இயேசுவின் போதனைகள்
பாகம் 1: சாப்பிடவும் சமயமில்லை
பாகம் 1: சாப்பிடவும் சமயமில்லை
முன்னுரை: இயேசுவின் போதனைகள்
இயேசு கிறிஸ்து, பன்னிரண்டு பேரை அப்போஸ்தல ஊழியத்திற்காக தெரிந்துக் கொண்ட பொழுது, அந்த பன்னிரண்டு பேருக்கும், இயேசு கிறிஸ்து தான் சகலத்தையும் படைத்த சர்வ வல்லமையுள்ள தேவன் என்பதும், சிலுவையில் பாடுபட்டு தன் இரத்தத்தை சிந்தி நம்மை இரட்சிப்பவர் என்பதும் தெரியாது, அதனால், கர்த்தரோடு ஐக்கியமாய் இருப்பதை காட்டிலும், உலக மக்களின் ஐக்கியமே பெரிதாய் தோன்றியது, இதை தான் மார்க், ஜனங்கள் கூடிவந்ததால் சீஷர்களுக்கு சாப்பிடவும் நேரமில்லை என்று குறிப்பிட்டுள்ளார் - 13.பின்பு அவர் ஒரு மலையின்மேல் ஏறி, தமக்குச் சித்தமானவர்களைத் தம்மிடத்தில் வரவழைத்தார்; அவர்கள் அவரிடத்திற்கு வந்தார்கள். 14.அப்பொழுது அவர் பன்னிரண்டு பேரைத் தெரிந்துகொண்டு, அவர்கள் தம்மோடுகூட இருக்கவும், பிரசங்கம்பண்ணும்படியாகத் தாம் அவர்களை அனுப்பவும், 15.வியாதிகளைக் குணமாக்கிப் பிசாசுகளைத் துரத்தும்படி அவர்கள் அதிகாரமுடையவர்களாயிருக்கவும், அவர்களை ஏற்படுத்தினார். 16.அவர்கள் யாரெனில், சீமோன், இவனுக்குப் பேதுரு என்கிற பெயரிட்டார். 17.செபெதேயுவின் குமாரனாகிய யாக்கோபு, யாக்கோபின் சகோதரனாகிய யோவான், இவ்விருவருக்கும் இடிமுழக்க மக்களென்று அர்த்தங்கொள்ளும் பொவனெர்கேஸ் என்கிற பெயரிட்டார். 18.அந்திரேயா, பிலிப்பு, பர்த்தொலொமேயு, மத்தேயு, தோமா, அல்பேயுவின் குமாரன் யாக்கோபு, ததேயு, கானானியனாகிய சீமோன், 19.அவரைக் காட்டிக்கொடுத்த யூதாஸ்காரியோத்து என்பவர்களே. 20.பின்பு வீட்டுக்குப் போனார்கள்; அங்கே அவர்கள் சாப்பிடுவதற்கும் சமயமில்லாதபடிக்கு அநேக ஜனங்கள் மறுபடியும் கூடிவந்தார்கள் - மாற்கு 3:13-20
காரணம், கர்த்தர் தன் சீஷர்களுடன், ஒரு சாதாரண மனிதனாக தான் வாழ்ந்து வந்தார், இவர் தான் சகலத்தையும் படைத்த சர்வ வல்லமையுள்ள தேவன் என்று யாராவது சொன்னால் கூட நம்ப முடியாத அளவுக்கு அவர் எல்லோரையும் போல சாதாரண வஸ்திரம் தரித்தவராக தான் இருந்தார்.
ஆனால், கர்த்தர் சீஷர்களுடன் இருப்பது போல சித்தரிக்கும் படங்களில், கர்த்தர் மாத்திரம் வெண்மையான வஸ்திரம் தரித்தவராகவும், மற்ற சீஷர்கள் எல்லோரும் சாதாரண வஸ்திரம் தரித்தவராகவும் இருப்பார்கள், அது முற்றிலும் தவறானது.
மற்றவர்களை காட்டிலும் கர்த்தர் மாத்திரம் வித்தியாசமாக இருந்திப்பாரானால், யூதர்கள் ஏன் இயேசு கிறிஸ்துவை காட்டி கொடுக்க யூதாசுக்கு பணம் கொடுக்க வேண்டும்? போர்சேவர்களிடம் இயேசுவின் அடையாளத்தை சொல்லி, அவர்களில் ஒருவர் மாத்திரம் வெண்மையான உடை உடுத்தியிருப்பார் அவரை கைது செய்து கொண்டு வாருங்கள் என்று தானே சொல்லியிருப்பார்கள்.
அடுத்த பாகம்: அக்கரைக்குப் போவோம் வாருங்கள்