இதை சற்றே பொறுமையாக ஆராய்ந்து, இதன் உண்மையனாக அர்த்ததை அறிந்து தெளிவான முடிவு எடுப்பது அவசியம், ஏனென்றால், நம் இரட்சகராகிய இயேசு கிறிஸ்து உவமைகள் மூலமாய் பேசுகிறவராகவே இந்த பூமிக்கு வந்தார் என்றும், உவமைகளாகளின் உண்மையான அர்த்தம், கர்த்தரின் பிள்ளைகளுக்கு மாத்திரமே பரிசுத்த ஆவியனவரால் சொல்லி கொடுக்கப்படும் என்றும் தீர்க்கதரிசனம் உரைக்கிறது - 1.என் ஜனங்களே, என் உபதேசத்தைக் கேளுங்கள்; என் வாயின் வசனங்களுக்கு உங்கள் செவிகளைச் சாயுங்கள். 2.என் வாயை உவமைகளால் திறப்பேன்; பூர்வகாலத்து மறைபொருள்களை வெளிப்படுத்துவேன். 3.அவைகளை நாங்கள் கேள்விப்பட்டு அறிந்தோம்; எங்கள் பிதாக்கள் அவைகளை எங்களுக்குத் தெரிவித்தார்கள். 4.பின்வரும் சந்ததியான பிள்ளைகளுக்கு நாங்கள் அவைகளை மறைக்காமல், கர்த்தரின் துதிகளையும் அவருடைய பலத்தையும், அவர் செய்த அவருடைய அதிசயங்களையும் விவரிப்போம் - சங்கீதம் 78:1-2
இதை தான் இயேசு கிறிஸ்துவின் வாழ்க்கையிலும் பார்க்கிறோம், கர்த்தர் "எலியா வந்தாயிற்று" என்று சொன்னால், யோவான் ஸ்நானனைக் குறித்துப் பேசுகிறார் என்று அர்த்தம், கர்த்தர் "என் பிதாவின் வீட்டை வியாபார வீடாக்காதிருங்கள்" என்று சொன்னால், தேவாலயத்தை குறித்துப் பேசுகிறார் என்று அர்த்தம், "இந்த ஆலயத்தை இடித்துப்போடுங்கள்" என்று சொன்னால், கர்த்தர் தன் சரீரத்தைக் குறித்துப் பேசுகிறார் என்று அர்த்தம், "புளித்தமாவைக் குறித்து எச்சரிக்கையாயிருங்கள்" என்றால், தன்னை தேவன் அல்ல என்பவர்களிடம் எச்சரிக்கையாயிருங்கள் என்று அர்த்தம், இதை தான் வேதாகமம் இப்படிச் சொல்லுகிறது - 34.இவைகளையெல்லாம் இயேசு ஜனங்களோடே உவமைகளாகப் பேசினார்; உவமைகளினாலேயன்றி, அவர்களோடே பேசவில்லை. 35.என் வாயை உவமைகளினால் திறப்பேன்; உலகத்தோற்றமுதல் மறைபொருளானவைகளை வெளிப்படுத்துவேன் என்று தீர்க்கதரிசியால் உரைக்கப்பட்டது நிறைவேறும்படி இப்படி நடந்தது. 36.அப்பொழுது இயேசு ஜனங்களை அனுப்பிவிட்டு வீட்டுக்குப் போனார். அவருடைய சீஷர்கள் அவரிடத்தில் வந்து, நிலத்தின் களைகளைப்பற்றிய உவமையை எங்களுக்கு வெளிப்படுத்தவேண்டுமென்று கேட்டார்கள் - மத்தேயு 13:34-36