ஏதேன் நதியின் விளக்கம்
இயேசு கிறிஸ்து திரியேக தேவனாக, அதாவது பிதா, வார்த்தை, பரிசுத்த ஆவியானவரின் தற்சுரூபமாய் இருக்கிறார் !
இயேசு கிறிஸ்து திரியேக தேவனாக, அதாவது பிதா, வார்த்தை, பரிசுத்த ஆவியானவரின் தற்சுரூபமாய் இருக்கிறார் !
முந்தைய பாகம்: ஆகாய சுடர்களின் விளக்கம்
இந்த உலகத்தில் ஏத்தனையோ நதிகள் இருக்க தான் செய்தன, அப்படி இருக்கும் பொழுது ஏதேனிலிருந்து ஓடின ஒரு நதியை குறித்தும், அதிலிருந்து பிரிந்த நாலு பெரிய ஆறுகளை குறித்தும் ஆதியாகமம் புஸ்தகத்தில் சொல்லப்படக் காரணம் என்ன?
ஆதாமும் ஏவாளும் தாங்கள் நிர்வாணி என்பதை அறியும் முன்பே, அதாவது பாவத்தின் விளைவால் மகிமையின் சாயலை இழந்து ஏதேன் தோட்டத்திலிருந்து அனுப்பிவிடப்படும் முன்பே, பைசோன் என்கிற நதியை குறித்தும், அந்த பைசோன் நதியில் பொன் உண்டு என்றும், அவ்விடத்திலே பிதோலாகும், கோமேதகக் கல்லும் உண்டு என்றும் சொல்லப்பட காரணம் என்ன?
இவைகள் இயேசு கிறிஸ்துவையும், பிதாவாகிய திரியேக தேவனையும் நாம் அறிந்துக் கொள்ள வேண்டும் என்கிற மேலான நோக்கத்தினால் தான் எழுதப்பட்டுள்ளது - 10.தோட்டத்துக்குத் தண்ணீர் பாயும்படி ஏதேனிலிருந்து ஒரு நதி ஓடி, அங்கேயிருந்து பிரிந்து நாலு பெரிய ஆறுகளாயிற்று. 11.முதலாம் ஆற்றுக்குப் பைசோன் என்று பேர், அது ஆவிலா தேசம் முழுவதையும் சுற்றி ஓடும்; அவ்விடத்திலே பொன் விளையும். 12.அந்தத் தேசத்தின் பொன் நல்லது; அவ்விடத்திலே பிதோலாகும், கோமேதகக் கல்லும் உண்டு. 13.இரண்டாம் ஆற்றுக்குக் கீகோன் என்று பேர், அது எத்தியோப்பியா தேசம் முழுவதையும் சுற்றி ஓடும். 14.மூன்றாம் ஆற்றுக்கு இதெக்கேல் என்று பேர், அது அசீரியாவுக்குக் கிழக்கே ஓடும்; நாலாம் ஆற்றுக்கு ஐபிராத்து என்று பேர் - ஆதியாகமம் 2:10-14
நன்றாய் அறிந்துப் பார்த்தால் இவைகள் சகரியா தீர்க்கதரிசியின் தரிசனத்திற்கு ஒத்ததாகவே இருக்கிறது, இதை புரிந்துக் கொண்டால் எசேக்கியேல் தீர்க்கதரிசியின் தரிசனத்தையும் எளிதாக புரிந்துக் கொள்ளலாம் - 4.இதோ, வடக்கேயிருந்து புசல்காற்றும் பெரிய மேகமும், அத்தோடே கலந்த அக்கினியும் வரக்கண்டேன்; அதைச் சுற்றிலும் பிரகாசமும், அதின் நடுவில் அக்கினிக்குள்ளிருந்து விளங்கிய சொகுசாவின் நிறமும் உண்டாயிருந்தது. 5.அதின் நடுவிலிருந்து நாலு ஜீவன்கள் தோன்றின; அவைகளின் சாயல் மனுஷ சாயலாயிருந்தது. 6.அவைகளில் ஒவ்வொன்றுக்கும் நந்நான்கு முகங்களும், ஒவ்வொன்றுக்கும் நந்நான்கு செட்டைகளும் இருந்தன. 7.அவைகளுடைய கால்கள் நிமிர்ந்த கால்களாயிருந்தன; அவைகளுடைய உள்ளங்கால்கள் கன்றுக்குட்டியின் உள்ளங்கால்களுக்கு ஒப்பாயிருந்தன; அவைகள் துலக்கப்பட்ட வெண்கலத்தின் வருணமாய் மின்னிக்கொண்டிருந்தன. 8.அவைகளுடைய செட்டைகளின்கீழ் அவைகளின் நாலு பக்கங்களிலும் மனுஷ கைகள் இருந்தன; அந்த நாலுக்கும் அதினதின் முகங்களும் அதினதின் செட்டைகளும் உண்டாயிருந்தன. 9.அவைகள் ஒவ்வொன்றின் செட்டைகளும் மற்றதின் செட்டைகளோடே சேர்ந்திருந்தன; அவைகள் செல்லுகையில் திரும்பாமல் ஒவ்வொன்றும் தன்தன் திசைக்கு நேர்முகமாய்ச் சென்றன. 10.அவைகளுடைய முகங்களின் சாயலாவது, வலதுபக்கத்தில் நாலும் மனுஷமுகமும் சிங்கமுகமும், இடதுபக்கத்தில் நாலும் எருது முகமும் கழுகு முகமுமாயிருந்தன. 11.அவைகளுடைய முகங்கள் இப்படியிருக்க, அவைகளுடைய செட்டைகள் மேலே பிரிந்திருந்தன, ஒவ்வொன்றுக்குமுள்ள இரண்டிரண்டு செட்டைகள் ஒன்றோடொன்று சேர்ந்திருந்தன; மற்ற இரண்டிரண்டு செட்டைகள் அவைகளுடைய உடல்களை மூடின. 12.அவைகள் ஒவ்வொன்றும் தன்தன் திசைக்கு நேர்முகமாய்ச் சென்றது; ஆவி போகவேண்டுமென்றிருந்த எவ்விடத்துக்கும் அவைகள் போயின; போகையில் அவைகள் திரும்பிப்பார்க்கவில்லை. 13.ஜீவன்களுடைய சாயல் எப்படியிருந்ததென்றால், அவைகள் எரிகிற அக்கினித்தழலின் தோற்றமும் தீவர்த்திகளின் தோற்றமுமாயிருந்தது; அந்த அக்கினி ஜீவன்களுக்குள்ளே உலாவிப் பிரகாசமாயிருந்தது; அக்கினியிலிருந்து மின்னல் புறப்பட்டது. 14.அந்த ஜீவன்கள் மின்னலின் தோற்றம்போல ஓடித்திரிந்தன - எசேக்கியேல் 1:4-14
இதில் கீகோன், இதெக்கேல், மற்றும் ஐபிராத்து என்ற மூன்று நதிகள், பரலோகத்தின் தேவனை, அதாவது நாம் காணக்கூடாத அதரிசனமான பிதா, வார்த்தை, பரிசுத்த ஆவி என்ற திரியேக தேவனை குறிக்கிறது, இதை அப்போஸ்தலனாகிய யோவான் சொல்லும் போது அதரிசனமான தேவன் மூன்று நபர்களாக இருப்பதாகவும், அதே சமயத்தில் அவர்கள் மூன்று பேரும் பிரிக்க முடியாத ஒரே தேவனாக[பிதாவாக] இருக்கிறார் என்றும் குறிப்பிட்டுள்ளார் - பரலோகத்திலே சாட்சியிடுகிறவர்கள் மூவர், பிதா, வார்த்தை, பரிசுத்த ஆவி என்பவர்களே, இம்மூவரும் ஒன்றாயிருக்கிறார்கள் - I யோவான் 5:7
அதே சமயத்தில் பைசோன் நதியோ, தேவ குமாரனாகிய இயேசு கிறிஸ்துவை குறிக்கிறது - 11.முதலாம் ஆற்றுக்குப் பைசோன் என்று பேர், அது ஆவிலா தேசம் முழுவதையும் சுற்றி ஓடும்; அவ்விடத்திலே பொன்(வார்த்தை) விளையும். 12.அந்தத் தேசத்தின் பொன் நல்லது; அவ்விடத்திலே பிதோலாகும்(கிருபையும்), கோமேதகக்(சத்தியமும்) கல்லும் உண்டு - ஆதியாகமம் 2:11-12
ஆனால் இந்த பைசோன் நதியில், பொன், பிதோலாகும், மற்றும் கோமேதகக் கல் என்கிற மூன்று விலையேறப் பெற்றக் காரியங்கள் இருந்தன, அவைகள் நம் இரட்சகராகிய இயேசு கிறிஸ்துவுக்குள் பிதா வார்த்தை பரிசுத்த ஆவியானவர் என்ற மூன்று பேருமே வாசம் செய்கிறார்கள் என்பதை விளக்குகிறது, எப்படியென்றால் வார்த்தையானவர் தன்னுடைய குமாரனை இந்த உலகத்திற்கு அனுப்பின போது, பிதாவின் குமாரனும், பரிசுத்த ஆவியின் குமாரனும், அந்த இயேசு என்கிற வார்த்தையானவருக்குள் வாசம் செய்தார்கள், இதை அப்போஸ்தலனாகிய யோவான் விவரிக்கும் பொழுது பிதா, வார்த்தை, பரிசுத்த ஆவியாகிய திரியேக தேவன் ஜலம், இரத்தம், ஆவியாக கிறிஸ்து இயேசுவுக்குள் இருந்தார்கள் என்று குறிப்பிட்டுள்ளார் - 8.பூலோகத்திலே சாட்சியிடுகிறவைகள் மூன்று, ஆவி, ஜலம், இரத்தம் என்பவைகளே, இம்மூன்றும் ஒருமைப்பட்டிருக்கிறது. 9.நாம் மனுஷருடைய சாட்சியை ஏற்றுக்கொண்டால், அதைப்பார்க்கிலும் தேவனுடைய சாட்சி அதிகமாயிருக்கிறது; தேவன் தமது குமாரனைக்குறித்துக் கொடுத்த சாட்சி இதுவே - I யோவான் 5:8-9
அடுத்த பாகம்: மன்னாவின் விளக்கம்