ரெவிதீமின் விளக்கம்
இயேசு கிறிஸ்து திரியேக தேவனாக, அதாவது பிதா, வார்த்தை, பரிசுத்த ஆவியானவரின் தற்சுரூபமாய் இருக்கிறார்
இயேசு கிறிஸ்து திரியேக தேவனாக, அதாவது பிதா, வார்த்தை, பரிசுத்த ஆவியானவரின் தற்சுரூபமாய் இருக்கிறார்
முந்தைய பாகம்: மன்னாவின் விளக்கம்
இஸ்ரவேல் மக்கள் அமலேக்கியரோடு செய்த யுத்தம், வானமண்டலங்களிலுள்ள பொல்லாத ஆவிகளின் சேனைகளோடு நடக்கும் போராட்டத்திற்கு அடுத்ததாகவும், விசுவாசத்தினால் மாத்திரமே நாம் இந்த யுத்தத்தில் வெற்றிக் கொள்ள முடியும் என்பதை கற்றுக் கொடுப்பதாகவுமே இருந்தது, அதனால் தான் கர்த்தர் மேல் விசுவாசம் வைக்காமல் நாம் எப்படி வாக்குத்தத்தம் பண்ணப்பட்ட ஆசீர்வாதத்தை சுதந்தரிக்கப் போகிறோம் என்று சந்தேகப்பட்ட மக்கள் அந்த யுத்தத்தில் தோற்றுப் போனார்கள் - 36.அந்த தேசத்தைச் சோதித்துப்பார்க்கும்படி மோசேயால் அனுப்பப்பட்டுத் திரும்பி, அந்த தேசத்தைக்குறித்துத் துர்ச்செய்தி கொண்டுவந்து, 37.சபையார் எல்லாரும் அவனுக்கு விரோதமாய் முறுமுறுக்கும்படி அந்தத் துர்ச்செய்தியைச் சொன்னவர்களாகிய அந்த மனிதர் கர்த்தருடைய சந்நிதியில் வாதையினால் செத்தார்கள். 38.தேசத்தைச் சுற்றிப்பார்க்கப்போன அந்த மனிதரில் நூனின் குமாரனாகிய யோசுவாவும், எப்புன்னேயின் குமாரனாகிய காலேபும்மாத்திரம் உயிரோடிருந்தார்கள். 39.மோசே இந்த வார்த்தைகளை இஸ்ரவேல் புத்திரர் அனைவரோடும் சொன்னபோது, ஜனங்கள் மிகவும் துக்கித்தார்கள். 40.அதிகாலமே அவர்கள் எழுந்திருந்து: நாங்கள் பாவஞ்செய்தோம், கர்த்தர் வாக்குத்தத்தம்பண்ணின இடத்துக்கு நாங்கள் போவோம் என்று சொல்லி மலையின் உச்சியில் ஏறத்துணிந்தார்கள். 41.மோசே அவர்களை நோக்கி: நீங்கள் இப்படி கர்த்தரின் கட்டளையை மீறுகிறதென்ன? அது உங்களுக்கு வாய்க்காது. 42.நீங்கள் உங்கள் சத்துருக்களுக்கு முன்பாக முறிய அடிக்கப்படாதபடிக்கு ஏறிப்போகாதிருங்கள்; கர்த்தர் உங்கள் நடுவில் இரார். 43.அமலேக்கியரும் கானானியரும் அங்கே உங்களுக்குமுன்னே இருக்கிறார்கள்; பட்டயத்தினால் விழுவீர்கள்; நீங்கள் கர்த்தரை விட்டுப் பின்வாங்கினபடியால், கர்த்தர் உங்களோடே இருக்கமாட்டார் என்றான். 44.ஆனாலும் அவர்கள் மலையின் உச்சியில் ஏறத் துணிந்தார்கள்; கர்த்தருடைய உடன்படிக்கையின் பெட்டியும் மோசேயும் பாளயத்தை விட்டுப் போகவில்லை. 45.அப்பொழுது அமலேக்கியரும் கானானியரும் அந்த மலையிலே இருந்து இறங்கிவந்து, அவர்களை முறிய அடித்து, அவர்களை ஓர்மாமட்டும் துரத்தினார்கள் - எண்ணாகமம் 14:36-45
வானமண்டலங்களிலுள்ள பொல்லாத ஆவிகளின் சேனைகளோடு நடக்கும் இந்த யுத்தத்தில் நாம் நம் சுய பலத்தால் வெற்றி பெற முடியாது, அதே சமயத்தில் நாம் கர்த்தரை சார்ந்து இருப்போமானால் வெற்றி கொள்ள முடியும் என்பதை கற்றுக் கொடுப்பதற்காகவே, ரெவிதீமிலே அமலேக்கியரோடு நடந்த யுத்ததில், மோசே மலையின் மேல் தன் கைகளை விரித்த வண்ணமாக சிலுவையின் காட்சியை பிரதிபலித்துக்கொண்டிருந்தார், அதை பார்த்த இஸ்ரவேல் மக்களும் வெற்றி கொண்டார்கள் - 8.அமலேக்கியர் வந்து ரெவிதீமிலே இஸ்ரவேலரோடே யுத்தம்பண்ணினார்கள். 9.அப்பொழுது மோசே யோசுவாவை நோக்கி: நீ நமக்காக மனிதரைத் தெரிந்துகொண்டு, புறப்பட்டு, அமலேக்கோடே யுத்தம்பண்ணு; நாளைக்கு நான் மலையுச்சியில் தேவனுடைய கோலை என் கையில் பிடித்துக்கொண்டு நிற்பேன் என்றான். 10.யோசுவா தனக்கு மோசே சொன்னபடியே செய்து, அமலேக்கோடே யுத்தம்பண்ணினான். மோசேயும் ஆரோனும் ஊர் என்பவனும் மலையுச்சியில் ஏறினார்கள். 11.மோசே தன் கையை ஏறெடுத்திருக்கையில், இஸ்ரவேலர் மேற்கொண்டார்கள்; அவன் தன் கையைத் தாழவிடுகையில், அமலேக்கு மேற்கொண்டான் - யாத்திராகமம் 17:8-11
ஆனால், நம் இரட்சகராகிய இயேசு கிறிஸ்து, வார்த்தையானவர் மாத்திரம் அல்ல, அவருக்குள் பரலோகத்தின் தேவனாகிய பிதாவும், பரிசுத்த ஆவியானவரும் வாசம் செய்தார்கள், இப்படியாக நம் கர்த்தர் திரியேக தேவனாக இருக்கிறார், இதை விளக்கவே மோசேயுடன், ஆரோன் மற்றும் ஊர் என்கிற இரண்டு பேர் நின்றார்கள் - 12.மோசேயின் கைகள் அசர்ந்துபோயிற்று, அப்பொழுது அவர்கள் ஒரு கல்லைக் கொண்டுவந்து அவன் கீழே வைத்தார்கள்; அதின்மேல் உட்கார்ந்தான்; ஆரோனும் ஊரும் ஒருவன் ஒரு பக்கத்திலும் ஒருவன் மறு பக்கத்திலும் இருந்து, அவன் கைகளைத் தாங்கினார்கள்; இவ்விதமாய் அவன் கைகள் சூரியன் அஸ்தமிக்கும்வரைக்கும் ஒரே நிலையாயிருந்தது. 13.யோசுவா அமலேக்கையும் அவன் ஜனங்களையும் பட்டயக்கருக்கினாலே முறிய அடித்தான். 14.பின்பு கர்த்தர் மோசேயை நோக்கி: இதை நினைவுகூரும்பொருட்டு, நீ ஒரு புஸ்தகத்தில் எழுதி, யோசுவாவின் செவி கேட்கும்படி வாசி. அமலேக்கை வானத்தின் கீழெங்கும் இராதபடிக்கு நாசம் பண்ணுவேன் என்றார். 15.மோசே ஒரு பலிபீடத்தைக் கட்டி, அதற்கு யேகோவாநிசி என்று பேரிட்டு, 16.அமலேக்கின் கை கர்த்தருடைய சிங்காசனத்துக்கு விரோதமாயிருந்தபடியால், தலைமுறை தலைமுறைதோறும் அவனுக்கு விரோதமாய் கர்த்தரின் யுத்தம் நடக்கும் என்றான் - யாத்திராகமம் 17:12-16
அப்பொழுது ரெவிதீமின் யுத்தகலத்தில் நின்ற இஸ்ரவேலர் மலையை பார்க்கும் பொழுது, நமக்காக பரிந்து பேசும் இரட்சகரை மூன்று பேராக தானே பார்த்திருப்பார்கள், அப்போஸ்தலனாகிய யோவான் இதை குறித்துச் சொல்லும் பொழுது பிதா, வார்த்தை, பரிசுத்த ஆவியாகிய திரியேக தேவன் ஜலம், இரத்தம், ஆவியாக கிறிஸ்து இயேசுவுக்குள் இருந்தார்கள் என்று குறிப்பிட்டுள்ளார் - 8.பூலோகத்திலே சாட்சியிடுகிறவைகள் மூன்று, ஆவி, ஜலம், இரத்தம் என்பவைகளே, இம்மூன்றும் ஒருமைப்பட்டிருக்கிறது. 9.நாம் மனுஷருடைய சாட்சியை ஏற்றுக்கொண்டால், அதைப்பார்க்கிலும் தேவனுடைய சாட்சி அதிகமாயிருக்கிறது; தேவன் தமது குமாரனைக்குறித்துக் கொடுத்த சாட்சி இதுவே - I யோவான் 5:8-9
அடுத்த பாகம்: ரெவிதீமின் விளக்கம்