முந்தைய பாகம்:
இயேசு கிறிஸ்துவின் திரித்துவம்
நம் கர்த்தராகிய இயேசு கிறிஸ்து திரியேக தேவனின் (பிதா, வார்த்தை, பரிசுத்த ஆவியின்) தற்சுரூபமாக இருக்கிறார், எப்படியெனில் திருத்துவத்தில் இரண்டாவது நபராகிய வார்த்தையானவர் தன் குமாரனை அனுப்பிய பொழுது(அந்த வார்த்தை மாம்சமாகி - யோவான் 1:14), திருத்துவத்தில் முதல் நபராகிய பிதாவினுடைய குமாரனும் (என்னிடத்தில் வாசமாயிருக்கிற பிதா - யோவான் 14:10), பரிசுத்த ஆவியானவரின் குமாரனும் (கர்த்தருடைய ஆவியானவர் என்மேலிருக்கிறார் - லூக்கா 4:18) இயேசு கிறிஸ்துவுக்குள் கிருபையும் சத்தியமுமாக குடியிருந்தார்கள், இவர்கள் மூன்று பேருமே நமக்காக சிலுவையின் பாடுகளை அனுபவித்தார்கள், அதனால் தான் இயேசு கிறிஸ்துவை குறித்த தீர்க்கதரிசனம் இப்படிச் சொல்லுகிறது - 6.நீங்கள் தேவர்கள் என்றும், நீங்களெல்லாரும் உன்னதமானவரின் மக்கள் என்றும் நான் சொல்லியிருந்தேன். 7.ஆனாலும் நீங்கள் மனுஷரைப்போலச் செத்து, லோகப்பிரபுக்களில் ஒருவனைப்போல விழுந்துபோவீர்கள் - சங்கீதம் 82:6-7
இயேசுவின் மார்பில் சாய்ந்திருந்த அப்போஸ்தலனாகிய யோவான், தேவரகசியங்களை குறித்துச் சொல்லும் பொழுது, பிதாவாகிய பரலோகத்தின் தேவன் - பிதா, வார்த்தை, பரிசுத்த ஆவி என்ற மூன்று நபர்களாக இருப்பதாகவும், அதே சமயத்தில் அவர்கள் மூன்று பேரும் ஒரே தேவனாக இருப்பதாகவும் குறிப்பிட்டுள்ளார் - பரலோகத்திலே சாட்சியிடுகிறவர்கள் மூவர், பிதா, வார்த்தை, பரிசுத்த ஆவி என்பவர்களே, இம்மூவரும் ஒன்றாயிருக்கிறார்கள் - I யோவான் 5:7
குமாரனை குறித்து சொல்லும் பொழுது, பிதா, வார்த்தை, பரிசுத்த ஆவியாகிய திரியேக தேவனின் மூன்று குமாரர்களும் ஜலம், இரத்தம், ஆவியாக இயேசு கிறிஸ்து என்கிற ஒரே தெய்வமாக வெளிப்பட்டார்கள் என்று குறிப்பிட்டுள்ளார் - பூலோகத்திலே சாட்சியிடுகிறவைகள் மூன்று, ஆவி, ஜலம், இரத்தம் என்பவைகளே, இம்மூன்றும் ஒருமைப்பட்டிருக்கிறது - I யோவான் 5:8
இதுவே இயேசு கிறிஸ்துவை குறித்து பிதாவாகிய தேவன் கொடுத்த சாட்சி என்றும், இதனை புரிந்துக்கொண்டு, நம் இருதயத்திற்குள் வைத்துக் கொள்ளவேண்டும் என்றும் விசுவாசிகளுக்கு கட்டளையாக கொடுக்கப்பட்டுள்ளது - 9.நாம் மனுஷருடைய சாட்சியை ஏற்றுக்கொண்டால், அதைப்பார்க்கிலும் தேவனுடைய சாட்சி அதிகமாயிருக்கிறது; தேவன் தமது குமாரனைக்குறித்துக் கொடுத்த சாட்சி இதுவே. 10.தேவனுடைய குமாரனிடத்தில் விசுவாசமாயிருக்கிறவன் அந்தச் சாட்சியைத் தனக்குள்ளே கொண்டிருக்கிறான்; தேவனை விசுவாசியாதவனோ, தேவன் தம்முடைய குமாரனைக்குறித்துக் கொடுத்த சாட்சியை விசுவாசியாததினால், அவரைப் பொய்யராக்குகிறான். 11.தேவன் நமக்கு நித்தியஜீவனைத் தந்திருக்கிறார், அந்த ஜீவன் அவருடைய குமாரனில் இருக்கிறதென்பதே அந்தச் சாட்சியாம். 12.குமாரனை உடையவன் ஜீவனை உடையவன், தேவனுடைய குமாரன் இல்லாதவன் ஜீவன் இல்லாதவன். 13.உங்களுக்கு நித்தியஜீவன் உண்டென்று நீங்கள் அறியவும், தேவகுமாரனுடைய நாமத்தின்மேல் நீங்கள் விசுவாசமாயிருக்கவும், தேவகுமாரனுடைய நாமத்தின்மேல் விசுவாசமாயிருக்கிற உங்களுக்கு இவைகளை எழுதியிருக்கிறேன் - I யோவான் 5:9-13
கர்த்தரோடு இருக்கிறவரும் கர்த்தரோடு சேர்க்கிறவரும்
நம் கர்த்தராகிய இயேசு கிறிஸ்து வார்த்தையானவராக மாத்திரம் இல்லாமல் பிதாவையும் பரிசுத்த ஆவியையும் உடையவராக, அதாவது திரியக தேவனின் தத்ரூபமாக இருக்கிறார் என்பதை தான் இந்த தொகுப்பில் பார்த்துக் கொண்டிருக்கிறோம், இதற்கு முந்தின யோனாவிலும் பெரியவரும் சாலொமோனிலும் பெரியவருமாக என்கிற தொகுப்பில் தன்னை யோனாவோடு ஒப்பிட்ட இயேசு கிறிஸ்து தன்னுடன் யோனாவிலும் பெரியவர் ஒருவர் இருக்கிறார் என்று பிதாவாகிய தேவனையும், சாலமோனிலும் பெரியவர் ஒருவர் என்னுடன் இருக்கிறார் என்று பரிசுத்த ஆவியானவரையும் குறிப்பிட்டார்.
நாம் பரிசுத்த ஆவியினாவரை பற்றி அறிந்து கொள்ளவேண்டும், அவரை பெற்று கொள்ள வேண்டும் என்ற மேலான நோக்கத்தினால் தான் இயேசு கிறிஸ்து திரித்துவத்தை வெளிப்படுத்தினார் - 7.நான் உங்களுக்கு உண்மையைச் சொல்லுகிறேன்; நான் போகிறது உங்களுக்குப் பிரயோஜனமாயிருக்கும்; நான் போகாதிருந்தால், தேற்றரவாளன் உங்களிடத்தில் வரார்; நான் போவேனேயாகில் அவரை உங்களிடத்திற்கு அனுப்புவேன். 8.அவர் வந்து, பாவத்தைக்குறித்தும், நீதியைக்குறித்தும், நியாயத்தீர்ப்பைக்குறித்தும், உலகத்தைக் கண்டித்து உணர்த்துவார். 9.அவர்கள் என்னை விசுவாசியாதபடியினாலே பாவத்தைக்குறித்தும், 10.நீங்கள் இனி என்னைக் காணாதபடிக்கு நான் என் பிதாவினிடத்திற்குப் போகிறபடியினாலே நீதியைக்குறித்தும், 11.இந்த உலகத்தின் அதிபதி நியாயந்தீர்க்கப்பட்டதினாலே நியாயத்தீர்ப்பைக்குறித்தும், கண்டித்து உணர்த்துவார். 12.இன்னும் அநேகங்காரியங்களை நான் உங்களுக்குச் சொல்லவேண்டியதாயிருக்கிறது, அவைகளை நீங்கள் இப்பொழுது தாங்கமாட்டீர்கள். 13.சத்திய ஆவியாகிய அவர் வரும்போது, சகல சத்தியத்திற்குள்ளும் உங்களை நடத்துவார்; அவர் தம்முடைய சுயமாய்ப் பேசாமல், தாம் கேள்விப்பட்டவைகள் யாவையுஞ்சொல்லி, வரப்போகிற காரியங்களை உங்களுக்கு அறிவிப்பார். 14.அவர் என்னுடையதில் எடுத்து உங்களுக்கு அறிவிப்பதினால் என்னை மகிமைப்படுத்துவார். 15.பிதாவினுடையவைகள் யாவும் என்னுடையவைகள்; அதினாலே அவர் என்னுடையதில் எடுத்து உங்களுக்கு அறிவிப்பார் என்றேன் - யோவான் 16:7-15
அடுத்த பாகம்: எதிராளியானவன்