முந்தைய பாகம்: வேவுகாரரின் விளக்கம்
வேதாகமத்தில் சாமுவேலின் காரியங்கள் கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவையே வெளிப்படுத்துவதாய் இருக்கிறது, அதனால் தான் அவன் தாயாகிய அன்னாள் காளை, ஒரு மரக்கால் மாவு, ஒரு துருத்தி திராட்சரசம் என மூன்று காரியங்களை கர்த்தருடைய ஆலயத்துக்கு கொண்டு வந்தாள் - 24.அவள் அவனைப் பால்மறக்கப்பண்ணினபின்பு, மூன்று காளைகளையும், ஒரு மரக்கால் மாவையும், ஒரு துருத்தி திராட்சரசத்தையும் எடுத்துக்கொண்டு, அவனையும் கூட்டிக்கொண்டு, சீலோவிலிருக்கிற கர்த்தருடைய ஆலயத்துக்குப் போனாள்; பிள்ளை இன்னும் குழந்தையாயிருந்தது. 25.அவர்கள் ஒரு காளையைப் பலியிட்டு, பிள்ளையை ஏலியினிடத்தில் கொண்டுவந்து விட்டார்கள். 26.அப்பொழுது அவள்: என் ஆண்டவனே, இங்கே உம்மண்டையிலே நின்று கர்த்தரை நோக்கி விண்ணப்பம்பண்ணின ஸ்திரீ நான் தான் என்று என் ஆண்டவனாகிய உம்முடைய ஜீவனைக்கொண்டு சொல்லுகிறேன். 27.இந்தப் பிள்ளைக்காக விண்ணப்பம்பண்ணினேன்; நான் கர்த்தரிடத்தில் கேட்ட என் விண்ணப்பத்தின்படி எனக்குக் கட்டளையிட்டார். 28.ஆகையால் அவன் கர்த்தருக்கென்று கேட்கப்பட்டபடியினால், அவன் உயிரோடிருக்கும் சகல நாளும் அவனைக் கர்த்தருக்கே ஒப்புக்கொடுக்கிறேன் என்றாள்; அவன் அங்கே கர்த்தரைப் பணிந்துகொண்டான்.
ஆங்கில மொழிபெயர்ப்புகளில் மூன்று காளை என்று சொல்லமால், மூன்று வயது காளை என்றே சொல்லப்பட்டுள்ளது - 24.And when she had weaned him, she took him up with her, along with a three-year-old bull, an ephah of flour, and a skin of wine, and she brought him to the house of the Lord at Shiloh. And the child was young. 25.Then they slaughtered the bull, and they brought the child to Eli - 1 Samuel 1:24-25
இப்படி அன்னாள் கொண்டு மூன்று வயது வந்த காளை, ஒரு மரக்கால் மாவு, ஒரு துருத்தி திராட்சரசம், நம் இரட்சகராம் இயேசு கிறிஸ்துவின் திருத்துவதை வெளிப்படுத்துவதாகவே இருக்கிறது.
அடுத்த பாகம்: சாமுவேலின் விளக்கம்