முந்தைய பாகம்: தீர்க்கதரிசிகளையும் ஞானிகளையும் வேதபாரகரையும்
இப்படி பட்டவைகள் சத்துருவின் காரியமாய் இருப்பதினால் தான், கர்த்தர் தன் சீஷர்களை "நீங்களோ" என்று அழைத்து பின் வரும் காரியங்களை சொல்லி கொடுத்தார் - 8.நீங்களோ ரபீ(தீர்க்கதரிசி என்றோ, போதகர் என்றோ, வரம் பெற்றவர் என்றோ) என்றழைக்கப்படாதிருங்கள்; கிறிஸ்து ஒருவரே உங்களுக்குப் போதகராயிருக்கிறார், நீங்கள் எல்லாரும் சகோதரராயிருக்கிறீர்கள். 9.பூமியிலே ஒருவனையும் உங்கள் பிதா என்று சொல்லாதிருங்கள்; பரலோகத்திலிருக்கிற ஒருவரே உங்களுக்குப் பிதாவாயிருக்கிறார். 10.நீங்கள் குருக்கள் என்றும் அழைக்கப்படாதிருங்கள்; கிறிஸ்து ஒருவரே உங்களுக்குக் குருவாயிருக்கிறார். 11.உங்களில் பெரியவனாயிருக்கிறவன் உங்களுக்கு ஊழியக்காரனாயிருக்கக்கடவன். 12.தன்னை உயர்த்துகிறவன் தாழ்த்தப்படுவான், தன்னைத் தாழ்த்துகிறவன் உயர்த்தப்படுவான் - மத்தேயு 23:1-12
மேலும் இந்த வேதபாரகருக்கும் பரிசேயருக்கும் நம்மை பரிசுத்தம் பண்ண தேவனால் மாத்திரமே கூடும் என்கிற ஞானமும், அப்பயென்றால் பரலோகத்தின் தேவனே நம்மை இரட்சிக்கும் மேசியாவாக வர வேண்டும் என்கிற ஞானமும் இல்லாமல் தான் இருந்தது, இப்படி நம்மை பரிசுத்தம் பண்ணுகிற மேசியா பரலோகத்தின் தேவனுக்கு ஒப்பானவராய் இருக்க வேண்டுமே, என்பதை விளக்குவதற்காக தான் தேவாலயத்தின் பொன்னிற்கு கொடுக்க வேண்டிய கணம் தேவாலயத்திற்கும் கொடுக்கப்பட வேண்டுமே? காணிக்கைக்கு கொடுக்கப்பட வேண்டிய கணம் பலிபீடத்திற்கும் கொடுக்கப்பட வேண்டுமே என்று சொன்னார் - 16.குருடரான வழிகாட்டிகளே! உங்களுக்கு ஐயோ, எவனாகிலும் தேவாலயத்தின்பேரில் சத்தியம்பண்ணினால் அதினால் ஒன்றுமில்லையென்றும், எவனாகிலும் தேவாலயத்தின் பொன்னின்பேரில் சத்தியம்பண்ணினால் அவன் கடனாளியென்றும் சொல்லுகிறீர்கள். 17.மதிகேடரே, குருடரே! எது முக்கியம்? பொன்னோ, பொன்னைப் பரிசுத்தமாக்குகிற தேவாலயமோ? 18.மேலும், எவனாகிலும் பலிபீடத்தின் பேரில் சத்தியம்பண்ணினால் அதினால் ஒன்றுமில்லையென்றும், எவனாகிலும் அதின்மேல் இருக்கிற காணிக்கையின்பேரில் சத்தியம்பண்ணினால் அவன் கடனாளி என்றும் சொல்லுகிறீர்கள் - மத்தேயு 23:16-28
மேலும் நம்மை இரட்சிக்க வந்த மேசியாவாகிய இயேசு கிறிஸ்து வார்த்தையானவராக மாத்திரம் இல்லாமல் பிதாவையும் பரிசுத்த ஆவியையும் உடையவராக, அதாவது திரியக தேவனின் தத்ரூபமாக இருக்கிறார் என்பதை விளக்க தான் கர்த்தர் தன்னை பலிபீடம், தேவாலயம், சிங்காசனம் என்கிற மூன்று காரியங்களை கொண்டு விளக்கினார் - 19.மதிகேடரே, குருடரே! எது முக்கியம்? காணிக்கையோ, காணிக்கையைப் பரிசுத்தமாக்குகிற பலிபீடமோ? 20.ஆகையால், பலிபீடத்தின்பேரில் சத்தியம் பண்ணுகிறவன் அதின்பேரிலும் அதின்மேலுள்ள எல்லாவற்றின்பேரிலும் சத்தியம்பண்ணுகிறான். 21.தேவாலயத்தின்பேரில் சத்தியம்பண்ணுகிறவன் அதின்பேரிலும் அதில் வாசமாயிருக்கிறவர்பேரிலும் சத்தியம்பண்ணுகிறான். 22.வானத்தின்பேரில் சத்தியம் பண்ணுகிறவன் தேவனுடைய சிங்காசனத்தின் பேரிலும் அதில் வீற்றிருக்கிறவர் பேரிலும் சத்தியம் பண்ணுகிறான் - மத்தேயு 23:16-22
அதே இடத்தில் தானே பரலோக தேவனின் திருத்துவதை விளக்குவதற்காக, நம் கர்த்தராகிய இயேசு கிறிஸ்து பரலோகத்தின் தேவனை, பலிபீடத்தின் மேல் வீற்றிருக்கிறவர் என்றும் தேவாலயத்தின் மேல் வீற்றிருக்கிறவர் என்றும் வானத்தின் சிங்காசனத்தின் மேல் வீற்றிருக்கிறவர் என்றும் சொல்லி, பரலோகத்தின் தேவனை நம் கர்த்தர் ஆகிய இயேசு கிறிஸ்துவின் மூலமாக மாத்திரமே அடைய முடியும் என்பதையும் விளக்கி காட்டினார்.
அடுத்த பாகம்: கிருபையினாலும் சத்தியத்தினாலும் நிறைந்தவராய்