இயேசுவின் போதனைகள்
பாகம் 14: போஜனபந்தியிருக்கையில்
பாகம் 14: போஜனபந்தியிருக்கையில்
முந்தைய பாகம்: உங்களுக்கு மாதிரியைக் காண்பித்தேன்
துவக்க நாட்களில், ஜீவஅப்பமாகிய கர்த்தரை ஒரு சாதாரண நபராக பார்த்த சீஷர்களுக்கு, கர்த்தரோடு இருப்பது எவ்வளவு பெரிய பாக்கியம் என்பது அவர்களுக்கு தெரியவில்லை, கர்த்தரோடு கொஞ்ச நேரம் செலவு செய்யவும் இவ்வுலக காரியங்கள் தடையாக தான் இருந்தன, அதை தான் "ஜனங்கள் கூடிவந்ததினால் சீஷர்களுக்கு சாப்பிடவும் சமயமில்லை", அதாவது ஒரு சிற்றுண்டி சாப்பிட கூட நேரமில்லை என்று வேதாகமம் சொல்லுகிறது - அவர்கள் சாப்பிடுவதற்கும் சமயமில்லாதபடிக்கு அநேக ஜனங்கள் மறுபடியும் கூடிவந்தார்கள் - மாற்கு 3:20
நாட்கள் செல்ல செல்ல, சீஷர்கள் கர்த்தரின் வல்லமையை புரிந்துக் கொள்ள ஆரம்பித்தார்கள், ஆனாலும் அவர் தான் நம் ஆத்ம மணவாளன், அவரோடு தான் நாம் எப்பொழுதும் இருக்க வேண்டும் என்பதை அறியாமல் இருந்தார்கள், ஏனென்றால், நாம் கர்த்தரை அறிந்துக் கொள்ள ஆரம்பிக்கும் பொழுது, நம்முடைய சிந்தையை சிதறடிக்கும் காரியங்களும் நம் நேரத்தை திருடும் காரியங்களும் பெருக தான் செய்கின்றன, அதை தான் "வருகிறவர்களும் போகிறவர்களும் அநேகராயிருந்தபடியினால் சீஷர்களுக்கு போஜனம்பண்ணவும் சமயமில்லை", அதாவது ஒரு முழுமையான சாப்பாடு சாப்பிட நேரமில்லை என்று வேதாகமம் சொல்லுகிறது - வருகிறவர்களும் போகிறவர்களும் அநேகராயிருந்தபடியினால் போஜனம்பண்ணுகிறதற்கும் அவர்களுக்குச் சமயமில்லாதிருந்தது - மாற்கு 6:31
துவக்கத்தில் கர்த்தரின் அன்பை அறியாதிருந்த சீஷர்கள், கர்த்தரோடு மூன்றரை வருடங்கள் வாழ்ந்து, சிலுவையில் நமக்காக மரித்த கர்த்தரை நினைத்து ஏங்கி கொண்டிருந்தார்கள், கர்த்தரின் நினைவு அவர்களை வாட்டியது, அவரை காணத்துடித்தார்கள், அதை தான் போஜனபந்தியிலிருக்கையில் என்று வேதாகமம் அழைக்கிறது - 14.அதன்பின்பு பதினொருவரும் போஜனபந்தியிலிருக்கையில் அவர்களுக்கு அவர் தரிசனமாகி, உயிர்த்தெழுந்திருந்த தம்மைக் கண்டவர்களை அவர்கள் நம்பாமற்போனதினிமித்தம் அவர்களுடைய அவிசுவாசத்தைக்குறித்தும் இருதய கடினத்தைக்குறித்தும், அவர்களைக் கடிந்துகொண்டார். 15.பின்பு, அவர் அவர்களை நோக்கி: நீங்கள் உலகமெங்கும் போய், சர்வ சிருஷ்டிக்கும் சுவிசேஷத்தைப் பிரசங்கியுங்கள் - மாற்கு 16:14-15
அவர்களின் முன்பாக வாழை இலை சாப்பாடு இருக்கவில்லை, கர்த்தரின் உபதேசங்களும் கட்டளைகளையும் தான் இருந்தன, அப்பொழுது தான் மெய்யான போஜனமாகிய இயேசு கிறிஸ்து தரிசனமானார்.
முதல் பாகம்: இயேசுவின் போதனைகள்