இயேசுவின் போதனைகள்
பாகம் 4: அப்பங்களைக்குறித்து உணராமற்போனார்கள்
பாகம் 4: அப்பங்களைக்குறித்து உணராமற்போனார்கள்
முந்தைய பாகம்: போஜனம்பண்ணவும் சமயமில்லை
கர்த்தரோடு வனாந்தரத்திற்கு சென்ற சீஷர்களுக்கு, இயேசு கிறிஸ்து ஐந்து அப்பங்களை கொண்டு ஐயாயிரம் பேரை போஷித்த அற்புதம் மிகப்பெரிய ஆச்சரியத்தை கொடுத்தது, 12 கூடை அப்பமும் மீனும் மீதம் எடுத்தார்கள், என்று சொல்லும் பொழுது ஒவ்வொருவரும் ஒரு கூடையுடன் இருந்தார்கள் என்பதை அறிந்துக் கொள்ளலாம் - 32.அப்படியே அவர்கள் தனிமையாய் ஒரு படவில் ஏறி வனாந்தரமான ஓர் இடத்திற்குப் போனார்கள். 33.அவர்கள் புறப்பட்டுப் போகிறதை ஜனங்கள் கண்டார்கள். அவரை அறிந்த அநேகர் சகல பட்டணங்களிலுமிருந்து கால்நடையாய் அவ்விடத்திற்கு ஓடி, அவர்களுக்கு முன்னே அங்கே சேர்ந்து, அவரிடத்தில் கூடிவந்தார்கள். 34.இயேசு கரையில் வந்து, அநேக ஜனங்களைக் கண்டு, அவர்கள் மேய்ப்பனில்லாத ஆடுகளைப்போலிருந்தபடியால், அவர்கள்மேல் மனதுருகி, அநேக காரியங்களை அவர்களுக்கு உபதேசிக்கத் தொடங்கினார். 35.வெகுநேரம் சென்றபின்பு, அவருடைய சீஷர்கள் அவரிடத்தில் வந்து: இது வனாந்தரமான இடம், வெகு நேரமுமாயிற்று; 36.புசிக்கிறதற்கும் இவர்களிடத்தில் ஒன்றுமில்லை; ஆகையால் இவர்கள் சுற்றியிருக்கிற கிராமங்களுக்கும் ஊர்களுக்கும் போய், தங்களுக்காக அப்பங்களை வாங்கிக்கொள்ளும்படி இவர்களை அனுப்பிவிடவேண்டும் என்றார்கள். 37.அவர் அவர்களை நோக்கி: நீங்களே அவர்களுக்குப் போஜனங்கொடுங்கள் என்றார். அதற்கு அவர்கள்: நாங்கள் போய், இருநூறு பணத்துக்கு அப்பங்களை வாங்கி இவர்களுக்குப் புசிக்கும்படி கொடுக்கக்கூடுமோ என்றார்கள். 38.அதற்கு அவர்: உங்களிடத்தில் எத்தனை அப்பங்களுண்டு, போய்ப்பாருங்கள் என்றார். அவர்கள் பார்த்துவந்து: ஐந்து அப்பங்களும், இரண்டு மீன்களும் உண்டு என்றார்கள். 39.அப்பொழுது எல்லாரையும் பசும்புல்லின்மேல் பந்திபந்தியாக உட்காரவைக்கும்படி அவர்களுக்குக் கட்டளையிட்டார். 40.அப்படியே வரிசை வரிசையாய், நூறுநூறுபேராகவும் ஐம்பதைம்பதுபேராகவும் உட்கார்ந்தார்கள். 41.அவர் அந்த ஐந்து அப்பங்களையும், அந்த இரண்டு மீன்களையும் எடுத்து, வானத்தை அண்ணாந்து பார்த்து, ஆசீர்வதித்து, அப்பங்களைப் பிட்டு, அவர்களுக்குப் பரிமாறும்படி தம்முடைய சீஷர்களிடத்தில் கொடுத்தார். அப்படியே இரண்டு மீன்களையும் எல்லாருக்கும் பங்கிட்டார். 42.எல்லாரும் சாப்பிட்டுத் திருப்தியடைந்தார்கள். 43.மேலும் அப்பங்களிலும் மீன்களிலும் மீதியான துணிக்கைகளைப் பன்னிரண்டு கூடை நிறைய எடுத்தார்கள். 44.அப்பம் சாப்பிட்ட புருஷர் ஏறக்குறைய ஐயாயிரம்பேராயிருந்தார்கள் - மாற்கு 6:32-44
சீஷர்களுக்கு தாங்கள் மீதம் எடுத்த அந்த 12 கூடை அப்பமும் மீனும் இன்னும் அதிகமான ஆச்சரியத்தையும் சந்தோஷத்தையும் கொடுத்திருக்கும், காரணம் அப்பம் என்பது இன்றளவும் ஒரு விலையேறப்பெற்ற பொருளாக தான் இருக்கிறது, அதனை விற்று கொஞ்ச நாள் இந்த உலக பாடுகளில் இருந்து விடுபடலாம் என்றோ, அல்லது தம் பழைய நண்பர்களுடன் சேர்ந்து சில நாள் இந்த உலகத்தை அனுபவிக்கலாம் என்றோ எண்ணியிருப்பார்கள், அதன் விளைவு தான், அவர்கள் கர்த்தரை கரையிலேயே விட்டு விட்டு தாங்கள் மட்டும் படவிலே பயணம் மேற்கொண்டார்கள் - 45அவர் ஜனங்களை அனுப்பிவிடுகையில், தம்முடைய சீஷர்கள் படவில் ஏறி, அக்கரையில் பெத்சாயிதாவுக்கு எதிராக, தமக்கு முன்னே போகும்படி அவர்களைத் துரிதப்படுத்தினார். 46அவர் ஜனங்களை அனுப்பிவிட்டபின்பு, ஜெபம்பண்ணும்படி ஒரு மலையின்மேல் ஏறினார். 47சாயங்காலமானபோது படவு நடுக்கடலிலிருந்தது; அவரோ கரையிலே தனிமையாயிருந்தார் - மாற்கு 6:45-47
ஆனால் அவர்கள் நினைத்தது ஒன்றுமே நடக்கவில்லை, காரணம், காற்று அவர்களுக்கு எதிராயிருந்தபடியால் இரவின் நாலாம் ஜாமம் வரைக்கும் கடலில் தத்தளித்தார்களாம், நாலாம் ஜாமம் என்றால் விடியற்காலை 3 மணிக்கும் 6 மணிக்கும் இடைப்பட்ட நேரம் ஆகும், அப்படி சீஷர்கள் எறக்குறைய 9 மணி நேரமாக எதிர்க்காற்றோடு போராடிக்கொண்டிருந்தார்கள் என்றால் நிச்சியமாகவே அவர்களிடம் இருந்த 12 கூடை அப்பமும் மீனும் கடலின் அலைகளினால் தண்ணீர் பட்டு பிரயோஜனம் அற்றதாக போயிருந்தியிருக்கும், அப்படிபட்ட உயிருக்கு ஆபத்தான சூழ்நிலையில் தான் கர்த்தர் அவர்களிடம் வந்து அவர்களை காப்பாற்றினார் - 48அப்பொழுது காற்று அவர்களுக்கு எதிராயிருந்தபடியினால், அவர்கள் தண்டு வலிக்கிறதில் வருத்தப்படுகிறதை அவர் கண்டு, இராத்திரியில் நாலாம் ஜாமத்தில் கடலின்மேல் நடந்து, அவர்களிடத்தில் வந்து, அவர்களைக் கடந்து போகிறவர்போல் காணப்பட்டார். 49அவர் கடலின்மேல் நடக்கிறதை அவர்கள் கண்டு, ஆவேசம் என்று எண்ணி, சத்தமிட்டு அலறினார்கள் - மாற்கு 6:48-49
சீஷர்களின் கைகளிலிருந்த அப்பத்தினால் ஒரு பிரயோஜனமும் இல்லை என்கிற சூழ்நிலையில், ஜீவ அப்பமாகிய இயேசு கிறிஸ்து வந்து அவர்களை காப்பாற்றினார், அப்படி இருந்தும் சீஷர்களால் இயேசு தான் ஜீவ அப்பம் என்பதை உணர்ந்து கொள்ள முடியவில்லை, அதற்கு காரணம் சீஷர்களின் இருதயம் இன்னமும் கடினமானதாகவே இருந்தது - 50அவர்களெல்லாரும் அவரைக் கண்டு கலக்கமடைந்தார்கள். உடனே அவர் அவர்களோடே பேசி: திடன்கொள்ளுங்கள், நான்தான், பயப்படாதிருங்கள் என்று சொல்லி, 51அவர்கள் இருந்த படவில் ஏறினார். அப்பொழுது காற்று அமர்ந்தது; அதினால் அவர்கள் தங்களுக்குள்ளே மிகவும் பிரமித்து ஆச்சரியப்பட்டார்கள். 52அவர்களுடைய இருதயம் கடினமுள்ளதாயிருந்தபடியினால் அப்பங்களைக்குறித்து அவர்கள் உணராமற்போனார்கள் - மாற்கு 6:50-52
அடுத்த பாகம்: பிள்ளைகள் சிந்துகிற துணிக்கைகளை