இந்தச் சந்ததியை யாருக்கு ஒப்பிடுவேன்?
இயேசு கிறிஸ்து தன்னுடைய ஊழிய நாட்களில், சிலரை ஆதங்கத்தோடு "இந்தச் சந்ததியார்" என்று அழைத்ததை வேதாகமத்தில் பல இடங்களில் பார்க்க முடிகிறது, இவர்கள் இயேசு கிறிஸ்துவை தங்கள் சொந்த இரட்சகராக ஏற்றுக்கொண்டு தேவனுடைய பிள்ளைகளாக மாறுவதற்கு பதிலாக இந்த பூமிக்குரிய அடையாளமாகிய இஸ்ரவேல் வம்சத்தார், அல்லது யூத கோத்திரத்தை சேர்ந்தவர்கள், அல்லது பரிசேய பிரிவை சேர்ந்தவர்கள் என்கிற உலக அடையாளங்களை விரும்பியதினாலேயே கர்த்தர் அவர்களை அப்படி அழைத்தார் - 16.இந்தச் சந்ததியை யாருக்கு ஒப்பிடுவேன்? சந்தைவெளிகளில் உட்கார்ந்து, தங்கள் தோழரைப் பார்த்து: 17.உங்களுக்காகக் குழல் ஊதினோம், நீங்கள் கூத்தாடவில்லை; உங்களுக்காகப் புலம்பினோம், நீங்கள் மாரடிக்கவில்லை என்று குறைசொல்லுகிற பிள்ளைகளுக்கு ஒப்பாயிருக்கிறது. 18.எப்படியெனில், யோவான் போஜனபானம்பண்ணாதவனாய் வந்தான்; அதற்கு அவர்கள்: அவன் பிசாசு பிடித்திருக்கிறவன் என்றார்கள். 19.மனுஷகுமாரன் போஜனபானம்பண்ணுகிறவராய் வந்தார்; அதற்கு அவர்கள்: இதோ, போஜனப்பிரியனும் மதுபானப்பிரியனுமான மனுஷன், ஆயக்காரருக்கும் பாவிகளுக்கும் சிநேகிதன் என்கிறார்கள். ஆனாலும் ஞானமானது அதன் பிள்ளைகளால் நீதியுள்ளதென்று ஒப்புக்கொள்ளப்படும் என்றார். 20.அப்பொழுது, தமது பலத்த செய்கைகளில் அதிகமானவைகளைச் செய்யக் கண்ட பட்டணங்கள், மனந்திரும்பாமற் போனபடியினால், அவைகளை அவர் கடிந்து கொள்ளத்தொடங்கினார் - மத்தேயு 11:12-20
இந்தச் சந்ததி
அப்படியே, தன்னை சிலுவையில் அறைய ஒப்புக்கொடுக்கப் போகிறவர்களை குறித்து தன்னுடைய சீஷர்களிடம் சொல்லும் பொழுதும் அவர்களை "இந்தச் சந்ததி" என்றே கர்த்தர் குறிப்பிட்டார் - 24.மின்னல் வானத்தின் ஒரு திசையில்தோன்றி மறுதிசைவரைக்கும் பிரகாசிக்கிறதுபோல மனுஷகுமாரனும் தம்முடைய நாளிலே தோன்றுவார். 25.அதற்கு முன்பு அவர் அநேகம் பாடுபட்டு, இந்தச் சந்ததியினால் ஆகாதவனென்று தள்ளப்படவேண்டியதாயிருக்கிறது. 26.நோவாவின் நாட்களில் நடந்ததுபோல மனுஷகுமாரனுடைய நாட்களிலும் நடக்கும். 27.நோவா பேழைக்குள் பிரவேசித்த நாள்வரைக்கும் ஜனங்கள் புசித்துக் குடித்தார்கள், பெண்கொண்டு கொடுத்தார்கள்; ஜலப்பிரளயம் வந்து எல்லாரையும் அழித்துப்போட்டது. 28.லோத்தினுடைய நாட்களில் நடந்ததுபோலவும் நடக்கும்; ஜனங்கள் புசித்தார்கள், குடித்தார்கள், கொண்டார்கள், விற்றார்கள், நட்டார்கள், கட்டினார்கள். 29.லோத்து சோதோமை விட்டுப் புறப்பட்ட நாளிலே வானத்திலிருந்து அக்கினியும் கந்தகமும் வருஷித்து, எல்லாரையும் அழித்துப்போட்டது. 30.மனுஷகுமாரன் வெளிப்படும் நாளிலும் அப்படியே நடக்கும் - லூக்கா 17:24-30
மேலும், தன்னை சிலுவையில் அறைய போகிறவர்களிடம் பேசும் பொழுதும், அவர்களை "இந்தச் சந்ததி" என்றே கர்த்தர் அழைத்தார் - 46.அதற்கு அவர்: நியாயசாஸ்திரிகளே, உங்களுக்கு ஐயோ, சுமக்க அரிதான சுமைகளை மனுஷர்மேல் சுமத்துகிறீர்கள்; நீங்களோ உங்கள் விரல்களில் ஒன்றினாலும் அந்தச் சுமைகளைத் தொடவும்மாட்டீர்கள். 47.உங்களுக்கு ஐயோ, உங்கள் பிதாக்கள் கொலைசெய்த தீர்க்கதரிசிகளுக்குக் கல்லறைகளைக் கட்டுகிறீர்கள். 48.ஆகையால் உங்கள் பிதாக்களுடைய கிரியைகளுக்கு நீங்களும் உடன்பட்டவர்களென்று சாட்சியிடுகிறீர்கள்; எப்படியென்றால், உங்கள் பிதாக்கள் அவர்களைக் கொலைசெய்தார்கள், நீங்களோ அவர்களுக்குக் கல்லறைகளைக் கட்டுகிறீர்கள். 49.ஆதலால் தேவஞானமானது: நான் தீர்க்கதரிசிகளையும் அப்போஸ்தலர்களையும் அவர்களிடத்தில் அனுப்புவேன்; அவர்களில் சிலரைக் கொலைசெய்து, சிலரைத் துன்பப்படுத்துவார்கள்; 50.ஆபேலின் இரத்தம்முதல் பலிபீடத்துக்கும் தேவாலயத்துக்கும் நடுவே கொலையுண்ட சகரியாவின் இரத்தம்வரைக்கும், உலகத்தோற்றமுதற்கொண்டு சிந்தப்பட்ட சகல தீர்க்கதரிசிகளுடைய இரத்தப்பழியும் இந்தச் சந்ததியினிடத்தில் கேட்கப்படத்தக்கதாக அப்படிச் செய்வார்கள் என்று சொல்லுகிறது. 51.நிச்சயமாகவே இந்தச் சந்ததியினிடத்தில் அது கேட்கப்படும் என்று உங்களுக்குச் சொல்லுகிறேன் - லூக்கா 11:46-51
பொல்லாத விபசாரச் சந்ததியார்
இப்படி தன்னை ஏற்றுக்கொள்ளாதவர்களையும், தன்னை சிலுவையில் அறையப் போகிறவர்களையும் "இந்தச் சந்ததியார்" என்று அழைத்த நம் கர்த்தர், வேதத்தை நன்றாய் அறிந்தும், தேவனுடைய குமாரனாகிய இயேசு கிறிஸ்து நம்மை இரட்சிக்க இந்த பூமிக்கு வந்தத்தினிமித்தம் சந்தோஷப்படுவதற்க்கு பதிலாக, அவர் மேல் சந்தேகப்பட்டவர்களை "பொல்லாத விபசாரச் சந்ததியார்" என்று அழைத்து, அவர்களின் பரிதாபமான முடிவை குறித்தும் சொன்னார் - 38.அப்பொழுது, வேதபாரகரிலும் பரிசேயரிலும் சிலர் அவரை நோக்கி: போதகரே, உம்மால் ஒரு அடையாளத்தைக் காண விரும்புகிறோம் என்றார்கள். 39.அவர்களுக்கு அவர் பிரதியுத்தரமாக: இந்தப் பொல்லாத விபசாரச் சந்ததியார் அடையாளத்தைத் தேடுகிறார்கள்; ஆனாலும் யோனா தீர்க்கத்தரிசியின் அடையாளமேயன்றி வேறே அடையாளம் இவர்களுக்குக் கொடுக்கப்படுவதில்லை. 40.யோனா இரவும் பகலும் மூன்றுநாள் ஒரு பெரிய மீனின் வயிற்றில் இருந்ததுபோல, மனுஷகுமாரனும் இரவும் பகலும் மூன்றுநாள் பூமியின் இருதயத்தில் இருப்பார். 41.யோனாவின் பிரசங்கத்தைக் கேட்டு நினிவே பட்டணத்தார் மனந்திரும்பினார்கள். இதோ, யோனாவிலும் பெரியவர் இங்கே இருக்கிறார். ஆதலால் நியாயத்தீர்ப்புநாளிலே நினிவே பட்டணத்தார் இந்தச் சந்ததியாரோடெழுந்து நின்று இவர்கள்மேல் குற்றஞ்சுமத்துவார்கள். 42.தென்தேசத்து ராஜஸ்திரீ பூமியின் எல்லைகளிலிருந்து சாலொமோனுடைய ஞானத்தைக் கேட்க வந்தாள். இதோ, சாலொமோனிலும் பெரியவர் இங்கே இருக்கிறார். ஆதலால் நியாயத்தீர்ப்புநாளிலே அந்த ராஜஸ்திரீ இந்தச் சந்ததியாரோடெழுந்து நின்று இவர்கள்மேல் குற்றஞ்சுமத்துவாள். 43.அசுத்த ஆவி ஒரு மனுஷனை விட்டுப் புறப்படும்போது, வறண்ட இடங்களில் அலைந்து, இளைப்பாறுதல் தேடியும் கண்டடையாமல்: 44.நான் விட்டு வந்த என் வீட்டுக்குத் திரும்பிப்போவேன் என்று சொல்லி; அங்கே வந்து, அந்த வீடு வெறுமையாகவும், பெருக்கி, ஜோடிக்கப்பட்டதாகவும் இருக்கக்கண்டு, 45.திரும்பிப்போய், தன்னிலும் பொல்லாத வேறு ஏழு ஆவிகளைத் தன்னோடே கூட்டிக்கொண்டுவந்து, உட்புகுந்து, அங்கே குடியிருக்கும்; அப்பொழுது, அந்த மனுஷனுடைய முன்னிலைமையிலும் அவன் பின்னிலைமை அதிக கேடுள்ளதாயிருக்கும்; அப்படியே இந்தப் பொல்லாத சந்ததியாருக்கும் சம்பவிக்கும் என்றார் - மத்தேயு 12:38-45
விபசாரமும் பாவமுமுள்ள சந்ததி
அது மாத்திரம் இல்லாமல், கர்த்தரை தேவனுடைய குமாரன் என்று அறிந்தும், செத்தவர்களை போல இருப்பவர்களை "விபசாரமும் பாவமுமுள்ள இந்தச் சந்ததி" என்று அழைத்து அவர்களின் பரிதாபமான முடிவை குறித்தும் சொன்னார் - ஆதலால் விபசாரமும் பாவமுமுள்ள இந்தச் சந்ததியில் என்னைக்குறித்தும் என் வார்த்தைகளைக்குறித்தும் எவன் வெட்கப்படுவானோ, அவனைக் குறித்து மனுஷகுமாரனும் தமது பிதாவின் மகிமைபொருந்தினவராய்ப் பரிசுத்த தூதர்களோடுங்கூட வரும்போது வெட்கப்படுவார் என்றார் - மாற்கு 8:38
விசுவாசமில்லாத மாறுபாடான சந்ததியே
அதே சமயத்தில், கர்த்தரை அறிந்தவர்களும் அவரின் வல்லமையை அறியாமல் விசுவாசக் குறைவோடு இருக்கும் பொழுது, கர்த்தர் அவர்களை "விசுவாசமில்லாத மாறுபாடான சந்ததியே" என்று அழைத்ததை பார்க்கிறோம் - 37.மறுநாளில் அவர்கள் மலையிலிருந்திறங்கினபோது, திரளான ஜனங்கள் அவருக்கு எதிர்கொண்டுவந்தார்கள். 38.அவர்களில் ஒருவன் சத்தமிட்டு: போதகரே, என் மகனைக் கடாட்சித்தருளவேண்டுமென்று உம்மை வேண்டிக்கொள்ளுகிறேன், அவன் எனக்கு ஒரே பிள்ளையாயிருக்கிறான். 39.ஒரு ஆவி அவனைப் பிடிக்கிறது, அப்பொழுது அலறுகிறான். அது அவனை நுரைதள்ள அலைக்கழித்து, அவனைக் கசக்கினபின்பும், அவனை விட்டு நீங்குவது அரிதாயிருக்கிறது. 40.அதைத் துரத்திவிடும்படி உம்முடைய சீஷரை வேண்டிக்கொண்டேன், அவர்களால் கூடாமற்போயிற்று என்றான். 41.இயேசு பிரதியுத்தரமாக: விசுவாசமில்லாத மாறுபாடான சந்ததியே, எதுவரைக்கும் நான் உங்களோடிருந்து, உங்களிடத்தில் பொறுமையாயிருப்பேன்? உன் மகனை இங்கே கொண்டுவா என்றார். 42.அவன் சமீபித்துவருகையில், பிசாசு அவனைக் கீழே தள்ளி, அலைக்கழித்தது. இயேசு அந்த அசுத்த ஆவியை அதட்டி, இளைஞனைக் குணமாக்கி, அவன் தகப்பனிடத்தில் அவனை ஒப்புக்கொடுத்தார் - லூக்கா 9:37-42
இஸ்ரவேல் சந்ததியாரில்
யோவானின் பிறப்பை குறித்து அவன் தகப்பனாகிய சகரியாவிடம் அறிவிக்கப்பட்ட செய்தியில், நாம் இந்த உலக அடையாளங்களை உதறிவிட்டு தேவனுடைய பிள்ளைகளாக மாறவேண்டும் என்பதே தேவனுடைய நோக்கம் என்பது விளங்குகிறது - 13.தூதன் அவனை நோக்கி: சகரியாவே, பயப்படாதே, உன் வேண்டுதல் கேட்கப்பட்டது; உன் மனைவியாகிய எலிசபெத்து உனக்கு ஒரு குமாரனைப் பெறுவாள், அவனுக்கு யோவான் என்று பேரிடுவாயாக. 14.உனக்குச் சந்தோஷமும் மகிழ்ச்சியும் உண்டாகும், அவன் பிறப்பினிமித்தம் அநேகர் சந்தோஷப்படுவார்கள். 15.அவன் கர்த்தருக்கு முன்பாகப் பெரியவனாயிருப்பான், திராட்சரசமும் மதுவும் குடியான், தன் தாயின் வயிற்றிலிருக்கும்போதே பரிசுத்த ஆவியினால் நிரப்பப்பட்டிருப்பான். 16.அவன் இஸ்ரவேல் சந்ததியாரில் அநேகரை அவர்கள் தேவனாகிய கர்த்தரிடத்திற்குத் திருப்புவான். 17.பிதாக்களுடைய இருதயங்களைப் பிள்ளைகளிடத்திற்கும், கீழ்ப்படியாதவர்களை நீதிமான்களுடைய ஞானத்திற்கும் திருப்பி, உத்தமமான ஜனத்தைக் கர்த்தருக்கு ஆயத்தப்படுத்தும்படியாக, அவன் எலியாவின் ஆவியும் பலமும் உடையவனாய் அவருக்கு முன்னே நடப்பான் என்றான் - லூக்கா 1:13-17
காரியம் இப்படியிருக்க, நாம் இந்த பூமிக்குரிய அடையாளமாகிய ஜாதியை கொண்டோ, அல்லது ஒரு கோத்திரத்தை சேர்ந்தவர்கள், அல்லது சபை பிரிவை கொண்டோ பெருமை பாராட்டுவோம் என்றால் , கர்த்தரால் "இந்தச் சந்ததியார்" என்றே அழைக்கப்படுவோம் என்பதில் சந்தேகம் இல்லை.