பழைய ஏற்பாட்டின் தீர்க்கதரிசியான மோசேயின் வாழ்க்கை, தேவ குமாரனாகிய இயேசு கிறிஸ்துவுக்கு ஒரு முன்னுதாரணமாகவே இருக்கிறது - உன்னைப்போல ஒரு தீர்க்கதரிசியை நான் அவர்களுக்காக அவர்கள் சகோதரரிலிருந்து எழும்பப்பண்ணி, என் வார்த்தைகளை அவர் வாயில் அருளுவேன்; நான் அவருக்குக் கற்பிப்பதையெல்லாம் அவர்களுக்குச் சொல்லுவார் - உபாகமம் 18:18
இந்த மோசேக்கு இரண்டு தாயார்கள் இருந்தார்கள், ஒருவர் மோசேயை பெற்றேடுத்த எபிரெய ஸ்திரீயாகிய "லேவியின் குமாரத்தி", மற்றோருவர் நாணற்பெட்டியில் விடப்பட்ட மோசேயை கண்டெடுத்த "பார்வோனின் குமாரத்தி" - 1.லேவியின் குடும்பத்தாரில் ஒருவன் லேவியின் குமாரத்திகளில் ஒருத்தியை விவாகம்பண்ணினான். 2.அந்த ஸ்திரீ கர்ப்பவதியாகி, ஒரு ஆண்பிள்ளையைப் பெற்று, அது அழகுள்ளது என்று கண்டு, அதை மூன்று மாதம் ஒளித்துவைத்தாள். 3.அவள் அதை அப்புறம் ஒளித்துவைக்கக்கூடாமல், ஒரு நாணற்பெட்டியை எடுத்து, அதற்குப் பிசினும் கீலும் பூசி, அதிலே பிள்ளையை வளர்த்தி, நதியோரமாய் நாணலுக்குள்ளே வைத்தாள். 4.அதற்கு என்ன சம்பவிக்கும் என்பதை அறியும்படி அதின் தமக்கை தூரத்திலே நின்றுகொண்டிருந்தாள். 5.அப்பொழுது பார்வோனுடைய குமாரத்தி நதியில் ஸ்நானம்பண்ண வந்தாள்; அவளுடைய தாதிகள் நதியோரத்தில் உலாவினார்கள்; அவள் நாணலுக்குள்ளே இருக்கிற பெட்டியைக் கண்டு, தன் தாதியை அனுப்பி அதைக் கொண்டுவரும்படி செய்தாள். 6.அதைத் திறந்தபோது பிள்ளையைக் கண்டாள்; பிள்ளை அழுதது; அவள் அதின்மேல் இரக்கமுற்று, இது எபிரெயர் பிள்ளைகளில் ஒன்று என்றாள் - யாத்திராகமம் 2:1-6
அது போலவே, தேவ குமாரனாகிய இயேசு கிறிஸ்துவுக்கு இரண்டு தாயார்கள் இருந்தார்கள், ஒருவர் பரலோகத்தின் தேவன், அவரே தன்னுடைய மடியிலுருந்த இயேசுவை நமக்காகத் தந்தருளினார், மற்றொருவர் நாணற்பெட்டியில் விடப்பட்ட மோசேயை வளர்த்த பார்வோனின் குமாரத்தியை போல, தன் கர்ப்பபையில் விடப்பட்ட இயேசு கிறிஸ்துவை சுமந்த மரியாள்.
மேலும், மோசேக்கு இரண்டு தாயார்கள் இருந்த வேளையில், பால்கொடுத்து வளர்த்தது " பிள்ளையின் தாய்" என்று சொல்லும் பொழுது, அது எபிரெய ஸ்திரீயாகிய லேவியின் குமாரத்தியை குறிக்கிறதேயன்றி, பார்வோனுடைய குமாரத்தியை அல்ல - 7.அப்பொழுது அதின் தமக்கை பார்வோனின் குமாரத்தியை நோக்கி: உமக்கு இந்தப் பிள்ளையை வளர்க்கும்படி எபிரெய ஸ்திரீகளில் பால்கொடுக்கிற ஒருத்தியை நான் போய் உம்மிடத்தில் அழைத்துக்கொண்டு வரட்டுமா என்றாள். 8.அதற்குப் பார்வோனுடைய குமாரத்தி: அழைத்துக்கொண்டுவா என்றாள். இந்தப் பெண் போய்ப் பிள்ளையின் தாயையே அழைத்துக்கொண்டுவந்தாள். 9.பார்வோனுடைய குமாரத்தி அவளை நோக்கி: நீ இந்தப் பிள்ளையை எடுத்துக்கொண்டுபோய், அதை எனக்கு வளர்த்திடு, நான் உனக்குச் சம்பளம் கொடுக்கிறேன் என்றாள். அந்த ஸ்திரீ பிள்ளையை எடுத்துக்கொண்டுபோய், அதை வளர்த்தாள். 10.பிள்ளை பெரிதானபோது, அவள் அதைப் பார்வோனுடைய குமாரத்தியினிடத்தில் கொண்டுபோய் விட்டாள். அவளுக்கு அவன் குமாரனானான். அவள்: அவனை ஜலத்தினின்று எடுத்தேன் என்று சொல்லி, அவனுக்கு மோசே என்று பேரிட்டாள் - யாத்திராகமம் 2:1-1015
அது போலவே, வேதாகமத்தில், அதிலும் குறிப்பாக யோவான் சுவிஷேச புஸ்தகத்தில், "இயேசுவின் தாய்" என்று சொல்லப்பட்டது பரலோகத்தின் தேவனை குறிக்கிறதே அன்றி, மரியாளை அல்ல, சாலொமோன் ஞானியும், பரலோகத்தின் தேவனை "இயேசுவின் தாய்" என்றும், இயேசு கிறிஸ்துவை "அவரின் ஒரே பிள்ளை" என்றும் குறிப்பிடுகிறார், தேவனிடத்திலிருந்து வந்த இயேசு கிறிஸ்துவை "ஒரே பிள்ளை" என்றால், தேவனை "அவரின் தாய்" என்று சாலொமோன் ஞானி குறிப்பிட்டது சரி தானே! - என் புறாவோ, என் உத்தமியோ ஒருத்தியே; அவள் தன் தாய்க்கு ஒரே பிள்ளை; அவள் தன்னைப் பெற்றவளுக்கு அருமையானவள் - உன்னதப்பாட்டு 6:9
தொடர்ந்து படிக்க தனிப்பட்டு நிற்கும் யோவான் சுவிஷேச புஸ்தகம்
முந்தைய பாகத்தை படிக்க முன்னுரை