இயேசுவின் போதனைகள்
கிறிஸ்தவர்களை அடித்து துன்புருத்திக் கொண்டிருந்த பவுல், இயேசு கிறிஸ்துவை உயிருள்ளவராக தரிசித்து, அவரே மெய்யான தேவன் என்பதை உலகத்திற்கு அறிவிக்கும் மேலான ஊழியத்திற்கு அழைக்கப்பட்ட பொழுது, இயேசு கிறிஸ்துவை பற்றி அறிந்துக்கொள்ள, அவர் மரியாளிடமோ அல்லது கர்த்தரின் சீஷர்களிடமோ செல்லவில்லை, மாறாக அரபிதேசம் என்கிற வனாந்திரத்திற்கு சென்ற பவுலுக்கு, பரிசுத்த ஆவியானவரே எல்லாவற்றையும் சொல்லிக் கொடுத்தார், அது இயேசு கிறிஸ்து தன்னுடைய சீஷர்களுக்கு கற்றுக் கொடுத்ததற்கு ஒப்பாகவே இருந்தது - 16.தம்முடைய குமாரனை நான் புறஜாதிகளிடத்தில் சுவிசேஷமாய் அறிவிக்கும்பொருட்டாக, அவரை எனக்குள் வெளிப்படுத்தப் பிரியமாயிருந்தபோது, உடனே நான் மாம்சத்தோடும் இரத்தத்தோடும் யோசனைபண்ணாமலும்; 17.எனக்கு முன்னே அப்போஸ்தலரானவர்களிடத்திலே எருசலேமுக்குப் போகாமலும்; அரபிதேசத்திற்குப் புறப்பட்டுப்போய், மறுபடியும் தமஸ்கு ஊருக்குத் திரும்பிவந்தேன் - கலாத்தியர் 1:16-17
இயேசு கிறிஸ்து தான் தெரிந்துக் கொண்டவர்களுடன் வாழ்ந்து, ஒரு ஆசிரியர் நடைமுறை வகுப்பு பாடம் எடுப்பது போல, உபதேசம் மற்றும் உண்மை சம்பவங்கள் மூலமாக வாழ்ந்துக் காட்டி, முரட்டாட்ட குணமுள்ளவர்களாய் இருந்தவர்களை தன் பிள்ளைகளாக மாற்றினார்.
இயேசு கிறிஸ்து தன்னுடைய சீஷர்களுக்கு, கற்றுக்கொடுத்த ஊழிய உபதேசங்களையெல்லாம், அப்போஸ்தலனாகிய மத்தேயு, ஒரு வேதாகம கல்லூரி பாடபுஸ்தகம் போல் ஒன்றாக தொகுத்து, மத்தேயு 10ஆம் அதிகாரத்தில் எழுதியுள்ளார், ஆனால், மார்க்கும் லூக்காவும், அதை சுவாரஸ்யமுள்ள நடைமுறை வகுப்பு பாடமாகவே எழுதியுள்ளனர், அவைகளை பின்வரும் தலைப்புகளில் பார்க்கலாம்.