிரெயர் 10:19-22
அடுத்த பாகம்: உடன்படிக்கைப் பெட்டியின் விளக்கம்