மூன்று வகை மரங்களின் விளக்கம்
இயேசு கிறிஸ்து திரியேக தேவனாக, அதாவது பிதா, வார்த்தை, பரிசுத்த ஆவியானவரின் தற்சுரூபமாய் இருக்கிறார்
இயேசு கிறிஸ்து திரியேக தேவனாக, அதாவது பிதா, வார்த்தை, பரிசுத்த ஆவியானவரின் தற்சுரூபமாய் இருக்கிறார்
முந்தைய பாகம்: மூன்று வகை ஆடுகளின் விளக்கம்
யாக்கோபு, தனது 77வது வயதில் ஒரு பரதேசியாய் ஆரானுக்கு வந்து, 14 வருடங்கள் தனது இரண்டு மனைவிகளுக்காக வேலைசெய்து, ஏறக்குறைய தனது 91வது வயதில், தனது குடும்பத்திற்காக சம்பாதிக்க வேண்டும் என்று பிரயாசப்பட்ட பொழுதும் ஒரு கைவிடப்பட்ட நிலைமை தான், அவன் மாமன் லாபான் எல்லா வண்ண நிற ஆடுகளையும் [கலப்பு நிறமும் வரியுமுள்ள வெள்ளாட்டுக் கடாக்களையும், புள்ளியும் வரியுமுள்ள வெள்ளாடுகள் யாவையும், சற்று வெண்மையும் கருமையுமுள்ள செம்மறியாடுகளையும்] பிரித்து கொண்டு போய் விட்டான், இப்பொழுது யாக்கோபிடம் இருப்பதோ எல்லாம் சாதாரண ஆடுகள், இந்த சாதாரண ஆடுகள் வண்ண நிற குட்டிகளை போடுவது ஆகாத காரியம் - 34.அதற்கு லாபான்: நீ சொன்னபடியே ஆகட்டும் என்று சொல்லி, 35.அந்நாளிலே கலப்பு நிறமும் வரியுமுள்ள வெள்ளாட்டுக் கடாக்களையும், புள்ளியும் வரியுமுள்ள வெள்ளாடுகள் யாவையும், சற்று வெண்மையும் கருமையுமுள்ள செம்மறியாடுகள் யாவையும் பிரித்து, தன் குமாரரிடத்தில் ஒப்புவித்து, 36.தனக்கும் யாக்கோபுக்கும் இடையிலே மூன்றுநாள் பிரயாணதூரத்தில் இருக்கும்படி வைத்தான். லாபானுடைய மற்ற ஆடுகளை யாக்கோபு மேய்த்தான் - ஆதியாகமம் 30:34-36
அப்பொழுது யாக்கோபு மூன்று விதமான நற்குல மரமான புன்னை, வாதுமை, அர்மோன் மரங்களை தெரிந்துக் கொண்டு, அவைகளின் கோப்புகளை வெட்டி, அதின் பட்டையை உரித்து [காயப்படுத்தி] ஆடுகள் முன்பாக போட்டார், அப்பொழுது, யாக்கோபினிடமிருந்த இருந்த சாதாரண ஆடுகள் அவர் சம்பளமாக கேட்ட மூன்று விதமான குட்டிகளை போட்டது - 37.பின்பு யாக்கோபு பச்சையாயிருக்கிற புன்னை, வாதுமை, அர்மோன் என்னும் மரங்களின் கொப்புகளை வெட்டி, இடையிடையே வெண்மை தோன்றும்படி, பட்டையை உரித்து, 38.தான் உரித்த கொப்புகளை ஆடுகள் தண்ணீர் குடிக்க வரும் கால்வாய்களிலும் தொட்டிகளிலும் ஆடுகளுக்கு எதிராகப் போட்டுவைப்பான்; ஆடுகள் தண்ணீர் குடிக்க வரும்போது பொலிவதுண்டு. 39.ஆடுகள் அந்தக் கொப்புகளுக்கு முன்பாகப் பொலிந்தபடியால், அவைகள் கலப்பு நிறமுள்ளதும் புள்ளியுள்ளதும் வரியுள்ளதுமான குட்டிகளைப் போட்டது - ஆதியாகமம் 30:37-39
இப்படி யாக்கோபு தெரிந்துக் கொண்ட மூன்று விதமான நற்குல மரமான புன்னை, வாதுமை, அர்மோன் பச்சை மரங்கள், பிதா, வார்த்தை, பரிசுத்த ஆவி என்ற திரியேக தேவனையே குறிக்கிறது, இதை அப்போஸ்தலனாகிய யோவான் சொல்லும் போது அதரிசனமான தேவன் மூன்று நபர்களாக இருப்பதாகவும், அதே சமயத்தில் அவர்கள் மூன்று பேரும் பிரிக்க முடியாத ஒரே தேவனாக[பிதாவாக] இருக்கிறார் என்றும் குறிப்பிட்டுள்ளார் - பரலோகத்திலே சாட்சியிடுகிறவர்கள் மூவர், பிதா, வார்த்தை, பரிசுத்த ஆவி என்பவர்களே, இம்மூவரும் ஒன்றாயிருக்கிறார்கள் - I யோவான் 5:7
மேலும், அந்த மூன்று மரத்திலிருந்து, வெட்டி எடுக்கப்பட்ட கொப்புகள், நம் இரட்சகராகிய இயேசு கிறிஸ்துவையே குறிக்கிறது, எப்படியெனில் தேவக்குமாரனாகிய இயேசு கிறிஸ்து பிதா, வார்த்தை, பரிசுத்த ஆவி என்கிற மூன்று பேரிடத்திலிருந்து உண்டாவனராகவும், அவர்களின் தற்சுரூபமாகவும் இருக்கிறார். இதை அப்போஸ்தலனாகிய யோவான் விவரிக்கும் பொழுது பிதா, வார்த்தை, பரிசுத்த ஆவியாகிய திரியேக தேவன் ஜலம், இரத்தம், ஆவியாக கிறிஸ்து இயேசுவுக்குள் இருந்தார்கள் என்று குறிப்பிட்டுள்ளார் - பூலோகத்திலே சாட்சியிடுகிறவைகள் மூன்று, ஆவி, ஜலம், இரத்தம் என்பவைகளே, இம்மூன்றும் ஒருமைப்பட்டிருக்கிறது - I யோவான் 5:8
மேலும் அந்த மூன்று விதமான கொப்புகளும் இடையிடையே வெண்மை தோன்றும்படியாக பட்டை உரிக்கப்பட்டது, அது நம் இரட்சகராகிய இயேசு கிறிஸ்துவுக்குள் வாசம் செய்த பிதா, வார்த்தை, பரிசுத்த ஆவியாகிய மூன்று பேருமே நமக்காக பாடுபட்டதையும், யாக்கோபு அந்த கொப்புகளை கால்வாய்களிலே போட்டது இயேசு கிறிஸ்துவின் சிலுவை மரணத்தையும், அதின் அடையாளமாகிய ஞானஸ்நானத்தையும் குறிக்கிறது, இந்த பிரம ரகசியத்தை ஆதாரமாக கொண்டதினாலேயே, யாக்கோபு திரளான ஆடுகளும், வேலைக்காரிகளும், வேலைக்காரரும், ஒட்டகங்களும், கழுதைகளும் உடையவனாகி மிகவும் விருத்தியடைந்தான் - 40.அந்த ஆட்டுக்குட்டிகளை யாக்கோபு பிரித்துக்கொண்டு, ஆடுகளை லாபானுடைய மந்தையிலிருக்கும் கலப்புநிறமானவைகளுக்கும் கறுப்பானவைகளெல்லாவற்றிற்கும் எதிராக நிறுத்தி, தன் ஆடுகளை லாபானுடைய மந்தையோடே சேர்க்காமல், தனிப்புறமாக வைத்துக்கொள்வான். 41.பலத்த ஆடுகள் பொலியும்போது, அந்தக் கொப்புகளுக்கு எதிரே பொலியும்படி யாக்கோபு அவைகளை அந்த ஆடுகளின் கண்களுக்கு முன்பாகக் கால்வாய்களிலே போட்டுவைப்பான். 42.பலவீனமான ஆடுகள் பொலியும்போது, அவைகளைப் போடாமலிருப்பான்; இதனால் பலவீனமானவைகள் லாபானையும், பலமுள்ளவைகள் யாக்கோபையும் சேர்ந்தன. 43.இவ்விதமாய் அந்தப் புருஷன் மிகவும் விருத்தியடைந்து, திரளான ஆடுகளும், வேலைக்காரிகளும், வேலைக்காரரும், ஒட்டகங்களும், கழுதைகளும் உடையவனானான் - ஆதியாகமம் 30:40-43
அடுத்த பாகம்: மூன்று தேவதூதர்களின் விளக்கம்