முந்தைய பாகம்: தேவையானது ஒன்றே
வேதபாரகரும் பரிசேயரும் நியாயப்பிரமாணத்தை கடைபிடிப்பதினாலும் நமது சுய நீதியினாலும் பரலோக ராஜ்ஜியத்தை சுதந்தரிக்க முடியும் என்று போதிக்கிறவர்களாக இருந்தார்கள், அவர்களுக்கு நம்மை தகுதிப்படுத்த மேசியாவின் பரிசுத்த ரத்தம் சிந்தப்பட வேண்டும் என்கிற ஞானம் இல்லாமல் தான் இருந்தது, இப்படி மேசியாவின் பரிசுத்த ரத்தத்தினால் கழுவப்படாமல் பரலோக ராஜ்ஜியத்தை சுதந்தரிக்க முடியும் என்பது எவ்வளவு ஆபத்தான போதனை? அது நித்திய நரகத்திற்கு அழைத்து செல்லும் சாத்தானின் உபதேசமாக அல்லவா இருக்கிறது ? இப்படி பட்டவர்களிடம் தான் கர்த்தராகிய இயேசு கிறிஸ்து இந்த காரியத்தை சொன்னார் - 13.மாயக்காரராகிய வேதபாரகரே! பரிசேயரே! உங்களுக்கு ஐயோ, மனுஷர் பிரவேசியாதபடி பரலோகராஜ்யத்தைப் பூட்டிப்போடுகிறீர்கள்; நீங்கள் அதில் பிரவேசிக்கிறதுமில்லை, பிரவேசிக்கப் போகிறவர்களைப் பிரவேசிக்கவிடுகிறதுமில்லை. 14.மாயக்காரராகிய வேதபாரகரே! பரிசேயரே! உங்களுக்கு ஐயோ, பார்வைக்காக நீண்ட ஜெபம்பண்ணி, விதவைகளின் வீடுகளைப் பட்சித்துப்போடுகிறீர்கள்; இதினிமித்தம் அதிக ஆக்கினையை அடைவீர்கள். 15.மாயக்காரராகிய வேதபாரகரே! பரிசேயரே! உங்களுக்கு ஐயோ, ஒருவனை உங்கள் மார்க்கத்தானாக்கும்படி சமுத்திரத்தையும் பூமியையும் சுற்றித்திரிகிறீர்கள்; அவன் உங்கள் மார்க்கத்தானானபோது அவனை உங்களிலும் இரட்டிப்பாய் நரகத்தின் மகனாக்குகிறீர்கள் - மத்தேயு 23:13-15
மேலும் இந்த வேதபாரகருக்கும் பரிசேயருக்கும் நம்மை பரிசுத்தம் பண்ண தேவனால் மாத்திரமே கூடும் என்கிற ஞானமும், அப்பயென்றால் பரலோகத்தின் தேவனே நம்மை இரட்சிக்கும் மேசியாவாக வர வேண்டும் என்கிற ஞானமும் இல்லாமல் தான் இருந்தது, இப்படி நம்மை பரிசுத்தம் பண்ணுகிற மேசியா பரலோகத்தின் தேவனுக்கு ஒப்பானவராய் இருக்க வேண்டுமே, என்பதை விளக்குவதற்காக தான் தேவாலயத்தின் பொன்னிற்கு கொடுக்க வேண்டிய கணம் தேவாலயத்திற்கும் கொடுக்கப்பட வேண்டுமே? காணிக்கைக்கு கொடுக்கப்பட வேண்டிய கணம் பலிபீடத்திற்கும் கொடுக்கப்பட வேண்டுமே என்று சொன்னார் - 16.குருடரான வழிகாட்டிகளே! உங்களுக்கு ஐயோ, எவனாகிலும் தேவாலயத்தின்பேரில் சத்தியம்பண்ணினால் அதினால் ஒன்றுமில்லையென்றும், எவனாகிலும் தேவாலயத்தின் பொன்னின்பேரில் சத்தியம்பண்ணினால் அவன் கடனாளியென்றும் சொல்லுகிறீர்கள். 17.மதிகேடரே, குருடரே! எது முக்கியம்? பொன்னோ, பொன்னைப் பரிசுத்தமாக்குகிற தேவாலயமோ? 18.மேலும், எவனாகிலும் பலிபீடத்தின் பேரில் சத்தியம்பண்ணினால் அதினால் ஒன்றுமில்லையென்றும், எவனாகிலும் அதின்மேல் இருக்கிற காணிக்கையின்பேரில் சத்தியம்பண்ணினால் அவன் கடனாளி என்றும் சொல்லுகிறீர்கள் - மத்தேயு 23:16-28
மேலும் நம்மை இரட்சிக்க வந்த மேசியாவாகிய இயேசு கிறிஸ்து வார்த்தையானவராக மாத்திரம் இல்லாமல் பிதாவையும் பரிசுத்த ஆவியையும் உடையவராக, அதாவது திரியக தேவனின் தத்ரூபமாக இருக்கிறார் என்பதை விளக்க தான் கர்த்தர் தன்னை பலிபீடம், தேவாலயம், சிங்காசனம் என்கிற மூன்று காரியங்களை கொண்டு விளக்கினார் - 19.மதிகேடரே, குருடரே! எது முக்கியம்? காணிக்கையோ, காணிக்கையைப் பரிசுத்தமாக்குகிற பலிபீடமோ? 20.ஆகையால், பலிபீடத்தின்பேரில் சத்தியம் பண்ணுகிறவன் அதின்பேரிலும் அதின்மேலுள்ள எல்லாவற்றின்பேரிலும் சத்தியம்பண்ணுகிறான். 21.தேவாலயத்தின்பேரில் சத்தியம்பண்ணுகிறவன் அதின்பேரிலும் அதில் வாசமாயிருக்கிறவர்பேரிலும் சத்தியம்பண்ணுகிறான். 22.வானத்தின்பேரில் சத்தியம் பண்ணுகிறவன் தேவனுடைய சிங்காசனத்தின் பேரிலும் அதில் வீற்றிருக்கிறவர் பேரிலும் சத்தியம் பண்ணுகிறான் - மத்தேயு 23:16-22
அதே இடத்தில் தானே பரலோக தேவனின் திருத்துவதை விளக்குவதற்காக, நம் கர்த்தராகிய இயேசு கிறிஸ்து பரலோகத்தின் தேவனை, பலிபீடத்தின் மேல் வீற்றிருக்கிறவர் என்றும் தேவாலயத்தின் மேல் வீற்றிருக்கிறவர் என்றும் வானத்தின் சிங்காசனத்தின் மேல் வீற்றிருக்கிறவர் என்றும் சொல்லி, பரலோகத்தின் தேவனை நம் கர்த்தர் ஆகிய இயேசு கிறிஸ்துவின் மூலமாக மாத்திரமே அடைய முடியும் என்பதையும் விளக்கி காட்டினார்.
சிங்காசனம், தேவாலயம், பலிபீடம்
இப்படி தேவகுமாரனாகிய இயேசு கிறிஸ்து, தன்னுடைய பலிபீடம், தேவாலயம், சிங்காசனம் என்கிற மூன்று காரியங்களை கொண்டு விளக்கினாரோ, அது போல் தான் ஏசாயா தீர்க்கதரிசியும் தன்னுடைய தரிசனத்தில் சிங்காசனத்தையும், தேவாலயத்தையும், பலிபீடத்தையும் கண்டார் - 1.உசியா ராஜா மரணமடைந்த வருஷத்தில், ஆண்டவர் உயரமும் உன்னதமுமான சிங்காசனத்தின்மேல் வீற்றிருக்கக்கண்டேன்; அவருடைய வஸ்திரத்தொங்கலால் தேவாலயம் நிறைந்திருந்தது. 2.சேராபீன்கள் அவருக்கு மேலாக நின்றார்கள்; அவர்களில் ஒவ்வொருவனுக்கும் அவ்வாறு செட்டைகளிருந்தன; அவனவன் இரண்டு செட்டைகளால் தன் தன் முகத்தை மூடி, இரண்டு செட்டைகளால் தன் தன் கால்களை மூடி, இரண்டு செட்டைகளால் பறந்து; 3.ஒருவரையொருவர் நோக்கி: சேனைகளின் கர்த்தர் பரிசுத்தர், பரிசுத்தர், பரிசுத்தர், பூமியனைத்தும் அவருடைய மகிமையால் நிறைந்திருக்கிறது என்று கூப்பிட்டுச் சொன்னார்கள். 4.கூப்பிடுகிறவர்களின் சத்தத்தால் வாசல்களின் நிலைகள் அசைந்து, ஆலயம் புகையினால் நிறைந்தது. 5.அப்பொழுது நான்: ஐயோ! அதமானேன், நான் அசுத்த உதடுகளுள்ள மனுஷன், அசுத்த உதடுகளுள்ள ஜனங்களின் நடுவில் வாசமாயிருக்கிறவன்; சேனைகளின் கர்த்தராகிய ராஜாவை என் கண்கள் கண்டதே என்றேன். 6.அப்பொழுது சேராபீன்களில் ஒருவன் பலிபீடத்திலிருந்து, தன் கையிலே பிடித்த குறட்டால் ஒரு நெருப்புத் தழலை எடுத்து, என்னிடத்தில் பறந்து வந்து, 7.அதினால் என் வாயைத் தொட்டு: இதோ, இது உன் உதடுகளைத் தொட்டதினால் உன் அக்கிரமம் நீங்கி, உன் பாவம் நிவிர்த்தியானது என்றான் - ஏசாயா 6:1-7
அடுத்த பாகம்: தீர்க்கதரிசிகளையும் ஞானிகளையும் வேதபாரகரையும்