அப்பதின் விளக்கம்
இயேசு கிறிஸ்து திரியேக தேவனாக, அதாவது பிதா, வார்த்தை, பரிசுத்த ஆவியானவரின் தற்சுரூபமாய் இருக்கிறார் !
இயேசு கிறிஸ்து திரியேக தேவனாக, அதாவது பிதா, வார்த்தை, பரிசுத்த ஆவியானவரின் தற்சுரூபமாய் இருக்கிறார் !
முந்தைய பாகம்: சாராளின் விளக்கம்
இதற்கு முந்தைய "சாராளின் விளக்கம்" என்கிற தொகுப்பில், சாராள் ஏன் அப்பம் சுடவில்லை என்பதையும், குறித்த காலத்திலே வருவேன் என்று கர்த்தர் கொடுத்த வாக்குத்தத்தின் அர்த்தத்தையும் பார்த்தோம், இந்த தொகுப்பில், "அப்பம் கொண்டுவருகிறேன்" என்று சொன்ன ஆபிரகாம், அப்பத்திற்கு பதிலாக கொண்டு வந்த மூன்று பொருளை குறித்துப் பார்ப்போம்.
வேதாகமத்தில் முதல் முதலில் அப்பம் என்கிற வார்த்தையை சொன்னது ஆபிரகாமாய் இருக்கிறார், அவர் இந்த வார்த்தையை தன்னை சந்தித்த கர்த்தரிடம் சொன்னார் என்று பார்க்கிறோம் - 1.பின்பு, கர்த்தர் மம்ரேயின் சமபூமியிலே அவனுக்குத் தரிசனமானார். அவன் பகலின் உஷ்ணவேளையில் கூடாரவாசலிலே உட்கார்ந்திருந்து, 2.தன் கண்களை ஏறெடுத்துப் பார்க்கும்போது, இதோ, மூன்று புருஷர் அவனுக்கு எதிரே நின்றார்கள்; அவர்களைக் கண்டவுடனே, அவன் கூடாரவாசலிலிருந்து அவர்களுக்கு எதிர்கொண்டு ஓடித் தரைமட்டும் குனிந்து; 3.ஆண்டவரே, உம்முடைய கண்களில் எனக்குக் கிருபை கிடைத்ததானால், நீர் உமது அடியேனைவிட்டுக் கடந்துபோகவேண்டாம். 4.கொஞ்சம் தண்ணீர் கொண்டுவரட்டும், உங்கள் கால்களைக் கழுவி, மரத்தடியில் சாய்ந்துகொண்டிருங்கள். 5.நீங்கள் உங்கள் இருதயங்களைத் திடப்படுத்தக் கொஞ்சம் அப்பம் கொண்டுவருகிறேன்; அப்புறம் நீங்கள் உங்கள் வழியே போகலாம்; இதற்காகவே அடியேன் இடம்வரைக்கும் வந்தீர்கள் என்றான். அதற்கு அவர்கள்: நீ சொன்னபடி செய் என்றார்கள். 6.அப்பொழுது ஆபிரகாம் தீவிரமாய்க் கூடாரத்தில் சாராளிடத்திற்குப் போய்: நீ சீக்கிரமாய் மூன்றுபடி மெல்லிய மாவு எடுத்துப் பிசைந்து, அப்பம் சுடு என்றான். 7.ஆபிரகாம் மாட்டுமந்தைக்கு ஓடி, ஒரு நல்ல இளங்கன்றைப் பிடித்து, வேலைக்காரன் கையிலே கொடுத்தான்; அவன் அதைச் சீக்கிரத்தில் சமைத்தான் - ஆதியாகமம் 18:1-7
ஆனால் அப்பம் கொண்டுவருகிறேன் என்று சொன்ன ஆபிரகாம் கொண்டு வந்ததோ, "வெண்ணை", "பால்" மற்றும் "சமைப்பித்த கன்று" என்கிற மூன்று பொருளாய் இருந்தது - ஆபிரகாம் வெண்ணெயையும் பாலையும் சமைப்பித்த கன்றையும் எடுத்து வந்து, அவர்கள் முன்பாக வைத்து, அவர்கள் அருகே மரத்தடியில் நின்றுகொண்டிருந்தான்; அவர்கள் புசித்தார்கள் - ஆதியாகமம் 18:8
இதில் சமைப்பித்த கன்று திரியேக தேவனில் குமாரனாக வெளிப்பட்ட வார்த்தையானவரையும், வெண்ணையும் பாலும் முறையாக பிதாவையும் பரிசுத்த ஆவியானவரையும் குறிக்கிறது, இதுவே இயேசு கிறிஸ்து என்கிற ஜீவஅப்பம், எப்படியெனில் வார்த்தையாக வெளிப்பட்ட இயேசு கிறிஸ்துவுக்குள் பிதாவும் பரிசுத்த ஆவியானவரும் கிருபையும் சத்தியமுமாக குடியிருந்தார்கள் - அந்த வார்த்தை மாம்சமாகி, கிருபையினாலும் சத்தியத்தினாலும் நிறைந்தவராய், நமக்குள்ளே வாசம்பண்ணினார்; அவருடைய மகிமையைக் கண்டோம்; அது பிதாவுக்கு ஒரே பேறானவருடைய மகிமைக்கு ஏற்ற மகிமையாகவே இருந்தது - யோவான் 1:14
வெண்ணை
ஜீவஅப்பத்தின் அர்த்தத்தை விளக்க, ஆபிரகாம் கொண்டு வந்த மூன்று பொருட்களில், முதலாவது பசுவின் வெண்ணை இருந்தது, காரணம் கிருபையின் பிதாவே நம்மை இழுத்துக் கொள்கிறவராய் இருக்கிறார் - 44.என்னை அனுப்பின பிதா ஒருவனை இழுத்துக்கொள்ளாவிட்டால் அவன் என்னிடத்தில் வரமாட்டான்; கடைசிநாளில் நான் அவனை எழுப்புவேன். 45.எல்லாரும் தேவனாலே போதிக்கப்பட்டிருப்பார்கள் என்று தீர்க்கதரிசிகளின் ஆகமத்தில் எழுதியிருக்கிறதே; ஆகையால் பிதாவினிடத்தில் கேட்டுக் கற்றுக்கொள்ளுகிறவன் எவனும் என்னிடத்தில் வருகிறான் - யோவான் 6:44-45
இந்த கிருபையை, கிருபையின் ஆவி என்றே வேதாகமம் சொல்லுகிறது - 29.தேவனுடைய குமாரனைக் காலின்கீழ் மிதித்து, தன்னைப் பரிசுத்தஞ்செய்த உடன்படிக்கையின் இரத்தத்தை அசுத்தமென்றெண்ணி, கிருபையின் ஆவியை நிந்திக்கிறவன் எவ்வளவு கொடிதான ஆக்கினைக்குப் பாத்திரவானாயிருப்பானென்பதை யோசித்துப்பாருங்கள். 30.பழிவாங்குதல் எனக்குரியது, நானே பதிற்செய்வேன் என்று கர்த்தர் சொல்லுகிறார் என்றும், கர்த்தர் தம்முடைய ஜனங்களை நியாயந்தீர்ப்பார் என்றும் சொன்னவர் இன்னாரென்று அறிவோம். 31.ஜீவனுள்ள தேவனுடைய கைகளில் விழுகிறது பயங்கரமாயிருக்குமே - எபிரெயர் 10:29-31
பால்
ஜீவஅப்பத்தின் அர்த்தத்தை விளக்க, ஆபிரகாம் கொண்டு வந்த மூன்று பொருட்களில், இரண்டாவது பசுவின் பால் இருந்தது, காரணம் சத்தியம் எண்ணப்பட்ட பரிசுத்த ஆவியானவரே நம்மை பக்குவப்படுத்துகிறவராய் இருக்கிறார் - ஆதலால், தேவனுடைய ஆவியினாலே பேசுகிற எவனும் இயேசுவைச் சபிக்கப்பட்டவனென்று சொல்லமாட்டானென்றும், பரிசுத்த ஆவியினாலேயன்றி இயேசுவைக் கர்த்தரென்று ஒருவனும் சொல்லக்கூடாதென்றும், உங்களுக்குத் தெரிவிக்கிறேன் - I கொரிந்தியர் 12:3
இந்த சத்தியத்தை, சத்திய ஆவி என்றே வேதாகமம் சொல்லுகிறது - 15.நீங்கள் என்னிடத்தில் அன்பாயிருந்தால் என் கற்பனைகளைக் கைக்கொள்ளுங்கள். 16.நான் பிதாவை வேண்டிக்கொள்ளுவேன், அப்பொழுது என்றென்றைக்கும் உங்களுடனேகூட இருக்கும்படிக்குச் சத்திய ஆவியாகிய வேறொரு தேற்றரவாளனை அவர் உங்களுக்குத் தந்தருளுவார். 17.உலகம் அந்தச் சத்திய ஆவியானவரைக் காணாமலும் அறியாமலும் இருக்கிறபடியால் அவரைப் பெற்றுக்கொள்ளமாட்டாது; அவர் உங்களுடனே வாசம்பண்ணி உங்களுக்குள்ளே இருப்பதால், நீங்கள் அவரை அறிவீர்கள் - யோவான் 14:15-17
அடுத்த பாகம்: மம்ரேயின் விளக்கம்